Friday, February 04, 2011

எகிப்தின் குழப்பம்....

எகிப்தின் குழப்பம்


எகிப்தை ஆள்வதற்கு தெய்வ அங்கீகாரம்பெற்றவர்கள் "பாரோ" மன்னர்கள். அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு மேலை நாட்டு சாம்ராஜ்ய வாதிகள் "நைல்" நதிக்கரையை வசப்படுத்திக் கொண்டனார்.

1952ம் ஆண்டு பரூக் மன்னரை விரட்டி ஜெனரல் நகீப் ஆட்சிக்கு வந்தார். ஆனாலிந்த ராணுவப்புரட்சியை திட்டமிட்டு நடத்தியவர் குட்டி ராணுவ அதிகாரியான கர்னல் அப்துல் கமல் நாசர் என்பது பின்னால் தெரியவந்தது.நைல் நதி பாயும் பகுதி செழிபுள்ளதாகும். அந்த நதியைக் கட்டுப்படுத்தினால் எகிப்தின் வளர்ச்சி அபரிமிதமாகும் என்று கருதிய நாசர் அஸ்வான் அணை கட்ட விரும்பினார். அமெரிக்காவின் உதவியை நாடினார்.அவர் அப்போதய சோவியத்நாடு பக்கம் திரும்பிவிடக்காடாது என்று கருதிய அமெரிக்கா உதவுவதாக ஆசைகாட்டியது. அதே சமயம் எகிப்து வளர்ச்சி பெறாமல் இருக்க அணை கட்டுவதற்கு வேறுவகையில் சிக்கலை எற்படுத்தியது . பொருமை இழந்த நாசர் சோவியத்தை நாடினார்.சொவியத்நாடு உதவ முன்வந்தாலும் அதனிடம் அவ்வளவு வசதி அப்போதுஇல்லை.

பரூக் அரசர்கள் ஆண்டகாலத்தில் பிரான்சு நாடு எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டதுஅதன்படி மத்திய தரைக் கடலிலிருந்து இந்து மகா சமுத்திரத்திற்கு ஒருகால்வாயை வெட்டிதர முன்வந்தது.சூயஸ் கால்வாய் உருவானது கால்வாயின் இரண்டு பக்கமும் ப்ரன்சின் ஆளுமைக்கு உட்பட்டதாகும் என்பதும் ஒப்பந்தம்.பரூக், ,நகீப், நாசர் ஆகியொர் இந்த சர்வதெச ஒப்பந்தத்தை எற்றுக் கொண்டிருந்தனர். சூயஸ் கால்வயை அனுபவிக்கும் பிரான்சு நாட்டு கம்பெனியை நாட்டுடைமை யாக்கி அதனால் கிடக்கும் வருவாயில் அணை கட்டலாம் என்று சொவியத் நாடு சொன்ன யோசனையை நாசர் ஏற்றுக் கொணடார்.ப்ரிட்டனும் பிரான்சும் இதனை எதிர்த்து படைகளை இறக்கின பொர் மூண்டது. பிரிடிஷ் பிரஞ்சுப் படைகள் முறியடிக்கப்பட்டன.சூயஸ் கல்வாய் எகிப்தின் வசம் வந்தது. அஸ்வான் அணைகட்டிமுடிக்கப்பட்டது.

அணி செராநாடுகளின் தலவ்ர்களாக நெரு நாசர், நுக்ருமா இருந்தனர்.எகிப்தின் புக.ழ் பரவியது. அரபு மக்களின் ஆதர்சமாக நாசர் உருவானார். இதனைச் சகிக்காத பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகள் இஸ்ரெலைதூண்டிவிட்டு எகிப்தின் மீது போரை துவங்க வைத்தனர். தோல்வியுற்ற நாசர் நோய்வாய்பட்டு இறந்தார்.அவரரை அடுத்து அவருடைய நண்பர் அன்வர் சதாத் வந்தார். எகிப்தின் நொருங்கிய பொருளாதரதை மீட்க சதத் விரும்பினார். அமெரிக்கா இதனப் பயன் படுத்திக்கொண்டது.இஸ்ரேலோடு ஒப்பந்தம் பொட நிர்ப்பந்தம் செய்தது ஒப்பந்தம் உருவானது.இஸ்லாமிய மதவாதிகள் எதிர்த்தனர்.ராணுவத்திற்குள் ஊடுருவிய பத்துப்பேர் சதத்தை சுட்டுக்கோன்றனர். அமெரிக்காவின் உதவியொடு ஹோசினி முபாரக் ஆட்சிகு வந்தார் அவருடைய .சர்வாதிகாரம் அமெரிக்க உதவியோடு முப்பது ஆண்டுகளாக நீடிக்கிறது.

எகிப்தின் ராணுவதளபதி வஷிங்க்டன் போயிருக்கிறார்.அந்தசமயம்பார்த்து மக்கள்போராட்டம் எழுந்துள்ளது.. ராணுவம் அவருடைய உத்திரவுக்காக காத்திருக்கிறது.

ஆரம்பத்தில் மக்களுக்கும் முபாரக்குக்குமாக இருந்தது. முபாரக்கின் ஆதரவாளர்கள் கோதாவில் இற்ங்கியுள்ளார்கள். இப்போது போராட்டம் மக்களுக்கிடயை என்றாகியுள்ளது.

யார் ஜெயிப்பார்கள்?

. வழக்கம்போல அமெரிக்காதான் ஜெயிக்கும்!

28 comments:

காமராஜ் said...

கையடக்கமான இந்த தகவல்கள் அபரிமிதமானது.ரொம்ப சந்தோஷம் தோழர்.நேற்றிரவு எகிப்து போய்வந்த ராகவனுடன் பேசினேன்.இன்னும் அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் சொன்னார்.
எழுதுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.
இப்படி உபயோகமானவை படிக்க உற்சாகமும் நம்பிக்கையும் கூடும்.

காமராஜ் said...

எல்லா குழப்பங்களுக்கும் பின்னணியில் அமெரிக்கா இருக்கிற நுண் செய்தி இப்பொதைய தேவை.ஆனால் ஜெயலலிதாவுக்குப்பின்னால் நாமிருப்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை.

hariharan said...

எகிப்தின் 60 ஆண்டு ஆட்சியின் சுருக்கம் அருமை, நாசர், நேரு,சுகர்னோ போன்றவர்கள் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கியவர்கள். ஆனால் காலப்போக்கில் அது மூன்று நாடுகளிலிம் சிதைந்து எங்கு சேர்ந்தால் ஆளும் வர்க்கத்திற்கு லாபம் என்று பார்க்கத்துவங்கிவிட்டது.

தோழர்.காமராஜ் குறிப்பிட்டது போல உலகில் எல்லாப் பிரச்சனைகளுக்கு பின்னாலும் அமெரிக்கா இருக்கிறது.
ஜெயலலிதா அல்லது கருணாநிதிக்கு பின்னால் நாம் இருக்கிறோம். திமுகவுக்கு பின்னால் நாம் நின்றால் ஏற்றுக்கொள்கிற மனம் ஜெவை ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டும் கொள்ளிகள்தான். எரிப்பவைதான்.

kashyapan said...

காமரஜ்! பிரகாஷ் காரத்துக்கும்,ஜி ராமகிருஷ்ணானுக்கும் கூட பிடிக்காமலிருக்கலாம் உங்களுக்கும், எனக்கும் கூட பிடிக்காமலிருக்கலாம். அதற்காக அரிவாளைத்தூக்கிக்கொண்டு ஓடாநீங்களும் தயாரில்லை. நணும் தயாரில்லை. 1964 லிருந்து காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருங்கள்.உலை நீர் 80 டிகிரியில் ஆவியாகாது.90 டிகிரியிலும் ஆவியாகாது. 99டிகிரியிலும் ஆவியாகாது.100 டிகிரி யானால் நீரின் தன்மை மறைந்து வாயுவாகிவிடும்.காத்திருத்தலும் பொருமையும் வேண்டும்.---காஸ்யபன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தூசி படிந்திருந்த எகிப்தின் வரலாற்றுப் பின்னணியை உங்கள் மூலம் துடைத்துக் கொண்டேன் காஸ்யபன் சார்.

அபாரமான பெரும்பாலும் நேர்மையான தொண்டர்களையும் லட்சியங்களையும் கொண்டுள்ள இடது வலது சாரிகள் இன்னும் எத்தனை காலம் கொஞ்சமும் பொருந்தாத தலைமையின் கீழ் கொடி பிடிக்க இருக்கிறார்கள்?

சரி. ஒரு வாதத்துக்காக ஜெ பக்கம் வரும் கம்யூனிஸ்ட்டுகள் அவர்கள் பெற இருக்கும் பத்துக்கும் குறைவான இடங்களிலுமே வெற்றி பெற்றாலும் என்ன மாறுதலை ஜெ.யின் கீழுள்ள ஆட்சியில் கொண்டுவந்து விட முடியும்?

அடுத்த முறை தி.மு.க. பக்கம் உள்ள அணிக்குச் சென்று அதே பத்தில் வெற்றியோ தோல்வியோ?

உண்மை என்னவென்றால் இவர்களால் இரு கூட்டணித் தலைவர்களையும் ஜீரணிக்கமுடிவதில்லை.முடியாது என்பதுதான் உண்மை.

இப்படியிருக்க வெற்று சித்தாந்தங்களில் இன்னும் எத்தனை தலைமுறை காத்திருக்கப் போகிறார்கள்?

எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றங்களைத் தங்களிடமிருந்து துவக்குவதில் என்ன தடை இருக்கபோகிறது?

கருணாநிதியா ஜெயலலிதாவா என்று பொறுத்திருந்து மாறுவதை விட ஒரு பெரும் மாற்றத்திற்கான பயணத்தைத் துவங்க இதுதான் நேரம்.

இல்லாவிட்டால் வாதத்துக்காவது இவர்களை ஆதரிக்கும் மனசுள்ளவர்கள் சப்பைக்கட்டு கட்டவேண்டியதுதான்.

kashyapan said...

சுந்தர் ஜி! அவர்களே! உங்கள் ஆதங்கம் புரிகிறது.காமராஜ்,அரிகரன் கொபமும் புரிகிறது. மே.வங்கத்தில் இடதுசாரிகளை அழிக்க உலகத்திலுள்ள கம்யூனிஸ்ட் எதிப்பாளர்கள் உள்ளுர் எதிர்ப்பாள்ர்களோடு இணந்து செயல் படுகிறார்கள் ஜோதிபாசு சீனா சென்ற போது.முதலாளித்துவ ஜனநாயகத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை ஆச்சரியத்தோடு கேட்டூ மகிழ்ந்தார்கள்.கெரளமும், திரிபுராவும் எப்படி நிற்கின்றன? கம்யூனிஸ்டுகளின் தலமையில் தானே அங்கு அரசியல் செல்வாக்கு நடத்த முடிகிறது!அந்தநீலை தமிழகத்திலும் பீஹாரிலும், ஆந்திராவிலும் வரவேண்டும்.வரும். வரவிடாமல்தடுக்கும் சக்திகள் கூடுதல் பலத்தில் இருக்கும் போது மலைப்பாக தோன்றத்தான் செய்யும்..காத்திருப்போம்! காலம் வரும் தோழர்களே! ___காஸ்யபன்

காமராஜ் said...

//99டிகிரியிலும் ஆவியாகாது.100 டிகிரி யானால் நீரின் தன்மை மறைந்து வாயுவாகிவிடும்.காத்திருத்தலும் பொருமையும் வேண்டும்.---காஸ்யபன்//

இந்த நிதானமும்,பொறுமையும் ரொம்ப ப்டிச்சிருக்கு தோழர் காஷ்யபன்.கீழே இருக்கிற தழலின் உஷ்ணம் sim ல இருக்கிறதாகப்படுகிறது தோழர்.

அப்பாதுரை said...

அமெரிகா ஜெயிக்குமா? அமெரிகா என்ன செய்தது காஸ்யபன்? உலக நாடுகளின் குழப்பங்களுக்கு அமெரிகாவைக் குறை சொல்வது பொருந்துமா காமராஜ்? ஒருதலை வாதமாகப் படுகிறது. எகிப்து-இஸ்ரேல் இரண்டு நாடுகளுக்குமிடையே எழுபதுகளிலிருந்து ஓரளவுக்கு அமைதியை ஏற்படுத்தி வருவதும் அமெரிகா தானே? அமெரிகா வருடா வருடம் வழங்கும் பிலியன் டாலர் நிதிஉதவி தானே? அமெரிகாவுக்கு என்ன லாபம் சொல்லுங்கள். வணிகத்துக்கான தந்திரம் என்றாலும், இலவசமாக அமெரிகா எதையுமே பெறுவதில்லையே?

அப்பாதுரை said...

என் கருத்தில் இந்தியாவில் சோசலிசம் வளர்ந்து செழிக்க வாய்ப்பு மிகக் குறைவு. மிலிடெரி சர்வாதிகார ஆட்சி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

சிவகுமாரன் said...

வரலாறு தெரியாது நிகழ்வுகளை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தெளிவாக்கி விட்டீர்கள் அய்யா, எகிப்தின் அரசியல் வரலாற்றை. ஆனாலும் எதையும் இன்னும் தீக்கதிரின் ஆசிரியராய்த்தான் அலசுகிறீர்கள்.

சிவகுமாரன் said...

நான் அப்பாத்துரையின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
இடதுசாரிகள் எல்லாவற்றிற்கும் கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி இவர்களில் ஒருவர் தான் கம்யூனிஸ்ட்களின் உண்மையான தலைவர்கள். அவர்களின் கொள்கைகள் எனக்கு சலிப்பைத் தருகின்றன.
என் சித்தப்பாவோடு சேர்ந்து த.க.இ.பெ. கூட்டங்களில் கவியரங்களில் பாடிய போது , ஜெ.வை. விமர்சித்து கவிதை பாடினேன். கை தட்டினார்கள். சில வருடம் கழித்து இன்னொரு கவியரங்கத்தில் ஜெ.வை விமர்சிக்காதீர்கள். நாம் கூட்டணி வைத்திருக்கிறோம் என்றார்கள்.நாம் கூட்டணி வைத்திருக்கிறோமா? கூட்டணி வைத்திருப்பதாலேயே அவர்கள் உத்தமர்கள் ஆகிவிட்டார்களா ? நான் கவிதை பாடியது ஊழலை எதிர்த்துதான் என்று நினைத்திருந்தேன். ஓட்டு வாங்குவதற்கு என்று தெரியவில்லை. தலை தெறிக்க ஓடி வந்து விட்டேன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே ! வாருங்கள் ஐயா! நிறைய பெசுவோம்.விவாதிப்போம்.தெளிவு பெறுவோம். 1937ம் ஆண்டு மும்பையில் ஒரு லட்சம் முதலீட்டில் கோல்கேட் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.இன்று 44கொடிப்பேர் அதனை உபயோகிக்கிறார்கள்..பீ.எல்(public law ) 480 அமெரிக்கா கொதுமைதந்தது. அந்தப் பணத்தை அமெரிக்காவுக்கு கொண்டு பொகக்கூடாது என்பது நிபந்தனை. அந்தப்பணத்தை இந்திரா அம்மையாரிடம் கொடுத்து 1957ம் ஆண்டு இ.எம்.எஸ்.அமைச்சரவையை கவிழ்த்தது.அமெரிக்க தூதுவர் மொய்னிஹான் இதன கூறியுள்ளார்.உலக வ்ங்கி, சர்வதேச நிதியம் உதவி என்று தினமணி,தினத்தந்தி யில் போடுவான். ஆங்கில பத்திரிகையில் Aid என்று பொடுவான். அது வட்டீக்கு பெறப்படும் கடன்.கடனையே உதவி என்று கூறுகிறார்கள்.இன்று வரை அமெரிக்கா முக்காதுட்டு உதவியதில்லை. Camp David என்ற இடத்தில் அன்வர் சதத்தை நிர்ப்பந்தப்படுத்தி ரீகன் கையெழுத்து போடவைத்தார்.அது தான் இஸ்ரேலோடு போட்ட ஒப்பந் தம். உலக அமைதிக்கும் அமெரிக்காவுக்கும் சம்மந்தமே இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் ---காஸ்யபன். .

kashyapan said...

சிவகுமரன்! நீங்களுமா! சரி! தூக்கம் வருகிறது .காலையில் உங்களைக்கவனிக்கிறேன்.---காஸ்யபன்.

அப்பாதுரை said...

'உலக அமைதிக்கும் அமெரிகாவுக்கும் சம்பந்தமில்லை' என்பது உண்மையாக இருக்கலாம் காஸ்யபன், ஆனால் 'உலகக் குழப்பங்களுக்கு அமெரிகா காரணம்' என்றாகுமா?

அன்வர் சதத்தை ஒரு வற்புறுத்தலும் செய்யவில்லை - இதெல்லாம் புரட்டு. உலக அரசியல் ஆதாயத்திற்காக அன்றைய ப்ரெஷ்னெவ் கட்டியதை மற்ற கம்யூனிசத் தோழர்களும் கண்மூடி ஏற்ற கருத்து என்பதைச் சொல்ல அனுமதி கொடுங்கள்.

தான் செய்யும் எல்லாவற்றிலும் ஆதாயம் தேடுவது அமெரிகாவின் வெளியுறவுக் கொள்கை - இருக்கலாம். capitalism at work here. ஆனால் அதையே திரித்து 'ஆதாயம் தேடியே எல்லாவற்றையும் செய்யும் அமெரிகா' என்பது ஆதாரமற்ற வெறும் பூண்டுக்குசு. ஏற்க முடியவில்லை ஐயா.

ஆச்சரியமாக இருக்கிறது. 'எகிப்து' என்ற தேடல் சொல்லை சட்டவிரோதமாக்கியிருக்கும் சைனாவின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அறுபத்து நாலில் (வருடம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) இந்தியாவின் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வாலாட்டும் சைனாவின் வெளியுறவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்றைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவேற்படாத வண்ணம் குழப்புவதில் சைனாவின் கைவண்னம் இருப்பதாக நினைக்கிறீர்களா? இருந்திருந்து இன்றைக்கு அருணாசலப் பிரதேசம் சைனாவைச் சேர்ந்தது என்கிறதே சைனா - என்ன சொல்கிறீர்கள். அவ்வளவு ஏன்? கோல்கேட் 1806ம் வருடத்திலிருந்து வெவ்வேறு வித பொருட்களை வழங்கி வந்திருக்கிறது. வணிகமும் அரசியலும் கலப்பது ஒன்றும் புதிதல்ல. இன்றைக்கு இந்தியாவில் எங்கே பார்த்தாலும் சைனா பொருட்கள் தான். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சைனாவின் கைரேகை புதைந்திருப்பதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன். சைனாவின் ஊடுறுவலால் எத்தனை குடிசைத் தொழில்கள் இந்தியாவில் மூடப்போகின்றன என்பதைப் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல். ஒருவேளை வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் சதியென்பீர்களா? :)

அப்பாதுரை said...

ஐயா, உலகவங்கி சர்வதேச நிதி உதவி என்பவை கடனாகவோ உதவியாகவோ இருக்கலாம். அதற்கும் அமெரிகாவுக்கும் சம்பந்தமே இல்லை. நான் சொலவது அமெரிகா வழங்கும் 'grant' - வட்டியும் கிடையாது குட்டியும் கிடையாது :). இதைப் பெற்றுக் கொண்டு அரசாங்கம் சாதார்ண மக்களிடம் சேர்க்கிறதா - அது வேறு விஷயம்.

அமெரிகாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை - 'எல்லாம் அமெரிகாவின் தந்திரம் திருட்டுத்தனம்' என்ற எண்ணத்தைப் பரப்புவது misinformed என்று தோன்றுவதால் சொல்கிறேன். வேறெந்த எண்ணமும் இல்லை.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே!அமெரிக்கா பற்றி உங்களுக்கு கூடுதலா விபரம் தெரிந்து இருக்கும் வாய்ப்பு அதிகம். எகிப்திலிருந்து, அமெரிக்கா, சீனா என்று தொடர்வது நல்லது தான். பிரி ட்டனின் காலனி யாக இந்தியா இருந்தது. மக்மோகன் என்ற லஸ்கரை சர்வேயராக பதவி உயர்வு கொடுத்தது. அவர் வரைந்த கோடுதான் மக்மோகன் எல்லைக் கோடு.மக்கள் சீனத்தை விடுங்கள். அமேரிக்க ஆதரவு சியாங்கே ஷேக் சினா கூட அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.1957 ம் ஆண்டு சூ-என்-லாய் இந்தியா வந்தார். எல்லையை நமக்குள் பெசி முடிப்போம் என்றார். சினப் பிரதமருக்கு அதிகாரபூர்வமாக வரவேற்பு அலிக்கக் கூடாது என்று அன்றய ஜனசங்கமும் ஜனாதைபதி ராஜேந்திரபிரசாத்தும் அடம் பிட்த்தார்கள்.அரசியல் நெருக்கடியை உருவாகாமல் தடுக்க முதன்முறையாக இந்தியா வந்த சினப்பிரதமரு க்கு வரவெற்பில்லாமல் செய்தார்கள். இந்தியா சினாவுடன் யுத்தப் பிரகடன்ம் செய்தது.செய்தவர் பிரதமர் அல்ல. ஜனாதிபதி அல்ல.ராணுவ அமைச்சர் அல்ல. அரசு செயலாளர் அல்ல.அமை.ச்சக அதிகரி அல்ல. செக்ஷன் ஆபிசராக இருந்த சரின் என்ற குட்டி ஆபீசர். நேவெலி மாக்ஸ் என்ற அமெரிக்கர் Indias chaina war புதகம் எழுதியிருக்கிறார்.அமெரிக்க தெசத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்தினால் அதன் ஒவ்வொரு மயிர்காலும் பொய்யும் பித்தலாட்.டமும்தான். என்னை மன்னியுங்கள்--- சினாவும் இந்தியாவும் பகையாளியாக இருக்க வெண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம்தான் பிரம்ம புத்த்ராதிட்டம்_அது ஒரு தனி புராணம்---காஸ்யபன்

'பரிவை' சே.குமார் said...

எகிப்தின் அரசியல் வரலாற்றை அழகாக ப்கிர்ந்திருக்கிறீர்கள்.

//எல்லா குழப்பங்களுக்கும் பின்னணியில் அமெரிக்கா இருக்கிற நுண் செய்தி இப்பொதைய தேவை.ஆனால் ஜெயலலிதாவுக்குப்பின்னால் நாமிருப்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை.//


காமராஜ் அண்ணனின் கருத்துப்படி நாம் திராவிடக் கட்சிகளின் பின்னால் நின்றாலும் கலைஞரின் வாரிசு அரசியலை இலவசங்களுக்காக ஏற்றுக்கொள்ளும் நாம் அம்மாவை ஏற்க மறுக்கிறோம் என்பதே உண்மை. ஆனால் பச்சோந்தி அரசியல்வாதியான மருத்துவருக்கும் நாம் இன்னும் மரியாதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் வேதனையான விஷயம்.

மோகன்ஜி said...

காஷ்யபன் சார்!எகிப்தின் சரித்திர சுருக்கம் உங்கள் அனுபவத்தைக்
காட்டுகிறது.அமெரிக்காவின் கொள்கைகளும்,மற்ற நாடுகளில் அதன் தலையீடும் அதன் பெரியண்ணன் தகுதியை தக்க வைத்துக் கொள்ளவும்,கலங்கி விட்ட குட்டைகளில் வியாபார பெருக்க செயல்பாட்டுக்க்காகவுமே என்பது புதிய செய்தியில்லை.

ஆனாலும் இந்திய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய ஆபத்தாய் தலைதூக்கி நிற்பது சீனத்து ட்ராகன் தானே? இந்த வகையில் அப்பாதுரையின் கருத்துக்கள் சிந்திக்கத் தக்கவை.

சீனாவின் கம்யூனிசம் ஒரு சித்தாந்தமாய்க் கூட உங்களுக்கு ஏற்கத் தோன்றுகிறதா?
பின்னூட்டமாய் இன்றி ஒரு பதிவாய் நீங்கள் இதைத் தர வேண்டும்.கம்யூனிசம் காலாவதியாகிவிடாது என்று நம்பும் கூட்டத்தில் அடியவனும் ஒருவன்.

ராகவன் said...

அன்பு காஷ்யபன் அய்யா அவர்களுக்கு,

அற்புதமான பதிவு இது.... இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்... சீனாவின் கம்யூனிசம் வரை பரவும் இந்த பின்னூட்டங்கள்... அவரவர் பார்வையினை சொல்கிறது... எது மாதிரியான சித்தாத்தங்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு உண்டு அல்லது எது அவர்களுக்கு வசதியாய் காணப்படுகிறதோ அதை பற்றியை வளர்கிறது இந்த பத்தி... பின்னூட்டங்கள் வரை நீளும் பதிவு அருமையாய் இருக்கிறது... உங்களின் அனுபவம் எங்களை போன்றவர்களுக்கு பெரிய வரம்... எத்தனை விஷயங்கள்... சார்ந்த சார்பற்ற உண்மைகள்.

வளர்கிற வேகத்தில் தன்னை மேலும் ஸ்திரபடுத்தி கொள்ள எல்லா நாடுகளுக்கும் ஆசை இருக்கிறது... ஜப்பானையும் பார்த்திருக்கிறோம் இரண்டாம் உலகபோரின் போது... சோவியத் யூனியனிடம் அது போன்ற survival of the fittest என்ற அடிப்படை instinct இல்லாதது தான் காரணமோ அது சிதறியதற்கு எனக்கு தெரியவில்லை. எனக்கு இன்று வரை கம்யூனிசம் என்பது ஒரு சித்தாந்தம் என்று தான் ஞாபகம். ஆனால் அதை மீறி ஒரு கட்சி என்ற நிர்மாணம் தான் நம் ஊரில் அதிகம் அல்லது அதை நிர்மாணிக்கும் முயற்சி தான் கம்யூனிசம் இங்கே.

சீனாவை பொறுத்தவரை கம்யூனிசம் ஒரு ஆட்சி முறை... கேப்பிட்டலிசம் என்ற உள்ளீடுடன் என்பது தீர்மானமான எனது நம்பிக்கை. உலக பொருளாதார நிறுமம் கனித்ததின்படி இன்னும் பத்து பதினைந்து வருஷத்தில் இந்தியா மூன்றாவது பணக்கார நாடாகும் என்பது. இது நடக்கும் என்பது உண்மை. அப்போது இந்தியாவும் சில தம்படி இருக்குறவன் தலைவன் மாதிரி நாட்டாமை பண்ணலாம்... இது ஒருவிதமான பாதுகாப்பின்மை என்பது தான் உண்மை.

தன்னை காப்பாற்றிக்கொள்ள அல்லது தன் பயத்தை மறைத்துக் கொள்ள போட்டுக்கொள்ளும் வேஷம் இந்த தாதாகிரி வேலையெல்லாம். இந்தியாவும் இதை செய்கிறது ஆனால் குறைவாய் செய்கிறது... கொஞ்சம் பெரிதானவுடன் இன்னும் பெரிதாய் செய்யும்... எல்லோருக்கும் தெரிகிற மாதிரி... அமெரிக்கா ஆதாயம் இல்லாமல் ஒன்றை செய்வதில்லை என்பது எப்படி ஆதாரமற்ற பூண்டுக்குசு ஆகும் என்பது எனக்கு புரியவில்லை... அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர் எந்தவிதத்திலும் அமெரிக்காவின் புத்தியை மாற்றமுடியாது... அவரே அதை விரும்பவும் மாட்டார். அமெரிக்காவின் பயம் எல்லோருக்கும் உதவி என்ற பெயரில் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள அல்லது பலப்படுத்திக் கொள்ள அல்லது ஏழு அடி சுற்றுச்சுவர் அதுக்கு மேல மூணு அடிக்கு barbed wire fence என்று செலவு செய்வது போல தான் இந்த கிரான்ட்... இதற்க்கு வட்டியில்லை... குட்டியில்லை... சரிதான்... ஆனால் 90 சதவிகிதம் defence க்கு தான் செல்கிறதே அன்றி வேறு எகிப்த்தில் நலத்திட்டங்களுக்கு அல்லது பொதுஜனங்களுக்கு அல்ல... இஸ்ரேலியருடனான வலுக்கட்டாய உறவுபாலம் எகிப்த்திற்க்கு...அமெரிக்க நிர்மாணித்தது... பயம்... மத்திய கிழக்கில் இருக்கும் இசுலாமிய நாடுகள் பற்றிய பெரும்பயம் அமெரிக்காவிற்கு. ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்காவிற்கு தன் இடத்தை தக்க வைத்து கொள்ளவேண்டிய பயம்... தெரிந்தோ தெரியமாலோ... சீனாவை நிறைய விஷயங்களில் சார்ந்து இருக்கிறது... அல்லது அதன் வளர்ச்சியை கண்டு பயந்து நேச நாடாய் அன்கீஹரித்துக் கொண்டு இருக்கிறது... தாரள பொருளாதார் கொள்கைகள்... ஒப்பந்த்தங்கள் என்று... அய்யா சொன்னது போல... இநதியா... சீனா... பாகிஸ்தான் எல்லாம் நட்பு பாராட்டி விட்டாள் என்னாவது என்ற பயம் அமெரிக்காவை என்னென்னமோ செய்ய வைத்திருக்கிறது... அது இன்னும் செய்யும்.
இநதியா பொருளாதார ரீதியாய் வளர இன்னும் தாராளமயக் கொள்கைகள் வேண்டும் தான் (பக்கவாட்டு வளர்ச்சி). சிறு வியாபாரிகள், தரகர்கள், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட தான் செய்வார்கள் இப்போது இருக்கிற நமது அரசுக் கொள்கைகளின் படி. அதை யார் சரிசெய்வது... ஏன் கம்யூனிஸவாதிகள் தெருவில் இறங்கவில்லை... ஒரு perseverance ஏன் இல்லை அவர்களிடம்... தமிழ்நாட்டில்... அரசில் இருந்தாதான் எதையும் செய்யமுடியுமா என்ன? எகிப்து மக்கள் எதில் இருந்தார்கள்... நிறைய பேசும், விவரம் நிறைந்தவர்கள் இருக்கும் போது நாம் ஏன் பெரிதாய் எதுவும் செய்ய முடியவில்லை....
எகிப்தின் மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று பேசுபவர்கள்... இசுலாமிய சகோதரத்துவம் கட்சியை ஏற்பது சரியல்ல... அது இன்னும் மோசமாகி விடும்... மக்கள் புரட்சி, தலைவர் இல்லாமல் எங்கு செல்லும் என்பது புரியவில்லை... தேர்தலுக்கு... இன்னும் அதிக லிபரேடேட் கொள்கைகள் இருக்கிற கட்சி வேண்டும்... எகிப்து எந்த இசுலாமிய நாடுகள் போலவும் இல்லை...
எகிப்தை பற்றி நிறைய எழுத வேண்டும்... ஒரு பதிவாய்... காமராஜிடம் சொன்னது போல நிறைய இருக்கு பேச... நிறைய பேச நினைத்து கொஞ்சம் அங்கங்கே தொங்குகிறது... பார்க்கலாம்...

அன்புடன்
ராகவன்

அப்பாதுரை said...

சுவாரசியமான உலக அரசியல். தெரியாத செய்திகளைத் தந்தீர்கள் காஸ்யபன் (வழக்கம் போல்). மதிக்கத்தக்கக் கருத்துக்கள் ராகவன். இருந்தாலும் துண்டை உதறவில்லை,
அவசர வேலை முடித்து வந்து எழுதுகிறேன் :)

hariharan said...

அருமையான பின்னுட்டங்கள், நேற்று வந்த செய்தியின் படி ஹோசினி முபாரக்கின் சொத்து மதிப்பு 40 முதல் 70 பில்லியன் டாலர் . இது பில்ஹேட்ஸ், வாரன் பஃபெட் ஆகியோரின் சொத்துக்களை விட அதிகம். சூடான் அதிபர் 10 பில்லியன் டாலர்க்ளை ல்ண்டன் லாயிட்ஸ் வங்கியில் போட்டுள்ளார், துனூசியாவிலிருந்து தப்பிய அதிபரும் கொள்ளையடித்து சவுதியில் அடைக்கலமாகியுள்ளார். மூன்றான் உலக நாடுகளில் மக்கள் பணத்தை ஆளும் வர்க்கம் இப்படி கொள்ளையடித்து வள்ர்ந்த நாடுகளில் முதலீடு செய்கிறது. அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

kashyapan said...

அன்புள்ள சிவகுமரன் அவர்களே! உங்களுக்கு மறுப்பு எழுதுவதாக நினைக்காதீர்கள். இது ஒரு விளக்கம் தான் நம் மதிப்பிற்குரிய அப்பாதுரை அவர்கள் நசிகேத வெண்பாவை உருவாக்கிவருகிறார்கள்.இந்திய தத்துவஞானத்தின் மையம் அது என்று கருதலாம். தமிழ் இலக்கியமான மணிமேகளை,சீவக சிந்த்தாமணி ஆகியவற்றில் தத்துவ விசாரம் வரும். ஆனால் முழுக்க தத்துவப்பார்வையோடு வருவது நசிகேத வெண்பா தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் சிந்தனைத்தெளிவு நம்மை பிரமிக்க வைப்பதாகும். இதன "இந்து" மத த்தோடு குழ்ப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஆதிசங்கரர் வந்த பிறகுதான் இந்திய தத்துவங்கள் ஸ்தபனப்படுத்தப் பட்டன. ஸ்தபனம் என்று வந்தால். அதற்கு உள்ள சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உண்டு. அதற்கு நம்மை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்ஸிய தத்துவத்தில் விருப்பமும் ஈடுபாடும் கொண்டவர்கள் உண்டு. அதனை இந்த நாட்டின் அரசியல்,சமூக வாழ்க்கையில் நடமுறைபடுத்த ஸ்தாபனரீதியாக செயல் படுத்த விரும்பி செயல்படும்போது அவர்கள் தங்களுக்கென்று சிலகட்டுப்பாடுகளை வத்துக்கொள்வது தவறில்லை. அந்த கலை இலக்கிய பெருமன்ற மேடை ஒரு ஸ்தபனத்தினுடையது.அவர்களுடைய விதிமுறைகளுக்கு உட்படுவது சர்யான செயல் பாடாகும்.அதனை Ridicule பண்ணுவது சரிதானா? சிவகுமரன்!
ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் இன்று எத்தனை பத்திரிகை அடிக்கவேண்டும் என்று விநியோகப்பிரிவிலிருந்து சொல்வார்கள்..மிஷின் அருகில் உள்ள அட்டையில் அது எழுதப்பட்டிருக்கும்.தினம் அதனை பார்ப்பேன். நேற்றை விட கூடியிருக்கிறதா? என்ற ஆர்வம். நிதி நிலயினை கண்காணிக்கும் தோழர் விநியோகம் கூடினால் வருந்துவார். காரணம் பத்திரிகை நட்டத்தில் நடக்கிறது வினியோகம் கூடினால் நட்டம் அதிகம் என்பது அவர்கவலை.லட்சக்கணக்காண தொழர்களின் வியர்வையால் அந்த நட்டம் சரிக்கட்டப்படுகிறது
விளம்பர வருமானம் கிடையாது.போராட்டகாலங்களில் அரசு கொடுக்கும் எதிர் மறை விளம்பரங்களை பொடமாட்டர்கள்.அதனால் அரசு விளம்பரங்களைக் கொடுக்காது.வர்தக விளம்பரங்களும் வராது.
அப்படிபட்ட பத்திரிகையின் ஆசிரியரைப் பொல அலசுகிறீர்களே என்று நீங்கள் குறிபிட்டுள்ளதுபெருமையாக இருக்கிறது.---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

அய்யா, எனது பின்னூட்டம் தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
தீக்கதிர், செம்மலர், தாமரை போன்ற இதழ்களை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை. தாமரை இதழில் என் சித்தப்பா சுந்தரபாரதியின் கவிதைகள் நிறைய வெளிவந்திருக்கின்றன.
என் 18 ஆவது வயதில் என்னையும் கவிஞனாய் மதித்து மேடையேற்றியது என் சித்தப்பா சார்ந்திருந்த த.க.இ.பெ தான். அந்த நன்றியை நான் என்றும் மறவேன்.
அவர்களின் அரசியல் நிலைப்பாடு எனக்கு ஒத்து வரவில்லை. அவ்வளவுதான். ( காமராஜ் , ஹரிஹரன் போன்றோரின் ஆதங்கம் தான் எனக்கும். அவர்கள் ஜீரணித்துகொண்டு
அங்கிருக்கிறார்கள். நானில்லை. )

அப்பாதுரை said...

'அமெரிகாவின் ஒவ்வொரு மயிர்க்காலும் பித்தலாட்டம்' என்கிற கருத்தின் செறிவும் குறும்பும் பிடிக்கிறது - ஆனால் அதில் உண்மை இல்லை ஐயா. கேப்டலிச-சோசலிச கொள்கை ஈடுபாட்டின் வேகம். எனக்கும் சோசலிசம் பற்றி ஏதாவது சொல்லத் தோன்றுகிறது, ஆனால் உங்கள் அளவுக்கு பண்போடு சொல்ல வருமா தெரியவில்லை, விடுங்கள்.

மார்க்ஸ் அதிகம் படித்ததில்லை - கேபிடல் புத்தகம் கல்லூரியில் அவசியப்படிப்பு என்பதால் படித்தேன், பிறகு பிடித்ததால் சிலமுறை படித்தேன். கம்யூனிசக் கட்சிக் கொள்கைகளுக்கும் மார்க்சின் சித்தாந்தங்களுக்கும் நிறைய வேற்றுமை இருப்பதாகப் படுகிறது. இன்றைய கம்யூனிசக் கட்சிக் கொள்கைகள் லெனினைத் தழுவி அமைந்தவை போல் தோன்றுகிறது. வீழ்ச்சிக்குக் காரணம் அதுவே தானா?(வீழ்ச்சி பிடிக்கவில்லையென்றால் வளராமை?) தனி மனிதனின் உணர்வுகள் (மேஸ்லவின் தேவவைகள் அடிப்படையில்) பொருளீட்டுவதிலும் சேர்ப்பதிலும் என்றைக்குமே பதிந்திருக்கும் - சட்டமோ அரசோ தலையிட்டு சமதளப்படுத்துவதை தனிமனிதம் விரும்பாது. இதற்கு உதாரணங்களை உலக வரலாற்றில் நிறைய காணலாம். கம்யூனிசக் கொள்கைகள் தனிமனித வெற்றியை ஆதரிக்காத வரை வளர்வது ரொம்ப சிரமமென்று நினைக்கிறேன். மார்க்ஸ் தனி மனித வெற்றியை தேவையென்றே நினைத்தார். தனி மனித வெற்றிக்கும் கேபிடலிசத்துக்கும் இடைய அரை இஞ்ச் வேலி தான், என்ன சொல்கிறீர்கள்?

ராகவன் சொல்லியிருப்பது போல சைனாவின் வளர்ச்சிக்குக் காரணம் சோசலிசப் போர்வைக்குள் இருக்கும் கேபிடலிச எண்ணங்கள் என்று நானும் நம்புகிறேன். சைனா கேபிடலிசத்தின் சாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதை சோசலிச சக்கையுடன் கலந்து வழங்குவதால் ஒரு பெரிய சமூக விபத்தில் சிக்க சாத்தியமுள்ளது.

இன்றைக்கு உலகில் மூன்றாவது பெரிய மிலிடெரி இந்தியாவில் உள்ளது. முதலாவதான சைனா அரைகுறை கம்யூனிசம். இரண்டாவதான அமெரிகா அரைகுறை கேபிடலிசம். மூன்றாவதான இந்தியா, அரைகுறை சோசலிசமா கேபிடலிசமா எதுவெனத் தெரியவில்லை.

kashyapan said...

அன்புள்ள சிவகுமரன்! தர்க்கரீதியாக பேசும்பொதும், எழுதும் போதும், பிறர் மனம் புண்படுமே என்று யொசித்தால் சரியாக இருக்காது. தத்துவ ஈடுபாடு என்பது வேறு.அதே தத்துவம் நிறுவனமாக செய்ல்படுவது என்பது வேறு என்பதை விளக்க வாய்புக்கடைத்தது என்பதுதான் சரி.சுதந்திரப்போராட்டவீரர் ஏன்.சங்கரய்யா, காலம்சென்ற கே.முத்தய்யா,அற்புதசாமி ஆகியொர் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை தீக்கதிர்.மாதம் 30 ரூ அலவன்சும் தினம் 4 அணா படியும் வாங்கிக்கொண்டு பணியாற்றினார்கள் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம், வைப்பு நிதி, பணிக்கொடை எதுவும் வேண்டாம் என்று எழுதிகோடுத்துவிட்டு எழுத்தாளர்களும்,அச்சகத்திதொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மாதம் கொடுக்கும் அலவன்சு தான் வருமானம். மதுரை 1ம் நம்பர் சந்தில் இருந்த அலுவலகம் இன்று மதுரையின் "மவுண்ட் ரோடு" என்று அழைக்கப்ப்டும் வளாகத்தில் செயல் படுகிறது.கணிணீ, 8ப்க்கம் கொண்ட பத்திரிகை 45000 பிரதிகளை ஒருமணிநேரத்தில் வண்ணங்களிலடித்து, மடித்து,25,25 பிரதியாக எண்ணி கட்டுப்போடும் இய்ந்திரங்களை கோண்டு செயல்படுகிறது. இப்போது மதுரை சென்னை,கோவை, திருச்சி என்று நான்கு பதிப்புகள் வருகின்றன.இப்போதும் நட்டத்தில் தான் செயல் படுகிறது.ளட்சக்கணக்கான தொழிலாளர்களும், உழைப்பாளிகளும் தங்கள் வியர்வையால் அதனைச்சரிசெய்கிறார்கள்.
சிவகுமரன்! "சொல் புதிது,பொருள் புதிது" என்று தமிழை மக்களிடம் கொண்டுசென்ற பாரதியின் பேரன் நீங்கள். உங்களால் என்னைப் புண்படுத்த முடியாது.---காஸ்யபன்.

அப்பாதுரை said...

'பத்திரிகை தர்மம்' பற்றிப் படித்திருக்கிறேன். அதன் உள் பரிமாணத்தை உங்கள் பின்னூட்டங்களில் தெரிந்து கொண்டேன் காஸ்யபன். உள்ளுக்குள் இத்தனை பிடிப்பா!

raj said...

Well said sir. USA is the winner in the fight between Mubarak and his people. The subject matter relating to the influence of USA & certain other major powers in Egypt and other
developing countries through IMF has been beautifully examined in an article by jayati
Gosh in Frontline.

It lucidly outlines the IMFs agreement with Mubarak that led to a major shift
towards privatising state assets, reforms to facilitate a vicious circle of
the small clique getting filthy rich and rest getting impoverishedIMF in 2008 lauded Mubarak's govt for creating an economy on the move arguing
that Egypts implementation of the economic reforms that the IMF had recommended
enhanced growth performance while strengthening macroeconomic stability. On insistence of IMF
subsidies on essential items were reduced by Mubarak regime. On the other hand IMF points out that the rising food prices as having devastating consequences for developing countries.

The same IMF now claims that it had known the possible conseuences all along and announces that it
'is ready to help in defining the kind of policy that could be put in place' - a dangerous repetition.

Now that the liberty has been achieved, let good sense prevail amongst the rulers and ensure that they respect the voices on the streets.

raj said...

Well said sir. USA is the winner in the fight between Mubarak and his people. The subject matter relating to the influence of USA & certain other major powers in Egypt and other
developing countries through IMF has been beautifully examined in an article by jayati
Gosh in Frontline.

It lucidly outlines the IMFs agreement with Mubarak that led to a major shift
towards privatising state assets, reforms to facilitate a vicious circle of
the small clique getting filthy rich and rest getting impoverishedIMF in 2008 lauded Mubarak's govt for creating an economy on the move arguing
that Egypts implementation of the economic reforms that the IMF had recommended
enhanced growth performance while strengthening macroeconomic stability. On insistence of IMF
subsidies on essential items were reduced by Mubarak regime. On the other hand IMF points out that the rising food prices as having devastating consequences for developing countries.

The same IMF now claims that it had known the possible conseuences all along and announces that it
'is ready to help in defining the kind of policy that could be put in place' - a dangerous repetition.

Now that the liberty has been achieved, let good sense prevail amongst the rulers and ensure that they respect the voices on the streets.