(இது ஒரு மீள்பதிவு )
தொழர் A .நல்ல சிவன் நினைவாக
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Wednesday, April 28, 2010
they were...2
அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்."ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். "என்னங்க! அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் "அத்தா" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்."பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா? " என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்."நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா?ஏன் அத்தா! என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா? என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.
Posted by kashyapan at 12:12 AM 9 comments
1 comments:
தோழர் நல்ல சிவன் அவர்களைப் போற்றுவோம்
Post a Comment