Monday, October 07, 2013

"மகாபாரதம் "

மீண்டும் மீண்டும் மகாபரதம் புதிய புதிய பணியில் ஒளிபரப்பாகிறது ! "சன்"போட்டியாக விஜய் என்று எடுத்துக்கோள்ளலாமா? இந்தி அலைகளில்புராணகதை !கடந்த இரண்டுமாதமாக இந்திய மக்கள் புராணங்களைப்பார்த்தே  ஆக வேண்டும்  !

இது யதேச்சையாகத்தானா ?இல்லை   இதற்குப்பின் திட்டமிடல் உண்டா ?இருக்கும் என்றே தோன்றுகிறது

விஜய் டி.வியில்கடந்த பதினந்து நாளாக "promo" காட்சிகள் சலிப்பூடட்டும் அளவு     இருந்தன! "கொபி "கூவி     கோண்டு இருந்தார்!வித்தியாசமில்லாமல் கலைஞர்களும், எழுத்தாலர்களும் கல்ந்து கோண்டனர் !அவர்களுடைய விளக்கங்களந்த   தொடரைபார்க்கும் ஆவலை தூண்டியது !

துரியோதனன்,பொன்றோர் சொர்க்கத்திற்கு போனதும் பாண்டவர்கள் அங்கு பொகததும் ஏன் ? கர்ணன் நரகத்திர்கு பொவானேன் ? என்ரு"முக்கியமான"கேள்விகள் எழுப்பப்பட்டன் !

இரண்டாம் இடம், உப பாண்டவம், ஐராவதம் கார்வேயின் யுகாந்தர், மிருத்துஞ்சய பற்றி   பேச ஆளீல்லை !

இராமாயனம்,மகாபரதம் போன்ற இதிகாசங்கள் ,புரணங்கள் படிக்கப்படிக்க சுவை தருவன ! நாம் நம் சிறுவயதில் செய்த குறும்புகள்,விளையாட்டுகள்,கெட்க கெட்க ,சொல்ச்சொல்ல பர்வஸ்மூட்டும் ! 

நம் சிறுவயது நம் கண் முன் நிழலாடும் ! நம்மைமகிழ்ச்சியில் ஆழ்த்தும் ! மனித குலத்தின் சிறுபிராயத்து விளையாட்டுகள் (pranks) தான் இந்த வேளிப்பாடு என்கிறார் மார்க்ஸ் ! அறிந்தும் அரியாத மனித குல கற்பனையின் சிறு வயது வடிவம் தான் இவை !

இதனையே வரலாற்றாளர்கள் வேறு விதமாக பார்க்கிறார்கள் ! 

மனிதன் பலவீனமானவன் ! அவ்னை விட எண்ணீக்கையில்,பலத்தில் சிறந்த மிருகங்களோடு குழுக்களாக வாழ்ந்தவன் ! அவன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் !அப்போதுதான் மிருகங்களிடமிருந்து தப்பமுடியும் !

குழுக்களிடையே சமாதானம் வேண்டும் ! ஒருகுழுவில் சகொதர்ச்ஸ்ண்டை ஏற்பட்டு அடித்துக் கொண்டு அழிந்த கத உண்டு ! ஊர் ஊராகஸ் சென்று சமாதானம் செய்து பிரச்சாரம்செய்த காலம் உண்டு ! இதன நாட்டுப்புரப்பாடல்களாக படி பிரச்சாஅரம்செய்தகாலம் உண்டூ ! அப்படிபாடிய பாடலள் தான் ,"கதா " என்றும்"நிருசங்கி" என்றும் பெயர் பெற்றன ! இவை ஊருக்கு ஏற்றபடி மக்கல் விருப்பத்திர்கு ஏற்றபடி மாற்றங்களோடு பாடப் பெற்றன ! பிற்காலத்தில் கெட்டிக்கரப் புலவர்கள்  இவர்ரை றாமாயணமாகவும் மகாபாரத்மாகவும் ஆக்கினர் " என்கிறார் கெ.சி,சவுத்திரி தன் Ancient History Of India என்ர நூலில் !

கிரெக்க நாட்டில் உள்ளது போல் புரான காலம் என்று இந்தியாவிலில்லை!  இந்தப்படல்கள்,மற்றும் ,அந்த அந்தக்காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கும்,இடஸ் சொருகல்களுக்கும் ஆட்பட்டன ! அதனால் இவற்றின் காலத்தைனிண்யிப்பது கடினம் ! அதனல் இந்தியாவில் மற்ற நாடுகளைப் போல் புராண்காலம் என்று கிடையாது என்று வரலாற்றாளர்கள் கூருகிறார்கள் !

இந்தக் கட்டுரை யை குறந்தது தொடரின் ஒரு நிகழ்ச்சியையாவது பார்த்து விட்டு எழுத நினத்தேன் !

பார்த்தேன் !

அரவிந்தனின் காஞ்சன் சீதாவை பார்த்து பரவச மடைந்தவன் நான் ! 

பிரஞ்சு இயக்குனர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரத நாடக குருந்தகடினைப் பார்த்தவன் நான் !

நேற்று தேவ தத்தனும்,கங்கையும்,தங்க கிறிடம் மின்ன காட்சி அளீத்ததையும் பார்த்தேன் !

ஊஹூம்....! நாம் உருப்படப்பொவதில்லை !!! 

0 comments: