பதிலாக அல்ல ...!
விவதத்திற்காகவும் விளக்கத்திற்காகவும் ...!
சு.போ அகத்திய லிங்கம் அவர்கள் அறிவியல் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் எழுதியிருந்தார்கள் !
இரண்டும் இரண்டும் நான்கு ! இது உலகம் எற்றுக் கொண்ட உண்மை ! பல கணித விதிகளுக்கு உட்பட்டு தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ! சின்ன பையனிலிருந்து பேராசிரியர் வரை ஏற்றுக்கொண்ட உண்மையான கருத்து !
ஒரு கருத்து தர்க்கரீதியாக எல்லாராலும் எற்றுக் கொள்ளப்பட்டதால் உண்மையாகிவிடுமா ?
ஒரு உண்மை நிரூபிக்கப் படாததால் கருத்து என்று ஒதுக்கப்படுமா ?
சென்னையில் நாத்திகத் திருவிழா நடந்தது !
"கடவுளில்லை !கடவுள் உண்டு என்பவன் முட்டாள் !" என்று பதாகை களோடு ஊர்வலம்வந்தார்கள் !
உலகம் பூராவிலும் உள்ள நாத்திகர்களுக்குமிவர்களுக்கும் வித்தியாசமுண்டு ! இவர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் அடிப்படையில்வித்தியாசமில்லை ! இருவருமே கடவுளை அவருடைய இருத்தலை நம்புகிறார்கள் !
கடவுள் இல்லை என்பது உண்மை ! அதனை நிருபிக்க சங்கடப்படுகிறது ! அதனாலேயே அதனை கருத்து என்று பெரும்பாலானவர்கள் ஒதுக்குகிறார்கள் !
நம்ம ஊர் கருப்புச்சட்டை நாத்திகர்கள் அறிவியல் ரீதியில் கடவுள் இல்லை என்பதை நிறுவ முற்படுவதை விட கடவுள் எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் !
உண்மையான நாத்திகனுக்கு கடவுள் எதிரி அல்ல ! கடவுள் இல்லை
என்பவனுக்கு இல்லாத ஒன்று எப்படி எதிரியாக முடியும் ?
( நண்பர் அப்பாதுரை எழுதி வரும் கலர் சட்டை நாத்திகம் என்ற இடுகையிலிருந்து எடுத்த பகுதியோடு நான் எழுதியதும் , ! சுட்டி naathikan . blog spot )
மேலை நட்டு நாத்திக வாதிகள் இது பற்றிய விவாதத்தை மேலும் செழுமைப்படுத்த முனைகிறார்கள் !
அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஏதாவது ஒரு புள்ளியில் சமன்பாடு உண்டா ?
இறை நம்பிக்கையாளர்கள் அறிவயல் ரீதியாக தேடு பவர்களை குழப்பத்தில் ஆழ்த்துமிடம் இதுதான் என்று நினைக்கிறேன்!
இது பற்றிதோழர் குணசேகரன் போன்ற தத்துவ ஆசான்கள் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன் !
அவர் மட்டுமல்ல !
யாரானாலும் விளக்கம் தர வேண்டுகிறேன் !
1 comments:
எனது கருத்தும் அதுதான். யாராவது விளக்கினால் நலமாக இருக்கும்
Post a Comment