ஹெண்டர்சன் அறிக்கையும் -
"இந்தியாவின் சீன யுத்தமும் "
இந்திய சீன எல்லைத்தாவா 1962ம் ஆண்டு ராணுவ மோதலில் முடிந்தது ! இலங்கை அரசு கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு சீன ராணுவம் பின் வாங்கி பேச்சுவார்த்தை துவங்கியது !
அப்போது ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய இந்திய அரசு லெப்.ஜெனரல் ஹெண்டர்சன் புருக்ஸ் -பிரிகேடியர் பர்வீந்தர் சிங் பகத் என்ற இரு ராணுவ அதிகாரிகளை கமிஷணாக நியமித்து விசாரணை நடத்தியது !
இந்த கமிஷன் அறிக்கை நாடாளுமனரத்தில்வைக்கப்படவில்லை ! ராணுவ அதிகாரிகள் ராணுவ நடவடிக்கையை ஆராய்வதோடு நிற்காமல் ,ராணுவத்தலைமையை ஆராய்கிறேன் என்ற பெயரில் இந்திய அரசியல் தலைமையை தன அதிகார வரம்பை மீரிவிமரிசனம்செய்திருந்தது !
அப்போது பாதுகாப்பு ஆமிச்சராக இருந்த ஒய்.பி சவான் அறிக்கையை நாடாளுமனறத்தில் வைக்கமுடியாது என்று அறிவித்து விட்டார் !
காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் இருந்த வலது சாரிகள் அவ்வப்போது ஹெண்டர்சன் அறிக்கை, நேரு, சீன ஆக்கிரமிப்பு என்று கோஷமிடுவது வழக்கம் !
அதுவும் தேர்தல் வந்தால் நரி ஊளையிடுவது போல ஊளையிடுவார்கள் !
நேய்வலி மாக்ஸ்வல் என்ற பத்திரிகையாளர் 1971ம் ஆண்டு ஒருபுத்தகம் எழுதி வெளியிட்டார் ! "இந்தியாவின் சீன யுத்தம் " என்பது பெயர் ! அதில் ஹெண்டர்சன் அறிக்கையின் சாராம்சம் உள்ளது !
(80ம் ஆண்டுகளில் எல்.ஐ.சி.தோழர் தேவ பிரகாஷ் இந்த புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார் )
,
இந்திய சீன எல்லைதகராறு பற்றிய வரலாற்று ரீதியிலான ஆவணங்களோடு எழுதப்பட்ட நூல் !
மாக்ஸ்வல் ஒரு மாவோயிஸ்ட் ! அவர் சீனாவுக்கு ஆதரவாக எழுதியுள்ளார் என்று இந்திய வலது சாரிகள் அந்த புத்தகத்தில் உள்ளவற்றைனிராகரித்து விட்டனர் !
அந்த புத்தகம் பற்றியோஅறிக்கைபற்றியொநான் எதுவும்கூறப்போவதில்லை
வரலாற்று ரீதியாக உள்ள நிலைமைபற்றி மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் !
ஆங்கிலேயரின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்தியா ,சீனா பர்மா ,இலங்கை ஆகிய நடுகள் இருந்த காலம் உண்டு
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு எல்லையை ஆங்கிலேயர்கள்போட்டனர் ! இதனை ஒரு "ஓவர்சியர் " போட்டார் ! அவர் பெயர்"மக் மோகன் " ! நவீன ராணுவ உடையிலேயே சென்று வரமுடியாது நிலையில் மக்மோகன் அங்கு சென்று சர்வே செய்து எல்லையை வரைந்தாரா ? இந்த கேள்விக்கு பதில் கிடையாது !
இந்த எல்லைக் கோடு சீனாவின் திபெத் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ளது !
பிரிட்டிஷ்- அமெரிக்க ஆதரவு சியான்-கே -ஷேக் இந்த எல்லையை ஏற்கவில்லை !
சீனாவிலிருந்து ஓடிவந்து ஐம்பது ஆண்டுகளாக நம் வரிப்பணத்தில் கஞசி குடித்து வரும் தலாய் லாமா ஏற்கவில்லை !
" மக்மோகன் எல்லையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 12 மைல் வடக்கேயும் ,தெற்கேயும் துருப்புகளை நிறுத்துவோம் ! பின்னர் பேச்சு வார்த்தை நடத்துவோம் ' என்ற இலங்கையின் யோசனையை சீனா எற்றுக் கொண்டு உள்ளது !
1962ம் ஆண்டு இந்திய சீன தாவாவின் பொது தான் க்யூபாவில் அமெரிக்க மூற்றுகை இட்டது ! பனிப்போரின் உச்சமாக அணுயுத்த அபாயம் வெடித்தது
உலகசமாதான் இயக்கத்தின் தலைவராக இருந்த பெற்றண்ட் ரஸ்ஸல் இந்தியா -சீனா ,அமெரிக்க-ரஷ்யா ஆகியோரோடு பேசி சமாதானத்தை நிலை நாட்டினார் !
அப்போது அவர் எழுதிய புத்தகம்தான் UN ARMED VICTORY என்பதாகும் ! அதில் இந்திய சீன சிக்கலும் விவாதிக்கப்பட்டிருக்கும் !
2 comments:
அரிய செய்திகள்.
நன்ற் அய்யா
Post a Comment