Thursday, October 10, 2013

இந்திய திரைப்பட  நூற்றாண்டும்  

இந்திய ஒற்றுமையும்.........!!!


ஆரம்ப காலத்தில் புனே ,மதறாஸ் , கல்கத்தா நகரங்களிலிருந்து தான் திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்தன ! 

கிட்டத்தட்ட அதே காலத்தில தான் இந்திய சுதந்திர வேட்கை துளிர்விட ஆரம்பித்தது ! அன்றய தலவர்கள் இந்த புதிய கலையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினர் !  

அதேபோல் திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்கள் புதிய தொழில் லாபகரமாக நடை பெறவேண்டுமானால் அரசியல் ஆதரவும் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதை விரும்பினர் ! 

"ஆலம் ஆரா " வெளியிடும் முன்னால் அதன் தயாரிப்பாளர் ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்தார் ! காந்திஜி வட்டமேஜை மாநாடு போய்வந்த சமயமது ! காந்திதன்னோடு ராஜாஜிஅவர்களையும் லண்டனுக்கு வரச்  சொன்னார் ! கடல்கடந்து சேல்வது பாவம் என்பதால் ராஜாஜி மறுத்து விட்டார் !

திரும்பி வந்ததும் தான் என்ன பேசினேன் என்பதை ஆகாகான் மாளிகையில்  ராஜாஜியோடு சொல்லி திட்டமிட்ட பின்தான் காந்தி அறிக்கை விட்டார் ! ஆகாகான் மாளிகையின் புல்  வெளியில் நடந்த இந்த நிகழ்ச்சி படமாகாப்பட்டது ! "ஆலம் ஆரா " படத்துடன் இந்த ஆவணப்படமும் காட்டப்படும்  என்று விளம்பரம் செய்தார்கள் ! திரப்படத்தின் வெற்றிக்கு  அன்று முதன் முறையாக அரசியல் கைகொடுத்தது !

அன்று வந்த கதைப் படங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டன ! அவை ஒட்டுமொத்த இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பதையே விரும்பினார்கள் ! சரியோ  தவறோ மக்கள் ஒற்றுமையை மட்டுமே மையப்படுத்தினார்கள் ! 

கதாநாயகன் பெயரைக்கூட இந்தியா முழுவதும் அவ்தானிக்கக்கூடிய பெயராக வைத்தார்கள்! 

குமார்,பிராதபன்,ராஜு , என்றே  வைத்தார்கள் ! 

நடிகர்கள் கூட தங்கள் பெயரை மாற்றிக்கொண்டார்கள்!

குமுத்லால்  குஞ்சி சிலால் கங்குலி அசோக்குமார் ஆனார் ! அவர் தம்பி கிஷோர் குமார் ஆனாற் ! மற்றொரு தம்பி அனுப்ப குமார் ஆனார்1

யூசுப் கான் திலீப்குமார் ஆனார் ! பக்ருதீன் ஜலாலுதீன் ஜானிவாக்கர் ஆனார் !
  
முஜபின் பானு மீனாகுமாரி ஆனார் ! 

மும்தாஜ் ஜகன் தகல்வி மதுபாலா ஆனார் !
என்  ? தமிழ் நடிகரும்,தயாரிப்பாளருமான பாலாஜி தன பட கதாநாயன்,நாயகிக்கு "ராஜ,ராதா "என்றே பெயர்  வைத்திருப்பார் !
 
பிற்காலத்தில் யதார்த்தம் கருதியும், மக்கள் ரசனை கருதியுமிவை மாறுதலுக்கு   உ ள்ளாகின ! 

ஆனாலும் அந்த முன்னோடிகளின் தேசியபார்வை இந்த நூற்றண்டுவிழாவில் நினைவு கூறப்பட வேண்டியவை தான் ! 



 





1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கடல் கடந்து செல்லுதல் பாவம் எனக் கருதி ராஜாஜி பயணிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது ஐயா.
இதுவரை அறியாத தகவல். நன்றி ஐயா