Thursday, March 27, 2014

கருப்பன் துறையில் தூங்கபோய்விட்ட 

என் ஆசான் .........!!!


60ம் ஆண்டுகளின் முற்பகுதி ! 62க்கு  பின்னால் ! மெலமாசிவீதியில் ஆனந்த் அகாடமி என்று ஒரு பள்ளி ! சுதந்திர போராட்ட விராங்கனை ஜானகி அம்மாவின் வளர்ப்புமகன் சங்கர்  ராஜ் நடத்தி வந்தார் !

கம்யூனிஸ்ட் களின் நாடி நரம்பை துடிக்க வைக்கும் "விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே " என்ற படலை சங்கர் ராஜ் எழுத ,எம்.பி .சீனிவாசன் இசை அமைத்தார் !

அங்கு மக்கள் எழுத்தாளர் அமைப்பு கூட்டம் என்றார்கள் ! நானும் சென்றிருந்தேன் !

தா.ச.ராசாமணி ஐயாதான் நடத்தினார் ! மக்களுக்கான் எழுத்து என்பது பற்றி பலர் கருத்து சொன்னார்கள் !

தா.பாண்டியன் அவர்களின் தம்பிபொண்ணிவளவன் அவர்கள் எழுதிய வியட்நாம் பற்றிய நூலை அப்போதுதான் படித்திர்ந்தேன் ! "வியட்காங்குகள் பற்றி விவரமாக எழுதியிருப்பார் ! வான் ட்ராய் என்ற வீரனை பற்றி வரும் !

கலை இலக்கியத்தை மக்கள் போராட்டத்திற்காக வியட்காங்குகள் பயன் படுத்தியதைப்பாற்றி அந்த கூட்டத்தில் குறிப்பிட்டேன் !

மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்கள் செயல்பாடுகள் பற்றி எனக்குத்தெரிந்ததை கூறினேன் ! கை ரிக்ஷா தொழிலாளிபற்றி கவிதை என்றால் வண்டிபேட்டையில் ரிக்ஷா தோழிலாளிமுன் வாசிப்பார்கள் ! கைத்தறி தோழிலாளி முன் அவனைப்பற்றி பாடுவார்கள் ! இது  அவர்கள கலை இலக்கியத்திற்கு அருகில் வரச்செய்யும் என்றும் கூறினேன் !

அன்று மாலை மேல்வெளி வீதியில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தேன் ! என் அலுவலக நண்பர் வந்திருந்தார் !பேசிக் கொண்டிருந்தோம் ! அவர் கூட வந்திருந்தவரும் எங்கள் பேச்சில் கலந்து கொண்டார் ! " நீங்கள் வியட்நாம் பற்றி  குறிப்பிட்டது நன்றாக  இருந்தது ! மே.வாங்க கலை இலக்கியவாதிகள் பற்றி சர்யாககுரிப்பிட்டீர்கள் ! " என்றார் புதிதாக வந்தவர்!

"இவர்தான் திக.சிவசங்கரன் என்று அறிமுகப்படுத்தினார் ! "தாமரை பத்திரிகையின் ஆசிரியர் என்றும் குறிப்பிட்டார் !

நாகள் பேச ஆரம்பித்தோம் !   பிரெஞ்சு புரட்சி பற்றி பேசினார் ! நான் கார்லைல்  எழுதிய பிரஞ்சுப் புரட்சி படித்ததை கூறினேன் ! அப்போதுநான்புரிந்து  கொண்டதை சொன்னேன் ! அவர் கம்யூனிஸ்ட் அறிக்கை,ரஷ்ய புரட்ச்சி என்று குறிப்பிட்டார் !

விடை பெறும் போது " ஐயா ! நீங்கள் ஏன் எழுதக்கூடாது? எழுதுங்கள் ! "என்றார் !

"நான் எழுதுவதா ! என் எழுத்து என்னாலேயே படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் ஐயா ! "

"அழகான எழுத்து வேறு ! அழகான கருத்து வேறு ! எழுதுங்கள் ! எனக்கு அனுப்புங்கள் "

எழுதினேன் ! படித்து வசதியான குடும்பத்து பெண் குடிகார கணவனை விவாக ரத்து செய்கிறாள் ! அவ்ள் வீட்டில் பணி  செய்யும் பாலம்மா என்ற பெண் தன குடிகாரக்கண்வனிடம் அடி உதய் வாங்குகிறாள் ! "பாவம் பாலம்மா " என்று தலைப்பிட்டு அனுப்பினேன் ! தாமரையில் வந்தது ! 

என்னை எழுத்தாளராக்கினர் !

சனிக்கிழமை (22.3.14) ஜனநேசன் பெரியவரை மருத்துவ மனையில் பார்க்க சென்றிருக்கிறார் !" காஸ்யபன் எப்படியிருக்கிறார் " என்று விசாரித்திருக்கிறார் ! என்ன வாஞ்சை ! 

என் ஆசானே ! பழுத்த பழம் நீ!

கருப்பன் துறையில் ஓய்வெடு!

ஆனாலும் நீ நுணுக்கி  எழுதும் அந்த "கார்டு" க்காக எங்கள் மனம் ஏங்கத்தான் செய்யும் !!!!  































0 comments: