Tuesday, June 03, 2014

​ ​  சமஸ்கிருதம் + தமிழ் -:- ராபர்ட் பாதிரியார் !!!

        (sanskrit plus tamil divided by Father Robert )


சம்ஸ்கிருத மொழி தோன்மையான மொழிகளுள் ஒன்று ! அதேபோல தமிழும் தொன்மயான மொழிகளில் ஒன்று !

இரண்டு மொழிகளுமே இந்திய ,கலாச்சார ,பண்பாட்டு ,இலக்கியத் துறைகளில் தங்களுடைய செல்வாக்கினை செலுத்தியவை களாகும் !

சம்ஸ்கிருத மொழிக்கான வரிவடிவம்  கிட்டத்தட்ட கி.மு 3ம்  நூற்றாண்டில்
உ ருவானதாக மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் !

தமிழ் மொழிக்கும் கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் வரிவடிவம் உருவானதாக கருது கிறார்கள் !

சம்ஸ்கிருத மொழியின் மிகப்பழமையான நூல் என்றால்பாணினிஎழுதிய "அஷ்டத்ராயம் " என்ற இலக்கண நூலையே குறிப்பிடுகிறார்கள் !

தமிழ்மொழியின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம் ! தொல்காப்பியமும் இலக்கண  நூலே !

நான்கு வேதங்கள் தோன்றிய காலத்து  சம்ஸ்கிருதம் கொச்சையான மொழி  ! அதனைத்துடைத்து சீராக்கி செம்மொழியாக்கியவர் பாணினி !

இவர் கிமு 3ம் நூற்றாண்டை வாழ்ந்தவர் ! இன்றைய பாகிஸ்தானின்  பஞ்சாப் மாநிலத்தில் இருந்த "தக்கசீலா" அருகில் இருந்த "சாலாதுறை" என்ற கிராமத்தில் பிறந்தவர் ! 

யுவான் சுவாங் தன்னுடைய பயணக்குறிப்பில் தான் அந்தக் கிராமத்திற்கு சென்றதை குறிப்பிடுகிறார் ! அதே கிராமத்தில் "பாணினி"யின் சிலை ஒன்றைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் !

தற்காலத்தில் வாரணாசியில் பாணினிக்கு ஒரு கோவில் கட்டியுள்ளார்கள் ! அதைக் கட்டுமுன் பாகிஸ்தானில் உள்ள "சாலாதுறை "  கிராமத்திலிருந்து மண் எடுத்து வந்து கோவிலைக் கட்டியுள்ளனர் !

பாணினியின்  இலக்கண நூலுக்கு உரை  எழுதியவர் "பதஞ்சலி" என்பவர் ! இவர் பாணியின் தாயார் பெயர் "தாக்சி" என்று குறிப்பிடுகிறார் ! தந்தையப்பற்றி எந்த குறிப்பும் இல்லை ! அதுமட்டுமல்ல !" பாணினி " ஒரு அந்தணர் என்பதற்கான குறிப்பு சம்ஸ்கிருத மொழியிலேயெ இல்லை என்று கருதப்படுகிறது !

பதஞ்சலி யோகம் மருத்துவம் படித்தவர்  ! இவர் தமிழ்நாட்டின் 18 சித்தர்களிலொருவர் என்றும் தமிழ் புலவர் என்றும் குறிப்பிடுகிறார்கள் !

"திருமந்திரம் " எழுதிய திருமூலர் இவரப்பற்றிகுறிப்பிட்டுள்ளார் !  இலங்கையில் உள்ள திருகோணமலை அருகில் உள்ள கொணேஸ்வரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள் !

தமிழ் - சம்ஸ்கிருதபுலவர்கள் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது ! தொல்காப்பியருக்கு சம்ஸ்கிருதமும், பாணினிக்கு தமிழும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்று மொழியியல் வல்லுனர்கள் கருது கிறார்கள் !

தங்கள்  பூஜை அறையில் பூஜிக்கும் "ராமாயணம் " ஒரு அந்தணனால்  இயற்றப்படவில்லை என்பது தெரிந்தே இருந்திருக்கிறார்கள் ! 

"வேதத்தின்,உபநிஷத்துகளின் சாறு " என்று போற்றப்படும் "கீதை"  மகாபாரதத்தில் உள்ளது என்றும் அதன எழுதிய வியாசன் அந்தணன் அல்ல என்பதையும் தெரிந்தே இருந்திருக்கிறார்கள் !

"வாகர்த்தாவிவ சம்ஹ்ருத்தௌ " என்ற ஸ்லோகம் அந்தணன் அல்லாத காளிதாசனால் எழுதப்பட்டது என்பதை  அறிந்திருக்கிறார்கள் ! 

ஆனாலும் ராபர்ட் பாதிரியார் சம்ஸ்கிருதம் அந்தணர்களின் மொழி என்று குறிப்பிடக் காரணம் என்ன !

சார்லஸ் இ குரோவர் என்ற  அறிஞர் "folk songs of south India " என்ற நூலை எழுதி 1871ம் ஆண்டு வெளியிட்டார் !

ராபர்ட்  பாதிரியாரின்  திராவிட மொழி என்ற கருத்தை  இவர்   எதிர்க்கிறார் !

அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அரசியல்   ரீதியாக  இந்த கருத்து  அனுசரணையாக இருந்தது ! இந்திய சுதந்திரம் பற்றி மாற்று கருத்து கொண்டவர்களுக்கு இது சவுகரியமாக இருந்தது !

கிறிஸ்துவ பிரச்சாரம் செய்து ,மதமாற்றம் செய்ய வசதியாக  இருந்தது !

மொழியைக் காரணமாக்கி மக்களைப் பிரிப்பதற்கு துணை போக  இது உதவியது ! 

"  நோம் சொம்ஸ்கி கூருகிறார் !" மனித இனத்தின் பொதுவான அம்சமான மொழி ஒரு பகுதியில் ஹீப்ருவாகவும் ஒருபகுதியில் அராபிக்காகவும் பரிணமிக்கிறது ! ஆஸ்திரேலியாவில் ஒரு ஆமைக்கு குரல் கட்டையாகவும், கலோபகாஸ்  தீவில்  ஒரு ஆமைக்கு  குரல் சன்னமாகவும் இருப்பது போலத்தான் ! எனவே எந்த மொழியும் புனிதமானது அல்ல : "









0 comments: