Thursday, November 28, 2013

காஞ்சி மடமும் .....!!!  


சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்ததிலிருந்து தீவிர மான இந்து மத வாதிகள் அடிக்கும் கூத்து தாங்கஂ  முடியவில்லை  ! 

2000 ஆண்டு பாரம்பரிய முள்ள மடமாம் சங்கர மடம் !

ஆதிசங்காரர் பிறந்தது கி.பி 788 ம் ஆண்டு ! 32 வயது வாழ்ந்தார் ! 820 ஆண்டு கேதார்நாத்  என்ற இடத்தில் மறைந்தார் ! 

இது வரலாறு !

சிதிலமடந்திருந்த  இந்துமதத்தினை  ஸ்தாபனப்படுத்தி அதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தார் ! 

அதனை நடை முறைப்படுத்த அதிகாரங்களைக் கொண்ட மடங்களை உருவாக்கினார் !

மொத்தம் நான்கு மடங்களை உருவாக்கினார் !

மேற்கெ துவாரகை,கிழக்கே ஜகன்னாத பூரி,தெற்கே சிருங்கேரி, வடக்கே பத்ரிகாச்ரமம் ஆகியவையாகும் !

நிச்சயமாக காஞ்சி மடம் அதில் ஒன்று அல்ல !

சாளுக்கியர்களுக்கும் தமிழக அரசர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது இந்துக்களின் ஆதரவைப் பெற பல்லவர்கள் உருவாக்கியது தான் காஞ்சி மடம் அப்போது சிருங்கேரி மடம் சாளுக்கியர் ஆதிக்கத்தில் இருந்தது ! தமிழ் நாடு பூராவும் சிருங்கேரி மடத்தின் செல்வாக்கிலிருந்தது  ! அதனை மாற்ற உருவானதுதான் காஞ்சி மடம் ! பல்லவர்கள் சிதைந்த போது மடத்தை கும்ப கோணம் கொண்டு வந்தார்கள் !

"என் சிறு வயதில் "கும்ப கொணம் சாமிகள் " என்றுதான் அவர்கள் அழைக்கப்படுவார்கள் !  

" கல்கி" கிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ்.வாசன் வந்தபிறகுதான் காஞ்சி மடத்தின்  கும்பகோனம் சுவாமிகள் "பெரியவாள்"  "மகா பெரியவாள் "என்று ஆனார்கள் !

அடிப்படையில் காஞ்சி மடம் ஒரு அரசியல் தேவைக்காக உருவானது !












2 comments:

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு புதிய தகவல்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவரை அறியாத தகவல்கள் ஐயா. நன்றி