Monday, December 30, 2013

"Bombay Plan "  படி 

வலது சாரிகளின் பிடி இறுகுகிறது ........!!!

1944-45 ம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரக் கனவு நனவாகும் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தான் ! இரண்டாம் உலகப்போரின் முடிவு பல ஏகாதிபத்திய நாடுகளின் முது கெலும்பை  நொறுக்கி இருந்தது ! இனியும் அவர்களால் தங்கள் மேலாதிக்கத்தை கொண்டு செல்லமுடியாது என்பது நிதர்சனமாயிற்று 

சுதந்திர இந்தியா எப்படிப்பட்ட அரசாக இருக்க வேண்டும் என்று இந்திய மக்களிடையே விவாதம் துவங்க ஆரம்பித்து விட்டது !

இந்திய விடுதலையில் இணக்கமான நிலைப்பாட்டினை  எடுத்த இந்திய முதலாளிமார்களும் விவாதித்தனர் !இது சம்மந்தமாக 1944ல் ஒரு அறிக்கையும் 1945ல் ஒரு அறிக்கையும் வெளியிட்டனர் ! அதில் சுதந்திர இந்தியாவின் அரசு எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கையை கையாள  வேண்டும் என்றும் வரையரை செய்யப்பட்டிருந்தது !

"இந்தியா தொழில் துறையில்வளர்ச்சி யடைய வேண்டும் ! இன்றயநிலையில்  அரசின் தலையீடு இல்லாமல்  அ தன சாதிக்கமுடியாது !  பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் " என்று பம்பாயில்கூடிய முதலாளிமார்கள் முடிவு செய்தனர் ! அதன் படிஅறிக்கையும் விட்டனர் !இந்த அறிக்கையி கையெழுத்து போட்டவர்கள் :
! Jrd  .டாட்டா 
2.Gd .பிர்லா 
3A .தலால் 
4ஸ்ரீ  ராம் 
5கஸ்தூரி பாய் லால்பாய் 
6A தரப்ஷா 
8 ஜாண் மத்தாய்

இந்த அறிக்கை வந்ததும் இந்திய மற்றும்வெளி   நாட்டுப் பத்திரிகைகள் இந்திய முதலாளிகளின் தேசபக்தியப்பராட்டி பக்கம் பக்கமாக எழுதின !
ஒருபக்கம் பொதுத்துறையும் மற்றொரு பக்கம் தனியார் துறையுமாக இந்தியா கொழிக்கப்போகிறது என்று படம் காட்டின !

இதனைத்தான் "பம்பாய் திட்டம் "(Bonbay Plan ) என்று கூறினர் 


இது பற்றி டேவிட் லாக் உட் என்ற விமரிசகர் கூறினார் ! 

"இது இந்திய முதலாளிகளின் சுய நலத்தையே காட்டுகிறது ! தொழில் வளம் இல்லாத இந்தியாவில் வளர்ச்சிக்கு அடிப்படைபிரும்மாண்டமான
  திட்டங்கள்!போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் ! மிக அதிகமான முதலிடுகள் !மிகக் குறந்த லாபம் ! இந்திய முதலாளிகளால் அதனை ஈடுகட்ட முடியாது ! ஆகவே அதனை பொதுத்துறை மூலம் அரசு மூதலீட்டில்  நடக்கட்டும்! நாம் உடனடி லாபத்தைத தரும்தொழில்களில் தற்போது இறங்குவோம் என்ற சுயநலம்!"
என்கிறார்!

இந்தியா முழுவதும் உபயோகப்படும் "மண்வெட்டி " யை டாடா தயாரிக்க ஆரம்பித்தது விவ்வ்சாயிகளின் நண்மைக்காக மட்டுமல்ல ! அன்றைய நிலையில் இருந்த சந்தையையும் லாபத்தையும் மனதில்கொண்டுதான் ! எந்த இரும்புக்கடையிலும் அன்று  Tata மண்வெட்டிகள் தான் கிடைக்கும் ! இந்த ஏற்பாட்டை இந்தய தேசீய காங்கிரசும் ஏற்றுக்கொண்டது !

இந்திய முதலாளிகள் தங்களை பொதுத்துறையின் மூலம் வளர்த்துக் கொண்ட பின் அதனை கபளீகரம் செய்து கொள்ள வகுத்த திட்டம் தான் "பம்பாய் திட்டம் " !

அடுத்து  அரசை எந்தவித கூச்ச நாச்சமின்றி தன வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் !

அதன் அரசியல்முகம் தான் பா.ஜ.க.,காங்கிரஸ் ,ஆம் ஆத்மிகட்சிகள் !!!









































































கையை 

Sunday, December 29, 2013

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி ......!


உண்மைதான் வார்ததைகளால் விவரிக்க முடியாத வலி ஏற்படத்தான் செய்தது ! 

கோத்ரா ரயில் நிலையத்து பிளாட் பாரத்தில் கருகிய பிணங்கள் கிடந்தன  ! உடனடியாக பிரேத பரி சோதனையி னை  அந்த பிளாட்பாரத்திலேயே நடத்த வேண்டும் என்று முதலமைசர் உத்திரவிடுகிறார் !

மக்கள் முன்னாள்,அவர்கள் பார்வையில் நடக்கிறது ! இப்படி செய்ய வேண்டாம் என்று கூரிய சில அதிகாரிகள் உதாசினப்படுத்தப்படுகிறார்கள்! மக்கள் இதனைப் பார்த்தால் உணர்ச்சி வசப்படக் கூடும் என்பதால் அவ்ர்கள் கூறுகிறார்கள் ! உள் துறை அமைச்சர் நரேன் பாண்டே எதிர்க்கிறார் ! முதல்வர் அலுவலகம் பகிரங்கமாக பரிசோதனை மக்கள் பார்வைபட நடக்கவேண்டுமென்று    உத்திர்வு இடுகிறது  ! 

பஞரங்க தள தலைவர்கள் வருகிறார்கள் ! அகமதாபாத்தில் ஊர்வலம் நடத்தவேண்டும் என்கிறார்கள் !  உடலை அறுத்து பரிசோதன முடிந்த சடலங்களை போட்டலமாகக்கட்டி தாருங்கள் ! அதனை 
ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்ல வேண்டும்  
என்று கோரிக்கைவக்கிறார்கள் !" ஊர்வலத்தில் சடலங்களைக் கொண்டு போகாக்கூடாது ! மக்கள் உணர்ச்சி வசப்பட்டு மாநிலம் மூழுவதும் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு  கெட்டுவிடும்" என்கிறர் உள் துறை அமைச்சர் நரேன் பாண்டே ! முதல்வர் அலுவலகம் தலையிடுகிறது ! சடலங்களை ஊர்வலமாக எடுத்திச் செல்ல அனுமதியளிக்கிறது !

ஏழை எளிய முஸ்லீம்கள் ஆனும்பெண்ணும் குழந்தகளுமாக உயிருக்குப்பயந்து ஜாப்ரி விட்டில் தஞ்சமடைகிறார்கள் ! கலவரக்காரர்கள் அவர் வீட்டை சூழ்ந்துகொள்கிறார்கள் ! உள்ளெ புகுந்து படுகொலை நடத்தும் நோக்கத்தோடு !

ஜாப்ரி முதலமைசரோடு  தொலை பேசியில் பாதுகாப்புகோரிமன்றாடுகிறார் ! "முஸ்லீம்கள்  இந்துக்களை  படுகொலை செய்யும் போது நிங்கள் எங்கு 
இருந்திர்கள்" என்று பதில் வருகிறது ! மனம் நேந்து ஜாப்ரி வீட்டின் முன்னே 
 இருக்கும் கலவரக்காரர்களிடம் " என்னை எடுத்துக் கொள்ளுங்கள் ! அப்பாவி ஜனங்களை  விட்டு விடுங்கள் " என்று கதறுகிறார் !

கலவரக்காரர்கள் அவரை எடுத்துக்கொண்டார்கள் ! கண்ட துண்டமாக வெட்டினார்கள் ! தஞ்சம் புகுந்த மக்களையும் வெட்டி வீட்டிற்கு தீவைத்து அநத நெருப்பில் போட்டார்கள்  !மாண்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாக 68 பேர் ! 

இதனைத் தடுக்க விரும்பிய நரேன் பாட்டியா குஜராத்தின் தலைநகர்
 காந்திநகரில் அரசு தலைமைச் செயலகத்தின் முன்பு பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார் ! 

வார்தைகளால் விவரிக்க முடியாத வலி எனக்கு ஏற்படுகிறது !

இதனைப்படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் !!

சில நாய்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம் !!!




























   


       





  

Thursday, December 26, 2013

துரியோதனனின் ஒப்புதல் வாக்குமூலம்....!!!


அரவிந்த  கேசரி வால்  ஊழலை மட்டும் எதிக்கிறார் ! ஏன் ? விடை உங்களுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும் !

தேவயானி கோபர் கேடே என்ற பெண்ணை முதன் முதலில் ஆதரித்தவர்கள் மீராகுமாரும், ஷிண்டேயும் ! ஏன் ?

சிவகங்கை தேர்தலில் முதலில் சிதம்பரம் தோற்றார் என்றார்கள் ! பிறகு ஜெயித்தார் என்றார்கள் ! ஏன் ?

தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்பட்டுவிட்டது என்று சிதம்பரம் புலம்புகிறார் !ஏன் ?

தேவயானிக்காக துடிக்கிறீர்களே !! எங்கள் "இசைப் பிரியா " நினைவில வரவில்லையா ? என்று கருணாநிதி துடிக்கிறாரே!   ஏன்?  

மதரை வேண்டாம் ! தென் சென்னைதான் வேண்டும் ! என்கிறாரே! அழகிரி ! ஏன்?   


வியாசன் என்ற வடஂமொழிப்புலவன் தன்னுடைய காவியத்தில் துரியோதனன் சொல்லியதாக குறிப்பிடுகிறான் !

"எனக்கு உண்மை என்றால் என்ன என்று தெரியும் ! என்னால் அதனை கடைப்பிடிக்க முடியவில்லை  !

எனக்கு பொய் என்றால் என்ன வென்று தெரியும் ! என்னால் அதனை கைவிட முடியவில்லையே !!

நமக்கும் அப்படித்தானா ???


 

Tuesday, December 24, 2013

"இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பா.ஜா.க "


பாரதிய ஜனதா  கடசியின் பழைய அவதாரமான ஜனசங்கம் இட ஒதுக்கீடை எதிர்த்தது ! 

திராவிட குஞ்சுகள் இட ஒதுகீட்டை நீதிக்கட்சிதான் கொண்டுவந்தது என்று மார்தட்டினாலும் அதனை அமல்படுத்த மறுத்து விட்டார்கள் !

உண்மையில் அதன அமல்படுத்த உத்திரவிட்டது சுயேச்சை அரசான டாக்டர். சுப்பராயன் அரசுதான் ! 

இந்த உத்திரவுப்படி மதராஸ் மாகாணத்தில் கல்விக்கூடங்களில் அமல் படுத்தப்பட்டு வந்தது !

இந்தியா சுதந்திர மடைந்ததும் சிக்கல் வந்தது !

சம்பகம் துறை ராஜ் என்ற மாணவி மருத்துவம் படிக்க விரும்பினார் ! அதே போல்சி.ஆர்.சீனிவாசன் என்ற மாணவர் கிண்டி பொறியியற் கல்லூரிக்கு மனு செய்திருந்தார் !

பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் முழுவதும் முடிந்து விட்டதால் இவர்களுக்கு இடம் இல்லை என்று நிர்வாகம் அறிவித்தது !

இதனை எதிர்த்து சம்பகம் வழக்கு தொடர்ந்தார் ! madras vs champakam  thurairaj  என்ற பிரசித்தி பெற்ற இந்த வழக்கில் இந்திய குடியரசின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இட ஓதுக்கீடு செல்லாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது !

மாகாண அரசு உச்ச்நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தது ! உச்சநீதி மன்றமும் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது!

இட ஒதுக்கிட்டை காப்பாற்ற நாடாளுமனறத்தில் இந்திய அரசியல் சட்ட திருத்த மசோதாவை நேரு கொண்டுவந்தார் ! அதனை அம்பேத்கரும் மற்ற முற்போக்காளர்களும் ஆதரித்தனர் !. அன்றய ஜன சங்கத்தின் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜி திருத்தும் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார் !

திராவிட  குஞசுகளில் ஒரு பகுதி பா.ஜா.க வை ஆதரிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன!!

நரேந்திர மோடி வந்தால் ......!!

80 களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து இவர்கள் குஜராத்தில்  நடத்திய கலாட்டா நினைவு தட்டுகிறது !

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுகிட்டை கொண்டுவந்த வி.பி சிங்கை இவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பதும் ஞாபகத்தில் இருக்கிறது !

    




  



    






 



தெய்வீக அற்புதமும், சமூக அற்புதமும்


இரண்டு நாட்களுக்கு முன்பு டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர் குடும்பத்தொடு என்வீட்டிற்கு வந்திருந்தார் சிறந்த காந்தீயயவாதி..இந்திய அமைதி மையத்தின் இயக்குனர்.பல்வேறு தத்துவார்த்த பொக்குகள் பற்றி அவருடன் விவாதிப்பேன். அப்ப.டித்தான் தெய்விக அற்புதம் பற்றீயும் விவாதம் வந்தது.


ஏசுவானவர் மலைப்பிரசங்கம் பற்றி பெசினோம். மூன்று நாள் மக்கள் அவர் பேச்சை மெய்மறந்து கேட்கிறார்கள்.அவரிடம் அவர்கள் பசியார உணவுப்பொருள் இல்லை.இருந்தது ஐந்துரொட்டித்துண்டுகளும் மூன்று மீன் துண்டுகளுமே வந்திருந்த சுமர் 5000 பெரும் பசி ஆறு கிறார்கள்.இது தெய்வீக அற்புதம். எசுவுக்கு முன்பு மொசஸ், அதற்குமுன்பு ஆப்ரகாம் இப்படி ஒவ்வொருவர் காலத்திலும் ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. .ஆப்ரகமின் பெரன்கள் தங்கள் சகொதரிக்காக் நாற்பத்தாறு பேரைக்கொன்று விடுகிறார்கள். அதாவது கொலை பழிவாங்குதல் என்பது சர்வ சாதாரனம். மோசஸ் தன் காலத்தில் இதனை மாற்றுகிறார்..புதிதாக முறைமையை மாற்றுகிறார். கட்டளையிடுகிறார்.ஒன்றுக்கு ஒன்று.ஒரூயிருக்கு ஒரூயிர். ஒரு பல்லுக்கு ஒரு பல். ஒரு கண்ணுக்கு ஒருகண் என்று தண்டனை முறைமையை மாற்றுகிற.ர்.இதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசு வருகிறார்.அன்பை வழிமொழிகிறார்.அன்பின் மூலம் தான் வாழமுடியும் என்று போதிக்கிறார்.ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்கிறார்.


காட்சி மாறுகிறது. நாம் வீட்டில் இருக்கிறோம். எனக்கும் என்மனைவிக்கும் மட்டுமே உண்வு இருக்கிறது.இரண்டு நண்பர்கள்வருகிறார்கள் அவர்களையும் உணவருந்தச் சொல்கிறோம் அவர்கள் இப்போதுதான் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் அது உண்மையில்லை என்பது நமக்கு தெரியும்.எங்களுக்கும் பசியில்லை வருங்கள் சாப்பிடுவோம் என்கிறொம்.இது உண்மையில்லை என்பது வந்தவர்களுக்கும் தெரியும்.உண்கிறொம்.ஒரு ரொட்டி மிஞ்சுகிறது.அது.அன்பின் மிகுதி.வந்தவர்கள் பசியாரட்டும் என்று நாங்கள் விட்டுவைக்க,இருப்பவர்கள் பசியாரட்டும் என்று வந்தவர்கள் விட்டுவைத்த அன்பின் மிகுதி.


மலைப் பிரசங்கம் கெட்க வந்தவர்கள் மூன்று நாள் சாப்பிடாமலா இருந்தர்கள்? அழகர் ஆற்றிலிரங்கும் திரு.விழாவுக்கு கட்டுச்சொறொடுதானே போகிறோம். மலைபிரசங்கத்திற்கும் அப்படித்தானே வந்திருப்பார்கள்.? ஏசு போதித்த அன்பு , உணவு இருப்பவன் கொண்டுவந்த உணாவு தீர்ந்து விட்டவனுக்கு பகிர்ந்தளிக்கத் தூண்டியிருக்காதா?அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பசியாற்றிக்கொண்டிருக்க மாட்டார்களா?


இந்த மனிதர்கள்மனத்தில் இந்த சமுகத்தின் மனத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்காதா?


பின்னாளில் இந்த சமூக அற்புதம் தெய்வீக அற்புதமாகியிருக்க முடியாதா?


(என் அன்புத் தோழர்களுக்கும்,பதிவுலக அன்பர்களுக்கும் ஏசு சகாப்தத்தின் 2011 ஆன்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறென்.இந்த அற்புதத்தை விளக்கிய டாக்டர் ஜாண் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்)

Posted by kashyapan at 5:35 AM 14 comments  

Sunday, December 22, 2013

"பாரதி மணியும் "ஒருத்தி " என்ற திரைப்படமும் 


ஒரு நடிகர் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் படம் முடிநதபிற்கும் மனதில்  பதிந்து விடுவாரா ?  சிறந்த நடிகர் என்றால் பதிந்து விடுவார் !

"ஒருத்தி" படத்தில் பாரதிமணி அவ்ர்கள் அதைத்தான் சாதித்துள்ளார் ! என்ன கம்பிரம் ! என்ன ஆளுமை ! என்ன   உச்சரிப்பு ! what a dominant presence !!!

"அம்ஷன் குமாரின் "   திரைப்படமான "ஒருத்தி " தூர்தர்ஷ்னில் நெற்று இரவு ஓலிபரப்பயீற்று ! கி.ரா வின் "கிடை " சிறு கதையை கொஞசமாக செதுக்கி திரை ப்படமாக்கியூள்ளர் !

ஆடுமேய்க்கும் தலித் பெண் செவனி !  ஆடு மேய்க்கும் நல்லப்பன் மிது ஆசை கொள்கிறாள் ! நல்லப்பன் மேல்சாதி ! நல்லப்பனும் அவளை விரும்பு கிறான் ! நல்லப்பன் தன சாதியிலொரு பெண்ணையும், செவனிய இரன்டாவது மனைவியாகவும் ஏற்க இருவரும் சம்மதிக்கிறார்கள் ! 

காலம்மாறுகிறது! ஜனங்களிடம் வசூலித்த் வரியை  ஜமீந்தார் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு செலுத்தாமல் இருக்கிறார் !  பிரிட்டிஷ் அதிகாரி வசூலிக்க வந்தபோது செவனி மூலம் ஜமீனின் ஊழல் வெளிவருகிறது !

ஜமீன் முறைக்கு  முடிவு கட்டி வரியை நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடமே கட்ட உத்திரவிடுகிறான் ! கூடுதல் வரியப் போட்டுவிடுவார்களோ என்று பயந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் ! இதற்குமுக்கியமான காரணமான செவனியை பாராட்டு கிறார்கள் !

இதற்கிடையே நல்லப்பனின் தாயாரும் செவனியை நல்லப்பன் விரும்புவதை ஏற்கமறுக்கிறாள் ! நல்லப்பனுக்கு தன உறவில் சகொதரிகளிருவரை மண முடிக்கிறாள் !

ஊர்  பஞ்சாயத்தில நல்லப்பனோடு தான் வாழ அனுமதிக்குமாறு செவனி கேட்கிறாள். ! ஊர் சம்மதிக்கிறது !ஒரு நிபந்தனையுடன் ! செவனியும் நல்லப்பனும் ஊரைவிட்டு போக வேண்டும் அவர்களுக்கு விருப்பமான ஊரில் அவர்கள்சென்று சேர்ந்து வாழலாம் என்று  நிபந்தனை விதிக்கிறது !

"நான் கீழ்ச்சாதி ! உங்கள் முன்னால் நான் நால்லப்பனோடு வாழ்வதை உங்களால் ஏற்கமுடியவில்ல ! அதற்காக நான் இந்த ஊரையும் நான் வளர்க்கும் ஆடுகளையும்பிரிய முடியாது"  என்று கூறிசெவனி  மறுத்து விடுகிறாள் .

பிட்டிஷ் அதிகாரியாக வரும் தாமஸ் ஒபர் தவிர அத்துணைபேரும் அற்புதமாக நடித்துள்ளனர் !

கிடாரியாக வரும் "பாட்டை யா" வின் நடிப்பு அற்புதம் ! நடை,கம்பை பிடித்திருக்கும் லாவகம் ,மற்றவர்களிடம் அவர்களுக்குத்தெரியாமலேயெ உத்திரவிட்டு காரியத்தை சாதிக்கும்பாங்கு  பாட்டியா பாட்டையாதான் !!! 

செவனியாக நடிக்கும் பூர்வ ஜா தலித் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் ! குறிப்பாக நல்லப்பன் இரண்டுமனைவிகளொடு மணக்கோலத்தில் வரும்காட்சியில் தன  சோகத்தை,கையாலாகாத்தனத்தை மறைத்துக்கொண்டு ஆடுமேய்க்கப் போகும் காட்சியில் மனதை நெருட வைக்கிறார் !

பாலா சிங் நடிப்பு நேர்த்தியாக உள்ளது !

எல்.வைத்தியனாதனின்  இசை கச்சிதம் !

விருது பெற்ற அம்ஷன் குமாரின் இந்தப்படத்தை இவ்வளவு நாள் பார்க்காததற்கு அவரிடம் மன்னிப்பு கே ட்டுக்கோள்கிறேன் !செவனி போன்றவர்களுக்கு கல்விதான் விடுதலை என்பதை பறந்து வரும் இறகு எழுதுகோலை செவனி பிடிபதின் மூலம் உணர்த்தியிருப்பது அருமை !

இந்த திறமையான மனிதரை தமிழ் திரையுலகம் புறக்கணித்துவிட்டு நுற்றாண்டு விழா கொண்டாடியதை .........!!!

த.மு,எ.க. ச இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் !!! 





  









" பாரதி மணி அவர்களும் "கடவுள் வந்திருந்தார் நாடகமும் "


பாரதி மணிஅவர்களைவிட நான் ஒரு வயது மூத்தவன் ! வீட்டில் மகன் ,மகள் பேரன்  பேத்திகள் ஆகியவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள்பெயர் மறந்துவிடுகிறது ! பேசிக்கொண்டிருக்கும் போதே mind blank ஆகி விடுகிறது ! சமாளித்து வருகிறேன் ! மணி அவர்களின் பேச்சு நாடகம் முடிந்ததும் காதில் ரீங்காரம் செய்துகொண்டுதான் இருக்கிறது!

நாடக அரங்கில் நீள ம் அகலம் உயரம் மூன்றும்  உண்டு! நாடக வியலில் (dramatics ) நடிகன் இவற்றை முழுவதுமாக பயன் படுத்தவேண்டும் என்பார்கள் ! பாரதிமணி அவர்கள் பயன்படுத்துவது இருக்கட்டும் -மனுஷன் dominate பண்ணுகிறார் ! என்ன energy !!!

வாசன  உச்சரிப்பு ! என்ன delivery ! what a dexterous delivery of dialogue ! amazing !

இன்று காலையில் தொலை பேசி மூலம்பாராட்டி பேசினேன்! "இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? இந்த வயசுக்குமேல் "என்றும் கெட்டேன் !

"கேயில் ,குளம் நு போகலாம் ! யாரைப்பத்தியும் வம்பு பேசலாம் ! அது வேண்டாமேன்னு பார்க்கறேன் ! சின்னபசங்க வராங்க ! அவங்க கூட பேசி பழகறேன் !"

"உச்சரிப்பு அழகாயிருக்கே ! ' 

"அதுக்கு காரணம் உண்டு காஸ்யபன் ! ரண்டு வருஷம் லண்டன்ல இருந்தேன் ! அங்க 200 வருட பாரம்பரியம்கொண்ட நாடக் குழு இருந்தது ! அவாகூட சேர்ந்து voice culture  பழகின்டேன் ! இந்தக்காலத்து பசங்களுக்கு அத சொல்லி கொடுக்கறேன் "

நான் மதுரை வருமுன்  ஹைதிராபாத்தில் இருந்தேன் ! அப்போது மனோகரின் நேஷனல் தியேட்டர் தமிழகத்தில்   பிரபலம்! விசுவாமித்திரர் நாடகம் போட்டர் ! அதில் cinedrama என்ற புதுமையை செய்திருந்தார் ! அதனைப் பார்ப்பதற்காக சென்னை வந்தேன் ! ரயில் சென்றல் வரும் போது மாலை 5 மணியாகிவிட்டது ! அடித்துபிடித்து அரங்கத்தை அடையும் பொது டிக்கட் இல்லை ! நாடகத்தைப் பார்க்க ஹதிராபாத்திலிருந்து வருவதையும் உடனடியாக திரும்ப வேண்டி இருப்பதையும் வீளக்கைச் சொன்ன பிறகு மாடியில் நின்று கொண்டு பார்க்க அனுமதித்தார்கள் !

நேற்று "கடவுள்  வந்திருந்தார் " நாடகத்தை அது திநகரில் நடந்த போதும் நாகபுரியில், என்விட்டில் 8 c  குளிரில் என்படுக்கைஅறையில் சவுகரியமாக பார்த்தேன் ! கண்டிப்பாக பரிவாதினி அமைப்பினருக்கு நான் கடமைப்பட்டவன் ! அப்படிப் பார்த்தவர்கள் 253 பேர் (through internet) சாதாரண காரியமல்ல !

இன்னும் கொஞசம்  தொழில் நுணுக்கப்பயிற்சியும், முன் தயாரிப்புமிருந்தால்  ஒளிபரப்பு இன்னும் சிறப்பாக இருக்கும் !

casting  மற்றும் technical  details  இல்லாததால் விமரிசனமாக எழுதமுடிய வில்லை 

மனதை  நிறைவு செய்த நாடகம் என்பதில் ஐயமில்லை !

Hats off பாரதி மணி சார் !!!



  














Saturday, December 21, 2013

(அமெரிக்காவில் சிகாகோ மாநிலத்தில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ! அமெரிக்க பிரஜையாகி அங்கேயே வசிக்கிறார் ! அவருடைய இடுகையை இங்கு மீள் பதிவு செய்துள்ளேன் )

"அஞசாத சிங்கம் "  





    ந்யூயோர்க் கவர்னர் என்றால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது யார்?

நினைவுக்கு வந்தவரை அங்கேயே சற்று நிறுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்களேன், ப்லீஸ்.

இவன் பெரோஸ்பூரில் பிறந்த பிள்ளை. இரண்டு வயதில் அப்பா அம்மாவோடு அமெரிக்கா வந்தான். 

ந்யூஜெர்சியில் நடுத்தரமாக வளர்ந்த சாமானியன். இளைய வயதிலேயே குறிக்கோள் என்றால் என்னவென்று ஆசிரியர்களுக்குச் சொன்னவன். மிகச் சிறந்த மாணவர்களில் மிகச் சிறந்த ஒருவருக்கே கிடைக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவின் முதன்மை கௌரவத்துடன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தான். வேலடிக்டூரியன். ஆனால் இந்தக் கௌரவம் எல்லாம் சாதாரணம் என்பது உலகத்துக்குத் தெரியாது. ஹார்வர்டில் பட்டப்படிப்பு, தொடர்ந்து கொலம்பியா சட்டக்கல்லூரியில் மேல்படிப்பு முடித்து பிரபல ந்யூயோர்க் செனெடர் சக் சூமருக்கு உதவியாகத் தொடங்கி படிப்படியாக முன்னேறினான்.

தொடக்கத்தின் கேள்விக்கு வருகிறேன். இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் ரூடி ஜூலியானி என்ற பதிலே கிடைக்கும். அதற்குக் காரணம் உண்டு. ரூடி ஜூலியானி, ந்யூயோர்க் மட்டுமல்ல அமெரிக்காவின் சிறந்த கவர்னர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கருதப்படுவார். கவர்னராக இருந்த போது அவர் மக்களுக்கு செய்தது என்னவோ சாதாரணம். ஆனால் செப்டெம்பர் 2011ல் அயோக்கிய அல்கேதா ந்யூயோர்க்கை நாசமாக்க முனைந்த போது தன் மேலாண்மை தலைமை எல்லாவற்றையும் பட்டை தீட்டி ந்யூயோர்க் நகரம் மீண்டும் தன் காலில் மீண்டும் நிற்க முன்மாதிரியாக இருந்தவர். அதைத் தொடர்ந்து ந்யூயோர்க் நகரில் தீவிரவாதிகளின் அடாத தொந்தரவுகள் இருந்தாலும் தீவிரவாதத்துக்குப் பணிய மாட்டோம் என்ற விடாத தீர்மானத்தையும் தன்னம்பிக்கையையும் நகர கலாசாராமாக்கியவர். இதான் ஜூலியானி. 

பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றும் லேசுபட்டவனல்ல.

இத்தாலிய மாபியா பற்றி எல்லாருமே அறிவார்கள். அமெரிக்காவின் கேம்பினோ மாபியா குடும்பம் பற்றிப் படித்தால் குலை நடுங்கும். நூறு வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு அமெரிக்காவை ஆட்டிவைத்த கொலைகார குற்றவாளிக் குடும்பம். அதன் அட்டூழியம் அடங்கிவிட்டது என்று இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிறைய பேரை உள்ளே தள்ளி கேஸ் மேல் கேஸ் போட்டாலும் இழுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம பெரோஸ்பூர் பிள்ளை, வெளியே இருந்து உதவி வந்த இருபத்தாறு சக்தி வாய்ந்த மாபியா ஆசாமிகளை உள்ளே தள்ளினான். புது அரெஸ்டையும் பழைய அரெஸ்டையும் இணைத்து அத்தனையும் ஒட்டு மொத்தமாக உள்ளே தள்ளினான். கேஸ் வெற்றிகரமாக முடிந்து குற்றவாளிகள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து யாரும் பெரோஸ்பூர் பிள்ளைக்கு ஒரு வாழ்த்து சொல்லவில்லை.

"நான் என்ன கோலி விளையாடறவனையா பிடிச்சு வந்து போட்டிருக்கேன்? சாராயம் காய்ச்சுறவனை பிடிச்சு உள்ளே போட்டிருக்கேன்.. கள்ளச் சாராயம் மேன்?" 

ரஜத் குப்தா. உலகப் புகழ் பெற்ற மெகின்ஸி நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர். மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சேக்ஸின் போர்ட் மெம்பர். சில்லறைக் காசுக்கு ஆசைப்பட்ட நிழல் ஊழல் பேர்வழி. யாராலும் தொடமுடியாது என்று நினைத்து சின்னதும் பெரியதுமான ஊழல்கள் செய்தவரை பச்சக் என்று பிடித்து உள்ளே போட்டான் பெரோஸ்பூர் பிள்ளை. 

அனில் குமார் என்று மிகப்பெரிய பொறுப்பில் இருந்த இன்டெல் விஞ்ஞானி. நம்ம நாட்டு ஆசாமி. ஊழல். பொன், பெண் என்று இரண்டுமே உண்டாம். பங்கு மார்கெட்டில் செய்த ஊழலைக் கண்காணித்து அவனையும் உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

இலங்கையின் சூது மன்னன் ராஜரத்னம். பிலியன் கணக்கில் ஊரை ஏமாற்றியவன். அவனை உள்ளே தள்ளுவதில் குறியாக இருந்து வெற்றி பெற்றான் பெரோஸ்பூர் பிள்ளை. ரஜத் குப்தா, அனில் குமார் மற்றும் கூட்டாளி ராஜரத்னம் எல்லாரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தர்மம் வெல்லும் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கும் இந்தியாவில் இருந்து யாரும் வாழ்த்து அனுப்பவில்லை.

மடியிலேயே கை வைக்குமா பிள்ளை? வைத்தது. தவறாக இருந்தால் எந்த மடியாக இருந்தால் என்ன? ந்யூயோர்க் மாநில செனெடர்கள் மூவரை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து நிரூபித்து மக்களை ஏமாற்றியக் குற்றத்துக்காக ஏழு வருடம் உள்ளே தள்ளினான் பிள்ளை. தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் ஒரு வாழ்த்து கூட அனுப்பவில்லை.

அபுதுல்வாலி, பெய்சல் ஷசாத் போன்ற அல்கேதா ஹெஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொஞ்சம் கூட பிசகாமல் விவரங்களை வரிசையாக அடுக்கி வழக்கு போட்டு உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

"தீப்பெட்டிக்கு ஒரு பக்கம் உரசினாத்தான் தீப்பத்தும். இந்த பெரோசுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் பத்திக்கும்"

வேலியே பயிர் மேய்வதைப் பார்த்து நிற்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது. நாம் இந்தியர்கள். பெரோஸ்பூர் கொஞ்சம் வித்தியாசமானவன். ந்யுயோர்க் போலீஸ்காரன் ஒருவன் பெண்களைக் கடத்தி அவர்களை வெட்டித் துண்டு போட்டு சமைத்து சாப்பிடப் போவதாகப் பொதுவில் அறிவித்ததும் ஊரெல்லாம் பீதி. அவனை மிகச் சாதுரியமாக மிக விரைவில் பிடித்து உள்ளே தள்ளியவன் நம்ம பெரோஸ்பூர். பிடிபட்ட போலீஸ்காரன், "நான் சொன்னது எல்லாம் சும்மா ஸ்டன்ட். எனக்கு செல்வாக்கு இருக்கு.. வெளில வந்து உன்னை ரெண்டு பண்ணிடுவேன்" என்றபோது பெரோஸ்பூர் பிள்ளை லேசாகச் சிரித்து அவனை 'சரிதான் போடா' என்று நிரந்தரமாக உள்ளே தள்ளினான். "பொது மக்களுக்கு ஊழல் பேர்வழிகளால் ஆபத்து.. தீவிரவாதிகளால் ஆபத்து.. உன் போன்ற முட்டாள்களாலும் ஆபத்து" என்றான். இந்தியாவில் இருந்து அவனுக்கு ஒரு வாழ்த்தும் வரவில்லை.

பெரும் பணமுதலையான பேங்க் ஆப் அமெரிக்கா, வீட்டுக்கடன் ஊழலில் பிலியன் கணக்கில் திருடியதை கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கி நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தான் பெரோஸ்பூர். இந்த ஒரு வழக்கில் மட்டும் இவன் உயிருக்கு எத்தனை ஆபத்து வந்திருக்கும் என்று என்னால் சுமாராகக் கணிக்க முடிகிறது. பெரோஸ்பூரா பயப்படுவான்? அஞ்சாத சிங்கம் என் காளை. அத்தனை பேரையும் உள்ளே தள்ளி பிலியன் கணக்கில் அபராதம் வசூலித்தான். இந்தியாவிலிருந்து ஒரு வாழ்த்து கூட.. இல்லை, வரவில்லை.

Times பத்திரிகையின் 100 most influential people in the world பட்டியலில் இடம்பெற்ற பிள்ளை. அமெரிக்க இன்டியா அப்ராட் பத்திரிகையின் person of the year விருது பெற்ற பிள்ளை. 

அப்பேற்பட்ட ரூடி ஜூலியானியின் இடத்தில் இருந்து கொண்டு இத்தனை சாதனைகளையும் வரிசையாக ரஜினிகாந்த் கண்ணாடி சுழற்றுவது போல் சர்வ சாதாரணமாக செய்து வருகிறான் பெரோஸ்பூர் பிள்ளை. அடுத்து ந்யுயோர்க் கவர்னராகலாம் என்கிறார்கள். ஆகட்டும். 

ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் பற்றி ந்யூஜெர்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். உலக இசை ரசிகர்களுக்கும் தெரியும். இது ப்ரூஸ் பாடிய பாட்டு:
Send the robber barons straight to hell.
The greedy thieves who came around
And ate the flesh of everything they found.

பாடலை பெரோஸ்பூர் பிள்ளைக்கு சமர்ப்பணம் செய்தார் ப்ரூஸ். கூட்டம் பித்தானது. ரஜினிகாந்த் படத்துக்குக் கூட இத்தனை விசில் கிடைத்திருக்காது. அமெரிக்காவின் பெருமை இந்தப் பெரோஸ்பூர் பிள்ளை.

ஊழலும் குற்றமும் புரிந்தால் தப்பிப்பபது கடினம் என்று சமீபமாக நினைக்க வைத்த நகரம் ந்யூயோர்க். அதற்குக் காரணம் நம்ம பெரோஸ்பூர் பிள்ளை. சிகாகோ வாசிகள் தங்களுக்கு ஒரு பெரோஸ் கிடைக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஏங்குகிறார்க்ள். ஏங்குகிறார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால்..

ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும். எனில், பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றைச் செய்தால் அதன் பின்னே குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள். பிடிபட்டிருக்கிறார்கள். இந்த சரித்திரம் ஒரு முறை கூட பிறழாமல் வெளிப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் எதுவும் வாராத நிலை மாறி.. ஒரு வாரமாக பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவிலிருந்து கேலிகளும் கண்டனங்களும் சரமாரியாக வந்து கொண்டிருக்கின்றன.

ஏன்? 

ந்யூயோர்க் இந்தியத் தூதரகத் துணைத்தலைவர் தேவயானியைக் கைது செய்தார் பெரோஸ்பூர் பிள்ளை. 

இந்தியாவின் பல கீழ்த்தரங்கள் உடனே ஆ ஊ என்று கூச்சல் போடுகின்றன. ஒரு பெண்ணை துகிலுரித்துத் தேடுவதா அப்படியா இப்படியா என்று பெரிய கூச்சல். எல்லாம் அரசியல் மத ஆதாய ஊழல் குரல்கள். 

இங்கே ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஒரு சட்டத்தின் காவலன் பிடித்திருக்கிறான். அதைவிட்டு, என்னவோ "அவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்.. இவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்" என்று மயில் குரலில் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் அல்பங்கள்.

இங்கே ஒரு சட்டம் மீறப்பட்டிருக்கிறது. தெரிந்தே ஒரு தப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆணவத்தின் அடிப்படையில் ஒரு ஏழைத் தொழிலாளியின் உரிமை பறிக்கப் பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்படிருப்பவர். செல்வாக்குள்ளவர், செல்வந்தர். ஒரு பெண். இந்தியாவில் பிறந்தவர். இந்தியக் குடிமகளான இந்தப் பெண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை மீறியவர்.

இங்கே ஒரு சட்டமீறல் பிடிபட்டிருக்கிறது. சட்டத்தின் காவல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு என்ற சாதாரண நிம்மதி மீண்டும் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. வலியுறுத்தியவர் செல்வந்தரல்ல. ஒரு ஆண். இந்தியாவில் பிறந்தவன். இந்தியக் குடிமகனல்லாத இந்த ஆண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை நிலைநிறுத்தியவன்.

இவனை நான் வாழ்த்துகிறேன்.

பெரோஸ்பூர் சிங்கமே, ப்ரீத் பராரா.. உன்னை எண்ணிப் பெருமையாக இருக்கிறதடா. இந்தியாவிலிருந்து எவரும் வாழ்த்தப் போவதில்லை. அவை உனக்குத் தேவையில்லை. போகட்டும். 

உன் கொள்கையை விட்டுக் கொடுக்காதே. சற்றும் மனம் தளறாதே. பண முதலைகளும் செல்வாக்குப் பச்சோந்திகளும் குரல் கொடுப்பார்கள். மிரட்டுவார்கள். பணியாதே. உனக்கு என் வாழ்த்துக்கள் என்றைக்குமே உண்டு. வாழ்க நீ எம்மான். 

தயவுசெய்து தடுமாறி விழுந்துவிடாதே. நீயும் ஊழலில் இறங்கிவிடாதே. இதுவே என் வேண்டுகோள். என்ன செய்ய, எம் போன்றவர்களுக்கு நம்பிக்கை தந்தவர்களெல்லாம் உடன் குழியும் பறித்திருக்கிறார்கள்.. அதான்!
வு செய்துள்ளேன்) 

Wednesday, December 18, 2013

( இது ஒரு மீள் பதிவு ! நம்பர்கள் வேண்டுகோளுக்கு  இணங்க )

சிறு கதை :







"அம்பாசமுத்திரம் கந்தசாமி "
சிறு கதை "அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)


Friday, December 13, 2013

கம்யுனிஸ்ட் கட்சியும் பார்பனீயமும்......!

ஒன்றாயிருந்த கம்யுனிஸ்ட் கட்சி 1964ல் இரண்டாகப் பிரிந்தது ! கிட்டத்தட்ட 1956 லிருந்து கட்சிக்குள் தத்துவார்த்தப் பிரச்சினையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது !

புரட்சி, அதன் தலமை என்ற விவாதம் ஒருபக்கம் ! தேசீய ஜனனாயகமா மக்கள் ஜனனாயகமா என்ற கேள்வி ஒருபக்கம் !

தேச பகத முதலாளிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்சி செய்யலாம் எனபது ஒருபக்கம் ! தொழிலாளர்கள் தலமையில் முதலாளிகள் ,நிலப்பிரபுக்கள் கொண்ட ஆட்சி என்று ஒரு பக்கம் !

Capitalist path ,non capitalist path என்ற சர்வதேச விவாதம் ஒரு பக்கம் ! தொழில் வளர்ச்சியே இல்லாத நாடுகளில் குறிப்பாக நிலப்பிபுத்துவமே இன்னும் பூரணத்துவம் பெறாத நாடுகளில் நிலப்பிரபுத்துவம் எற்பட்டு, முதளாளித்துவம் வந்து தோழிலாளி வர்க்கம் உருவாகி புரட்சி எற்படும் வரை காத்திருக்காமல் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ அரசுக்கு போகாமல் சொசலிச அமைப்பை உருவாக்கக்கூடாதா என்ற விவாதம் ஒருபக்கம் !

அன்று கட்சி அணிகள் இது பற்றி ஏராளமான குறிப்புகளை படித்து விவாதித்து தெளிவு பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தனர் !

இந்த நிலமையில் தான் Defence of India Rules (D.I.R) என்று போட்டு கட்சியின் இரண்டாம் மட்ட தலமையை காங்கிரஸ் அரசு கைது செய்து அடைத்தது !

அப்போது தமிழக தலைவ்ர் ஒருவரிடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று கேட்கப்பட்டது! 

"அது ஒன்றுமில்லை ஐயா ! கேரளத்துப் பாப்பானுக்கும், மஹராஷ்ட்ற பாப்பானுக்கும் நடக்கும் சண்டை "என்றார்!!

எவ்வளவு எளிமையான (முட்டாள் தனமான ) விளக்கம் !!

ட்சியும் ,பார்ப்பனீயமும் .......!!!

நாத்திகம், பகுத்தறிவு , பார்ப்பன எதிர்ப்பு .....!


சர்வதேச அளவில் நடந்த செமினார் ஒன்றுக்கு அழைக்கப்பட்டென் ! Interfaith seminaar ! எல்லா மதத்தவர்களும் வந்திருந்தர்கள்.என்முறை வந்த போது " I am not a believer ! But I beleive those who believe in God ! Because the are my fellow human beings !  என்று ஆரம்பித்தேன் ! வெளி நாடுகளிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் ! சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் ! கடவுள் இல்லை என்பவன் நாத்திகன்! அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை ! தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன எதிர்ப்பாக சுருங்கியது தான் சோகம் ! கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம்! பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது  வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை! இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது ! சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் ! புரட்சிக்கு முன்பு அது முடியாது ! நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை ! காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம்  உண்டு  !கடவுள் மறுப்பு பற்றி கிடையாது ! ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் ! நாத்திகர்கள் பலவீனமானவர்களாக்கப்பட்டு விட்டர்கள் !  வெறும் பர்ப்பன எதிர்ப்பு என்பது பகுத்தறிவு வாதம் அல்ல ! புத்தியோடு பிழையுங்கள் தோழர்களே! 















Thursday, December 12, 2013

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த 

மகன் .......!!!

ஆசாராம்  பாபு சாமியார் கம்பி எணிக்கிட்டு இருக்கார் ! அவருக்கு இரண்டு குழந்தைகள் ! பையன்  பேரு சாய் நாராயணன் ! ஒரு மகள் ! பேரு பாரதி !

சாய் நாராயணன் அப்பாவுடைய தொழிலையே பாக்கான் ! அதாவது கர்மயோகம்,பக்தி யோகம்னு சொல்லி அப்பாவி ஜனங்களை ஏமாத்தி பொழைக்கறது !

ஏகப்பட்ட ஆச்ரமங்கள் ! சொத்து சுகம் ! ஆள் அம்பலம் ! இதுல   இரண்டு ஆஸ்ரமத்தை  மகனை பாத்துகச் சொல்லிட்டாறு அப்பன் சாமியார்!

மகன் சாய் நாராயண் மேல ஏகப்பட்ட புகார் ! பாலியல் குற்றச்சாட்டு தான் அதிகம் ! போலிஸ் தேட ஆர்சம்பிச்சது! அண்ணன் ஒளிஞசிகிட்டாறு!

ஒருவாரத்துக்கு முன்னால சிக்கிட்டாறு !

இப்ப சாய் சாமியார் "தன மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள ஒப்புக்கிட்டாறு 

கற்பழிப்பு குற்றசாட்டினை மட்டுமல்லாது தான் வேரு எட்டு பெண்களோட தொடர்பு    வைத்திருந்ததையும் ஒப்புக்கிடாரூனு சுரத் போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா சொல்லி இருக்காரு !

சாய் கல்யாண  மாணவர் ! இது தவிர அவருக்கு உதவியாளரா இருக்கும் ஜமுனா என்ற பாவனா கூட உறவு உண்டாம் ! அவர் மூலமாக ஒரு பையன் பிறந்துள்ள தாகவும்  கூறியுள்ளார் !

கற்பழிப்பு குற்றச்சாட்டை பொருத்தவரை " அந்தப் பெண்ணும் அவரும் காதலித்தாகவும் இருவரும் சம்மதித்தே உடலுறவு கொண்டதாகவும் " சாய் கூறியுள்ளார் !

சமணர்களோடு ஆதி சங்கரர் சம்வாதம் செய்தார் ! மண்டன் மிஸ்ரரோடு வாதம் செய்து வெற்றிபெற்றார் ! அவர்மனைவி உபய பாரதி தன்னோடு வாதம் செய்ய வருமாறு சவால் விட்டார் ! சங்கரர் சம்மதித்தார் !

உபய பாரதி  ஆண்  பெண் உறவு பற்றி சரமாரியாக கேள்விகேட்க சங்கரர் தினறிவிட்டார் ! பதினைந்து நாள் அவகாசம் கேட்டு இறந்த ஒருவரின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து ஆண்பெண் உறவு பற்றி தெரிந்து கொண்டு வாதம் செய்தார் !

மனிதன் உயிர்வாழ மூச்சு விட வேண்டும்! பசி ,தூக்கம்,வேண்டும் ! சிறுநீர்,மலம் கழிக்க வேண்டும் அது போலதான் பாலுறவு ! இல்லாதவன் மனிதனாக இருக்கமுடியாது!
சங்கரரின் இந்த கதை அதைச் சுட்டுவது தான்

சாய் நாராயணனாகட்டும்,ஆசராம் பாபுவாகட்டும் அல்லது எந்த மடாமாகட்டும், ஆதார உணர்வுகளில் ஒன்று பாலுறவு !

தவிர்க்க முடியாதது !!!












  

Saturday, December 07, 2013

"அஜானியா "என்ற தென் ஆப்பிரிக்காவும் 

மூன்று களவாணிகளும் .......!!!


அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் எங்கள் "கருப்புக் கண்ணன் "' என்றும் ஆர்.ஜி என்றும் அழைக்கப்படும் ஆர்கொவிந்தராஜன் ! 
இன்சூரன்ஸ் ஒர்க்கர் என்ற எங்கள் இதழில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு "அஜானியாவின் எழுச்சியும் - தென ஆப்பிரிக்காவின் வீழ்ச்சியும் " என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார் !
தென் ஆப்பிரிக்காவின் ஆதிப் பெயர்  "அஜானியா " !

பிரிட்டிஷ் அரசும் சரி  , மற்ற முதலாளித்துவ நாடுகளும் சரி நிறவெறி அரசு என்று வரும் போது மறந்தும் "தென் ஆப்பிரிக்கா " என்று குறிப்பிட மாட்டார்கள் ! காமன் வெல்த் மாநாட்டில் கூட தெற்கு ஆப்பிரிக்க நிறவெறி அரசு என்றுதான் குறிப்பிடுவார்கள் ! 

தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை எதிர்த்து காந்தி ஆடிகள் நடத்திய போராட்டம் உலகம் அறிந்த ஒன்று !

அவருக்குப்பிறகு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அந்த போராட்டத்தை நடத்தியது !

ஒரு கட்டத்தில்தான் தலவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு செயல்பட் வேண்டியதாயிற்று !

நிற வெறி அரசு அவர்களைப் பிடிக்க  துடித்து ! மேலைநாடுகள் ஒரு சதிவலயைப்பின்னின ! நிறவெறியை எதிர்ப்பதாக அமெரிக்கா அறிவித்து (!)
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க வேண்டும் ! 

தலைமறைவாக இருக்கும் ஆ.தே கா தலைவரோடு அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை நடத்துவார் ! என்று திட்டம் போட்டனர் !

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் வாடகைகார் ஒட்டுனர் வேடத்தில் அமெரிக்க தூதரை பார்க்க வந்தார் !

திட்டமிட்ட படி நிற வெறி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அநத தலைவர் கைது செய்யப்பட்டார் ! 
 
தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டெலா தான் அவர் !

நெல்சன் மண்டேலாவின்  இறுதிநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா.முன்னள் ஜனாதிபதிகள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் jr மூன்று  பேரும் வருகிறார்கள் !