Sunday, January 06, 2013

நெகிழச்செய்த ஒளி பரப்பு .......!!!


மானவிகள் இரண்டு புறமாக அமர்ந்திருக்கிறார்கள் ! துடிப்பும், செய லூக்கமும் ,  சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட மேல்தட்டு மாணவியர் அவர்கள். ! அவர்களின் வசதியான ,மேல்தட்டு வாழ்வு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும்,சொல்லிலும்பட்டுத்தெரிக்கின்றது.!சென்ன நகரத்தின்  மிகச்சிறந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும்  மிடுக்கு  அவர்கள் முகத்தில்பளிச்சிடுகிற து !

மற்றொரு பக்கம் அரசுகல்லுரிகளில்படிக்கும் நடுத்தர கீழ்தட்டு மாணவிகள்
 அமர்ந்திருக்கின்றனர்! வசதி இல்லாமை அவர்முகங்களில் படர்ந்துள்ளது.!
போஷாக்கான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை
அவர்களுடைய கண்கள் வெளிப்படுத்து கின்றன !

ஒரு புறம் விலைஉயர்ந்த கைப்பைகள் -அதில்  செல்போன்  ,விலை   உயர்ந்த  குளிரூட்டும் கருப்பு கண்ணாடி, லிப்ஸ்டிக் , நகபாலிஷ்,-! கல்லூரியில் சேர்ந்ததும் ஆறு ஜோடி காலணிகள் வாங்கியுள்ளதாக ஒருவர கூறினர் !

எதிர் புறம் சாதாரண கைப்பைகள் ! அதனுள் கொஞ்சம் பவுடர்,, ,பேனா,சில்லரைகாசுகள்! ஒருவர் கல்லூரியில்சேர்ந்த பிறகு ஐந்தாறு சூடிதார் வாங்கிகியதகக் கூறினார் ஒருவர் மெல்லிய தங்கத்தாலான சங்கிலி ஒன்றை அம்மா வாங்கித் தந்ததாகக் கூறினார்.காதுக்கு ஜிமிக்கி, விரலுக்கு மோதிரம் வாங்கியதாக ஒருவர் கூறினார்..

தங்கள் தேவைகளை தாங்களே முடிவு செய்பவர்களொருபக்கம் !  மற்றொரு பக்கம் தங்கள் ஆசைகளை முழுங்கிவிட்டு பெற்றொரின்  வசதிக்குவளைந்து வாழும் மாணவிகளொரு பக்கம் !

அவர்களிடையே விவாதம் தொடர்ந்தது.! அந்த சின்னஞ்சிறு பெண்கள் கள்ளம்கபடமற்று தங்கள்  கல்லூரி  வாழ்க்கையில் செய்த குறும்புகள், தோழிகள்,ஆசிரியர்கள்   ஆகியொருக்குபட்டப் பெயர்  வைத்தது என்று பகிர்ந்து மகிழ்ந்தனர்.

அவர்கள் கல்லூரிகளில் நடக்கும் கலைவிழாக்கள் பற்றி பேச்சு திரும்பியது.!
பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகின.!  அரசு கல்லுரி மாணவிகள்  தாங்கல் ஒதுக்கப்ப்டுகிறோம்  ! எங்களை அவமதிக்கிறார்கள் ! எங்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிரமம் உள்ளது  என்பதால் ஏளனம் செய்   கிறார்கள்  என்று குற்றம் சாட்டினர் .

எதிர்தரப்பு மாணவிகள் இதனை  மறுத்தனர்! தாழ்வு மனப்பான்மையின்  காரணமாக  அவர்கள்   ஒதுங்கி போகிறார்கள். என்று சமாதானம் கூறினர்!
இருதரப்பும் கூர்மையாக தங்கள் நிலையினை நியாயப்படுத்தினர்.

அடுத்து கல்லூரியில்வசதிகள் பற்றி விவாதம் நடந்தது.

தனியார் கல்லூரிகளில்குளிறூட்டப்பட்ட அரங்கமுள்ளது. படிப்பதற்கான சுழல் நன்றக உள்ளது என்று பொதுவான அபிப்பிராயத்தை மானவிகள்முன் வைத்தனர்.!

அரசு கல்லூரி மாணவி ஒருவர் எழுந்தார் ! எங்கள் கல்லூரியில்  restroom   (கழிப்பறை)கிடையாது  என்றார்! ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்! உங்கள் கல்லுரியி எத்தனை  மாணவிகள் என்று கேட்டபோது 3500 மானவிகள் என்றார்.!  தண்ணிர் கிடையாது ! சகிக்க முடியாது ! என்ன செய்கிறீர்கள் ? சமாளிப்போம் ! வேறூ வழியே இல்லை என்றால் பயன்படுத்ததானே வேண்டும்  என்றார் ஒரு மாணவி  !

அரங்கம் ஸ்தம்பித்தது !

எதிரில் அமர்ந்துள்ள மாணவிகளின் முகங்களில் அதிர்ச்சி ! சிலர்  உள்ளம்  நடுங்க ,உதடுகள் பிதுங்க கசிந்தனர்!

ஒருமாணவி எழுந்தார் !  இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு கல்வியத்த்தொடரும் அந்த மானவியர்க்கு மரியாதை செலுத்தும்  வகையில் எழுந்து கையொலி எழுப்புங்கள் என்றார் !
அரங்கம் எழுந்து அந்த எளிய மாணவிகளுக்கு மரியாதை செலுத்திய போது " இந்தியா ! இந்தியா ! " என்று நெகிழ்ந்து என் மனம் கதறியது !!!



( 6-1-!3 அன்று ஸ்டார்விஜய்  தொலைக்கட்சியில் நடந்த "நீயா நானா "
நிழ்ச்சி பற்றிய பதிவு )





ர் க

1 comments:

hariharan said...

I got mail with same subject, we need toilets!