Monday, June 30, 2014

" புதிய அடிமைகள் "


ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கு மாடுகள்  பயன் பட்டது போல எந்த  ஒரு மிருகமும்பயன்பட்டதில்லை  ! அதுவும் விவாசாய நாகரீகம் உ ருவான பின் அவற்றை மிகத்திறமையாக பயன்படுத்தினான் ! 

அவற்றிர்க்கென்று தனியாக  தொழுவங்களை  அமைத்தான் ! மிகவும் சுத்தமாக அவற்றை பராமரித்தான் ! அவற்றி ற்கான தீனி யை கொண்டுவந்து கொடுத்தான். தன வீட்டில் களையும் அரிசியின் கழிவு நீரக்கூட அதன் அருகில் உள்ள தொட்டியில் இட்டான் ! அதன்  குளம்புகளைக்கூட அடிக்கடி பரிசோதித்து அதற்கு நோய் நொடி வராமல் பாது காத்தான் ! மிருக வைத்தியர்களின் உதவியை நாடி அவற்றிற்கு  மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தினான் ! வயல் வெளிகளில் உழுவதற்கும் , பாரம் சுமப்பதற்கும் அவனுக்கு இத்தகைய கால்   நடைகள் மிகவும்  பயன்பட்டன ! ஒருவன் எத்தனை மாடுகளை வைத்திருக்கிறான் என்பதை பொறுத்து அவனுடைய மதிப்பும் ,சமூக அந்தஸ்தும் மதிப்பிடப்பட்டன ! தன்னிடம் உள்ள மாடுகளை பிறருக்கு உழைக்கக்  கொடுத்து  தனியாக   வாடகை பெற்றுக் கொள்ளவும் முடிந்தது ! 
-----------------------------------------------------------------------------------------------------------     கிறிஸ்து பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ரோமாபுரி மிகப்பெரும்சாம்ராஜ்யமாக உருவானது ! ரோம சக்ரவர்த்திகளுக்கு ஈடாக பிரபுக்கள் செல்வாக்கோடு இருந்தனர் ! ஏராளமான அடிமைகளை  வைத்து  நாட்டின்     பாதுகாப்பையும்  அதற்கான பணிகளையும் செய்து  வந்தனர் ! இந்த அடிமைகளுக்கான தனி குடியிருப்புகளை உரூவாக்கினர் !  ஓடாதபடி அவர்கள் கழுத்தில் அடையாளங்களையும் இட்டனர் ! அவர்களுக்கு  மிகவும் போஷாக்கான உணவை அளித்தனர் ! அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக மருத்துவ ,சுகாதார வசதிகளையும் செய்து கொடுத்தனர் ! மற்றவர்கள் பணியினைச் செய்வதற்காக தங்களிடம் உள்ள அடிமைகளை நட்பு நகரங்களுக்கு அனுப்பி வாடகை வாங்கும் பழக்கமும் இருந்தது !

-----------------------------------------------------------------------------------------------------------
இந்திய இளைஞர்களுக்கு வளமான வழ்வினை   அளிக்க அவர்களுக்கு மிகச்சிறந்த கல்வி அளிக்கப்படவேண்டும் ! வெளிநாட்டினர் ஆச்சரியப்படும் அளவிற்கு இயற்கையிலேயே புத்தி  கூர்மையான இளைஞர்களுக்கு
  தோழிற்கல்வி அளித்து அவர்களை பொறியாளர்களாக ஆக்க இந்திய அரசு முடிவு செய்தது ! ஏராள மான பொறியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன ! இதில்  கணீனிக்கல்விக்கு முக்கிய இடம்கொடுக்கப்பட்டது ! எராளமான இளைஞர்கள் இந்த தோழில் நுட்ப டத்தை கற்றுக்கொண்டானர் ! இவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள அந்நிய நாட்டுக்  கம்பெனிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டன ! அவர்கள் பணி செய்யுமிடங்கள் மிகவும் நவீன மாக்கப்பட்டன ! புதுமையான நாற்காலிகள் மேசைகள் கொடுக்கப்பட்டன ! அவர்களுக்கு இருக்குமிடத்திலேயே சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன் ! மதிய உணவு உயர்தரமான உணவு கொடுக்கப்பட்டது ! எல்லாம் இலவசம் ! அவர்கள் தங்கு மிடத்திளிருந்து பணியிடத்திற்கு வந்து போக வாகன வசதி செய்யப்பட்டது ! பணியிடங்கள் முழுவதும்  A / C செய்யப்பட்டு அவர்கள் சோர்வடையாவண்ணம் பாதுகாகாப்பட்டது ! மாதம் 50,000 லிருந்து ஆரம்பத்திலேயே ஊதியம் கொடுக்கப்பட்டது ! நல்ல முறையில் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற அவ்ர்களுக்கு அவ்வப்போது வகுப்புகள் எடுக்கப்பட்டன ! அலுவலகத்திற்கு in time வருவது  on  time வரூவது என்பது பற்றி போதிக்கப்பட்டது ! வேறெந்த சித்தனையும் இல்லாமல் பணி செய்ய அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது! இவர்களும் எந்த  வித தொந்திரவுக்கும் ஆட்படாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றானர் 
----------------------------------------------------------------------------------------------------------    
 
( இவர்களிடையே "ஸ்பார்ட்டகஸ் " தோன்றுவானா ? தோன்றுவான் ! தோன்ற வேண்டும் !! தோன்ற வைப்போம்!!!)











 












  

Wednesday, June 25, 2014

ஒளிரும் இந்தியா !

தங்க நாற்கர சாலை  !!

பா.ஜ.க ஆட்சி !!!


முந்தய பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவை ஓளிர செய்தார்கள் ! அதற்காக தங்க நாற்கர சாலைகளை அமைத்து இந்தியாவை இணைக்கப்போகிறேன் என்று அறிவித்தார்கள் !

இணைந்திருந்த கிராமங்களை துண்டு துண்டாக்கி  பிரித்து விட்டர்கள் !

சாலை போடும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தார்கள் ! தனியார் மயத்தை திமிரோடு ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் ! இதனால் பயனடைந்த கம்பெனிகளில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு கொள்ளை லாபம் கிடத்தது !

சாலை போட்ட இவர்கள் அந்த சாலையை பயன் படுத்தும் வாகனங்களிட மிருந்து சுங்க வரி வசூலிக்க இந்த கம்பெனிகளுக்கு உரிமை அளித்தார்கள் ! 15 ஆண்டுகள் இப்படிசுங்கம்வசூலிக்க அனுமதித்தார்கள் !

இந்த சாலைகளை அமைக்க நிலம் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்டது ! அத்ற்காக  தேசீய நெடுஞ்சாலை வாரியம் உருவாக்கினார்கள் ! இந்த வாரியம் நிலம் பிடுங்கப்பட்டவர்களுக்கு இன்னும்நஷ்ட ஈடு கொடுக்க வில்லை !

சாலைபோட என்று காரணம் காட்டி லட்சக்கணக்கான மரங்களை வெட்டினார்கள் ! அதனை விற்றர்களா ? வெட்டியா மரங்கள் ஒன்றுக்குப் பதிலாக பத்து மரங்களை நடுவோம் என்று நிதி மன்றத்தில் சொன்னர்கள் !

சாலைகளின் நடுவில் செவ்வரளிச்செடியை நட்டு நீரில்லாமல் காய விட்டு
 இருக்கிறார்கள் ! 

இப்போது சுங்க வரி என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது !

சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக பங்களுரு செல்லும் சாலையில் மட்டும்   ஒன்பது சுங்கச்சாவடிகள் உள்ளன!  மொத்தம் 270 /-ரூ நகட்டினால் தான் செல்ல முடியும் !

இதனையும் தனியாருக்கு ஏலம் விட்டுள்ளார்கள் ! நிர்ணயித்த வரியை விட இவர்கள் அதிக வரி வசூலிக்கிறார்கள் !

பள்ளி கொண்டா என்ற இடத்தில் அநியாய வரி  வசூல் நடந்தது ! லாறி உரிமையாளர்கள் தாங்கமுடியாமல் புகார் கொடுத்தனர் ! எதுவும் நடக்கவில்லை ! சுங்கச்சாவடிக்கு  பக்கத்தில் 40 செண்டு நிலத்தை வாங்கினார்கள் ! அங்கு ரோடு போட்டார்கள் ! சாவடிக்குள் போகாமல் கடக்க முயன்றனர் !  ஏலம் எடுத்தவர் இற்ங்கி வந்தார் ! அதற்குள் ன் லாறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்னீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது !

மகாராஷ்டிரா மாநிலத்தில் இது மிகப்பெரிய போராட்டமாக நடக்கிறது ! பால் தாக்கரேயின் மகன் உதவ தக்கரே ! பெரிய தாக்கரேயின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே !

அழகிரி- ஸ்டாலின் மாதிரி வாரிசுச் சண்டை !   ராஜ் "மகாராஷ்டிரா நவ நிரமான் "  நு கட்சி ஆரம்பிச்சார் ! 

நாசிக் பகுதில செல்வாக்கு உண்டு ! அங்குள்ள நாற்கர சாலையில் சுங்க வரி  வசூலிக்க ஆரம்பித்து 15 வருடம் முடிஞ்சிடுச்சு ! நாசிக் முனிசிபாலிடி நாங்களே வசூலிக்க்றொம் நு தீர்மானம் போட்டுடாங்க !

அப்பத்தான் தெரிஞ்சுது ! இந்த பாவிங்க மேலும 30 வருசத்துக்கு அதே தனியாருக்கு உரிமையை கொடுத்திருக்காங்கங்கிறது ! 

ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள்  ஆத்திர மடைந்தனர் ! 

எப்படியோ ! சுங்க வசூலிக்கும்  கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டது !

மகராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் இப்படியாகி விட்டது !

கன்னியாகுமரி,நாகர் கோவில், கோவை சென்னை நு சில "சின்ன பையங்க "
நாற்கர சல நாங்கதான் போட்டோம்னு கரையரங்க !

அவனுக கிட்ட இதை  சொல்லுங்க !







Monday, June 23, 2014

குஜராத்தின் 

சுவாமி நாராயண் கோவிலும் 

உச்ச நீதி மன்ற தீர்ப்பும் ..........!!!!


எங்கள் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு 1992ம் ஆண்டு அகமதாபாத்தில் ந டைபெறுவதாக இருந்தது !

"paapar masUthi itikkappatta நிகழ்வுகளை ஒட்டி நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதும் மாநாடு தள்ளி வைக்கப்பட்டது !

1994ம் ஆண்டு   அதே அகமதாபாத்தில் மாநாடு நடந்தது ! நான் பார்வையாளனாக கலந்து கொண்டேன்!

அகமதாபாத்திலிருந்து பத்து மைல் தள்ளி புதிய தலைநகரம் "காந்தி நகர் "உள்ளது ! அங்கு தான் மாநில செயலகம்,சட்டமன்றம் அரசு அலுவலகங்கள் உள்ளன ! அங்குதான் குஜராத் மக்களின் சித்த மாகாபுருஷர் "சுவாமி நாராயண் " கோவிலும் உள்ளது ! கோவிலில் குறைந்தது எட்டு டன் சொக்க கெட்டி தங்கத்தில் அமர்ந்த நிலையில்சுவாமியின் சிலை உள்ளது !

கோவில்   இறக்குமதி செய்யப்பட  பளிங்கு காற்காளால் உரூவாக்கப்பட்டிருநதது !    ஐந்து ஏக்கர் பரப்பில் Multi Media காட்சி இருந்தது ! கோவில் முழுவதும்  A /C செய்யப்பட்டு இருந்தது !

இந்தக் கோவிலில் 24-9-02 ம் ஆண்டு தீவிர வாதிகள் இருவர் புகுந்து தாக்குதல்நடத்தினர் ! இதில் அப்பாவி மக்கள் 36 பேர் கொல்லப்பட்டனர்! 86 பேர் படுகாயம் அடைந்தனர் ! 24 மணீ நேரம் நடந்த சண்டையில்  இரண்டு தீவிர வாதிகளும் சுட்டுகொல்லப்பட்டனர் !

விசாரணை நடந்தது ! தீவிர வாதிகளோடு சதி நடத்திய வர்கள் கைது செய்யப்பட்டு" போடா" நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டு வழக்குபோடப்பட்டது !

ஆதம் பாய்,அப்துல்,அஜ்மீரி,முகம்மதலி பாய் , முப்ஃதி ,சந்த்கான் ,ஆகியோருக்கு மரணதண்டன விதிக்கப்பட்டது ! இது தவிர பலருக்கு ஆயுள் தண்டனையும் ,சிலருக்கு 10-முதல் 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது !

இன்றய பிரதமர் மோடி தான் அன்று முதலமைச்சராக இருந்தார் !

தண்டிக்கப்பட்டவர்கள் குஜராத் உயர் நிதிமன்ற த்தில் மேல் முறையிடு செய்தனர் ! உயர் நிதிமன்றம் சாட்சிகளை விசாரித்து தண்டனையை உறுதி செய்தது !

தண்டிக்கப்பட்டவர்கள்  உச்ச நிதிமன்றத்திற்கு முறையீடு செய்தார்கள் !

உச்ச நிதிமன்ற  நீதிபதிகள் எ.கே பட்நாயக் அவர்களும், இ.கோபால் கௌடா அவர்களும் விசாரித்தனர் !

குற்றம் சாட்டப்பட்ட அத்துணை பெரும் நிரபராதிகள் என்று கூறி  விடுதலை  செய்தனர் !

281 பக்கம் கொண்ட தீர்ப்பில் அவர்களை விடுதல செய்ய என்ன காரணம் என்றும் விளக்கியுள்ளனர் ! பல காரணங்களை சுட்டிக்காட்டியிருந்தாலும் 
உதாரணத்திட்காக இங்கே ஒரே ஓரூ  காரணத்தை பதிவிடுகிறேன் !

 "24 மணி நேர துப்பாக்கி சண்டையில் தீவிர வாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் ! ஒரு தீவிர வாதியின் உடம்பில் 48 குண்டுகள் பாய்ந்திருந்தன 1 மற்றொருவன் உடம்பில் 60 குண்டுகள்பாய்திருந்தன !சல்லடையாக அறிக்கப்பட்டிருந்த அவர்கள் ரத்த,சதைசகதியில் கிடந்துள்ளனர் !அவ்ர்கள் உடைகள் கிழிந்து கந்தலாகீருந்துள்ளன ! அவர்கள் சட்டைப்பையிலிருந்து உருது மொழியில் ஒரு கடிதம்  குற்றம் சாட்டப்பட்டவர்கள தொடர்பு படுத்துவதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது ! அந்த கடிதம் மட்டும் ரத்தக்கரையோ எந்த அழுக்கோ படாமல் இருந்தது எப்படி ?" என்று நீதிபதிகள் தங்கள்தீர்ப்பில்கேட்டுள்ளனர்!

கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகளவர்கள் சிறையில் இருந்துள்ளனர் ! கொஞ்சம் கவனம் பிசகி இருந்தால் ஆறுபேர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும்  !

2014ம் ஆண்டு ஏப்ரல் மேமாதம் மக்களவத்தேர்தல் நடந்தது ! மே மாதம் 16ம் தேதி தேர்தல் கமிஷன் வாக்குகளை எண்ணி அறிவிக்க ஆரம்பித்தது ! நாம்'மோடியா -ஜாடியா "என்று மண்டையைப் பிடித்துக் கொண்டிருந்தோம் !

உச்ச நீதி மனறம்  அன்றுதான் இந்த தீர்ப்பை அறிவித்தது !

எந்தபத்திரிகையும் போட்டதாக நினவில்லை  !

ஆங்கிலத்தில் "இந்து " பத்திரிக்கை போட்டது !

தமிழில் போட்டது " தீக்கதிர் "!!!




 !

Saturday, June 21, 2014

சட்டத்தின் முன்னால் "இந்தி " .....!!!



1950 ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது ! தேவநாகரி வரி  வடிவத்தில் "இந்தி" இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் ! இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் இந்தியோடு ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும் என்று அரசியல் சட்டம்  அறிவித்தது !

1965ம் ஆண்டுக்குள் இவர்கள் இந்தி மொழியை வளர்த்து எல்லாரும்  ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படித்தி விடுவர்கள் என்ற நம்பிக்கையில் செய்தார்கள் !

இதுநடை பெறவில்லை ! 

ஒரு புறம் இந்தி ஆதரவாளர்களின் அவசரம் ! மற்றொரு புறம் இந்தி பேசாத மக்களின்  தங்கள் தாய் மொழி என்னாவது என்ற பயம் ! இந்த நிலைமையில்  1965   க்கு பிறகு என்னாகும் என்ற விவாதம் நடந்தது !

இதனை சரி செய்ய மொழி மசோதா (languagebill) 1963ம் ஆண்டுகொன்டுவந்தர்கள்!

பதினைந்து ஆண்டுகளுக்குபின்பும் ஆங்கிலம் தொடரும் (may continue ) என்று திருத்தினார்கள் !

1967ம் ஆண்டு இது மீண்டும்திருத்தப்பட்டது !
அதன் படி,இந்தி பேசாத  மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று அறிவித்தார்கள் !

1965ம் ஆண்டு தமிழ்நாட்டில் மொழிக்கான போராட்டம் நடந்தது ! இதனை முடிவுக்கு கொண்டுவர , கம்யுனிஸ்டுகள் புரிந்த சேவை வரலாற்றில் மறைக்கப்பட்டது ! பி.ராமமூர்த்தி , மோகன் குமாரமங்கலம், கே.டி.கே. தங்கமணி ஆகியோர் அப்போது அமைச்சராயிருந்த இந்திரா காந்தி அம்மையாரோடு இணந்து கொண்டுவந்த சமரச தீர்வு பற்றி இன்றய  இளைஞர் களுக்கு  சொல்ல வேண்டியவை ஏராளம் !  

 போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் தங்களுக்கும் இந்த போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்று அறிவித்தார்கள் !

அனாதையாக விடப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் வந்தன !

மதுரையில்  போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக  எல்.ஐ.சி ஊழியர்கள் நின்றது ஒரு வரலாற்று நிகழ்வு !

இவை பதிவு செய்யப்படவில்லை !

பதிவு செய்வேன் !!!


Friday, June 20, 2014

இந்தி மொழி பற்றி .....!!!???


1996 ம் ஆண்டு தேர்தலின் போது மதுரையிலிருந்தேன் ! மேற்கு வங்கம்,திரிபுரா,வாரணாசி ,சிம்லா, டெல்லி, வார்தா , பீடர் ,என்று ஒரு சுற்று சுற்றி  மார்க்சிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை பார்க்கலாம் என்று கிளம்பினேன் ! இந்தி மொழி கைவராத நிலையில் மொழிபெயர்ப்பாளர் முத்துமீணாட்சி அவர்களையும் கூட அழைத்துச் சென்றிருந்தேன் ! 

சென்னையிலிருந்து கல்கத்தா செல்வது ! அங்கு பார்வையிட்ட பிறகு திரிபுரா செல்வது என்பது திட்டம் ! 
 கல்கத்தா சென்றதும் திரிபுரா செல்ல விமான டிக்கட் வாங்க உதவுமாறு "கணசக்தி " பத்திரிக்கை அலுவலகம் சென்றேன் !

டிக்கட் கிடைக்கவில்லை ! அவ்ர்கள் இரண்டு நாள் கல்கத்த தேர்தலை பார்வையிடுமாறு யோசனை சொன்னார்கள்  ! அப்பொதுஅங்குசட்டமன்ற தேர்தலும்    நடந்தது !

முதல்வர் ஜோதி பாசு "சத்காசியா" தொகுதியில்போட்டியிடுகிறார் ! அன்றுமாலை  தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்குகொள்கிறார் !மாலை  மூன்று மணிக்கு  வந்தால் அவருடைய வாகனங்களோடு "ஜீப் "ல் செல்லமுடியும் என்றனர் ! கசக்குமா ! கிளம்பிவிட்டோம் !

அலைபாயும் மக்கள் வெள்ளத்தின் ஊடாக சென்றோம் ! கல்கத்தா நகரத்தை தாண்டியதும் எங்கள் வாகனம் வேறுபாதையில் சென்று அவருக்கு முன்பாகவே சத்காசியாவை அடைய புறப்பட்டோம் !

நாங்கள் முந்தி  விட்டதால்  வழியில் ஒரு கிராமத்தில் சாலை  ஓரத்தில் நின்றோம் ! கொஞசம் நடந்து கிராமத்து வயல்களையும் அங்கு வேலை செய்யும் விவசாயிகளையும் சந்திக்க விரும்பினோம் !

வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்தோம் ! அருகில்வந்த் அவரிடம் முத்து மீனாட்சிஅவ்ர்கள்    இந்தியில்  கேட்டார்கள் !அவருக்கு "இந்தி" தெரியவில்லை ! 

எங்களுடன் வந்த தோழர் ஒடி வந்தார் !"இவர்களுக்கு இந்தி தெரியாது ! வாங்க மொழி மட்டும் தான் தெரியும் ! கலகத்தாவில் வேண்டுமானால் இந்தியில் சமாளிக்கலாம் ! கிராமப்புறங்களில்வங்க மொழிதான் " என்றார் !
அவருடைய உதவியோடு அந்த கிராமத்தி விவசாயியோடு பேசினோம் !

மீண்டும்  நாங்கள் சத்காசியா நோக்கி புறப்பட்டோம் ! அங்கு முதல்வர் வங்க மொழியில் பேசினார் ! குறிபெடுக்க முடியாது ! 

ndtv நிருபர் மோனிகா தீபா பானர்ஜி இடம் உதவி கேட்டோம் ! அவருடைய மகள்  வந்திருந்தார் ! அவர் பெங்காலியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்க முத்து மீனாட்சி அவர்கள் அதனை எனக்கு தமிழில் சொன்னார் !

மகாராஷ்ட்ராவின் உள் கிரமங்களில் "இந்தி"  பப்பு வேகாது ! 

வட கிழக்கு மாநிலங்களில் வண்டி ஓடாது !

ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் மட்டும் வண்டி ஓடும்!

ராஜஸ்தானிலிருந்து வரும் இந்தி மொழி பத்திரிக்கை "ராஜஸ்தான் பத்ரிகா" 
 !  உ.பி,மற்றும் ம..பியில் ஒரு பய வாங்க மாட்டன் ! அது வித்தியாசமான "இந்தி" ! 

ஹரியானாவில் பேசும் இந்தி "ஹரியான்வி " ! நான்தான் சுத்த இந்தி நு அவன் அருவாள எடுப்பான் !

தெரு நாய் சொரிஞ்சே தான் சாகும் !

சாகட்டும் !!! 




 





Monday, June 16, 2014

అవన్

(தோழர் சரோஜின் நினைவாக மீள் பதிவு )





HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Friday, May 07, 2010

A.I.I.E.A Long Live.
திவாலாகிப்போன,திவாலாகிக்கொண்டிருக்கும் அமெரிக்க இன்சூரன்சு கம்பெனிகள் இந்தியாவை


இராயாக்கிக்கொள்ள விரும்பின. அப்போதய அதிபர் கிளிண்டனை அணுகின.

"வாஜ்பாயும், மன்மோகனும் சரிங்கராங்கய்யா!.அங்கவுள்ள தொழிற்சங்கம் எதுக்கிது.அவங்களாலையும்சரி,நம்மளாலையும் சரி ஒண்ணும் செய்ய முடியவில்லை"என்றார் கிளிண்டன்.அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் தான் அது.இந்திய மத்தியதர மக்களின் துருவ

நட்சத்திரம் தானந்த சங்கம்.அந்த சங்கத்தின் அணுக்கத்தோண்டனாக செயல்படும் வாய்ப்பு எனக்குக்

கிடைத்த வரமாகக்கருதுகிறேன்.

சுனில் மைத்திரா,சரோஜ் சவுத்திரி,என்,எம்.சுந்தரம்,போஸ்,முகுல் முஸ்தவி,பிரத்யோக் நாக், எப்பேரற்பட்ட தலைவர்கள்!....அவர்களோடு பழக,பேச,உண்ண, வாய்ப்பு கிடைப்பது என்பது.லேசான தல்ல. சரோஜ் பல முறை மதுரை வந்திருக்கிறார்.ஒருமுறை அவர் வந்துள்ளபோது அவரைக் கவனித்துக்கொள்ளும்பொறுப்பு சங்கத்தால் எனக்கு அளிக்கப்பட்டது.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தான்விடுதி.மதிய உண்விற்காக வெளியில் வந்தோம்.பிச்சைக்காரர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களிடமிருந்து மீண்டு டவுண் ஹால் ரோடு திரும்பினொம்.ஒரு கிழவி எங்களை விரட்ட்க்கொண்டே வந்தார்.நாங்கள் தாஜ் உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.உணவு அருந்தி வேளியே வந்தபொதும் அவர் நின்று கொண்டிருந்தார்.சரோ நஜை நெருங்கினார்.எனக்கு கோபம் வந்து விட்டது."ஏ!கிழவி!சனியனே"என்று கையை ஓஙகினேன்.தெருவில் எல்லாரும் திரும்பினார்கள்,சரோஜும் திரும்பினார்.

அமைதியாக ஜிப்பாவிர்க்குள் கையைவிட்டுத்துழாவினார்.ஒரு ரூபாய் நாணயத்தை

எடுத்து கிழவியிடம் கொடுத்தார்.மெதுவாக என் தோள்மீது கைபோட்டு"it is not her mistake,comrade" என்றார்







ஆம்! அவரைப் பிச்சை எடுக்கவைத்த நானும்,நீங்களும்,அவனும், அவர்களும்தான் தவறிழைத்த

ஆக்வர்கள் என்பதை இதைவிட மென்மையாக மேன்மையாக எவரால் சொல்லமுடியும்.............
   
















தோழர் 

(இது  ஒரு மீள் பதிவு )


NTACT
LOG IN
Monday, December 30, 2013

"Bombay Plan "  படி 
வலது சாரிகளின் பிடி இறுகுகிறது ........!!!
1944-45 ம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திரக் கனவு நனவாகும் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தான் ! இரண்டாம் உலகப்போரின் முடிவு பல ஏகாதிபத்திய நாடுகளின் முது கெலும்பை  நொறுக்கி இருந்தது ! இனியும் அவர்களால் தங்கள் மேலாதிக்கத்தை கொண்டு செல்லமுடியாது என்பது நிதர்சனமாயிற்று 

சுதந்திர இந்தியா எப்படிப்பட்ட அரசாக இருக்க வேண்டும் என்று இந்திய மக்களிடையே விவாதம் துவங்க ஆரம்பித்து விட்டது !

இந்திய விடுதலையில் இணக்கமான நிலைப்பாட்டினை  எடுத்த இந்திய முதலாளிமார்களும் விவாதித்தனர் !இது சம்மந்தமாக 1944ல் ஒரு அறிக்கையும் 1945ல் ஒரு அறிக்கையும் வெளியிட்டனர் ! அதில் சுதந்திர இந்தியாவின் அரசு எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கையை கையாள  வேண்டும் என்றும் வரையரை செய்யப்பட்டிருந்தது !

"இந்தியா தொழில் துறையில்வளர்ச்சி யடைய வேண்டும் ! இன்றயநிலையில்  அரசின் தலையீடு இல்லாமல்  அ தன சாதிக்கமுடியாது !  பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் " என்று பம்பாயில்கூடிய முதலாளிமார்கள் முடிவு செய்தனர் ! அதன் படிஅறிக்கையும் விட்டனர் !இந்த அறிக்கையி கையெழுத்து போட்டவர்கள் :
! Jrd  .டாட்டா 
2.Gd .பிர்லா 
3A .தலால் 
4ஸ்ரீ  ராம் 
5கஸ்தூரி பாய் லால்பாய் 
6A தரப்ஷா 
8 ஜாண் மத்தாய்

இந்த அறிக்கை வந்ததும் இந்திய மற்றும்வெளி   நாட்டுப் பத்திரிகைகள் இந்திய முதலாளிகளின் தேசபக்தியப்பராட்டி பக்கம் பக்கமாக எழுதின !
ஒருபக்கம் பொதுத்துறையும் மற்றொரு பக்கம் தனியார் துறையுமாக இந்தியா கொழிக்கப்போகிறது என்று படம் காட்டின !

இதனைத்தான் "பம்பாய் திட்டம் "(Bonbay Plan ) என்று கூறினர் 


இது பற்றி டேவிட் லாக் உட் என்ற விமரிசகர் கூறினார் ! 

"இது இந்திய முதலாளிகளின் சுய நலத்தையே காட்டுகிறது ! தொழில் வளம் இல்லாத இந்தியாவில் வளர்ச்சிக்கு அடிப்படைபிரும்மாண்டமான
  திட்டங்கள்!போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் ! மிக அதிகமான முதலிடுகள் !மிகக் குறந்த லாபம் ! இந்திய முதலாளிகளால் அதனை ஈடுகட்ட முடியாது ! ஆகவே அதனை பொதுத்துறை மூலம் அரசு மூதலீட்டில்  நடக்கட்டும்! நாம் உடனடி லாபத்தைத தரும்தொழில்களில் தற்போது இறங்குவோம் என்ற சுயநலம்!"
என்கிறார்!

இந்தியா முழுவதும் உபயோகப்படும் "மண்வெட்டி " யை டாடா தயாரிக்க ஆரம்பித்தது விவ்வ்சாயிகளின் நண்மைக்காக மட்டுமல்ல ! அன்றைய நிலையில் இருந்த சந்தையையும் லாபத்தையும் மனதில்கொண்டுதான் ! எந்த இரும்புக்கடையிலும் அன்று  Tata மண்வெட்டிகள் தான் கிடைக்கும் ! இந்த ஏற்பாட்டை இந்தய தேசீய காங்கிரசும் ஏற்றுக்கொண்டது !

இந்திய முதலாளிகள் தங்களை பொதுத்துறையின் மூலம் வளர்த்துக் கொண்ட பின் அதனை கபளீகரம் செய்து கொள்ள வகுத்த திட்டம் தான் "பம்பாய் திட்டம் " !

அடுத்து  அரசை எந்தவித கூச்ச நாச்சமின்றி தன வசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் !

அதன் அரசியல்முகம் தான் பா.ஜ.க.,காங்கிரஸ் ,ஆம் ஆத்மிகட்சிகள் !!!

Saturday, June 14, 2014

"செம்மொழி "


செம்மொழி   பற்றிய இடுகையின் போது புகைப்படம் போட முடியவில்லை ! நான் ஒரு "கம்ப்யூட்டர் மூடன்  " !  இன்று என் மின் அஞ்சலில் ஒரு படம் வந்துள்ளது ! எப்படி வந்தது என்பது தெரியவில்லை ! "அன்றாய்டு "  கை பேசியிலிருந்து வந்ததாக அதுவே சொல்கிறது !  ஒன்றும் புரியவும் இல்லை !

புது டெல்லியில்  "ஜந்தார் மந்தார் " லிருந்து ஊர்வலம் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டது ! சிறிது தூரம் சென்றதும்  ஊர்வலத்தை காவலர்கள் தடுத்தனர் ! அந்த இடத்திலேயே அமர்ந்து  மக்களிடையே பேசினோம் ! என்னை வடமாநில மக்களுக்கு புரிவதற்காக ஆங்கிலத்தில்பேஅச்  சொன்னர்கள் !

நான் பேசிக்கொண்டிருக்கிறேன் ! எனக்கு இடது புறம் மேலாண்மை பொன்னுச்சாமி நிற்கிறார் !

வலது புறம் மத்திய குழு உறுப்பினர் தோழர் கி.  வரதராசன்  நிற்கிறார் ! கருப்பு துண்டு அணிந்து கொண்டு  வை. கோ  அவர்களும் இருக்கிறார்கள் !
 




மாநிலங்கள் அவையில் .....!



"....... 2009ம் ஆண்டு ஜனாதிபதி உரையில் எதற்கெல்லாம்முன்னுரிமை என்று குறிப்பிட்டிருந்தர்கள் ! ஆனால்அவைஎதையும்அவர்கள்நிறைவேற்றவில்லைஅதற்கானவிலையைஅவர்கள்பெற்றுக்கொண்டார்கள் !....."


"..........இன்று மாநிலங்கள் அவைத் தலைவராக இருக்கும் அருண் ஜெட்லி  அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் ! காங்கிரசும்,பாஜகவும் இடத்தை மாற்றிக்கொண்டார்கள் ! நான் அதே இடத்தில் இருக்கிறேன் ! அதே விமரிசனத்தை வைக்கிறென்........." 


"...பொருளாதார வளர்ச்சி இல்லையேல் நகரங்களை எழுப்பமுடியாது ! 'துக்ளக்"  நமக்கு தேரியும் !  'அக்பரின் "ஃப்தேபூர் சிக்ரி " என்ன ஆயிற்று என்பது தெரியும் .......!"


".......நிதி பற்றாக்குறை 5.21 லட்சம் கோடி ரூபாய் ! வசுலிக்க முடியாத வரி பாக்கி 5.73 லட்சம் கொடி ரூபாய் ! இதை வசூலித்தால் பற்றக்குறை பொக மிஞ்சும் !......." 


( மாநிலங்கள் அவையில் ஜனாதி உரை விவாதத்தின்   போது சீதராம் எச்சுரி பேசியதிலிருந்து )

Thursday, June 12, 2014

இது மீனவர்பிரச்சினை மட்டுமல்ல ...!!!


தமிழக முதல்வர் "அம்மா "அவர்கள்  பிரதமரிடம் சொல்லி விட்டா ர்கள் .மீனவர்கள் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டிக் கொண்டுள்ளார்கள் !

நம்மூர் அவசர குடுக்கைகள் கச்சதீவை திரும்ப் பெறவேண்டும் என்கிறார்கள்    கச்சதீவோடு பிரச்சினைமுடியாது!

நமது பாரம்பரிய மீன்பிடி உரிமை என்பது முக்கியமானது ! கச்ச்தீவின் கிழக்கே 21 கடல்மைல், வடக்கே 15 மைல் , நெடுந்தீவுக்கு கிழக்கே 11மைல் ,தெற்கே 4மெயில்,ராமேஸ்வரத்திற்கு பக்கம்,தலைமன்னாரிலிருந்து 21 மைல் ,தற்போது இலங்கைக்கு சொந்தமான தீவுகள் என்று காலங்காலமாக ,மீன் பிடிக்கும் உரிமையை பாரம்பரியமாகக் கொண்டவர்கள் நாம் !

இந்த உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை  ! 

கடல் எல்லைகளை குறிக்க சர்வதேச விதிமுறைகலுள்ளன ! 1971மாண்டு வாக்கில் ஜமைக்கா நாட்டில் சர்வதேச மாநாடு நடந்தது ! மிகக்குறுகிய கடல் பகுதியில் இருக்கும்  நாடுகள் கடல் எல்லையை வகுக்க விதிகள் இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ளன உள்ளன ! 

பாதுகாப்பு க்கான பகுதியில் மட்டும்  கடல் எல்லை  வகுக்கலாம் ! மற்ற பகுதிகளில்   இரு நாட்டவரும் பயன்படுத்தலாமேன்பது விதி ! எந்த காரணம் கொண்டும் நாம் இதனை விட்டுக் கொடுக்கக் கூடாது !

ஆண்டுக்கு 25000 கோடி வருமானம் கிடைக்கிறது ! அந்த மீ னவர்களுக்கு கொள்முதல் விலையில் டீசல் கொடுக்க வேண்டும் ! 

சேது கால் வாய் திட்டம் வந்தால் மன்னாருக்கு வடக்கே சென்று மீன்பிடிக்கமுடியும் ! ஆனால் தற்போது மணல்மேடுகள் உள்ளதால் நமதுமீனவர்கள் சிரமப்ப்படுகிறார்கள் ! அங்கு வாய்க்கால்  வெட்டி கொடுத்தால் அவ்ர்கள் சென்று வரமுடியும் ! 

கேரள மீனவர்கள் சுற்றி வந்து அங்குள்ள மீன் வளத்தினை  அனுபவித்து வருகிறார்கள் !

இறல்மீனுக்கான  கிராக்கி அதிகம் ! மீன் வியாபாரிகள் நமதுமீனவர்களிடம் ஈன கிரயத்திகு வாங்கி ஏற்றுமதி செய்து கொள்ளைலாபம் ஈட்டுகிறார்கள் !

தஞ்சையிலும் ஆந்திராகடற் கரையிலும்மீன்பண்ணைகள் இருக்கின்றன! இவற்றில் இறால் வளர்க்கிறார்கள்,! தாய்லாந்திலிருந்து குஞசு  மீன்களை இறக்குமதி செய்து வளர்க்கிறார்கள் ! அவை எடை கூட வேண்டும் என்பதற்காக குஞ்சாக இருக்கும் போது அவற்றின்  "கண்களை " குத்தி குருடாக்கிவிடுவார்கள் ! குருட்டு மின்கள்  ரசாயனம் கலந்து உணவினை உண்டு கொழுக்கின்றன !    

மிகக் குறந்த விலையில் நமது வியாபாரிகள் வாங்கி ,கடல்  இறாலோடு ,பண்ணை இறாலைக் கலந்து  ஏற்றுமதி செய்கிறார்கள் !

இதன்க கண்டுபிடித்த வெளிநாட்டு எற்று மதியாளர்கள் இந்திய மீனுக்கு தடைவிதிக்க எற்பாடு செய்து வருகிறார்கள் !

இவை எல்லாம் "செக்ரட்டரி லெவல்மீட்டிங்கில்" வெளிவராது !

மீனவ சங்க \ங்கள் தான் இவற்றை தெரிந்தவை !

எல்லா சங்கங்களும் இவற்றை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுமா?

பேச்சு வார்த்தைக்கு முன்னால்  குறைந்த பட்சம் சி.ஐ.டி .யு  சங்கத்தை கலந்து கொள்ளுங்களேன்  !

பலன் நிச்சயம் கிடைக்கும்  !!!


  

Wednesday, June 11, 2014

"தமிழ் செம்மொழி" ...

தி.மு.க - அ .தி.மு.க  லாவணி ...!


தமிழ் செம்மொழியானது யாரால் ?  தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து  இதனச் சாதித்தவர்கள் ஏராளம் ! சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு ! இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு ! இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம்  மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !  
இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான்  நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !

தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !

அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே  செய்துகொடுத்தவர்  மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !

பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !

பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள  மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !

அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி   வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் ! 

தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!

காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !

பிதம்ரிடம் எங்களை  வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !

த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள்  மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !

பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !

அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !

தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !






காலம்சென்ற  

Tuesday, June 10, 2014

(மீள் பதிவு )

Saturday, March 09, 2013


"ரெட்டைமடி" வலையும் ,

தமிழக மீனவர்களும் .....!!!


மூன்று  பக்கமும் கடல் சூழ்ந்த இந்தியாவின் மொத்த மீனவர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் இலங்கையின் மக்கள் தோகையை விட அதிகமாக இருக்கலாம். இந்தக் கொள்ளையில் தினம் மீனவர் இலங்கை கடல் பகுதியில்தாக்கப்படுகிறார்கள்! திமுக  ஆட்சியில் இருந்தபோதும் கடிதங்கள் எழுதப்பட்டன! தற்போதும்  எழுதப்பட்டு  வருகிறது! மத்திய அரசும் எதாவது பதில் சொல்கிறது !


"உள்குத்து " ஏதாவது உள்ளதா? அப்படியானால் திமுக ,அதிமுக தலைமைக்கு  தெரியாதா?   தமிழ்  தேசீய சிங்கங்களுக்கு தெரியாதா ? இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது !  


ராமநாதபுரம்,உச்சிபுளி,மண்டபம்,நாகை என்று விசாரித்ததில்கிடைத்த தகவல்களை பதிவிடுகிறென்!  


பொதுவாக தமிழக மீனவர்களீடையேயே போட்டி உண்டு! வல்லத்தில் மீன் பிடிப்பவர்கள் ,படகில் செல்பவர்கள் ,விசைப்படகில் செல்பவர்கள் என்று போட்டி இருக்கும்!நமது கடற்பகுதியில் நண்டு,கடல்குதிரை,தான் கிடைக்கும்! 

இலங்கைகட்ற்பகுதியில் மின் வளம் அதிகம்! அந்தப் பகுதியில் மீனவர்களின்   எண்ணீக்கை குறைவு நம்மவர்கள் அங்கு சென்று மீன்பிடிப்பார்கள்! இலங்கை அரசும் "எதற்கு வம்பு" என்று வேடிக்கை பார்த்து வந்தது 


நம்ம ஊர் வியாபாரிக்கு "எச்சில்" ஊ ற  ஆரம்பித்தது ! ஒரு தரம் கடலுக்கு போக  50000 ரூ செலவழித்தாலும் இரண்டு முன்று லட்சம் கிடைக்கும் !


வலை பெரியதாகைருந்தால் பத்துலட்சம்கிடக்கும்! இதுல "ரெட்டைமடி " வலை ன்னு  ஒண்ணு இருக்கு! இதை போட்டா கடல்தரைமட்டம்வரைபோய் மீனை மட்டுமில்லாமல் குஞசுகுளுவான் ஒண்ணுமில்லாம  அ றிச்சிட்டு வந்துறும் !  அங்க ஆறு மாசத்துக்குமீன் இருக்காது ! வியாபாரிங்க இப்படி செய்வாங்கன்னு அரசாங்கங்களுக்கும் தெரியும் ! அதுனால தான் ஜூலை ஆகஸ்டு மாதத்துல 45 நாள் மீன்பிடிக்க தடை செய்யறாங்க! 


இலங்கை மீனவர்கள் பிடிச்சிட்டு போங்கப்பா! கொஞ்சம் எங்களுக்கும் விட்டுட்டு பிடிங்க ங்காங்க !   


வலைய அறுப்பதும், பிடித்த மீனை கடல்ல கோட்டரதுமதுக்காக தான் !மிஞ்சிய  முட்டை ,தலைபிரட்டையாவது வளரட்டுமே என்பதுதான் !


இது அம்புட்டு பேருக்கும் தெரியும்!


வியாபாரியை பகைச்சுக்க முடியுமா!


இது இலங்கை,தமிழக மீன் வியாரிகள் போடும் நிழற்சண்டை!! 


Monday, June 09, 2014

"சங்கமித்ரா"வும் 

"பெரியாரிய"த்தின் போதாமையும் ...!!!

"பாவடை" ராமமூர்த்தி  சங்கமித்ராவாக பரணாம வளர்சி அடையுமுன்பே என் நண்பன் ! அவன் பெரியார் சீடனாக மாறவதற்கான அவனின் வாழ்க்கை சூழல் மிக முக்கியமானதாகும் ! கூர்மையான புத்தியும், கம்பிரமான வாழ்நிலையையும் விரும்பியவன் அவன் ! 

தஞ்சை மாவட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையின் அழுத்தம் அவனை முற்றிலுமாக மாற்றியதில் ஆச்சரியமில்லை ! "படையாச்சி" வகுப்பைச் சேர்ந்தவன் அவன் ! சாதீய அடுக்கில் வட மாவட்டங்களில் "வன்னியர் " என்று அழைக்கப்ப்படுவோர் தஞ்சையில் இப்படி அழைக்கப்படுவார்கள் ! தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு அடுக்கு முன்னாலிருத்தப்பட்டவர்கள் ! தாழ்த்தப்பட்டவர்கள் நேரடியாக தீண்டாமைக்கு ஆட்பட்டவர்கள் !  இவர்கள் மறைமுகமாக ஆட்பட்டவர்கள் !என்னிடம்கதைகதையாகச்  சொல்லி        யிருக்கிறான் !

பண்ணையார் வீட்டு விருந்து ஒன்றில் நடந்ததைச் சொல்லியிருக்கிறான் ! அவர்கள் வீட்டி விருந்தில் தோட் டத்திலுள்ள களத்தில்தான் இவர்களுக்கு பந்தி வைப்பார்கள் ! பின்வாசலில் உள்ள தோட்டத்தில் சமையல் ! இவனோடு இவனுடைய உறவினர் பையன் நான்கைந்து வயது  சென்றிருக்கிறான் ! கத்தரிக்காய் ,வாழைக்காய் என்று காய்கறிகள் அரிந்து குவிக்கப் பட்டிருக்கின்றன !வெந்த முட்டைகள் உரிக்கப்பட்டு கூடை கூடையாக குவிக்கப்   பட்டிருக்கின்றன ! இவன் கூட வந்த சிறுவன் " ஐ! எம்பிட்டு முட்டை "என்று ஒடி எடுக்கப் போயிருக்கிறான் ! "ஏய் ! தொடாத!"என்று ஒரு அதட்டல் ! சிறுவன் நடுங்கி முகம் வெளிற கண்கள் கசிய  விக்கித்து நின்றுவிட்டான் !
" சாமா! எனக்கு அப்போது பத்துவயதிருக்கலாம் ! புரிந்தும் புரியாத வயது !இன்று ஐம்பத்து எட்டு வயதாகிறது ! அந்த குழந்த முகத்தில் தெரிந்த சாதீயத்தின் கோர முகத்தை நான் இன்னும் மறக்கவில்லை "
இதற்கு காராணம் சாதீயம் ! அதை கொண்டுவந்த மனுனீதி ! அதை உறவாக்கிய "பார்ப்பனீயம் " அதைஒழித்தால் தான் எங்களுக்கு மரியாதையான வாழ்க்கை " ! என் தொடையில் "கிள்ளி "னான் 
ஏதாவது முக்கியமான நியாயமான வாதத்தை சொன்னான் என்றால் இப்படிசெய்வது அவன் வழக்கம் !  
"சரிப்பா ! அதுக்குத்தான் ஸ்ரீரங்கம் பாப்பான் பூணுல அறுத்தீங்களே !"
"ஏன் ? நீ போட்டுக்கலை ! " முதுக தடவினான் ! "போட்டிருந்தா அதையும் அறுப்பேன் !"
"ஏன் ! ராஜாஜி  பூணுல அறுக்கவேண்டியது தானே !" எழுந்து விட்டேன் ! என் தொடையில் மீண்டும் கிள்ளி விடுவானோ என்று பயந்து !

குடும்பம் உறவினர் என்றால் கொள்ளைபிரியம் அவனுக்கு ! அவ்ந்தந்தை,தாத்தா,பாட்டன், பூட்டன் என்று இருபத்தி ஒரு தலமுறையச் செர்ந்தவர்கள் விவரத்தசிசெகரித்து குடும்பமரம் ( Familytree ) ஒன்றை தயாரித்திருந்தான்  ! "சாமா! எனக்குப் பிறகு ... !" என் தோளில் சாய்ந்து கொண்டான் !ஆதுரமாக அவன் முதுகில் தட்டி கொடுத்தேன் !

அவன் மன அமைதியை,குடும்ப வாழ்க்கையை, நிம்மதியை புரட்டிப் போட்ட சங்கதி! அறிவுபூர்வமாக சிந்தித்து அதற்கும் ஒரு விடை தேடினான் ! 

அவன் P .ராமமுர்த்தி ! அவன் தந்தை பெயர் பாவாடை ! குலச் சாமி பெயர் !"மேல் சாதி சிறுவன் கூட "எ! பாவாடை "என்றுகூவுவான் ! 

P .ராமமூர்த்தி தன பெயரை "பாவாடை ராமமூர்த்தி "என்று அறிவித்தான் ! ஸ்டேட் வங்கியில் asst Gl manager பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றான் !

அப்போதெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகிடையாது ! மேல் சாதி ஆதிக்கம் கொடிகட்டி பறந்த காலம் ! போராடி, வெறுத்து வெளியேவந்தவன் பாவடை !

பெரியாரின் இறை மறுப்புக்கொள்கையில் ஈடு பாடு கொண்டவன் ! நாத்திக வாதம் என்பது பிள்ளையார் சிலையை உடைப்பதோ ,ராமருக்கு செருப்பு மாலை அணிவிப்பதோஅல்ல என்று வாதிடுவேன் ! " இல்லை ! அது தெய்வ நம்பிக்கையை குறைக்க உதவும் "என்பான் ! "நீ அய்யரு ! அப்படிதான் பேசுவ ! என்பான் !

"ஏம்பா ! "கோரா " ஒரு நாத்திகர் தனே !?"

"அற்புதமான நாத்திகர் ! உலகத்திலேயே முதல் நாத்திக மாநாட்டை நடத்தியவர் !"

"கொபராஜு ராமச்சந்திர ராவ் என்ற "கோரா " சுத்தமான பார்ப்பனர் தானே !"

"ஆ" வென்று கத்திவிட்டேன் ! தொடையை தேய்த்துக் கொண்டேன்  !

"சாமா ! உனக்கு பெரியாரை  பிடிக்காதா  ? " 

"என் பிடிக்காது ! பொது வாழ்க்கைல முக்காதுட்டு தனக்காக செக்காதவர் ! அது மட்டும் போதாதே ! எதுக்கெடுத்தாலும் பாப்பான் பேரை சொல்லிசம்மாளிக்கறது தன பிடிக்கல !"

"என் ?நீ பாப்பான் கறதாலயா ?"

"நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ ! வியட்நாம்ல அமெரிக்க காரன் குண்டு போட்ட தமிழ்நாட்டு பாப்பாந்தான் காரணம்னு சொன்ன எப்படிப்பா !"

"என்னதான் சொல்லவர! " 

"போதாது "

"பெரியாரியம்போதாது  ங்கற " 

"ஆமா" 

"இட்டு நிரப்ப நீங்களும் வாங்க !"

"தானாக ஊறும் "கிணற்று நீர்" பெரியாரியம் " 

"மார்க்சீயம் ? "

"அதுமகா சமுத்திரம் ! கிணற்றுக்குள் அடங்காது ! "

பாவடை ராமமூர்த்தி என்ற சங்கமித்ரா மறைந்து விட்டான்  ! இருந்திருந்தால் விவாதம் தொடர்ந்திருக்கலாம் ! அவனை .........!






Friday, June 06, 2014

"சங்கமித்ரா  " என்ற

என் ஆப்த நண்பன் !!!


"சங்கமித்ரா " என் ஆப்த நண்பன். பெரியார் தொண்டர்களுக்கு  அவனைத் தெரிந்திருக்கும் ! தி.க வின் தீவிர மான தொண்டன் ! சமூக நீதிக்காகவும், மூட நம்பிக்கையை எதிர்த்தும் சமரசமற்று நின்றவன் ! "விடுதலை " பத்திரிகையில் எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்தவன் !"பெரியாரின் " அணுக்கத் தொண்டனாக ,அவருடைய இறுதிக் காலத்தில் ஆலோசகனாக இருந்தவன் !
------------------------------------------------------------------------------------------------------------
 1957-58  ம்    ஆண்டு ! அப்போது ஹைதிராபாத்தில் இருந்தேன் ! ப்ஃதெ மைதானத்திற்கு எதிரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒருவீட்டைப்பிடித்து தங்கி இருந்தார்கள் ! "பஷீர் பாக் " அலுவலகத்தில் வேலை பார்த்த அவர்களில் "பாவாடை ராமமூர்த்தியும் ஒருவன் ! தஞ்சையின் நாகப்பட்டினம் அருகில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவன் ! மகா கெட்டிக்காரன் 1 மாலை நேரக்கல்லூரியில் பி காம் படித்தான். பின்னர் எம்.காம் படித்தான் ! பலகலைகழகத்திலேயெ முதல்மாணவனாக வந்தான் ! ஸ்டேட்  வங்கியில் அதிகாரியானான்  ! என் நணபன் பாவாடை மாற்றலாகிப் போனான் ! நானும் மாற்றலாகி மதுரை சென்றேன் ! தொடர்பு அறுந்தது !
------------------------------------------------------------------------------------------------------------

மதுரை என்னை புரட்டிப் போட்டது ! கலை இலக்கியத்துறையில் செயல்பட ஆரம்பித்தேன் ! எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது ! சிறுகதைகள் எழுதினேன்! தொகுப்புகள் வந்தன ! அப்படி வந்த தொகுப்பு ஒன்றுக்கு லில்லி தேவசகாயம் அறக்கட்டளை விருதும் பணமுடிப்பும் தந்தது! அதன வாங்க கோயம்புத்தூர் சென்றேன் ! எண்ணப் போலவே வேறு பல எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் ! மேடையில் எங்களோடு நரைத்த தாடி மீசையோடு ஒருவர் அமர்ந்திருந்தார் ! "சங்கமித்ரா " என்று அழைத்ததும் விருதினை பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்றிவிட்டு அவர் அமர்ந்தார் !  "காஸ்யபன் " என்று அழைத்ததும் நான் சென்று ஏற்புரை ஆற்றிவிட்டு வந்தேன் !

------------------------------------------------------------------------------------------------------------
மதுரை வந்து நான்கு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு கடிதம்  வந்தது !
" அடேய் சாமா ! நீதான் காஸ்யபன் என்பது எனக்கு தெரியாது ! உன் பாவடை தான் "சங்கமித்ரா " என்பது உனக்குத்தெரியாது ! என் தாடி மீசை 28 ஆண்டு பிறிவு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாமல் போயிற்று !"என்று எழுதியிருந்தான் ! தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது !

===================================================================
நாங்கள் இருவரும் ஆதி நாட்களிலேயே தீவிரமாக விவாதித்திருக்கிறோம் ! பெஇயாரிஸ்ட்களும், அம்பெத்கரிச்டுகளும், மார்க்சிச்டுகளொடு இணந்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் அ வன் விருப்பம் ! நான் அதனை ஏற்பதில்லை ! அவன் என்வீட்டிர்கு வந்து நாட்கணக்கில் தங்கி விவாதிதிருக்கிறான் ! நான் சென்னை சென்று விவாதித்திருக்கிறேன் !                And at last we agreed to disagree !                  
------------------------------------------------------------------------------------------------------------  "கோரா"     என்ற நாத்திவாவதியின் சீடன் அவன் ! அவருடைய கருத்துக்களை அவன் விளக்கும் போது ஒரு ஆவேசம் அவனுக்குள் வரும் !அவன் எங்கிருந்து வருகிறான் எங்கு செல்கிறான் என்பதை அனுமாநிக்கமுடியாது ! 1994லிருந்து 2000ரை தொடர்பில் இருந்தான் ! திடிரென்று தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டான்  !       
--------------------------------------------------------------------------------------------------------
முகநூலில்  கர் னால் கணேசன் என்பார் "சங்கமித்ரா"  என்று -குறிப்பிட்டிருந்தார் ! அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு கிடக்குமா என்று கேட்டேன் "-சங்கமித்ரா "
2012ம் ஆண்டு புற்றுநோயால் இறந்து விட்டார் என்றும் ,கர்னல் கணேசனராம 
மூர்த்தியின் இளைய சகோதரர் என்றும் அறிந்தேன் !
------------------------------------------------------------------------------------------------------------பாவாடை ராமமூர்த்திக்கு என் அறிவார்ந்த நண்பன் சங்கமித்ராவுக்கு  என் ஆழ்ந்த அஞ்சலி யை காணிக்கை யாக்குகிறேன் !!








































!








 

Tuesday, June 03, 2014

​ ​  சமஸ்கிருதம் + தமிழ் -:- ராபர்ட் பாதிரியார் !!!

        (sanskrit plus tamil divided by Father Robert )


சம்ஸ்கிருத மொழி தோன்மையான மொழிகளுள் ஒன்று ! அதேபோல தமிழும் தொன்மயான மொழிகளில் ஒன்று !

இரண்டு மொழிகளுமே இந்திய ,கலாச்சார ,பண்பாட்டு ,இலக்கியத் துறைகளில் தங்களுடைய செல்வாக்கினை செலுத்தியவை களாகும் !

சம்ஸ்கிருத மொழிக்கான வரிவடிவம்  கிட்டத்தட்ட கி.மு 3ம்  நூற்றாண்டில்
உ ருவானதாக மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் !

தமிழ் மொழிக்கும் கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் வரிவடிவம் உருவானதாக கருது கிறார்கள் !

சம்ஸ்கிருத மொழியின் மிகப்பழமையான நூல் என்றால்பாணினிஎழுதிய "அஷ்டத்ராயம் " என்ற இலக்கண நூலையே குறிப்பிடுகிறார்கள் !

தமிழ்மொழியின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் ! தொல்காப்பியமும் இலக்கண  நூலே !

நான்கு வேதங்கள் தோன்றிய காலத்து  சம்ஸ்கிருதம் கொச்சையான மொழி  ! அதனைத்துடைத்து சீராக்கி செம்மொழியாக்கியவர் பாணினி !

இவர் கிமு 3ம் நூற்றாண்டை வாழ்ந்தவர் ! இன்றைய பாகிஸ்தானின்  பஞ்சாப் மாநிலத்தில் இருந்த "தக்கசீலா" அருகில் இருந்த "சாலாதுறை" என்ற கிராமத்தில் பிறந்தவர் ! 

யுவான் சுவாங் தன்னுடைய பயணக்குறிப்பில் தான் அந்தக் கிராமத்திற்கு சென்றதை குறிப்பிடுகிறார் ! அதே கிராமத்தில் "பாணினி"யின் சிலை ஒன்றைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் !

தற்காலத்தில் வாரணாசியில் பாணினிக்கு ஒரு கோவில் கட்டியுள்ளார்கள் ! அதைக் கட்டுமுன் பாகிஸ்தானில் உள்ள "சாலாதுறை "  கிராமத்திலிருந்து மண் எடுத்து வந்து கோவிலைக் கட்டியுள்ளனர் !

பாணினியின்  இலக்கண நூலுக்கு உரை  எழுதியவர் "பதஞ்சலி" என்பவர் ! இவர் பாணியின் தாயார் பெயர் "தாக்சி" என்று குறிப்பிடுகிறார் ! தந்தையப்பற்றி எந்த குறிப்பும் இல்லை ! அதுமட்டுமல்ல !" பாணினி " ஒரு அந்தணர் என்பதற்கான குறிப்பு சம்ஸ்கிருத மொழியிலேயெ இல்லை என்று கருதப்படுகிறது !

பதஞ்சலி யோகம் மருத்துவம் படித்தவர்  ! இவர் தமிழ்நாட்டின் 18 சித்தர்களிலொருவர் என்றும் தமிழ் புலவர் என்றும் குறிப்பிடுகிறார்கள் !

"திருமந்திரம் " எழுதிய திருமூலர் இவரப்பற்றிகுறிப்பிட்டுள்ளார் !  இலங்கையில் உள்ள திருகோணமலை அருகில் உள்ள கொணேஸ்வரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் !

தமிழ் - சம்ஸ்கிருதபுலவர்கள் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது ! தொல்காப்பியருக்கு சம்ஸ்கிருதமும், பாணினிக்கு தமிழும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்று மொழியியல் வல்லுனர்கள் கருது கிறார்கள் !

தங்கள்  பூஜை அறையில் பூஜிக்கும் "ராமாயணம் " ஒரு அந்தணனால்  இயற்றப்படவில்லை என்பது தெரிந்தே இருந்திருக்கிறார்கள் ! 

"வேதத்தின்,உபநிஷத்துகளின் சாறு " என்று போற்றப்படும் "கீதை"  மகாபாரதத்தில் உள்ளது என்றும் அதன எழுதிய வியாசன் அந்தணன் அல்ல என்பதையும் தெரிந்தே இருந்திருக்கிறார்கள் !

"வாகர்த்தாவிவ சம்ஹ்ருத்தௌ " என்ற ஸ்லோகம் அந்தணன் அல்லாத காளிதாசனால் எழுதப்பட்டது என்பதை  அறிந்திருக்கிறார்கள் ! 

ஆனாலும் ராபர்ட் பாதிரியார் சம்ஸ்கிருதம் அந்தணர்களின் மொழி என்று குறிப்பிடக் காரணம் என்ன !

சார்லஸ் இ குரோவர் என்ற  அறிஞர் "folk songs of south India " என்ற நூலை எழுதி 1871ம் ஆண்டு வெளியிட்டார் !

ராபர்ட்  பாதிரியாரின்  திராவிட மொழி என்ற கருத்தை  இவர்   எதிர்க்கிறார் !

அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அரசியல்   ரீதியாக  இந்த கருத்து  அனுசரணையாக இருந்தது ! இந்திய சுதந்திரம் பற்றி மாற்று கருத்து கொண்டவர்களுக்கு இது சவுகரியமாக இருந்தது !

கிறிஸ்துவ பிரச்சாரம் செய்து ,மதமாற்றம் செய்ய வசதியாக  இருந்தது !

மொழியைக் காரணமாக்கி மக்களைப் பிரிப்பதற்கு துணை போக  இது உதவியது ! 

"  நோம் சொம்ஸ்கி கூருகிறார் !" மனித இனத்தின் பொதுவான அம்சமான மொழி ஒரு பகுதியில் ஹீப்ருவாகவும் ஒருபகுதியில் அராபிக்காகவும் பரிணமிக்கிறது ! ஆஸ்திரேலியாவில் ஒரு ஆமைக்கு குரல் கட்டையாகவும், கலோபகாஸ்  தீவில்  ஒரு ஆமைக்கு  குரல் சன்னமாகவும் இருப்பது போலத்தான் ! எனவே எந்த மொழியும் புனிதமானது அல்ல : "