Tuesday, February 01, 2011

பட்டு உடுத்த பேராசைப் பட்டொம்!

பட்டு உடுத்த பேராசைப்பட்டோம்!


பழய கோமணத்தை யாசிக்கிறோம்!

. சென்ற மாதம் ஸ்ரீலங்காவில் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தது. உலகந்தழுவிய அளவில் சிறுபத்திரிகையாளர்களின் மாநாடும் அங்கே நடந்தது.

வழக்கம் போல இந்தமாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கூச்சல் எழுந்தது.ஆனாலும் ஒரு ஐம்பது எழுத்தாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் திரைபடத்துறை ஒன்றும் நோருங்கி விழுந்துவிடவில்லை.பொங்கல் அன்றும், குடியரசு தினத்தன்றும் நடிகர் கார்த்திக், குட்டி நடிகைகள் ஆகியொர் தொலைக்காட்சி மூலம் தமிழனின் ஆழ்ந்த சமுகப் ப்ரஞ்ஞையை விகசிக்க வைத்தார்கள்.

கொழும்புவில் நடந்த மாநாடு பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.அங்கு சென்று திரும்பிய கவிஞர் மூலம் தகவல் அறிய விரும்பினேன்."அங்கு என்னதான்யா நடக்குது?" என்று கெட்டேன்

"அண்ணே!.ஸ்லான் தமிழர் பிரச்சினை பழசுண்ணே!"என்றார். அவர் தெற்கத்திக்காரர். இலங்கையை இப்போதும் "ஸ்லான்" என்றுதான் அழப்பார்கள்.அவர் தொடர்ந்தார்."நம்ம ஊர்லெருந்து தேயிலை பறிக்க கொண்டுபோனாங்கலாஆட்களை.அவங்க பிரச்ச்சனை முடியலண்ணே1அந்த த தொழிலாளர்கள் தொழிற்சங்கம், அப்பிடி இப்பிடின்னு போயிரப்படாதுங்கரதுக்காக அவங்களுக்கு குடியுரிமை கொடுக்காம இழுத்தடிகிறாங்க"

"யாழ்ப்பாணத்தமிழன் இந்தமலையகத்த்மிழன கண்டுக்கறது இல்ல.அவனுக தாங்கதான் சுத்த தமிழன்ங்கான்.கல்தோன்றாக்காலத்தவங்க்கான். அவங்களுக்கு நல்லபடிப்பு.கொழும்புல பெரிய வேலை உண்டும்.பக்கத்து வீட்டுக்காரன் சிங்களன்.எதுத்தவீட்டுக்காரன் முஸ்லீம். நல்லா இருக்கான்.யாழ்ப்பாணத்துல சண்டைனா இவம்பாடு ஆபத்து"

"கிழக்க முஸ்லீம்க. கந்தா,முருகா, சிவகுமரா ங்கர பெரியமனுசங்க ஏத்துக்கணும்லா! இதப்புரிஞ்சிக்கிட்ட அரசு விளையாடுது. பொதாக்குறைக்கு தமிழ்நாட்டுக்காரன் உசுப்பேத்தரான்."

தி.மு.க ஜெயிச்சா என்ன! அதிமுக ஜெயிச்சாஎன்ன! எங்க உயிர எடுக்காதீங்கடாங்கான்.மைசூர்லெருந்து தண்ணி கொண்டார முடியல. நீ எதுக்குல பஞ்சாயதுக்கு வார? ங்கான்"

"நாங்க பாட்டுல இருந்தோம். எங்க சின்னப்பயலுகள கிளப்பிவிட்டு சாகவைச்சுட்டிய. . ஆசை காட்டினிய.பட்டு உடுத்த.பேரசைபட்டோம். பழய கோமணத்தை யாசிக்கிறோம் "

.இது தாண்ணே அவங்க சொல்றது என்றார் கவிஞர். .

6 comments:

hariharan said...

வணக்கம் தோழரே!

நிறைய எழுத்துப்பிழைகள் வருகிறது. ஒருமுறை சரிபார்த்து பதிவிடுங்கள்.

இலங்கைத் தமிழர்களை வைத்தே இங்கே நீண்டநாட்களாக அரசியல் நடக்கிறது. இந்தியத் தமிழர்கள் ராஜபக்‌ஷேவை விமர்சிக்கிற அள்விற்கு இலங்கை தமிழர்கள் விமர்சிப்பதில்லை, தேசவிரோதம் ஆகிவிடுமோ என்ற அச்சம். அதுவே நாம் இந்திய ராணுவம் காஷ்மீரத்திலும் வடகிழக்கிலும் செய்யும் அத்துமீரலை கண்டிக்க தேசபக்தி நம் கண்ணை மறைக்கிறது, ஆனால் இலங்கையை எளிதாக விமர்சனம் செய்யமுடிகிறது.

துக்ளக் விழாவீடியோவைப் பார்த்தேன், அதில் ஒருவாசகர் கேள்வி கேட்கிறார். “விநாயக்சென் போன்ற மாவோயிஸ்ட்களை ஆதரிக்கும் தேவிரோத செயல்களை இடதுசாரிகள் செய்கிறார்கள்” என்று. மனித உரிமைக்காக குரல் கொடுக்கிறவர்கள் அவர்கள் பார்வையில் தேசவிரோதம்.

ராம்ஜி_யாஹூ said...

எல்லோரும் மறந்து விட்ட ஒரு விசயத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தீராநதியில் கூட இந்த விழா பற்றி ஒரு கட்டுரை வந்து உள்ளது என்று நண்பர் கூறினார்.

மடிக்கணினி பழுது நீங்கியமைக்கு நன்றிகள், மகிழ்ச்சி

அப்பாதுரை said...

'மைசூர்லந்து தண்ணி கொண்டாற முடியலை'... நல்ல வேட்டு!

இலங்கைத் தமிழருக்குள்ளும் ஒற்றுமை இல்லையா?! சரிதான்!

சிவகுமாரன் said...

ஒற்றுமை இல்லாததினால் தானே அந்த இனமே அழிக்கப்பட்டது அப்பாஜி. மைசூரிலிருந்து தண்ணி கொண்டு வர வேண்டியது தலைவர்கள். இனப் படுகொலைகளுக்காக கண்ணீர் வடிப்பது என்னைப் போன்றோரின் இதயங்கள். இரண்டும் ஒன்றல்ல.

G.M Balasubramaniam said...

வணக்கம் ஐயா, பிற்ர் எழுதும் வலைகளில் உங்கள் பின்னூட்டங்கள் பார்த்து மதிப்புக்கு உரிய இன்னொரு வலைப்பதிவரை பரிச்சயம் கொள்ள உங்கள் வலைக்கு வந்தேன்.மற்றவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு சரிதான். ஒரு BALANCED WRITER ஐ காண்கிறேன்.மகிழ்ச்சி.

சமுத்ரா said...

nice