Thursday, November 07, 2013

ஜெய மோகனை நினைத்தால் 

பாவமா இருக்கு ........!!!


ஊர் ஊரா ,தெருத்தெருவா ,சந்து சந்த அவர சமட்டி எடுக்காங்க ! பாவமா இருக்கு !

இரண்டாயிர முஸ்லிம்களை துவம்சம் பண்ணீட்டு பிரதமராகணும்னு சொல்லவா செஞ்சாரு !   

தமிழ் வரிவடிவத்தை ஆங்கிலத்துல எழுதலாமேன்னு சொன்னாரு ! தப்புந தப்புன்னு சொல்லுங்கய்ய ! இந்ததமிழ் தேசீய குஞ்சுகள் அவரு மலையாளி,நாயருங்காங்க !

இன்னொருத்தன் இல்ல ! அவரு அப்பா பெயறு  பாகுலேயன்  பிள்ளை ! நாஞ்சில் நாட்டு தமிழறு ஞான் !    

பாவம்.சின்ன வயசுல பல சோதனை ! அவருடைய ஆப்த நண்பர் ஒருத்தரு தற்கொலை பண்ணிக்கிட்டாராம் ! அதனால மனமுடை ஞசு "பரி வ்ராஜகரா "  சுத்தியிருக்காறு ! 

கடைசில ராஷ்ட்ரிய சுயம் சேவக் கரங்கள்ட போய் சேர்ந்திருக்காரு ! ஒரு ஆன்மீகத்தேடல்ல அவங்க  செய்ல்வீரரா இருந்திருக்காரு ! நல்ல படிப்பாளி ! இலக்கிய பரிச்சியம் உண்டு ! திருவண்ணாமலைல இருக்கும் பொது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு 70ம்  ஆண்டுகளின்பிற்பகுதியில் செயல்பட்டுள்ளார்! சக எழுத்தாளர்களை ஆர்.எஸ்.எஸ் காரங்க துணையோடு குழப்ப ஆரம்பிசிருக்கார் ! அவங்க அண்ணனை இறுக்கி பிடிச்சு உலுக்கிட்டாங்க !  

நல்ல மனுஷன் தான் ! அவர்விரும்பிய பொண்ணை கட்டினாரு ! பொண்ணு வீட்டுக்கரக தொழிற்சங்க ஈடுபாடு உள்ளவங்க ! ஆன்மீகத்துக்கும் லோகாயதத்துக்கும் இடைல குழப்பம் ! 

He became a  bundle of contradiction and a mixer of confusion !!!

பாவமா இருக்குங்க !  
------------------------------------------------------------------------------------------------------------இந்திய மொழிகள்ல சம்ஸ்கிருதமும்,தமிழும் தொன் மையான மொழி  !ஆனானப்பட்ட சம்ஸ்கிருத மொழிக்கே கி.மு  மூணாம் நூற்றண்டுல தான் வரிவடிவம் வந்துச்சுன்னு மொழியியல் வல்லோர்கள் சொல்றாங்க ! தமிழுக்கும் அதே காலத்திலோ கொஞ்சம் முன்னப்பின்னவோ வந்திருக்கலாம்கிறது அவங்க அபிப்பிராயம் ! " கல்தோன்றி  மண்தோன்றாக்காலத்து "  நு ஆரம்பிச்சா  சின்னப்பய கூட அவுத்து போட்டு சிரிப்பான் !

வரி வடிவம் நு வரும் பொது இன்னொரு முக்கியமான விஷயம் : 
 
தமிழ் நாட்டின் மிகச்சிறந்தபுகழ் பெற்ற எழுத்தாளர் ! அவர் படிச்சது மலயாள பள்ளி ! தமிழ் வரிவடிவம் தெரியாது ! அவர் தன படைப்புகளை தமிழ் வார்த்தைகளை மலையாள வரிவடிவத்தில் எழுதுவார் ! பின்னர் அதைஎடுத்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ளதமிழ் தெரிந்த நன்பர்களிடம்  காட்டி சரி பார்ப்பார் !அவ்ர்கள் மூலம் தமிழ் வரிவடிவத்திற்கு கொண்டுவந்து அச்சுக்கு கொடுப்பார் ! பிற்காலத்தில் நேரடியாக தமிழிலேயே எழுத கற்றுக் கொண்டார் ! 
இதில் நகை முரண்  என்ன தெரியுமா ! 
அவர் மலயாளத்திலேழுதி தமிழ் வரிவடிவத்திற்கு வந்த நாவலுக்கு அந்த ஆண்டின் மிகச்சிறந்த தமிழ் நூலுக்கான "சாகித்திய அகாதமி பரிசு கிடத்தது !

-----------------------------------------------------------------------------------------------------------
மொழி ,இலக்கியம் என்று வரும்போது உணர்ச்சி வசப்படாமல் இருப்பது அவசியம் !
ஜெய மோகனை இந்த புரட்டு புரட்டற தமிழ் தேசீய குஞ்சுகளுக்கு !
உங்க தலைவர்கள்ல ஒருத்தர் ! "ஈழம் " சொன்னாலே" மைக் " முன்னால விக்கி விக்கி அழுவாரு ! அவரு வாரிசு இங்கிலீஷ் மீடியம் மெட்ரிக் ! தமிழ்படிக்கவே இல்லை ! பாவம் குழந்தை! உள்  நாட்லயோ எங்கயோ நல்ல இருக்கட்டும் !
------------------------------------------------------------------------------------------------------------
 வரிவடிவம் பத்தி சர்ச்சை வரத்தான் செய்யும் ! சும்மபொழுதுபோக்க முக  நூல  புரட்டி பார்த்தேன் ! 
 நிலைதகவலும்,பின்னூட்டங்களும் எப்படினு கவனமா பாத்தேன் ! பல தகவல்களும் பின்னூட்டங்களும் Tanglish இருக்கு! ஒரு 20%  இருக்கும் ! மாத்திக்கணம் !
------------------------------------------------------------------------------------------------------------

"சரி ! டே !  நீ என்ன சொல்லுத ?" கேட்டா

well tested well chisiled script இருக்கும் போது வேறு எதுக்கு ?"


 










































  



































































 






3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழ், தமிழ் என்றே மேடைதோறும் முழங்குகிறார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் ஒரு மாணவன்,தாய் மொழியை ஒரு பாடமாக படிக்காமல், மேற்படிப்பு வரை படிக்க இயலும். வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் முதல் மொழி, அம்மாநில மொழிதான். வாழ்க தமிழ்

'பரிவை' சே.குமார் said...

ஜெயக்குமார் அண்ணன் சொல்வது மிகச்சரி.... இங்கும் தமிழன் தமிழனிடம் தமிழில் பேசுவதை விரும்புவதே இல்லை... அதே நேரம் ஒரு மலையாளி மலையாளிடம் மலையாளத்தில்தான் பேசுவான்...

அப்பாதுரை said...

சில எழுத்தாளர்களுக்கு எழுத்து மேல் போதை. சில எழுத்தாளர்களுக்குக் காசு போதை. ஜெயமோகனுக்கு புகழ்ப் போதை. எப்படியாவது யாராவது நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுகிறார். அவர் எதிர்பார்ப்பது போலவே நாலு பேர் படித்து அவரை விமரிசிக்கிறார்கள். சுஜாதாவைப் போலவே இவரும் தன் தமிழ் வாசகர்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்வேன்.