பெல்லாரி சுரங்க கொள்ளையும் ,
பா.ஜ.க வின் பங்கும் ..........!!!
மேலை நாடுகள் கனிமங்களை இறக்குமதி செய்து அவற்றை உலோகங்களாக மாற்று கின்றன !
இந்தியா போன்ற கீழை நாடுகளில் உள்ள வளங்களை வாங்கி அதனையே இரும்பு செம்பு ,என்று மாற்றி விற்கின்றான !
உலகம் பூராவிலும் எங்கு எந்த தாதுப் பொருள்கள் கிடைக்கும் என்பதை தாங்கள் அனுப்பும் உபகிரகங்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடித்து வைத்துள்ளனர் !
உலகத்திலேயே மிகவும் உயர்ந்த இரும்பு தாது பெல்லாரியில் கிடைக்கிறது ! இதற்குபோட்டி அதிகம் !
கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் தான் பெல்லாரி சுரங்கங்களை ஆட்டி வைப்பவர்கள் !
ஜனார்த்தன ரெட்டி,கருணாகர ரெட்டி ,அவ்ர்தம்பி இன்னுமொரு ரெட்டி தான் முக்கியமானவர்கள் !
பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்கள் !
பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிலேருந்து வராங்கன்னா இவங்க ஏற்பாட்ல தான் வரவங்க !
நம்ம வீடுகள்ல சைக்கிள் இருக்கும் ! சிலவீடுகள்ல ச்கூட்டர் இருக்கும் ! கொஞ்சம் வசதின்ன கார் இருக்கும் ! ரெட்டி அண்ணன் தம்பிகள் வீட்ல ஒவ்வொருத்தன் வீட்லயும் விமானம் இருக்கு !
கொஞ்சம் கூடுதலா சொல்றமாதிரி தோணுதா !!
அண்ணே! அப்புராணியா இருக்காதீங்க ! அம்பானி வீட்டு மாடில ஹெலிகாப்டர் இறங்க வசதி இருக்கு ! தெரியுமா !
சவத்துப்பய ! காச எறிஞசொம்ன "கிளி " கூட நாய் மாதிரி குரைக்கும்ணே!
கஞ்சிக்கு சிங்கி அடிச்ச ரெட்டி பயலுகளுக்கு எப்படி இம்புட்டு காசு வந்துச்சு !
நான் சொல்லல!
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே சொல்றாரு !
பெல்லாரில சுரங்கமிருக்குல்ல ! அந்த சுரங்கத்துல வெட்ட ஒரு மெற்றிக் டன்னுக்கு சர்காருக்கு 27 ரூ கொடுத்து வாங்கறாங்க ரெட்டிகாரு!
அத வெளிநாட்டுக்கு அனுப்புறாங்க !
என்ன வெல ?
ஒரு மெற்றிக் டன் 6000 ரூ க்கும் மேல !!
அதனாலதான் பா.ஜ.க முதலமைச்சர் எடியூரப்ப ரெட்டி வீட்டு வாசல்ல - வாசல்ல என்ன -புறவாசால்லயும் கைகட்டி நிக்காரு !
இதைவிட விசேஷம் என்ன தெரியுமா !
இந்த 27 ரூ கொடுக்காம சட்ட விரோதமா வெட்டி எடுக்காங்க !
அததான் ஹெக்டே விசாரிச்சாரு !
சுரங்கத்திலேருந்து எடுத்து காட்டுக்குள்ள ஒளிச்சு வைப்பாங்க ! அங்கேருந்து சட்ட விரோதமா வெளிநாட்டு அனுப்புவாங்க !
இதை "கோகுல் " ங்கற காட்டிலாக ஆபிசர் கண்டுபிடிச்சு அதுக்கு "சீல் " போட்டுட்டாரு !
இதையும் தன்னோட அறிக்கைல ஹெக்டே குறிப்பிட்டிருக்காரு !\\
ஒளிச்சு வைச்சது 35 லட்சம் மெற்றிக் டன் !
எடியூரப்பவுக்கு கோபம் வந்துட்டு ! காட்டிலாகா அதிகாரி எங்கிட்ட சொல்லாம ஹெக்டேகிட்ட ஏன் சொன்னான் ! அவன் அதிகார வரம்பை மீறிட்டன்! நு சொல்லி கோகுல் சஸ்பெண் டாக உத்தரவு போட்டார் !
ஹெக்டேக்கு கோபம் வந்தது ! அவரு "லோக் ஆயுக்தா " பதவியை ராஜினாமா செய்தாரு !
டேல்லிலேருந்து பாஜ .க தலவர்கள் வந்து ஹெக்டேய சமாதானம்பண்ணினாங்க ! அவரும் ராஜினாமாவை வாபஸ் வாங்கிப்புட்டரு !
சந்தோஷ் ஹெக்டேயும் ஒரு பா.ஜ .க அனுதாபின்னு எதிர்கட்ட்சிகாரங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க !
அப்படியான்னு கேக்கேளா ?
எனக்கு தெரியாது சாமிகளா !!!