Tuesday, March 11, 2014

"தட்டியில் " த.மு.எ.ச  எழுதிவைத்தது .....!!!


  


tha.mu.e.sa...

"தட்டி" வைத்திருந்தார்கள்

அது நடந்து இருபதுவருடமிருக்கலாம்.மதுரையிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்துவார்கள். கிளையிலிருந்து வரும் தோழர்களும் எங்களைப் பார்த்து அளவலாவலாம் என்ற மகிழ்ச்சியில் வருவார்கள்.காலையில் சீக்கிரமாக வந்து பேசிக்கொண்டிருப்போம்.

ஒரு முறை ஒரு தோழர் மிகுந்த மன உளைச்சலோடு வந்திருந்தார்.புதிதாக பதவி உயர்வு பெற்றவர் அவர்.அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது.நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார்.அவர்கள் ஊரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது "நான்கு மணியானால் அவரவர்கள் வீட்டிற்குள் அடைந்துவிடுகிறார்கள் ஐந்து மணிக்கு இங்கிருந்து நான் கிளம்பி ஏழு மணைக்கு ஊர் போய் என் கிராமம் போவது ஆபத்தானது.பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் கூட்டிச்செல் ல வேண்டும் "என்று வருத்தத்தோடு சொன்னார். மதியத்திற்குமேல் இரண்டு மணிக்கு கிளம்ப முடியுமா? என்றும் கேட்டார்.

அதிகாரியிடம் கேட்டபோது சம்மதிக்கவில்லை."யோவ்! நாளைக்கு ரசாபாசமாச்சு நீர்தான் பொறுப்பு" என்றதும் தயக்கத்தோடு சரி என்றார்.மதிய உணவு முடிந்ததும் தோழர் என்னிடம் விடை பெற வந்தார்.

வடநாட்டில் "ஜாட்"என்று ஒரு வகுப்பு உண்டு.ஆக்ரோஷமானவர்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் உண்டு.கரிசக்காட்டு புதரில் நம்ம ஊர் "ஜாட்" ஒருவர் கள்ளச் சாராயம் விற்று வந்தார்.நல்ல வியாபாரம். இதைப்பார்த்த பங்காளி ஒருவர் எதிக்கடை போட்டார்.வாய்ச்சண்டை, அடிதடி ஆயிற்று.மூத்தவர் இளையவரை "தூக்க" ஆளனுப்பினார்.இளையவர் புதருக்கு.முனியாண்டி வந்திருந்தான்.இளையவர் "முனியா! கொஞ்சம் கடையை பத்துக்க,இந்தா ஒதுங்கிட்டு வாரேன்"என்றார்

"தூக்க" வந்தவன் என்னத்த கண்டான்.கந்தக பூமில கொவில் பட்டர் கூட கருப்பு தான்

முனியன் சாஞ்சுட்டான்.சாராயக் கலவரம் சாதிக்கலவரமாய் விட்டது. விடைபெற வந்த தோழர் கிட்ட நான் " ஏன்யா! ஒரு கட்சி கூட வாயைத்திறக்கலையா?" என்று கெட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றார். கதவு வரை சென்றவர் திரும்பிவந்தார்."தோழர்! பஸ் ஸ்டாண்டில் ஒரு "தட்டி" வைத்திருந்தது" என்றார்."உயிரப் பறிக்கத்தெரிந்த மனிதர்களே உயிரை உங்களால் கொடுக்க முடியுமா. வாருங்கள் சாத்தூரை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்" என்று எழுதியிருந்தது.என்றார் தட்டியின் கீழே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், சாத்தூர் கிளை என்றும் இருந்த்ததாக

சொன்னார்.நெஞ்சம் விம்ம நானும் அந்த சங்க உறுப்பினர்தான் என்றேன்.

    


Posted by kashyapan at 1:05 AM  

8 comments:


 காமராஜ் said...

இப்போது நினைத்தாலும் பூரிக்கிற விஷயங்களில் அதுவும் ஒன்று.அந்தத் தட்டியில் இருந்த வாசகங்கள் சாத்தூர் தமுஎச வுக்கு சொந்தமானவை.அப்போது ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தோம்.காவல்துறையின் உள்ளூர் அதிகாரிகள் மறுத்தார்கள்.சிறப்பு டி எஸ் பி ஒருத்தர் வந்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார். 'இந்தக்கையாலாகாத கட்சிக்காரங்க மத்தியில இவிங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கார்ங்களுந்தான் ஏதோ பண்றாங்க அதையும் வேண்டாமுன்னு சொல்லிட்டு வருஷம் பூரா மாயானக் காடாக்கச் சொல்ற்றிங்களா' என்று சொல்லிவிட்டு எங்களை அழைத்து அமரச்செய்து ஊக்கம் அளித்தார். ஊர்வலம் சகல பகுதி மக்களோடும் உணர்வுப்பூர்வமாய் நடந்தது. குழந்தைகளை முன்னாள் நடக்கவிட்டு 'ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படி விளையாடும்' என்று கோஷம் எழுப்பினோம். நானும் மாதுவும் சேர்ந்தெழுதியது.அப்போது எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எங்களோடு இருந்தார். தமுஎச தோழர்களின் குழந்தைகள் முன்னனியில் கோஷம் போட்டு வந்தநாட்கள் சாத்தூரில் எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் பெயரையும் வாங்கித்தந்தது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர் தோழர் ராமகிருஷ்ணனும் எங்களோடு இருந்தார்.

August 08, 2010 5:49 AM  

 kashyapan said...

மிகுந்த மகிழ்ச்சி காமராஜ்! சாத்தூர் வந்து தமுஎகச நண்பர்களிடம் நேரில் கூற ஆசை.முடியாமல் போய்விட்டது.குறைந்த பட்சம் இடுகை மூலமாவது தெரிவிக்கலாமே என்று எழுதினேன்.நினைக்க நினைக்க பிரமிப்பாக,வியப்பாக,இனிமையாக இருக்கிறது தமுஎச வின் செயல் பாடுகள்...காஸ்யபன்.

August 08, 2010 10:40 PM  

 மாதவராஜ் said...

தோழர்!


அந்த வெப்பமான நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது. இரவின் எந்த நேரம் வந்து இறங்கினாலும், சாத்தூர் மனித சஞ்சாரம் மிக்க இடமாய், சாவகாசமாய் இருக்கும். அந்தக் கலவரங்களுக்குப் பிறகு எல்லாம் பறிபோனது.எதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்னும் வேகம் இருந்தது. அதுதான் அந்த தட்டி போர்டும், நாங்கள் நடத்திய ஊர்வலமும். 


பகிர்வுக்கு மிக்க நன்றி.

August 09, 2010 2:56 AM  

 kashyapan said...

மாதவ்ஜி! அந்தத் தட்டியை வைத்தது என் மதிப்பிற்குரிய" களவாணிகள்" நீங்களிருவரும் தான் என்பது இது நாள் வரை எனக்குத்தெரியாது.காமராஜ்,மாதவ்ஜி எவ்வளவு பிரியமான,பெருமைக்குரிய நட்பு...வாழ்த்துக்கள்.....காஸ்யபன்.

August 09, 2010 5:44 AM  

 charliecharlie2007 said...

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தட்டியின் வாசகத்தை அனைவரும் உணர்ந்து கொண்டால், பிறகு ஏது பிரச்சனை.
அருமையான வாசகங்கள் ஐயா
நன்றி