Thursday, July 24, 2014

இந்த அதர்ம யுத்தத்தை 

நடத்துவதே அமேரிக்கா தானே .....!!!
உலகத்தின் முதல்  "அதர்மயுத்தம் " பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவால் குருஷேத்திரத்தில் நடை பெற்றது என்று பௌராணிகர்கள் கூறுவார்கள

எப்படியாயினும் வெற்றி பெறவேண்டும் ! தார்மிக நெறிமுறைகள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் போர் புரிய வேண்டும் ! குழந்தைகள் ,முதியோர் ,நோயாளிகள் , என்று விதி பார்த்து பேர் நடத்த வேண்டியதில்லை ! 

அப்பாவி மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை ! நவீன கிருஷ்ண பரமாத்மாவாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்து வருவதும், உலக சண்டியர்களுக்கு உதாரணமாக  இருப்பதும் அதுதான் !

கஷ்மீரில் தீவிர வாதிகள் அப்பாவி பொதுமக்களைகேடயமாக பயன்படுத்தி ராணுவத்தை தாக்குவார்கள் ! பதில் தாக்குதலுக்கு   ராணுவம் தயங்கும் ! எதிர்த்து தாக்கினால் பலியாவது யார் பாதுகாப்புக்காக ராணுவம்வந்ததோ அவர்களுக்குத்தான் சேதம் !

ஆப்கானில் இது தான் நடந்தது ! இலங்கையில் இதுதான் கொஞ்சம் மாறி நடந்தது ! 

தரையில் மக்களை கேடயமாக பயன்படுத்துவது போய் வானிலும் மக்களை பயன்படுத்த "உக்ரைன் " ராணுவம் ஆரம்பித்து விட்டது ! 

எதிப்பாளர்கள் வசமிருக்கும் பகுதிகளைத் தாக்க வானிலிருந்து குண்டுகளை போடவேண்டும் ! எதிர்ப்பாளர்களின் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு கேடயம் வேண்டும் ! தன்  ராணுவ விமானத்திற்கு கேடயமாக பயணிகள் விமானத்தை பயன் படுத்தியது !

இராக்,ஆப்கன், போன்ற பகுதிகளின் வானில் பயணிகள் விமானம் பறக்க அனுமதிப்பதில்ல !

"உக்ரைன்" அரசு மட்டும்   அனுமதித்து ஏன்?

மலேசிய பயணிகள் விமானத்திற்கு பாது காப்பு என்ற பெயரில் இரண்டு ராணுவ விமானங்கள்  ஜூலை 17ம்  தேதி  சென்றதா? 

ஜூன் மாதம்  16ம்தேதி பயணிகள் விமானத்திற்கு பாதுகாப்பாக சென்ற "உக்ரைன்" ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இந்த கேள்விகளுக்கு விடை அமெரிக்காவுக்கு தெரியும் !

சர்வ தேச விமான போக்குவரத்து மையத்திற்கு (IA tA ) வுக்கு தெரியும் !!

பிரிட்டனுக்கு தெரியும் !!!


7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆனால் நமக்கு மட்டும் தெரியப்போவதில்லை

அப்பாதுரை said...

ரஷியா தவறு செய்தால் கூட அதை அமெரிக்கத் தவறாகப் பார்க்கும் காமாலை எழுத்து. வருந்துகிறேன். இந்தத் திரிப்பு கம்யூனிச ஆதரவால் வந்ததா செய்திப் பத்திரிகை அனுபவத்தால் வந்ததா?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! ஈரான் போரின் பொது சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானம் ,ரஷ்ய எல்லையான விளாடிவோஸ்டாக் மூலம் நுழைந்து electronic security ஐ வேவு பார்க்க "குறில்' தீவு பக்கம் நுழைய சி.ஐ.ஏ எஜெண்டுகளால் கட்டயப்படுத்தப்பட்ட பயணிகள் விமான விபத்து இரண்டும் நினைவு தட்டியது ! இரண்டும் தான் நண்பரே ! உங்களை வருத்தப்பட வைத்ததற்கு வருந்து கிறென் .---காஸ்யபன்.

அப்பாதுரை said...

இந்தப் போரில் சாதாரண பயண விமானம் சுடப்பட்டு சாதாரண மக்கள் பலியாகி இருக்கிறார்கள். உளவு விமானமோ போர் விமானமோ அல்ல. ரஷியா யுக்ரேனின் இந்த செயல் காட்டுமிராண்டித்தனமானது. அமெரிக்கா பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது போல் நீங்கள் எழுதியது எனக்கும் பொறுக்கவில்லை. மன்னியுங்கள். இதை அமெரிக்கா தொடங்கி வைத்தது என்று எழுதுவது எப்படி ஏற்பது? ரசியா நல்ல நாடு என்றும் கம்யூனிஸ்டுகள் காட்டுமிராண்டிகள் அல்ல என்றும் எண்ணும்படி செய்திருக்கலாமே பூடின்? அறிவின்மை அனைவருக்கும் பொது. சில நேரம் அதை அமெரிக்கா வெளிப்படுத்துகிறது சில நேரம் இந்தியா சில நேரம் ஜெர்மனி ரசியா..

raj said...

Nice analysis. Different perspectives. Things look different from different angles.With due respects I am however perforced to comment that I am always right attittude sometimes distances a common man from certain idealistic groups opinions. Time is changing. I believe ideas should also suitably change.

raj said...

A latest post in fb however appears to reveal the deployment of a similar buk missile at the Donetsk by the Ukraine military. If it is true, the suspicion gets a different direction. Perhaps the black box should put more light.

kashyapan said...

Raj sir ! Black box was duly handed over to U.K ! They said there is no Tampering ! Netherland received almost all the bodies duly packed in reffegeraated containers ! They appriciated the eforts taken by the so called rebels ! The rebels dont have any rockets or any launchers ! Infact the canot dream of shooting a target at flying 33,000 feet above ! And Ukrine government will have to Expalain why they have deployed the rocket launch vehicle so close to rebel teritory ! The rebels have no air planes ! All these things are in the satalite iMages ! As not in the case of Afgan,and Iraq why the have allowed Passaenger flight ? The needle of suspecian turns towards = = = !!! ---kashyapan.