Friday, November 29, 2013

நரேந்திர மோடியும் ,

அகமதாபாத்தும் .......!!!


அகமதாபாத்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் வந்திருந்தார் ! அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அரசியலும் பேசினோம் !

"எப்படி இருக்கிறது அகமதாபாத்?" என்று ஆரம்பித்தேன் !

"மகா  கேவலமா இருக்கு சார் ! யாரோ மதுரியாம் ! அதே பெச்சா இருக்கு ! பெட்டிகடை,ஹோட்டல்,பஸ் ஸ்டாண்டுனு இதே பேச்சுதான் ! பத்திரிகைகள்ல பூராம் படம் போட்டு ... ஜனங்கள் அது பற்றிதான் பேசிக்கிட்டு இருக்காங்க !" என்றார் !

"குஜராத் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன் " என்றேன் !

"சார் ! சாத்தூர்,சிவகாசி போயிருக்கேள்ல ! அங்க ஐந்து வயசு பிள்ளைல இரூந்து எதாவது செஞ்சுகிட்டு இருக்கும் ! உழப்பு அவங்க ரத்தத்துல ஊறினதூ"

"ரோம்பம்போதுவா பேசறீங்க "

"இல்ல சார்!  தமிழ் நாட்லொரு பழக்கம் உண்டு ! ஒன்பதாப்பு பத்தாப்பு படிக்கும்போதே சின்னப்ப்யளுகளை டைப் படிக்க  அனுப்புவாங்க ! முடியும்னா ஷார்ட் ஹாண்டு படிக்க சொவங்க ! கைவசம் இருக்கட்டும்னு சொல்வாங்க !"

"சரி" 

"அத மாதிரிதான் குஜராத்துல ! 9ப்பு படிக்குற் பையன் கிட்ட ரண்டாயிரம்  மூவாயிர கொடுத்து  வியாபாரம் பண்ணுடா ம் பாங்க ! படிச்சுக்கிட்டே பண்ணுவான் ! இது அவனங்க trait ! அரசு ஊழியர், வங்கி,இன்சூரன்சு நு எல்லாருமே வீட்ல பத்து தையல் மிஷின வாங்கி போட்ருப்பாங்க ! எடைக்கு காட்டன் துணியை வாங்கி ரெடிமேட் ஆடைகளை தைச்சு மொத்த வியாபாரிட்ட விப்பாங்க ! வணிக மனோபாவம்,எண்டர்ப்றுனர்ஷிப்   உள்ள ஜனங்கள் ! வேலையும் பாப்பாங்க ! சிறு குறும் தொழில்லயும் இருப்பாங்க ! அது மோடி வந்தாலும் செய்வாங்க ! எந்த கேடி வந்தாலும் செய்வாங்க !"

"அப்போ மோடி மேல அவங்களுக்கு .....!"

"நம்ம ஆளு பிதமரா வந்தா நல்லதுன்னு பொதுவா நினைக்க மாட்டமா ? ஜெயில் சிங்  ஜனாதிபதி ஆனாரு ! நகைதொழிலாளிகள் கொண்டாடினாங்க ! அதுமாதிரிதான் !அதோட கொஞ்சம் பயப்படுறாங்க ..!"

"ஏன் ?"

"அவரு பி.ஜே.பி காரருல்ல ! தெக்க தமிழ்நாடு,ஆந்திரா ,கர்நாடகா, கேரளா நு சப்பொற்டு  இல்லை ! ம.பி,,குஜராத்,ராஜஸ்தான் மட்டுமிந்தியா இல்லையே !"

"என்ன தான் சொல்றீங்க ?" 

"ஜனங்க கெட்டிக்காரங்க சார் ! அவர் வந்தா இந்தியாவுக்கு கஷ்டம் ! வராட்டா  குஜராத்துக்கு மட்டும் கஷ்டம் !"

 "அப்போ ...",

"குஜராத்துலயெ  அவரோட பிடி இளகரமாதிரி தான் இருக்கு ...!  ஜனவர் பிப்ரவரில அவரு ஒரு குண்டு போடுவாருனு நினைக்காங்க !"

"அது என்னைய குண்டு ?"

" நான் தப்பு பண்ணிட்டேன் ! 2002 ல நடந்ததுக்கு நான் மன்னிப்பு 
 கேட்டுக்கறேன் ! நு அறிவிப்பர்னு சொல்லிக்கறாங்க !"


மன்னிப்போமா ?
























































ரொம்ப பொதுவா பேசரீங்க ! "

Thursday, November 28, 2013

காஞ்சி மடமும் .....!!!  


சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்ததிலிருந்து தீவிர மான இந்து மத வாதிகள் அடிக்கும் கூத்து தாங்கஂ  முடியவில்லை  ! 

2000 ஆண்டு பாரம்பரிய முள்ள மடமாம் சங்கர மடம் !

ஆதிசங்காரர் பிறந்தது கி.பி 788 ம் ஆண்டு ! 32 வயது வாழ்ந்தார் ! 820 ஆண்டு கேதார்நாத்  என்ற இடத்தில் மறைந்தார் ! 

இது வரலாறு !

சிதிலமடந்திருந்த  இந்துமதத்தினை  ஸ்தாபனப்படுத்தி அதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தார் ! 

அதனை நடை முறைப்படுத்த அதிகாரங்களைக் கொண்ட மடங்களை உருவாக்கினார் !

மொத்தம் நான்கு மடங்களை உருவாக்கினார் !

மேற்கெ துவாரகை,கிழக்கே ஜகன்னாத பூரி,தெற்கே சிருங்கேரி, வடக்கே பத்ரிகாச்ரமம் ஆகியவையாகும் !

நிச்சயமாக காஞ்சி மடம் அதில் ஒன்று அல்ல !

சாளுக்கியர்களுக்கும் தமிழக அரசர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது இந்துக்களின் ஆதரவைப் பெற பல்லவர்கள் உருவாக்கியது தான் காஞ்சி மடம் அப்போது சிருங்கேரி மடம் சாளுக்கியர் ஆதிக்கத்தில் இருந்தது ! தமிழ் நாடு பூராவும் சிருங்கேரி மடத்தின் செல்வாக்கிலிருந்தது  ! அதனை மாற்ற உருவானதுதான் காஞ்சி மடம் ! பல்லவர்கள் சிதைந்த போது மடத்தை கும்ப கோணம் கொண்டு வந்தார்கள் !

"என் சிறு வயதில் "கும்ப கொணம் சாமிகள் " என்றுதான் அவர்கள் அழைக்கப்படுவார்கள் !  

" கல்கி" கிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ்.வாசன் வந்தபிறகுதான் காஞ்சி மடத்தின்  கும்பகோனம் சுவாமிகள் "பெரியவாள்"  "மகா பெரியவாள் "என்று ஆனார்கள் !

அடிப்படையில் காஞ்சி மடம் ஒரு அரசியல் தேவைக்காக உருவானது !












Wednesday, November 27, 2013

பதிலாக அல்ல ...!

விவதத்திற்காகவும் விளக்கத்திற்காகவும் ...!

சு.போ அகத்திய லிங்கம் அவர்கள் அறிவியல் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் எழுதியிருந்தார்கள் !


இரண்டும் இரண்டும் நான்கு ! இது உலகம் எற்றுக் கொண்ட உண்மை ! பல கணித  விதிகளுக்கு   உட்பட்டு தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ! சின்ன பையனிலிருந்து பேராசிரியர் வரை ஏற்றுக்கொண்ட உண்மையான கருத்து !

ஒரு கருத்து தர்க்கரீதியாக எல்லாராலும் எற்றுக் கொள்ளப்பட்டதால் உண்மையாகிவிடுமா ?

ஒரு உண்மை நிரூபிக்கப் படாததால் கருத்து என்று ஒதுக்கப்படுமா ?

சென்னையில் நாத்திகத் திருவிழா நடந்தது !

"கடவுளில்லை !கடவுள்  உண்டு என்பவன் முட்டாள் !" என்று பதாகை களோடு ஊர்வலம்வந்தார்கள் !

உலகம் பூராவிலும் உள்ள நாத்திகர்களுக்குமிவர்களுக்கும் வித்தியாசமுண்டு ! இவர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் அடிப்படையில்வித்தியாசமில்லை ! இருவருமே கடவுளை அவருடைய இருத்தலை நம்புகிறார்கள் !

கடவுள் இல்லை என்பது உண்மை ! அதனை   நிருபிக்க சங்கடப்படுகிறது ! அதனாலேயே அதனை  கருத்து என்று பெரும்பாலானவர்கள்   ஒதுக்குகிறார்கள் ! 

நம்ம ஊர் கருப்புச்சட்டை நாத்திகர்கள்  அறிவியல் ரீதியில் கடவுள் இல்லை என்பதை நிறுவ முற்படுவதை விட கடவுள் எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் !

உண்மையான நாத்திகனுக்கு கடவுள் எதிரி அல்ல ! கடவுள்   இல்லை
  என்பவனுக்கு இல்லாத ஒன்று எப்படி எதிரியாக முடியும் ? 

( நண்பர் அப்பாதுரை எழுதி வரும் கலர் சட்டை நாத்திகம் என்ற இடுகையிலிருந்து எடுத்த பகுதியோடு நான் எழுதியதும் , ! சுட்டி naathikan . blog spot )

மேலை நட்டு நாத்திக வாதிகள் இது பற்றிய விவாதத்தை மேலும் செழுமைப்படுத்த முனைகிறார்கள் !

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஏதாவது ஒரு புள்ளியில் சமன்பாடு உண்டா ? 

இறை  நம்பிக்கையாளர்கள் அறிவயல் ரீதியாக தேடு பவர்களை குழப்பத்தில் ஆழ்த்துமிடம் இதுதான் என்று நினைக்கிறேன்!

இது பற்றிதோழர் குணசேகரன் போன்ற  தத்துவ ஆசான்கள் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ! 

அவர் மட்டுமல்ல ! 

யாரானாலும் விளக்கம் தர  வேண்டுகிறேன் !











































Tuesday, November 26, 2013

சோழ.நாகராஜன் -நேர்காணல் ...!!!

இன்று (27.11.13 ) காலை ஐந்து மணிக்கு குறுஞ செய்தி ஒன்று வந்தது ! மிண்டும் 5.30 க்கும் அதேசெய்தி வந்தது ! தோழர் நாகராஜன்  பொதிகை தொலைக்கட்சியில் நேர்காணல் நிகழ்ச்சி பற்றிய நீனவூட்டல் ஆகும் அது ! ஏற்கனவே முகனூல் மூலம் தெரிந்த ஒன்றுதான்!

காலை 7,30க்கு நானும் எழுத்தாளர் முத்துமீனாட்சியும் தொலைக்கட்சி பெட்டிமுன் அமர்ந்தோம் !

தங்கு தடையற்ற ஆற்றோட்டம் போன்ற பேச்சு ! நிதானமான , அழுத்தமான பதில்கள்! எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை முன் நிறுத்தாமல் , கவிஞர் மீரா,உடுமலை நாராயணகவி, கலைவாணர்,மகாலிங்கம் என்று மற்றவர்களைப் பற்றி பேசியது மனத்தைக் கவர்ந்தது ! 

பட்டறிவும், முதிர்ச்சியும் நாகராஜன் அவர்களை மிக உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது அவரை நெருங்கி பார்த்தவர்களுக்குப் புரியும் ! எப்பேற்பட்ட வளர்ச்சி !

80ம் ஆண்டுகளில் வெண்புறா சரவணன், சு.வெங்கடேசன்,நாகராஜன் என்று "பட்டா " இளைஞர்களாக திருப்புரம்குன்றத்து தெருக்களில் சுற்றிய காலத்திலிருந்து அவரை அறிவேன் !

சனாதன குடும்பத்தில்பிறந்த அவர் பெரியாரை விரிட்டி விரட்டி புரிந்து கொள்ள முயன்றவர் ! தீவிர மான நாத்திகர் ! 

பின்னாளில் மார்க்சிய மெய்ஞானத்தை புரிந்து கோண்டு சமூகப் பேராளியாக மாறியவர் !

தனக்கு வந்த வங்கி பதவியை வேண்டாமென்று உதறி குடும்பத்தைக்காப்பாற்ற கோழிப்பண்ணை  நடத்திவாழ்நதவர் ! குன்றத்துக் கந்தனோடு சேர்ந்து த.மு.எ.ச.வை தூணாக நின்று வளர்ததவர்களில் ஒரு வர் !

புகைப்பட நிபுணராகவும் , தொலைக்காட்சி பதிவாளராகவும் பணியாற்றியவர் !
கவிஞாராக ,கட்டுரையாளராக பணியாற்றி இன்று "செம்மலர்" பத்திரிகையின்  துணை ஆசிரியராகமிளிருபவர் !
------------------------------------------------------------------------------------------------------------

1952ம் ஆண்டு அம்பாசமுத்திரம் தீர்தபதி உயர் நிலைப்பள்ளியில் sslc (11ம் வகுப்பு ) படித்துக் கொண்டிருந்தேன்! அப்போது ஹாஸ்டலில் கோலப்பன் என்ற  மாணவனும் படித்தார் ! கோலப்பன் கலைவாணர் அவர்களின் மகன் ! ஹாஸ்டலில் விளயாட்டு மைதானத்தில அவரை பார்த்திருக்கிறேன் ! வகுப்பறையில் பார்த்ததே கிடையாது !

கலைவாணர் கொடுத்து வாழ்ந்தவர் ! அவருக்கு கொடுத்து உதவியவர் தயாரிப்பாளர் A .L . சீனுவாசன் ! லட்சக்கணக்கில் கலைவாணருக்கு கொடுத்தவர் ! கலைவாணர் மிகுந்த சிரமத்தில் இருந்த கடைசிக்காலத்தில் கலைவாணர் எழுதிக் கொடுத்த பத்திர \ங்களை கிழிதுப்போட்டு அவருக்கு கடனிலிருந்து விடுதலை அளித்தவர் ! 

A . L .சீனிவாசன் கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் ஆவார் !
-----------------------------------------------------------------------------------------------------------
சோழ.நாகராசனுக்கு ஒரு வேண்டு கோள் ! அந்த" தெருப்பாடகன் " மகாலிங்கம் பற்றிய நூலை விரைவில் தாருங்கள்! "நாம் இருவர்    "
படத்தில் மகாலிங்கம்  நடித்த பாத்திரத்தின்  பெயர் "சுகுமாரன் "  ! தன மகனுக்கு சுகுமாரன் என்று பெயரிட்டார் மகாலிங்கம் !

மிகஅற்புதமான அந்தகலைஞனை உலகமறியச் செய்யுங்கள் தோழரே!

வாழ்த்துக்கள் !!!!










































 










































































































Monday, November 25, 2013

அப்பாதுரை அவர்களின் தயவில் :


நவம்பர் 24, 2014


    எனக்கும் செவ்வாய் தொடும் விருப்பம் உண்டு. செவ்வாய்க்குச் சொந்தக்காரர் கோபித்துக் கொள்வாரோ என்ற கலக்கமும்.

இஸ்ரோ காரர்கள் செவ்வாயைத் தொடப் போகிறார்களாம். கொடுத்து வைத்தவர்கள்.

செய்தியைப் படித்ததும் அமெரிக்காவின்... இல்லை.. உலகின் அத்தனை பேரையும் போல் நானும் வியந்து அசந்தேன். சில சைனாக்காரர்கள் போல் பொறாமையில் வேகவில்லை. சில அமெரிக்கர்கள் போல அல்பமாக யாஹூவில் கமென்ட் போடவில்லை. நம்பள்கி குடியுரிமை நஹி ஹை என்றாலும் பாரதியைக் கொண்டாடும் பாத்தியதை உண்டு என்ற தைரியத்தில் எங்கள் பாரத தேசமென்று கொஞ்சம் தோள்கொட்டினேன்.

இதுவரை பழுதில்லாமல் இயங்கி வரும் மங்கல்யான் (சரியா?) தொடர்ந்து அப்படியே இயங்கி பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி பல விதங்களில் இந்தியாவை மேம்படுத்தும். செவ்வாய்ப் பயணத்தில் ஆசியாவில் முதலிடம், உலகின் நான்காவது இடம் போன்ற சாதா சாதனைகள் ஒரு புறம் இருக்க, நிறைய நெய் மசாலா சாதனைகளுக்கான வாய்ப்பு நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கிறது.

அமெரிக்க நாசா இயக்கம் ஒரு செவ்வாய்ப் பயணத்துக்கு இரண்டாயிரத்தைனூறு மிலியன் டாலர் செலவழிக்கையில் இந்தியாவின் இஸ்ரோ எழுபத்தைந்து மிலியன் டாலர் செலவழித்ததாகப் படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. இரண்டு பேத்துல யாரோ சில சைபருங்களை சாப்ட்டாங்களா?. இது உண்மையா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் மங்கல்யான் எப்படி இருக்கும் என்ற கிண்டல்கள் இன்னொரு புறம் இருக்க.. இது உண்மையாக இருக்குமா என்ற ஸ்ட்ரடீஜிக் கேள்வி எழுகிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சைனா 'ஏழை' நாடாக இருந்தது. தொழில்நுட்பம் எல்லாம் பெரிதாக ஏதும் இல்லை. வசதியும் இல்லை. ஆனால் கனவு மட்டும் இருந்தது. அமெரிக்கத் தொழில் நுட்பங்களை மிகச் சுலபமாகவும் மிகக் குறைவான செலவிலும் சைனாவில் செயல்படுத்த முடியும் என்று மார்தட்ட வைக்கும்படி ஒரு கப்பல், ஒரு கார், ஒரு சூபர் கம்ப்யூடர், ஒரு ஏவுகணை, ஒரு ட்யூப் ரயில், ஒரு விமான நிலையம், ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் (ஆமாம்.. அதற்கான தொழில் நுட்பம் கூட சிக்கலாக இருந்த காலம்) என்று வரிசையாக பத்தில் ஒரு பங்கு ஐந்தில் ஒரு பங்கு என்ற செலவில் செய்து காட்டியது.. அமெரிக்காவை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. 'கம்யூனிஸ்ட் என்றால் செருப்பை எடு' என்றிருந்த நாட்டின் முதலாளிகள் திடீரென்று மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அசலில் சைனா எத்தனை செலவழித்தது என்று இப்போது பல கருத்துகள் நிலவினாலும், சீன அரசாங்கத்துக்கு மட்டுமே உண்மை தெரியும். ஆனால் அந்தத் தந்திரம் அவர்களுக்கு முழுப் பலனையும் அளித்திருக்கிறது. 'கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன?' என்று தங்களுக்குள்ளேயே சமாதானக் கேள்விகளை எழுப்பிய அமெரிக்க வர்த்தக உலகம், திடீரென்று தங்கள் தொழிற்சாலைகளை ஒட்டு மொத்தமாக சைனாவுக்கு மாற்றத் தொடங்கியது.

2007ல் நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சீன-அமெரிக்க வர்த்தக சங்கம் வெளியிட்டிருக்கும் சில 'கவலை'களில் சைனாவில் தயாராகும் பொருட்கள், சீன தொழில் நுட்பம்.. இவை ஏறக்குறைய அமெரிக்காவின் செலவு உயரங்களை எட்டிவிட்டது என்றும், நாற்பது வருட டாலர் மற்றும் தொழில் நுட்ப முதலீட்டின் பலமிருந்தும் சைனா இன்றைக்குக் கூட புதிதாக எதையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் திட்டங்களை செயல்படுத்த மட்டுமே செய்கிறது என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முழு சலுகை தராமல் உள்ளூர் வணிகத்தை சைனா கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது என்றும் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இனி இந்தத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு போகவும் முடியாது. ஆக, சைனா முதலீட்டால் அமெரிக்கர்களுக்கு என்ன பயன் என்று நிறைய பேர் கேட்டார்கள். அமெரிக்க கேபிடலிசத்தை மெள்ளப் பழிவாங்கிய சீன கம்யூனிசம் என்று ஜாடையாகச் சொல்லவும் தவறவில்லை. சீன பொருளாதாரம் இன்றைக்கு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சில வருடங்களில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் அபாயத்தை எடுத்துச் சொல்லிப் புலம்பினார்கள். சைனா தும்மினால் அமெரிக்காவுக்கு இன்றைக்கு நிமோனியா வரும் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஆளுக்காள் வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

'உற்பத்தி மையப் பொருளாதாரத்திலிருந்து அறிவாக்க மையப் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா மாறி வருகிறது, இன்னும் வேகமாக மாறவேண்டும்' என்று பில் கேட்ஸ், ஜேக் வெல்ச், வாரன் பபட், ரஜினிகாந்த் (ஹிஹி.. யாருனா இதுவரைக்கும் படிக்கிறாங்களானு பார்க்கத்தான்) போன்றவர்கள் இருபது வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஓரளவுக்கு அமெரிக்காவும் மாறியிருக்கிறது என்றே சொல்வேன். எனினும் அறிவாக்கத்தின் பயன்பாடு என்று வரும்பொழுது உற்பத்தியை நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு சைனாவை நம்பி இறங்க வேண்டியிருக்கிறது என்பதையும் மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை.

கடவுள் மதம் என்று கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டாலும் அடிப்படையில் இந்தியர்கள் அறிவாக்கப் பேர்வழிகள். சந்தேகமேயில்லை. சமீப காலமாக அறிவாக்கத்தை வணிகப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இதற்காகக் கொஞ்சம் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது என்பதை, ஐஐடி படித்து ஜாவா கோபால் என்று முடங்கியக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். ஐடி துறை இந்தியாவுக்கு பல சலுகைகளையும் சில ஏணிகளையும் வழங்கியது. இந்தியாவுக்கு ஐடி வேலைகளை மாற்றினால் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று அடித்துப் பிடித்து இறங்கிய மேற்கத்தி நிறுவனங்கள், இன்றைக்கு யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. 'இந்தியா ஒன்றும் அத்தனை சீப் இல்லை' என்று சொல்லும் அமெரிக்க அதிகாரிகள், அதே நேரம் தங்கள் தொழில் நுட்பம் மற்றும் பட்டறிவை இந்தியாவுக்குப் பறிகொடுத்து விட்டோம் என்ற கலங்க வைக்கும் உண்மையையும் உணர்ந்திருக்கிறார்கள். எதுவும் செய்ய முடியாது. ஐடி துறையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும். ஐடியைத் தொடர்ந்து பிபிஓ, எஞ்சினியரிங் டிசைன், மெடிகல் ரிசர்ச் என்று பலவகை அறிவாக்க சேவைகளை இந்தியா வழங்கத் தொடங்கி, இன்றைக்கு அந்தத் துறைகளிலும் இந்தியாவின் கொடி மெல்லப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட அமெரிக்கக் கார் சைனாவில் தயாரிக்கப்படுவதை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் இந்தியாவின் டிசைன் சம்பாத்தியம் சைனாவின் உற்பத்திச் சம்பாத்தியத்தில் ஏறக்குறைய பாதி என்பது குறிப்பிடத்தக்கது! இந்த டிசைன் வியாபாரத்தில் இந்தியர்கள் ஒரு மணி நேரத்தில் சைனாக்காரர்களை விட ஏறக்குறைய மூன்று மடங்கு சம்பாதித்தார்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது (per capita revenue comparison).

விடுங்கள், செவ்வாய் தொடலுக்கு வருகிறேன்.

அடுத்த ஐம்பதாண்டுகளின் வணிக வளர்ச்சிக்கான ஆதார மையமென்று வரிசைப்படுத்தினால் செயற்கை உணவு (புரதம்), போர்க்கருவிகள், தகவல், உலகக் கல்வி, விண்வெளிச் சாகுபடி.. இவை முதல் ஐந்தில் அடங்கும். கொஞ்சம் கவனித்தால் இவை ஐந்துக்கும் பொதுவான ஒரு நரம்பு இருப்பது புலப்படும்.

விண்வெளிச் சாகுபடி.

கண்ணுக்கெட்டும் சந்திரனாகட்டும் கண்ணுக்கெட்டாத சனியனாகட்டும் இடைப்பட்ட ஆஸ்டிராய்ட் பட்டியாகட்டும்.. விண்வெளியில் சாகுபடி செய்ய நிறைய இருக்கிறது. செய்ய நிறைய பேர் போட்டியிடுகிறார்கள்.. இடுவார்கள். இந்தியா சாகுபடி செய்கிறதோ இல்லையோ சாகுபடிக்கான நுட்பமும் கருவியும் செய்ய முன்வந்திருப்பதாகவே நினைக்கிறேன். மீன் பிடிக்கும் போட்டியில் கலந்து கொள்வதை விட, போட்டியாளர்களுக்குத் தூண்டில் விற்கும் வேலையில் இறங்கியிருப்பதன் சாமர்த்தியம் கொஞ்சம் பிரமிக்க வைக்கிறது. செவ்வாய் தொடல் ஒரு தூண்டில். தூண்டில் சாம்பிள்.

உண்மையில் இருநூறு மிலியன் செலவழித்து விட்டு அதை அமுக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சின்ன சந்தேகம். அது உண்மையானால் அந்த தந்திரத்துக்கு ஒரு ஜே. அல்லது செலவழித்தது எழுபத்தைந்து தான் என்றால் அந்தத் திறமைக்கு டபுள் ஜே. அடுத்த பத்து ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் அத்தனையும் உன்னைப்பிடி என்னைப்ப்பிடி என்று செயற்கைக் கோள்களையும் இன்னும் பல விண்வெளிச் சாகுபடி வேலைகளையும் இந்தியாவுக்கு வழங்கும். சந்தேகமேயில்லை. எழுபதுக்கும் குறைவாகச் செலவழித்து ஐநூறு மிலியன் வரை இந்தியா சம்பாதிக்கக் கூடும். வல்லரசாவதற்கான ஏணி.

சாத்தியங்களை என் கற்பனையால் கட்ட முடியவில்லை. இன்னும் அறுபது வருடங்களில் ஒரு பெரிய ஆஸ்டிராய்ட் உலகத்தைத் தாக்கும் என்கிறார்கள். அதை விண்ணில் அடித்து நொறுக்க கணைகள் ஏவ வேண்டும் என்கிறார்கள். அதற்கான முனைப்பில் இறங்க வேண்டும் என்கிறார்கள். யாருனா சீப்பா விண்வெளிக் கப்பல் விடுறாங்களா பார்த்துச் சொல்லுங்ணே.

இந்த செவ்வாய் தொடலின் பக்க விளைவுகளில், வணிக சாத்தியத்தை விட இந்தியாவின் அறிவுத்திறன் சிறப்பாகப் பயன்படுத்தபட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது விலைமதிப்பில்லாத ஒன்றாகும். பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்கள் டெஸ்டிங் டிவலெப்மென்ட் சப்போர்ட் என்று ஜாவாவிலும் லினக்சிலும் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு இனிமையான சாத்தியம்.

திடீரென்று lbw ஆகும் சாத்தியமும் இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்காமல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவைக் கொண்டாடி சென்ற ஐம்பதாண்டுகளின் குழிகளில் விழுந்தால் எழுவது கடினம். இந்திய இளமை கவனமாக இருக்க வேண்டும்.

அதற்கும் முன்னால் செவ்வாய் தொடுவதில் குறியாக வேண்டும். (க்கும்.. நீ பக்கத்துல வந்தாத்தானே பட்டு?)

4 பின்னூட்டங்கள்

Friday, November 22, 2013

தரிசனம் .....!


மாதுரை பகுதி காப்பீட்டு உழியர் சங்கத்தின் "எடுபிடிகளில்"நானும் ஒருவன் ! அகில இந்திய தலைவர்கள் வரும் பொழுது அவர்களின் சொந்த தேவைகளை கவனிக்கும் பொறுப்ப்பை சங்கத்தலைமை எனக்குத்தரும்! மிகவும் விருப்பத்தோடு அதனைச்செய்வேன் !  அந்த மாபெரும் தலைவர்கள் தனிமையில் விகசிக்கும் மாண்பைப் பார்ப்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம் !

ஒருமுறை சரோஜ் சவுத்திரி அவர்கள் வந்திருந்தார்கள்.அவர்களை ரயில் நிலையத்திலிருந்து தங்கும்விடுதி அழைத்து திருப்பி அனுப்பும் வரை பொறுப்பு கட்டியிருந்தார்கள் !

மதுரைமேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் விடுதி ! காலைசிற்றுண்டி அருமையாக ஏற்பட்டு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ! 

"com ! morning breakfast ?"

"one idli and a cup of milk" என்றார் 

என் முகத்தில் தோன்றிய அதிருப்தியை புரிந்து கொண்டவர் போல பேசினார் !

"நான் விருந்து சாப்பிட்டு வயிற்று வலியில் படுக்க வரவில்லை  ! நூற்றுக்கணக்கான தோழர்களை சந்திக்க வந்திருக்கிறேன் ! necserily  i will restrict my diet "என்றார் !

இட்லி வந்தது ! பிய்த்து பாலில் முக்கி சாப்பிட்டார் !

மதிய உணவிற்கு அழைத்துச் சென்றேன் ! விடு \தியை விட்டு இறங்கினோம் !
வாசலில் ஒரு வயதான பெண் "பாபு பாபு " அவரை நச்சரித்தார் ! அந்த பிசைக்கரியை விரட்டி  விட்டு அவரை  டவுண்  ஹால்  ரோட்டில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றேன் ! அந்தக் கிழவி விடவில்லை ! துரத்திக் கொண்டே வந்தார் ! நாங்கள் உணவு விடுதிக்குள் சென்று விட்டோம் ! அரைமணி நேரமாவது ஆகியிருக்கும் ! வெளியே வந்தோம் ! காத்திருந்த அந்தக் கிழவி மீண்டும் சரோஜினை  நச்சரிக்க ஆரம்பித்தாள் ! எனக்கு கோபம் வந்தது !

"ச்சீ !  நாயே வழிய விடு ! " என்று அதட்டினேன் !

இரண்டு அடி முன்னே சென்ற சரோஜ் திரும்பினார் ! எங்கள் அருகில் வந்தார் !

தன் ஜிப்பா பாக்கட்டில் கைவிட்டு துழாவினர் ! ஒரு ரூ பாய் நாணயத்தை எடுத்து அந்தக் கிழவியின் தட்டில்  போட்டா ர் !  

அவர் பின்னால் நடந்த என் தோளில் கையைப்  போட்டு 

"it is not her mistake comrade !" என்றார் !


அவர் கண்களைப் பார்த்தேன் !

கலங்கி இருந்தது !

அந்த முகத்தில் 
 மார்க்சை,எங்கல்சை,லெனினை ,ஸ்டாலினை,மாவோவை ,இ.எம் எஸ்ஸை 

தரிசித்தேன் !!! 





 


 








Thursday, November 21, 2013

தோட்டக்காரா....!

              தோட்டக்காரா ......!!

அகில இந்திய காப்பிட்டு ஊழியர்கள் சங்க 23வது மாநாடு 2014 ஜனவர் 20ம் தேதி துவங்குகிறது ! பேரணியில் பங்கு பெற "மதுரைக்காரர்கள்" முந்திவிட்டார்கள் !
 
நாகபுரியின் சாலைகளில் அந்த "மாரதர"களின்  ஊர்வலம் வரவிருக்கிறது !

எங்கள் "பிதாமகர் " சந்திர சேகர போஸ் ,

உயர்ந்த,கம்பிரமான ,தளர்ந்தாலும் கோலுன்றி வரும் என்.எம் சுந்தரம்,

பபர்மசூதி யை நொறுக்கிய பாவிகளால் முது கெலும்பு நொறுக்கப்பட்ட எங்கள் சன்யால் ,

"ஆர்.ஜி " என்று அன்போடு ஆழைக்கப்படும் எங்கள் கோவிந்தராஜன் 

எங்கள் தலைவர் அமனுலா  கான், பொதுச்செயலாளர் வேணுகோபால்,

பேரணியைத் தலைமை தாங்கி வருகிறார்கள் !

இதில் பங்கெடுக்க 

தெற்கே மார்த்தாண்டத்திலிருந்து வடக்கே ஓல்ட் -பிக்-தௌலிவரை 

மேற்கே ஜுனாகத்திலிருந்து கிழக்கே அகர்த்தாலா வரை பரவிய எங்கள்  

ஊழியர்கள் வருகிறார்கள் !

இவர்களின் பாததுளி எங்கள் நாகபுரி நகரத்து மண்ணொடு கலந்து அதனை மேலும் புனிதமாக்க விருக்கிறது !

இந்த சமயத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் கவிஞர் மக்கன்லால் சதுர்வேதி எழுதிய கவிதை நெஞ்சை நனைக்கிறது !

நந்தவனத்துப் பூக்கள் தோட்டக்கரனை பார்த்து புக்கள் கெஞ்சுகின்றன!

வனமாலி !

அதிகாலையில் எழுந்து எங்களைப்பறித்து  மாலையாக தொடுக்கிறாய்  ! எங்களை சந்தோஷப்படுத்த பரனசிவனின் கழுத்தில் அணிவிக்கிறாய் !

அதோ ஊர்வலமாக வருகிறார்களே ! அந்த தேசபக்தர்கள் !

தளர்ந்த அவர்கள் பாதங்களை சாலையின் கற்கள் குத்துமே!
 
முட்கள் வேதனை தருமே !  

எங்களைப் பறித்து அந்தப்பாதையில் போடு !

அவர்கள் காலுக்கு மெத்தையாக !!

செய்வாயா ?

தோட்டக்காரா ! தோட்டக்கரா !








Sunday, November 17, 2013

 "லாகுரைக் காணாத கண் என்ன கண்ணோ "

     ( உருது நாடகம் )

(ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் கிழக்கு,மேற்கு பஞ்சாப்,கராச்சி, சிந்து,டெல்லி,ராஜஸ்தான் குஜராத் மாநலமக்கள்  நெஞசம் விம்ம கண்கள் பனிக்க பார்த்து மகிழ்ந்த நாடகமிது ! டாக்டர் அஸ்கர் வஜாகித் அவர்கள் எழுதியது ! இது நாடக விமரிசனம் அல்ல )

பஞ்ச நதிபாயும் புண்ணிய பூமியை விட்டு தஞ்ச மாக இந்தியா வந்து கொண்டிருந்தனர் மாக்கள் கூட்டம் கூட்டமாக !

இந்தியாவை விட்டு தங்கள் சொத்து சொகத்தைவிட்டு  பாகிஸ்தான் சென்று கொண்டிருந்தானர் ! மற்றொரு பகுதியினர் !

லாகூரில் வசிக்கும் சனாதனமான் குடும்பம் இந்தியா வர முடிவு செய்கிறது ! மிகப்பெரிய கூட்டுக் குடும்பம் !  அதில் சிக்கல் ! வீட்டின் கிழவி மட்டு வரமறுக்கிறாள் ! இந்த நதியின் தீரம் என் புண்ணிய பூமி ! வரமுடியாது என்கிறாள் ! வே \று வழியில்லாமல் கிழவியை தனியே விடு விட்டு மற்றவர்கள் இந்தியா வருகிறார் கள் !

பிரும்மாண்டமான் ஆந்த வீட்டில் அந்த கிழவி மட்டும்தங்குகிறாள் ! இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த குடும்பம் லாகுருக்கு வருகிறது ! அரசு இந்த வீட்டில் தங்க !வக்கிறது 

முதியவர் அவர்கள் தங்கக் குடாது என்று சண்டை போடுகிறாள் ! இறுதியில் ஒரு சிறு அறையில் அந்த குடும்பம் தங்க  அனுமதிக்கிறாள் !

தினம்சண்டைதான் ! குஞசும் குளுவானுமான குழ்ந்தைகள் படுத்தும் பாடு கிழவியை கோபம்செய்விக்கும் ! விடுமுழுவதும் சுற்றி விளாயாடும் ! கிழவி கத்திக்க் கொண்டு இருப்பாள் !

காலம் மாறுகிறது ! கிழவி குழந்தைகளுக்கு மட்டும்சுதந்திரம் கொடுக்கிறாள் !அவர்கள் கிழவியோடு மட்டும் பேசுவார்கள் ! விளையாடுவார்கள் ! 

வீட்டில் பெரியவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள் ! இப்போது வீடு புறாவும் இருவரும் பழகிக் கொள்கிறார்கள் ! கிழவிக்கு முடியாமல் போகிறது ! அவள் ஒரு தனியறையில் வசிக்க குடும்பம் வீட்டைப்  பராமரிக்கிறது !

விட்டின் இஸ்லாமியப் பெரியவர் கிழவியை ஆதுரமாகப் பார்த்து கொள்கிறார் ! கிழவிக்கு இப்போதெலாம் அந்தக் குடுமபத்தின் மீது கோபம் வருவதில்லை !

கிழவி மரண மறைகிறாள் ! இறுதி  நிகழ்ச்சி  பற்றி பேசுகிறார்கள் ! "அவர் என் தாய்க்குச் சமம் ! அவருடைய புத்திரானாக அவளுக்கான  கடமையைச் செய்வேன்" என்று அந்த முஸ்லிம் பெரியவர் அறிவிக்கிறார் !   
-----------------------------------------------------------------------------------------------------------

முத்து  மாணிக்கம் ஸ்டீபன் அருள்தாஸ் என்நண்பர் !என்னோடு பணியாற்றி  ஒய்வு  பெற்றவர் !  இளம் வயதில் பிராமண ப்பெண்ணை காதலிக்க அந்த திருமணத்தை தோழர் A .B  அவர்கள் தலைமையில் தோழர்கள் நடத்தி வைத்தோம் ! 

அவரின் மனைவியின் குடும்பத்தோடு தொடர்பில்லை ! ஒருகட்டத்தில் மனைவியின் தாயாரை பராமரிக்க வேண்டிய அவசியம் அருள் தாசுக்கு வந்தது ! 

சனாதன மான ஆசாரமான் அந்த அம்மையாரை தன்   வீட்டிலேயெ ஒரு தனியறையில் தங்க வைத்தார் !

அந்த அம்மையார் சென்ற மாதம் மறைந்து விட்டார் ! அவருக்கு அந்திம காரியங்களை வைதீக முறைப்படி " Doss Villa " வில் நடந்தது!


நானும் முத்து மீனாட்சியும் அவர் வீட்டில் தங்க நேர்ந்தது ! இரவு அந்த அம்மையாரோடு ஒரே அறையில் இருந்தோம் ! இரவு பெசிக்கொண்டிருந்தோம்  !

"ஐயா ! உங்கள் ஸ்டீபன் நான் பெற்றெடுக்காத பிள்ளை "என்று
நெஞ்சம் தழுதழுக்க பர்வத வர்த்தினி மாமி கூறினார் !

(M .S . அருள் தாஸ் தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார் ) 


 


   











Thursday, November 07, 2013

ஜெய மோகனை நினைத்தால் 

பாவமா இருக்கு ........!!!


ஊர் ஊரா ,தெருத்தெருவா ,சந்து சந்த அவர சமட்டி எடுக்காங்க ! பாவமா இருக்கு !

இரண்டாயிர முஸ்லிம்களை துவம்சம் பண்ணீட்டு பிரதமராகணும்னு சொல்லவா செஞ்சாரு !   

தமிழ் வரிவடிவத்தை ஆங்கிலத்துல எழுதலாமேன்னு சொன்னாரு ! தப்புந தப்புன்னு சொல்லுங்கய்ய ! இந்ததமிழ் தேசீய குஞ்சுகள் அவரு மலையாளி,நாயருங்காங்க !

இன்னொருத்தன் இல்ல ! அவரு அப்பா பெயறு  பாகுலேயன்  பிள்ளை ! நாஞ்சில் நாட்டு தமிழறு ஞான் !    

பாவம்.சின்ன வயசுல பல சோதனை ! அவருடைய ஆப்த நண்பர் ஒருத்தரு தற்கொலை பண்ணிக்கிட்டாராம் ! அதனால மனமுடை ஞசு "பரி வ்ராஜகரா "  சுத்தியிருக்காறு ! 

கடைசில ராஷ்ட்ரிய சுயம் சேவக் கரங்கள்ட போய் சேர்ந்திருக்காரு ! ஒரு ஆன்மீகத்தேடல்ல அவங்க  செய்ல்வீரரா இருந்திருக்காரு ! நல்ல படிப்பாளி ! இலக்கிய பரிச்சியம் உண்டு ! திருவண்ணாமலைல இருக்கும் பொது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு 70ம்  ஆண்டுகளின்பிற்பகுதியில் செயல்பட்டுள்ளார்! சக எழுத்தாளர்களை ஆர்.எஸ்.எஸ் காரங்க துணையோடு குழப்ப ஆரம்பிசிருக்கார் ! அவங்க அண்ணனை இறுக்கி பிடிச்சு உலுக்கிட்டாங்க !  

நல்ல மனுஷன் தான் ! அவர்விரும்பிய பொண்ணை கட்டினாரு ! பொண்ணு வீட்டுக்கரக தொழிற்சங்க ஈடுபாடு உள்ளவங்க ! ஆன்மீகத்துக்கும் லோகாயதத்துக்கும் இடைல குழப்பம் ! 

He became a  bundle of contradiction and a mixer of confusion !!!

பாவமா இருக்குங்க !  
------------------------------------------------------------------------------------------------------------இந்திய மொழிகள்ல சம்ஸ்கிருதமும்,தமிழும் தொன் மையான மொழி  !ஆனானப்பட்ட சம்ஸ்கிருத மொழிக்கே கி.மு  மூணாம் நூற்றண்டுல தான் வரிவடிவம் வந்துச்சுன்னு மொழியியல் வல்லோர்கள் சொல்றாங்க ! தமிழுக்கும் அதே காலத்திலோ கொஞ்சம் முன்னப்பின்னவோ வந்திருக்கலாம்கிறது அவங்க அபிப்பிராயம் ! " கல்தோன்றி  மண்தோன்றாக்காலத்து "  நு ஆரம்பிச்சா  சின்னப்பய கூட அவுத்து போட்டு சிரிப்பான் !

வரி வடிவம் நு வரும் பொது இன்னொரு முக்கியமான விஷயம் : 
 
தமிழ் நாட்டின் மிகச்சிறந்தபுகழ் பெற்ற எழுத்தாளர் ! அவர் படிச்சது மலயாள பள்ளி ! தமிழ் வரிவடிவம் தெரியாது ! அவர் தன படைப்புகளை தமிழ் வார்த்தைகளை மலையாள வரிவடிவத்தில் எழுதுவார் ! பின்னர் அதைஎடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ளதமிழ் தெரிந்த நன்பர்களிடம்  காட்டி சரி பார்ப்பார் !அவ்ர்கள் மூலம் தமிழ் வரிவடிவத்திற்கு கொண்டுவந்து அச்சுக்கு கொடுப்பார் ! பிற்காலத்தில் நேரடியாக தமிழிலேயே எழுத கற்றுக் கொண்டார் ! 
இதில் நகை முரண்  என்ன தெரியுமா ! 
அவர் மலயாளத்திலேழுதி தமிழ் வரிவடிவத்திற்கு வந்த நாவலுக்கு அந்த ஆண்டின் மிகச்சிறந்த தமிழ் நூலுக்கான "சாகித்திய அகாதமி பரிசு கிடத்தது !

-----------------------------------------------------------------------------------------------------------
மொழி ,இலக்கியம் என்று வரும்போது உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம் !
ஜெய மோகனை இந்த புரட்டு புரட்டற தமிழ் தேசீய குஞ்சுகளுக்கு !
உங்க தலைவர்கள்ல ஒருத்தர் ! "ஈழம் " சொன்னாலே" மைக் " முன்னால விக்கி விக்கி அழுவாரு ! அவரு வாரிசு இங்கிலீஷ் மீடியம் மெட்ரிக் ! தமிழ்படிக்கவே இல்லை ! பாவம் குழந்தை! உள்  நாட்லயோ எங்கயோ நல்ல இருக்கட்டும் !
------------------------------------------------------------------------------------------------------------
 வரிவடிவம் பத்தி சர்ச்சை வரத்தான் செய்யும் ! சும்மபொழுதுபோக்க முக  நூல  புரட்டி பார்த்தேன் ! 
 நிலைதகவலும்,பின்னூட்டங்களும் எப்படினு கவனமா பாத்தேன் ! பல தகவல்களும் பின்னூட்டங்களும் Tanglish இருக்கு! ஒரு 20%  இருக்கும் ! மாத்திக்கணம் !
------------------------------------------------------------------------------------------------------------

"சரி ! டே !  நீ என்ன சொல்லுத ?" கேட்டா

well tested well chisiled script இருக்கும் போது வேறு எதுக்கு ?"


 










































  



































































 






Tuesday, November 05, 2013

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் "

(விமரிசனமல்ல -ஒரு write up )

விஜய் தொலைக்காட்சி  உபயத்தில் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும் " திரைப்படத்தைப் பார்த்தேன் ! மிகவும் சந்தோஷமாக இருந்தது !"முக்காதுட்டு" செலவில்லாமல் பார்த்ததால் ! 

நெற்று நடிக்க வந்த சின்னப் பையன் கூட"தியேட்டர்ல போய் பாருங்க " என்று ஆலோசனை கூறுகிறான் ! அந்த புது நடிகருக்கு 6 கோடி ரூ சம்பளமாம் ! இன்னோரு புது நடிகன் சொந்தமா படம் எடுக்கிறானாம் ! அவர் வீட்டில்  வருமான வரி  அதிகாரிகள்  சோதனை  என்று செய்தி வந்துள்ளது ! மகிழ்ச்சி தான் !

மறுபக்கம் திரைப்பட தோழிலாளர்காள் ஊதிய உயர்வு கோரி ஊர்வலமாகசென்றூள்ளார்கள் ! இரவில் டாக்டர்,வக்கீல்,நீதிபதி என்று நடித்துவிட்டு பகலில் பெயிண்ட் அடிக்க, வெள்ளையடிக்க ,முடி திருத்த ,விடுதிகளில் காப்பாளராக பணியாற்ற செல்லும் கலைச்சேவை புரிபவர்களையும் பார்த்திருக்கிறேன் !

படப்பிடிப்புத் தளங்களில் உதவி இயக்குனர் முகத்திப்பார்த்திருந்து  குறிப்பு கிடைத்ததும் காலை உணவுக்காக ஓடும் துணை நடிகர்களத்   தெரியும் !

துணை நடிகைகளின் அவலத்தைச் சொல்ல விரும்ப வில்லை ! கிளப்புகளில் காபரே டான்சர் கூட்டத்தில் நடித்து விட்டு காலையில் கோயம் பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் விற்கும் பெண்டிரைப் பார்த்திருக்கிறேன் !

இந்த திரை உலகம் வளர்ந்திருக்கிறதா ?இல்லையா ? என்று இணையத்தில்பட்டிமன்றம் நடத்துகிறார்கள் !

திரை  உலகை அலகும் பிடியும் மாற்றி அமைக்க வேண்டும் ! 

புரட்சி நடந்த உடன் லெனின் அவர்கள் கல்வித்துறையை சீர்திருத்தம்செய்தார்கள் ! திரைப்படத்துறையை கல்வித்துறையோடு இணைத்தார்கள் !

நம்ம ஊர்ல அது  அது கேளிக்கை துறை !!

கோபம் தான் வருகிறது !

""குண்டக்க மண்டக்க " சபித்து விடுவேனோ என்று தொன்று கிறது !

திரை உலக  பெரியவர்களே நீங்கள் மேலே  பார்க்கிறீர்கள் !!

உங்கள்காலடி புழுத்து நெளிகிறது !


("ஓநாயும் ஆட்டுக்குட்டியும் " படத்தில் அந்தச் சின்னப்பையன் ஸ்ரீ நடிப்பு அருமை ! அவன் ஓடும் போது அவனுடைய long strides  மேலும் பதட்டத்தை தருகிறது!  அவனிடம் வேல வாங்கியதற்காக மிஷ்கினுக்கு பாராட்டுகள் ! அதற்க்காக மட்டுமே )