Sunday, September 29, 2013

டெலி பிலிம்:


"ஆத்மி  அவுர் ஔரத் " (1984)


அது மலை மேல் உள்ள குக்கிராமம் .மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள் ! ஐந்து மைல்தள்ளி ஒரு சாலை பொகிறது ! அதில் காலை கீழே  இருந்து மேலே இருக்கும் சிற்றுருக்கு ஒரு பஸ் பொகும்.மாலை அதே பஸ் அடிவாரத்திற்கு செல்லும்! அது ஒன்றுதான் போக்குவரத்து !


அங்கு தான் அவன் வசிக்கிறான் ! மகா போக்கிரி! திருடு,பொய்,பித்தலாட்டம் எல்லாமுண்டு ! மகா ஸ்திரீ லோலன் ! காட்டுப்பாதையில் அடிவாரம் சென்று திருடிவிட்டு மேலே வந்து விடுவான் !

 

அந்தப் பெண் பஸ் வர காத்திருக்கிறாள் ! அவள் நிறைமாத கர்பிணி! கணவன் ஊரில் இல்லை! லெசாக இடுப்பு வலிப்பது போல் தோன்றியதால் கீழே இருக்கும் பெற்றொர் வீட்டிற்கு புறப்பட்டாள். ஐந்துமைல் நடந்து சாலைக்கு வர மிகவும்கஷ்டப்பட்டாள். சாலையில் கூட்டமாக இருந்தது !


அவனும் பஸ்ஸுக்காக காத்திருந்தான் ! ஜனங்கள் அவனிட மிருந்து ஒதுங்கியே நின்றார்கள் ! பஸ் வந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினார்கள் ! அவனும் ஏறினான் ! பிறகுதான் தெரிந்தது ! அந்தப் பெண் ஏறவில்லை என்று ! முரடன் அல்லவா! பஸ்ஸை நிருத்த சொல்லி இறங்கிவிட்டான்!

 

புறப்பட்ட இடத்திற்கு வந்தான் ! இவன் தூரத்தில் வருவதைப்பர்த்த அந்தப் பெண் ஒளிந்து கோண்டாள் !தன்னந்தனியாக இருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது ! திருப்ப இன்னுமைந்து மைல் நடந்து வீட்டிற்கு போகவா ? அல்லது மலைபாதயில் இறங்கி பெற்றொர் வீட்ட்டிற்கு பொகவா? மலைப்பாதையில்  நடக்க ஆரம்பித்தாள் !


சிறிது தூரம் சென்றது அவன் தோடர்வதை கவனித்தாள் ! பயம் ! தொடர்ந்து நடந்தாள் ! ஒற்றையடிப்பாதை ! புதரும் செடிகொடிகளுகம் நிறைந்த காட்டு பாதை ! அந்தப் பாவி தோடருகிறான் ! பயத்தில் இடறி விழுந்தாள் ! அவளால் நடக்க முடியவில்லை ! அவன் நெருங்கி வந்தான் ! கையில் இருந்த் அரிவாளை எடுத்து அருகிலிருந்த கொப்புகளை வெட்டினான் ! மரப்பட்டைகளை உரித்து நாராக்கி  இழுக்கும்சப்பரத்தை கட்டினான் ! அவளைப் பார்த்தான் ! அவ்ள் அதில் அமர்ந்து கொள்ள மெள்ள இழுக்க ஆரம்பித்தான் ! கட்டுப்பதையில் சிறு ஓடைவந்தது!


இருட்டு நேரம்! சப்பரத்தோடு அவளத்துக்கி  தலையில் வத்துக் கொண்டு மறு கரைக்கு சென்றான் !


அவளுக்கு இடுப்புவலி அதிகமாகியது  !  முனக ஆரம்பித்தாள்   ! அவன் திகைத்தான் ! அருகில் உள்ள சிற்றுருக்கு தூக்கி சென்றான் ! அங்கு மருத்துவமனையில் சேர்த்தான்! இரவு முழுவதும் வேளியே அவள் முனகல் சத்தத்தைக் கெட்டுக்கோன்டே காத்திருந்தான் ! அதிகாலை அவள் வீரிட்டு அலறும் சத்தம்கேட்டது ! செய்வதறியாது தவித்தான் ! அதனோடு "குவா-குவா "என்று புதிய சத்தம் கெட்டது ! விம்மி வீம்மி அழுதான் ! மெல்ல எழுந்து அந்தப் பெண்ணின் பெற்றொர் வசிக்கும் கிராமத்தை  நோக்கி நடக்க ஆரம்பித்தான் !


தபன் சின்கா இயக்கத்தில் தூர்தர்ஷன் தயாரித்த டெலிபிலிம் இது! அந்த போக்கிரியாக அமொல்பாலெகர் அற்புதமாக நடித்த படம் ! அந்த பெண்ணாக மதுவா ராய் சவுத்திரி நடித்தார் ! 

மிகக் குறைந்த வசனம் !  A very good non-narative film !


தமிழ் நாட்டில் நூற்றாண்டுவிழா கொண்டாடினார்களாம்! திரைப்படங்களை இலவசமாக திரையிட்டார்களாம் !  


விழாவை விமரிசித்து "விஸ்-காம்" படித்த இளைஞர்கள் முக நூலில் எழுதி விட்டர்கள் ! 


இந்த படத்தை 1984 அல்லது 85ம் ஆண்டு பார்த்த நினவு !


சில நினவுகள் அழிவதே இல்லை !!!













4 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

மிக அற்புதம் சார். இப் பதிவை எனது முக நூல் பக்கத்தில் இணைப்புத் தருகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா.

veligalukkuappaal said...

தோழர், இரண்டு முறை இப்படத்தை நான் டெல்லி தொலைக்காட்சியில் கண்டேன். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, கண்டவர் சொல்வர்... இக்பால்

kashyapan said...

ஆகா ! தோழர் இக்பால் ! நலமா ! தோடர்புக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ! ---காஸ்யபன்.