Tuesday, December 24, 2013

"இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பா.ஜா.க "


பாரதிய ஜனதா  கடசியின் பழைய அவதாரமான ஜனசங்கம் இட ஒதுக்கீடை எதிர்த்தது ! 

திராவிட குஞ்சுகள் இட ஒதுகீட்டை நீதிக்கட்சிதான் கொண்டுவந்தது என்று மார்தட்டினாலும் அதனை அமல்படுத்த மறுத்து விட்டார்கள் !

உண்மையில் அதன அமல்படுத்த உத்திரவிட்டது சுயேச்சை அரசான டாக்டர். சுப்பராயன் அரசுதான் ! 

இந்த உத்திரவுப்படி மதராஸ் மாகாணத்தில் கல்விக்கூடங்களில் அமல் படுத்தப்பட்டு வந்தது !

இந்தியா சுதந்திர மடைந்ததும் சிக்கல் வந்தது !

சம்பகம் துறை ராஜ் என்ற மாணவி மருத்துவம் படிக்க விரும்பினார் ! அதே போல்சி.ஆர்.சீனிவாசன் என்ற மாணவர் கிண்டி பொறியியற் கல்லூரிக்கு மனு செய்திருந்தார் !

பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் முழுவதும் முடிந்து விட்டதால் இவர்களுக்கு இடம் இல்லை என்று நிர்வாகம் அறிவித்தது !

இதனை எதிர்த்து சம்பகம் வழக்கு தொடர்ந்தார் ! madras vs champakam  thurairaj  என்ற பிரசித்தி பெற்ற இந்த வழக்கில் இந்திய குடியரசின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இட ஓதுக்கீடு செல்லாது என்று உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது !

மாகாண அரசு உச்ச்நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தது ! உச்சநீதி மன்றமும் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது!

இட ஒதுக்கிட்டை காப்பாற்ற நாடாளுமனறத்தில் இந்திய அரசியல் சட்ட திருத்த மசோதாவை நேரு கொண்டுவந்தார் ! அதனை அம்பேத்கரும் மற்ற முற்போக்காளர்களும் ஆதரித்தனர் !. அன்றய ஜன சங்கத்தின் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜி திருத்தும் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார் !

திராவிட  குஞசுகளில் ஒரு பகுதி பா.ஜா.க வை ஆதரிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன!!

நரேந்திர மோடி வந்தால் ......!!

80 களில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து இவர்கள் குஜராத்தில்  நடத்திய கலாட்டா நினைவு தட்டுகிறது !

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுகிட்டை கொண்டுவந்த வி.பி சிங்கை இவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பதும் ஞாபகத்தில் இருக்கிறது !

    




  



    






 

0 comments: