Sunday, January 13, 2013

நீயா ?  நானா ?   வின்

"முகம்" .........!!!


"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்ற சொல்லாடலை அக்கு வேறு  ஆணி வேறாக முகம் என்ற தலைப்பில் ஆராய்ந்தார்கள் ஸ்டார் விஜயின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில்.!

முகத்தின்வசீகரம், பெண்களுக்குபிடித்த முகம்,ஆண்களுக்கு பிடித்த முகம்,
மனித வள மேம்பாட்டு   நிபுணருக்கு பிடித்தமுகம், மனித வியல் நிபுணருக்கு பிடித்த முகம், நடிகருக்கு  பிடித்த  முகம்  என்று  பேசினார்கள்! 

முகத்தைப் பார்த்து ஒருவரின் மனதை அறியமுடியுமென்பதும் விவாதிக்கப் பட்டது!  நிச்சயமாக மனதை அறிய முடியாது என்று ஒரு அம்மையார் சொன்னதுமுத்தாய்ப்பாக  இருநதது !

மகிழ்ச்சியாகவும், நகைச்சுவையோடும் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் சாந்தி என்ற அம்மையார் வந்தார் !

சாந்தி சிறுவயதிலேயே அழகாக இருப்பார் ! அவருடைய தாயாருக்கு தன மகளின் அழகில்பெருமை ! சீவி,சிங்காரித்து,பூவும் பொட்டும் வைத்து அழகு பார்ப்பார்  மகளை ! உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது
ஒரு விடலைப் பையன் சாந்தியின் கழுத்தில்  மஞ்சள் கயிறை கட்டிவிடுகிறான் ! பெரியவர்கள்,சாந்தியின் தாயார் ஆகியோர் அவனுக்கே சாந்தியை  மணமுடிக்க சம்மதிக்கிறார்கள் ! சாந்தியின் அழகிற்காகவே அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவே அந்தப் பையனும் சொல்கிறான் ! சாந்தியும் எற்றுக் கொள்கிறாள் ! திருமணம் நடந்த பின் தான் அந்தப் பையனுக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரிய வருகிறது ! சாந்திக்கு பெண் குழந்தை பிறக்கிறது ! கணவனின் குடி தொல்லையும் அதிக மாகிறது ! இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள் சாந்தி! கணவனின் இம்சைபொறுக்க முடியாமல் தாய்வீட்டிற்குவருகிறாள் சாந்தி ! திரும்பவில்லை !

கணவனுக்கு கோபம் ! அழகான சாந்தியை வேறு எவனாவது ....!  வக்கிர புத்தி ! ஆணல்லவா ! சாந்தி வீட்டிற்கு வருகிறான் ! அங்கு தங்குகிறான் ! இரவு குழந்தைகளோடு தூங்குகிறான் ! அருகில் இருக்கும் மனைவியின் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டு ஓடிவிடுகிறான் ! இது  நடந்து  இருபது  வருட மாகியிருக்கும் !

அந்த சாந்திதான் பாதி எரிந்த முகத்தை மூடிகொண்டு வந்திருக்கிறார்  !

ஒருங்கிணப்பாளர் சாந்தியிடம் " உங்கள் கணவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா ? என்று கேட்டார் !
" யார் மீதும் கோபம் வரவில்லை ! வருத்தம் --இப்படியாகிவிட்டதே -என்ற வருத்தம் இருந்தது !" அரங்கமே அதிர்ந்து மோனித்தது !


"அப்போது எனக்கு இருபத்தினான்கு வயது ! என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ! வசதியில்லை ! பதிவுத்திருமணம் செய்யலாம் ! அதற்கு கணவரின் ஒப்புதல் வேண்டும் ! இல்லையென்றால் 10000 ரூ லஞ்சம் கேட்கிறார்கள் ! என்னிடம் பணம் இல்லை ! "
  
மீண்டும் அரங்கத்தில் அமைதி !

பங்கு பெற வந்திருந்த "திரு நங்கை " ஒருவர் ,பெண்மைக்காக பல  அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம் நாங்கள் ! கொடுரமாக சாந்தியை தாக்கியதை நினைக்கும் போது ....! "  


அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை !
















2 comments:

Matangi Mawley said...

poignant moment... this post inspired me to watch the episode online!

kashyapan said...

மாதங்கி அவர்களே! உங்கள் வருகைக்கு நன்றி! அந்தப் பெண் சாந்தி எனக்கு யார்மேலேயும் கொபமில்லை என்ரு சொன்ன போது அரங்கம் ஸ்தம்பித்தது . பலர் மனதிற்குள் விம்மினர் !---காஸ்யபன்