Tuesday, October 29, 2013

இந்தப் புளுகுணி பிரதமராகலாமா ? .....!!!


நரேந்திர மோடி 26ம் தேதி சொன்ன புளுகு ! இந்தியாவின் உள் துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல் ! இந்தியாவின் துணை பிரதமராகவும் இருந்தார் ! 

அவருக்கு ஒரு சிலை செய்யப் போவதாக அண்ணன் மோடி அறிவித்துள்ளார் !
உலகத்திலேயே இவ்வளவு பிரும்மாண்டமான சிலை இல்லை எனூம் அளவுக்கு செய்யப்போகிறாராம்! அதனை இரும்பில்செய்யப்போகிறாராம் ! 

இந்திய பூராவிலுமிருந்து ஒவ்வொரு கிராமமும் ,ஒவ்வோரு வீடும் ஆளுக்குஇந்த்தனை கிலோ என்று இரும்பு தரவேண்டுமாம ! 

இது ஒருபக்கம்! மற்றொருபக்கம்வழக்கமான புளுகுணி வேலை !

சர்தார் வல்லபாய் படேல்  இறந்த பொது  அப்போது பிரதமாராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேரு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்று கூறியிருக்கிறார் !








In an interview to Dainik Bhaskar in Ahmadabad Narendra Modi (26th Oct
2013) criticized country’s first PM Jawaharlal Nehru for not attending the
funeral procession of the then home minister of India, Sardar Vallabhbhai
Patel. One knows Modi has been resorting to the motivated propaganda about
so many things to build up his image. Many of his claims of development of
Gujarat are also false. One knows that it was Sardar Patel who said that it
is due to the ‘Hate spread by RSS, Modi’s parent organization, that we had
to lose the Father of our Nation’. Now this statement of his about Nehru is
again a blatant lie. Morarji Desai in his Autobiography, Vol 1, Page 271,
para 2, writes that the President of India Babu Rajendra Prasad and the
Prime Minister of India Pundit Jawaharlal Nehru attended the funeral of
Sardar Patel, which was held in Mumbai.

Such false hoods have been the basis on which Modi is building his image
amongst a section of society. We condemn this statement of his and demand
and apology from Modi for this falsehood being spoken by him.

Ram Puniyani, L.S. Hardenia

All India Secular Forum, Mumbai
_______________



நம்முடைய கேள்வி ஒன்று தான் !

இந்தப்புளுகுணி 

பிரதமராகலாமா ?????














Monday, October 28, 2013

நரேந்திர மோடி !

குஜராத் பல்கலைக்கழகம் !!

கேதான் தேசாய் !!!

கேதான் தேசாய் ஒரு டாக்டர் ! அவருடைய அப்பா பெயர் தீரு பாய் ! இவரு அம்பாநியல்ல ! திருபாய் தேசாய் ! மகன  டாக்டருக்கு படிக்க வச்சாரு ! யூராலஜி பெரிய ஆளு ! 

மகன் கேதன் தேசாய் அப்படி இப்படின்னு இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரா ஆயிட்டாரு 1 மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கனும்னா இவிங்க அனுமதி  வேணும் ! தனியார் மருத்துவ கால்லுரி ஆரம்பிக்கலாம்னு வந்ததும் சிக்கல் ஆரம்ப மாச்சு !

மருத்துவமனை இருக்க ?இல்லையா? நு பாக்காமாட்டாங்க ! சகட்டு மேனிக்கு அனுமதி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க ! பஞசாப்புல  ஒருகல்லூரிக்கு அனுமதி கொடுத்தாங்க ! அத கொடுத்தது கேதான் தேசாய் ! சி.பி.ஐ  அவரை கோழியை  அமுக்கர மாதிரி அமுக்கிபுட்டாங்க ! அவ்ர்வீட்ல சோதனல1000 பவுனு   தங்கம்,1500கோடி ரோக்கம்னுல்லாம் 2010ல பேப்பர்ல வந்தது !

இப்பம்செய்தி வந்திருக்கு ! அவரு குஜராத் பல்கலைகழக செனட் மெம்பரா ஆயிருக்காறு ! சரி ஆகட்டும். ! குஜராத் பல்கலைகழகத்திலேருந்து  இந்திய மருத்துவ கழகத்திற்கு ஒரு மெம்பரை அனுப்பலாம்! 

நேத்து  குஜராத்  பல் கலைக்கழகத்துல  கூட்டம் போட்டிருக்காங்க ! அதுல  கேதான் தேசாயை மருத்துவ கழகத்திற்கு குஜராத்தின் பிரதிநிதியா"ஏகமனதாக" தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்க ! 

நம்ம ஊரு ஊசிப்போன கணேசன் கிட்ட கேட்டா  "அதுக்கு நரேந்திர மோடி என்ன செய்வாரு ?" ம்பாரு !

சரிதான !

நரேந்திர மோடி என்ன செய்வாரு ?






Friday, October 25, 2013

"Modi"  behave

youth are watching you ....!!!


அருந்ததியர் வகுப்பினரை வடநாட்டில் "வால்மீகி " என்று அழைப்பார்கள் ! 

குஜராத்தில் நகர சுத்தி தொழிலாளர்கள் முழுமையும் இந்த வகுப்பினர் தான் !

இந்தவகுப்பு இளைஞர்கள் மத்தியில் அண்ணன் நரேந்திர மோடி பேசினார் ! இந்தியா முழுவதும் சுமார் 12% தலித்துகள் ப.ஜ.க வுக்கு வாக்களித்துள்ளனர் !

தலித்துகள் ஏன் அர்ச்சகர்களாகக்கூடாது   என்று மோடி அவர்களைப் பார்த்து கேட்டுள்ளார் !

உங்களை அர்ச்சகர்களாக்குவேன் ! உங்களுக்கான பாடத்திட்டங்களை உரூவாக்கியுள்ளென்    ! சோமநாதர் ஆலயத்தில் உங்களுக்கு சமஸ்கிரத மொழி பயிறிசி அளிப்பேன் என்று கூறியுள்ளார் !

சமீபத்தில் "கர்ம யோகி " என்ற புத்தகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது ! குஜராத்தி மொழியில் வெளிவந்துள்ளது ! முன் அட்டையிலும்,பின் அட்டையிலும் "பளபள " வென்று வண்ணத்தில் நரேந்திர மோடியின் படம் போடப்பட்டிருந்தது !
அதில் துப்புரவு தொழிலாளி பற்றி "தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டும் துப்புரவுத்தொழிலை செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை ! வாழ்வாதாரத்திற்காக என்றிருந்தால் தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வந்திருக்க மாட்டார்கள் ! ஒரு குறிப்பிட்ட கலத்திற்கு பிறகு திடிரென்று அற்விளி வந்து நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகத்தின், கடவுளின் மகிழ்ச்சிக்கானது ,அதனால் கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண்மீகப்பணியக செய்து வருகிறார்கள் ! அதனால் தான் தலைமுறை தாண்டியும் அவ்ர்கள்மட்டுமே செய்யும் தொழிலாக நிடிக்கின்றது "
 என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

மனித கழிவை மனிதன் அள்ளுவது ஆன்மிகச் செயல் !

கடவுளை மகிழ்ச்சி யுறச் செய்வது !!

My  dear youths of India

Watch This point ...!!!

 


Wednesday, October 23, 2013

பொய்யிலே பிறந்து ,

பொய்யிலே வளர்ந்த ,

பா.ஜ.க .......!!!


இந்திய சுதந்திரத்திற்காக முதன் முதலாக போராடியவர்கள் யார் ? என்று கேட்டால் தமிழகத்தில் வெல்லூர் புரட்சி என்பார்கள். சிலர் கட்டபொம்மன் என்பார்கள் வேறுசிலர் பூலித் தேவன் என்பார்கள் !

வடக் கே  என்றால் சந்தால் பழங்குடி மக்களின் எழுச்சி என்பார்கள் !

வடக்கே நடக்கும் பொது தென் பகுதி அமைதி காத்தது ! தெற்கே நடக்கும் போது வட பகுதி அமைதி காத்தது ! ஒரேசமயத்தில் எழுச்சி அலை வீசவில்ல்லை !

இந்தியாவின் மெற்கில்பூனெ நகரத்திலிருந்து கான்பூர் வரை வடக்கே பஞ்சாபிலிருந்து சந்தா காடுகள்  வரை ஒரெசமயத்தில்பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ,நவாபுகள், ஜமீந்தர்கள்,சிற்றரசர்கள், விவசாயிகள் போர்வீரர்கள் சாதாரண மக்கள் என்று அத்துணை பேரும் ஒரேசமயத்தில் எழ 1857ம் ஆண்டு எழுந்தார்கள் ! வரலாற்றாளர்கள் அதனை இந்தியாவில் முதல்சுதந்திர போராட்டமென்று கூறினார்கள் !

இந்திய கம்யூனிஸ்கட்ட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி "இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் "என்று வர்ணித்தார் !

அரசியல் கட்சிகள் அத்துணை பேரும் இதனை ஏற்றுக்கொண்டார்கள் ! இந்துத்வா வாதிகள் மட்டும் இதனை ஏற்று கொள்ள தயாராக இல்லை  !

இந்த எழுச்சிக்கு திட்டம் தீட்டி ராஜாக்கள் ,நவாபுகள்,ஜக்மீந்தார்கள் ,படைவீரர்கள்,மற்றும் சாதாரண் மக்கள் ஆகியோரை  ஒன்று  திரட்டி  இந்த போராட்டத்தை நடத்தியவர்  அஜிமுளா கான் என்ற முகம்மதியர் ஆவார் ! இதுவே இந்துத்வா வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது !

அதேசமயம் இந்த பிரம்மாண்டமான எழுச்சியை  நிராகரிக்கவும் அவர்களால் முடியவில்லை ! அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் "மங்கள்பாண்டே " அதற்குக் காரணம் மத சம்மந்தப்பட்டது என்றும் திரித்துக் கூறினர் !

சாவர்கர் எழுதிய "எரிமலை " என்ற நூலிலிரூந்து "மங்கள்பாண்டே -ஒருஎழுச்சி" என்ற திட்டப்படம் வரை இதனை வலியுறுத்தினர் !

"யுக் தரண் " என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் சத்யா பால் படாயித் என்பவராவார் ! இவர் அன்றைய ஜனசங்க அமைப்பின் உறுப்பினராக இருந்தார் !ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் செயல் வீரராகவும் இருந்தார் ! அஜிமுல்லா கானின் பெயரை  தான் சார்ந்த இயக்கம் மறுப்பதையும்,மறைப்பதையும்கண்டு வெகுண்டு எழுந்தார் ! ஆர்.ஆர்.யாதவ் என்பவர் மூலம் குவாலியர்,கான்பூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பி அங்குள்ள வருவாய்த்துறை ஆவனங்கள சேகரித்து வரச் செய்தார் ! அஜிமுல்லாகான் பற்றிய செய்திகளை சரிபார்த்து யாதவ் ஒரு சிறு நூலை எழுதினார் ! 

அதனை படாயித் சரிபார்த்து அதில் ரங்கோ பாபுஜி,அஜிமன் பாயி ஆகியோரின் வீரம் செறிந்த போராட்டங்களையும் சேர்க்கச்  சொன்னார் 1இந்த பிரசுரத்தை புராக்ரசிவ் பிரசுரத்தார்கள் "ப்டாயித்-யாதவ் "பெயரில் பிரசுரித்துள்ளனர் !(2003) !

இந்தியிலிருந்து தமிழிலும்,தமிழிலிருந்து இந்தியிலும் முற்போக்கு இலக்கியங்களையும், பிர்சுரங்களையும்மொழிபெய்ர்த்துவரும் முத்து மீனாட்சி அவர்கள் 2007ம் ஆண்டு தமிழில் கொண்டுவந்துள்ளார்கள் ! முத்து மீனாட்சி அவர்கள் தென்சென்னை தமு எ சவின் உறுப்பினர் என்று பெருமையோடு  கூறிக்கொள்கிறார் ! 

பதிப்பகம் :
தி டீப் அறக்கட்டளை ,
14a , சோலையப்பன் தெரு,
சென்னை-600014.
( பாரதி புத்தகாலயத்திலும் கிடக்கலாம் )




 















Monday, October 21, 2013

அலாவுதீன் பாய் அவர்களும் ,

காந்தியைக்  கொன்றவரகாளூம் ...!!!

அலாவுதீன் பாய் அவர்களை 1969ம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன் ! தீக்கதிர் ஆபிசில் page  maker ஆக பணியாற்றிக்கொண்டிருந்தார் !

மொட்டை என்றோ வழுக்கை என்றோ சொல்லமுடியாத தலை முடி ! நீண்ட கைவைத்த வெள்ளை சட்டை,வேட்டி தோளில் துண்டு என்று பார்ப்பதற்கு கம்பிரமான உயரத்தில் இருப்பார் ! பேசுவது குறைவு! ஆனால் " நறுக்" என்று இருக்கும் ! என்னை "சாமா,சாமா " என்று  கூ ப்பிடுவார் ! மதிய சாப்பட்டிற்கு பின் அவரோடு பேசுவேன் ! பழைய விஷயங்களை சொல்வார் ! 

அலாவுதீன் பாய் சொந்தமாக அச்சகம் வைத்திருந்தார் ! தமிழ் நாட்டில் அப்போது "உருது " மொழியில் அச்சுக் கோக்க தெரிந்த வேகு சிலரில் அவரும் ஒருவர் ! பின்னாளில் அச்சகமுதலாளிஅச்சக தொழிலாளியாக மாறினார் !

மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்தார் ! 4வது வார்டு என்று நினைவு ! பட்டரக்கார தெரு,முனிச்சாலை பகுதியில்பிரபலமானவர் !

அவரோடு கவுன்சிலராக இருந்தவர்கள் பூச்சி அண்ணன்,வேம்புலு ,தயிர்கடை சுப்பிரமணியம் ஆகியொர் உண்டு!

மதுரை வைத்திய நாத அய்யர் ,,ஹிரா பாய், என்று பலர் பற்றி  பேசிக்கொண்டிருப்பார்  !

48ல் காந்தி சுடப்பட்டு இறந்தது பற்றி சொன்னார் !

"சாமா !கா ந்தியைக்    கொன்ற பொது  ஂமுஸ்லீம்க   தான்  கொன்றிருப்பார்கள் என்ற வதந்தியை கிளப்பி விட்டர்கள் ! முனிச்சாலை, பட்டரைக்காரதெரு,
தாசில்தார் பள்ளிவாசல்,இஸ்மாயி புறம் நு பதட்டமாயிருன்தது !கம்யூனிஸ் கட்சிதான் அவங்களுக்கு பாது கொடுக்க தீர்மானித்தது !ஏன்னா  அப்போ அவங்கத்தான் மதுரைல சக்தியோட இருந்தாங்க ! ஒருமணி நேரத்தில 20000 பேர திரட்டிருவாங்க ! வெறும் தண்டோரா போட்டே ஆளா சேத்துருவாங்க !
தைக்கால்   தெரு,மணி நகரம்,பூந்தோட்டம் ,செல்லுருன்னு ஆளுககுவிஞசுருவாங்க ! பூச்சி அண்ணன்னை தான் இதுக்கு அனுப்புவாங்க ! அவரு குதிரவண்டி தொழிலாளர் சங்க தலைவரு !வண்டியோட ஆளுகளை கொண்டுவந்து நீருத்திட்டரூ.குதிரை வாண்டிக்குள்ள சாமான்களை வச்சுப்புட்டாரூ !" 
"வாங்க பாய் டீ  சாப்பிடுவோம் "
"சரி சாமா "
பாய் தொடர்ந்தார் ! "அப்பந்தான் அய்யர் அனுப்பின ஆள் வந்தாரு ! காஜிமார் தெருவுக்கு ஆளனனுப்பச் சொன்னாருன்னு சொன்னான் !"
"யாரு சொன்னா?"
"அய்யரு!"
"யாரு பாய் அய்யரூ  "
"வைத்தியநாத அய்யரு ! பூச்சி அண்ணனுக்கு சொல்லிவிட்டறு "
அண்ணனும் எற்பாடு பண்ணிப்புட்டறு "
அப்புறம் ?"
"அப்புறம் என்ன அப்புறம் ! ஒரு பய வல்லை !"
"அதெப்படி வைத்திய நாதய்யருக்கு பூச்சி அண்ணன் பழக்கம் "
"அதுபெரியகதை ! "வைக்கல் "படப்புகதை ! "
"சொல்லும் பாய் "
"வாங்க சாமா ?"
பாய் எழுந்து நடக்க ஆரம்பித்தார் !

அலாவுதீன் பாய்,பூச்சி அண்ணன்,வேம்புலு  --

தோழர்களே! நீங்கள் எங்களுக்கு இன்று எவ்வளவு தேவைப்படுகிறீர்கள் தெரியுமா ? !!!!!











Monday, October 14, 2013

சரஸ்வதி பூஜையும் .....!!!

துபாயில் இருக்கும் நண்பர் ஒருவர் தன்வீட்டில் சரஸ்வதி /ஆயுத பூஜை கொண்டாடியதை வலைப்பூவில் போட்டிருந்தார் !
சந்தோஷப்பட்டேன் ! ஒருவேளை அந்த நாட்டு சட்டப்படி அரசு  அப்படி செய்தது தவறு என்று கூறி  அவரை கைது செய்தால் ...?

நிச்சயமாக அதனை எதிர்த்து குரல் கொடுக்கத்தான் செய்வேன் ! 

சென்னையில் கிழக்கு பதிப்பகத்தில் சரஸ்வதி/ஆயுத பூஜை நடந்தது புகைப்படத்தோடு பிரபல பதிவரல் பதிவிடப்பட்டிருதது !

சங்கரன் அதனை கேள்விக்குறியாக்க , ஒருசர்ச்சை  கிளம்பியது ?
சரி,தவறு என்று கச்சை கட்டிக் கொண்டு  கிளம்பினார்கள் !

இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும்,நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையாக இதனை பார்க்க வேண்டாம் என்றுதான் நான் கருதுகிறேன் ! அடிப்படையில் "மனித உரிமை சார்ந்தது ! புரட்சி ஏற்பட்டதும் சர்ச்சு களை கொளுத்தவில்லை ! மசூதிகள் அழிக்கப்படவில்லை ! கடவுள் இல்லை என்று சொன்னால் தண்டிக்கப்படும் விதி தளர்த்தப்பட்டது ! ஆத்திகம் போல நாத்திகப்பிரச்சாரமும் அனுமதிப்க்கப்பட்டது ! மூட நம்பிக்கையை ஒழுக்கும் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ! அறிவியல் ரீதியான சிந்தனை வளர ஏற்பாடு செய்யப்பட்டது !

இந்த இடுகையின் நோக்கம் அதுவல்ல !

பிரபல பதிவர் தன குழந்தைக்கு அட்சரப்பியாசம் செய்வித்ததை  பதிவிட்டிருந்தார் ! 

இரண்டரை வயதிருக்கும் ! "எங்கள் பள்ளியில் சேர்ப்பதானால் நங்கள் அட்சரப்பியாசம் செய்துதருகிறோம்" என்று பள்ளியில் நிபந்தனை வைத்ததால் அவர் கோவிலில் நடத்தியுள்ளார் !

1942ம் ஆண்டு என் ஆறாம் வயதில் எனக்கு அட்சரப்பியாசம் நடந்தது ! தி,லி டவுண் பாட்டப்பத்து ,நகராட்சிப்பள்ளிஆசிரியர் தான் செய்வித்தார் ! அப்போது ஒரு ரூபாய்க்கு 192 ச்ல்லிக்காசுகள் ! பள்ளிக்கு செல்லுமுன் ஒரு சல்லி கொடுத்தால் தன பள்ளி செல்வேன் என்றுஅடம் பிடிப்பேன் ! என் சேக்காளிகள் பள்ளிக்கு வரவே மாட்டர்கள் ! நாங்களும் படித்து பட்டம்பெற்று தமிழ்,ஆங்கிலம் மற்றும்   இந்தி மொழிகற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் ! 

நாம் குழைந்தைகளை குழைந்தைகளாக பார்க்க தவறி வருகிறோம் ! சர்வதேச ஒப்பந்தப்படி குழந்தைகளுக்கு என்று தனியாக 22 உரிமைகள் உள்ளன ! இந்த சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கைஎப்பமிட்டிருக்கிறது! உச்ச ,உயர் நிதி  மன்றங்கள் கூட அதனை தடுக்க முடியாது !

ஐக்கிய நாடுகள் சபை யில் குழந்தைகளுக்கான பிரிவு இதனை கண்காணிக்க வேண்டும் ! கண்காணிப்பதில்லை !

சரஸ்வதி பூஜை செய்யலாமா ? என்று விவாதிப்பதைவிட குழந்தைகளுக்கு சரஸ்வதியை எந்தவயதில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதில்  தெளிவு பெறுவது முக்கியம் !!!















































































  









 



 

Thursday, October 10, 2013

இந்திய திரைப்பட  நூற்றாண்டும்  

இந்திய ஒற்றுமையும்.........!!!


ஆரம்ப காலத்தில் புனே ,மதறாஸ் , கல்கத்தா நகரங்களிலிருந்து தான் திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்தன ! 

கிட்டத்தட்ட அதே காலத்தில தான் இந்திய சுதந்திர வேட்கை துளிர்விட ஆரம்பித்தது ! அன்றய தலவர்கள் இந்த புதிய கலையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினர் !  

அதேபோல் திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் புதிய தொழில் லாபகரமாக நடை பெறவேண்டுமானால் அரசியல் ஆதரவும் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதை விரும்பினர் ! 

"ஆலம் ஆரா " வெளியிடும் முன்னால் அதன் தயாரிப்பாளர் ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்தார் ! காந்திஜி வட்டமேஜை மாநாடு போய்வந்த சமயமது ! காந்திதன்னோடு ராஜாஜிஅவர்களையும் லண்டனுக்கு வரச்  சொன்னார் ! கடல்கடந்து சேல்வது பாவம் என்பதால் ராஜாஜி மறுத்து விட்டார் !

திரும்பி வந்ததும் தான் என்ன பேசினேன் என்பதை ஆகாகான் மாளிகையில்  ராஜாஜியோடு சொல்லி திட்டமிட்ட பின்தான் காந்தி அறிக்கை விட்டார் ! ஆகாகான் மாளிகையின் புல்  வெளியில் நடந்த இந்த நிகழ்ச்சி படமாகாப்பட்டது ! "ஆலம் ஆரா " படத்துடன் இந்த ஆவணப்படமும் காட்டப்படும்  என்று விளம்பரம் செய்தார்கள் ! திரப்படத்தின் வெற்றிக்கு  அன்று முதன் முறையாக அரசியல் கைகொடுத்தது !

அன்று வந்த கதைப் படங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டன ! அவை ஒட்டுமொத்த இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பதையே விரும்பினார்கள் ! சரியோ  தவறோ மக்கள் ஒற்றுமையை மட்டுமே மையப்படுத்தினார்கள் ! 

கதாநாயகன் பெயரைக்கூட இந்தியா முழுவதும் அவ்தானிக்கக்கூடிய பெயராக வைத்தார்கள்! 

குமார்,பிராதபன்,ராஜு , என்றே  வைத்தார்கள் ! 

நடிகர்கள் கூட தங்கள் பெயரை மாற்றிக்கொண்டார்கள்!

குமுத்லால்  குஞ்சி சிலால் கங்குலி அசோக்குமார் ஆனார் ! அவர் தம்பி கிஷோர் குமார் ஆனாற் ! மற்றொரு தம்பி அனுப்ப குமார் ஆனார்1

யூசுப் கான் திலீப்குமார் ஆனார் ! பக்ருதீன் ஜலாலுதீன் ஜானிவாக்கர் ஆனார் !
  
முஜபின் பானு மீனாகுமாரி ஆனார் ! 

மும்தாஜ் ஜகன் தகல்வி மதுபாலா ஆனார் !
என்  ? தமிழ் நடிகரும்,தயாரிப்பாளருமான பாலாஜி தன பட கதாநாயன்,நாயகிக்கு "ராஜ,ராதா "என்றே பெயர்  வைத்திருப்பார் !
 
பிற்காலத்தில் யதார்த்தம் கருதியும், மக்கள் ரசனை கருதியுமிவை மாறுதலுக்கு   உ ள்ளாகின ! 

ஆனாலும் அந்த முன்னோடிகளின் தேசியபார்வை இந்த நூற்றண்டுவிழாவில் நினைவு கூறப்பட வேண்டியவை தான் ! 



 





Monday, October 07, 2013

"மகாபாரதம் "

மீண்டும் மீண்டும் மகாபரதம் புதிய புதிய பணியில் ஒளிபரப்பாகிறது ! "சன்"போட்டியாக விஜய் என்று எடுத்துக்கோள்ளலாமா? இந்தி அலைகளில்புராணகதை !கடந்த இரண்டுமாதமாக இந்திய மக்கள் புராணங்களைப்பார்த்தே  ஆக வேண்டும்  !

இது யதேச்சையாகத்தானா ?இல்லை   இதற்குப்பின் திட்டமிடல் உண்டா ?இருக்கும் என்றே தோன்றுகிறது

விஜய் டி.வியில்கடந்த பதினந்து நாளாக "promo" காட்சிகள் சலிப்பூடட்டும் அளவு     இருந்தன! "கொபி "கூவி     கோண்டு இருந்தார்!வித்தியாசமில்லாமல் கலைஞர்களும், எழுத்தாலர்களும் கல்ந்து கோண்டனர் !அவர்களுடைய விளக்கங்களந்த   தொடரைபார்க்கும் ஆவலை தூண்டியது !

துரியோதனன்,பொன்றோர் சொர்க்கத்திற்கு போனதும் பாண்டவர்கள் அங்கு பொகததும் ஏன் ? கர்ணன் நரகத்திர்கு பொவானேன் ? என்ரு"முக்கியமான"கேள்விகள் எழுப்பப்பட்டன் !

இரண்டாம் இடம், உப பாண்டவம், ஐராவதம் கார்வேயின் யுகாந்தர், மிருத்துஞ்சய பற்றி   பேச ஆளீல்லை !

இராமாயனம்,மகாபரதம் போன்ற இதிகாசங்கள் ,புரணங்கள் படிக்கப்படிக்க சுவை தருவன ! நாம் நம் சிறுவயதில் செய்த குறும்புகள்,விளையாட்டுகள்,கெட்க கெட்க ,சொல்ச்சொல்ல பர்வஸ்மூட்டும் ! 

நம் சிறுவயது நம் கண் முன் நிழலாடும் ! நம்மைமகிழ்ச்சியில் ஆழ்த்தும் ! மனித குலத்தின் சிறுபிராயத்து விளையாட்டுகள் (pranks) தான் இந்த வேளிப்பாடு என்கிறார் மார்க்ஸ் ! அறிந்தும் அரியாத மனித குல கற்பனையின் சிறு வயது வடிவம் தான் இவை !

இதனையே வரலாற்றாளர்கள் வேறு விதமாக பார்க்கிறார்கள் ! 

மனிதன் பலவீனமானவன் ! அவ்னை விட எண்ணீக்கையில்,பலத்தில் சிறந்த மிருகங்களோடு குழுக்களாக வாழ்ந்தவன் ! அவன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் !அப்போதுதான் மிருகங்களிடமிருந்து தப்பமுடியும் !

குழுக்களிடையே சமாதானம் வேண்டும் ! ஒருகுழுவில் சகொதர்ச்ஸ்ண்டை ஏற்பட்டு அடித்துக் கொண்டு அழிந்த கத உண்டு ! ஊர் ஊராகஸ் சென்று சமாதானம் செய்து பிரச்சாரம்செய்த காலம் உண்டு ! இதன நாட்டுப்புரப்பாடல்களாக படி பிரச்சாஅரம்செய்தகாலம் உண்டூ ! அப்படிபாடிய பாடலள் தான் ,"கதா " என்றும்"நிருசங்கி" என்றும் பெயர் பெற்றன ! இவை ஊருக்கு ஏற்றபடி மக்கல் விருப்பத்திர்கு ஏற்றபடி மாற்றங்களோடு பாடப் பெற்றன ! பிற்காலத்தில் கெட்டிக்கரப் புலவர்கள்  இவர்ரை றாமாயணமாகவும் மகாபாரத்மாகவும் ஆக்கினர் " என்கிறார் கெ.சி,சவுத்திரி தன் Ancient History Of India என்ர நூலில் !

கிரெக்க நாட்டில் உள்ளது போல் புரான காலம் என்று இந்தியாவிலில்லை!  இந்தப்படல்கள்,மற்றும் ,அந்த அந்தக்காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுக்கும்,இடஸ் சொருகல்களுக்கும் ஆட்பட்டன ! அதனால் இவற்றின் காலத்தைனிண்யிப்பது கடினம் ! அதனல் இந்தியாவில் மற்ற நாடுகளைப் போல் புராண்காலம் என்று கிடையாது என்று வரலாற்றாளர்கள் கூருகிறார்கள் !

இந்தக் கட்டுரை யை குறந்தது தொடரின் ஒரு நிகழ்ச்சியையாவது பார்த்து விட்டு எழுத நினத்தேன் !

பார்த்தேன் !

அரவிந்தனின் காஞ்சன் சீதாவை பார்த்து பரவச மடைந்தவன் நான் ! 

பிரஞ்சு இயக்குனர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரத நாடக குருந்தகடினைப் பார்த்தவன் நான் !

நேற்று தேவ தத்தனும்,கங்கையும்,தங்க கிறிடம் மின்ன காட்சி அளீத்ததையும் பார்த்தேன் !

ஊஹூம்....! நாம் உருப்படப்பொவதில்லை !!!