Wednesday, July 16, 2014

"சங்கரய்யா "

என்ற நாடக விமரிசகர் .....!!!


1960 ம்  ஆண்டு களின்  பிற்பகுதி !  தஞ்சையில் விவசாயிகள்   மாநாடு! குறிப்பாக உழைக்கும்பெணகளை திரட்டும் மாநாடு ! திருவாரூரில் நடந்தது ! ஆந்திராவிலிருந்து விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சியில் போரிட்ட வீர மங்கைகள் "அல்லுரி சுயராஜ்யம் , உதயம் "ஆகியோர் வந்திருந்தனர் ! விவசாயிகளை ஒன்றுபடுத்தி ஸ்தாபனப்படுத்தும் தலைவர் பொறுப்பில் தோழர் என்.சங்கரய்யா இருந்தார் !

மதுரை "பிபிள்ஸ் தியேட்டர் " நாடகம் போட ஏற்பாடகியிருந்தது ! ப.ரத்தினம் அவ்ர்கள் எழுதிய "நெஞ்சில் ஓர் கனல் " என்ற நாடகம்.! பண்ணையாரின் கொடுரத்தை எதிர்த்து உழைப்பாளிகளை ஒன்று திரட்டும் கதை ! காஸ்யபன் இயக்கம் ! கதாநாயகன் பண்ணையாரைஎதிர்த்து போராடுகிறான் ! அவனுக்கு உதவியாக விவசாயிகளை திரட்டூம் பணியைச்செய்பவன் அவன் தோழன் ! அவனுக்கு சந்திரன் என்று பெயர் வைத்தோம் ! நாடக பாத்திரங்கள் அவனை சந்திரய்யா ,சந்திரய்யா என்று கூப்பிடுவார்கள் ! மேடையில்" சங்கரய்யா சங்கரய்யா " என்றெ கூப்பிடச் சொன்னேன் ! தஞ்சையில் போடுவதால் விவாசாயத்தோழர்களின் உற்சாகமான கரகோஷத்தை பெறலாம் என்பது நோக்கம் !எங்கள்குழுவினருக்கு உற்சாகம் ! தஞ்சையில்போடுகிறோம் ! என்.எஸ்  முனபோடுகிறோம் ! அவருடைய விமரிசனத்தை பெறலாம் ! எப்பேர்பட்ட வாய்ப்பு ! தோழர்கள் அற்புதமாகவும்,உணர்ச்சி பூர்வமாகவும் நடித்தனர் ! 

நாடகம் முடிந்ததும் பார்வையாளர்கள், குறிப்பாக பண்ணையாராக நடித்தவரை ( மில் தொழிலாளி துரைராஜ் ) அடிக்காத குறைதான் ! மறுநாள் காலை  நான்கிளம்புவதற்கு முன்னதாக என்.எஸ் அவர்களிடம் விடை பெற சென்றேன் ! நாடகம் பற்றிய அவருடைய கருத்தை கேட்கலாமேன்பது தான் முக்கிய காரணம் !

வேளியே கிளம்பிக் கொண்டிருந்தார் ! என்னைப் பார்த்ததும் என்னையும் கூட வர்ச் சொன்னார் ! 

நாங்கள் பண்ணையார் ராமநாதன் அவர்கள் தோட்டத்திற்கு சென்றோம் ! வெள்ளை சட்டை,வெள்ளை வேட்டி ,உயர்ரக கதரில் போட்டிருந்தார் ! மொழு  மொழு என்று  திருத்தப்பட்ட முகம் ! அவருடைய பள்ளிக் கூடத்தில் தான்  மாநாடு நடந்தது ! அதில் உள்ள திறந்த வேளி மேடையில்தான் நாடகம்னடநதது !

என்,எஸ் அவர்களிடம் நிகழ்ச்சியை பற்றி பேசினார் ! அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம் !

"தோழர் ! இவர்தான் பண்ணையார் ராமநாதன் ! எப்படி இருக்கிறர் என்று பார்த்தீர்களா ! ?"

"பண்ணையார் மாதிரி தெரியவில்லை ! ஒரு பள்ளி ஆசிரியர் மாதிரி ..."

"பண்ணையார் எல்லாருமே கொடூரமானவர்கள் இல்லை ! அவர்களிலும்  போராட்டங்கள சந்திக்க ,சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பவர்கள் உண்டு" குறுக்கிட்டுவிட்டு என் எஸ் தொடர்ந்தார் ! "கிராமத்து மனிதன்,விவசாயி எல்லாருமே அப்பாவிகள் அல்ல ! இரண்டு பக்கமும் இருவிதமான குணம் கொண்டவர்களிருப்பார்கள் ! அது தான் யதார்த்தம் !"

"------------"

"உங்கள் நாடகம் இன்னும் யதார்த்தமாக இருக்கணும் நு விரும்பறேன் !"

"சரி ! தோழர் ! "

"அது என்ன ! ஒரே நாடகத்துல மாணவர் போராட்டம், பெண் விடுதலை தொழிற்சங்க பிரச்சின ! பார்வையாளன் மென்டலா சோர்ந்து போயிடுவான் இல்லையா !"
"--------------"

"மற்ற மொழி நாடகங்கள்  - ம் ."நான் கம்யுனிஸ்ட் ஆனேன் " மலயாள நாடகம் ! கெள்வி பட்டிருக்கேளா " 

"ஆமா தோழர் "

"நிறைய படியுங்க ! நிறைய கற்றுக்கொள்ளுங்க !"

"நான் தஞ்சாவூர் போகணும் ! வரட்டுமா "

"ம் ..ஒரு விஷயம்... அந்த சந்திரய்யா - சங்கரய்யா விஷயம் வேண்டாமெ எடுத்திடுங்க "

"என்.எஸ் ! என் எஸ் !" என்று உள் மனம் கூவ கைகூப்பி னேன் !!!






1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பழைய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வதால் நிறைய அறிந்து கொள்ள முடிகிறது ஐயா....