skip to main |
skip to sidebar
" கால் முளைத்த ஆசை "
"தண்ணி கொடம்மா ! வள்ள்ளீ ... ! தண்ண்ணி கொடும்மா ! தண்ணி கொடும்ம்மா ! "
வே ! பாட்டையா ...! நேத்து ராத்திரி பூறா காதுல றீங்கரிச்சுக்கிட்டிருந்தது வே !
என்ன modulation ! என்ன dexterous delivery ! what an experience !
"கால் முளைத்த ஆசை " என்ற தொலைக்காட்சி தோடர் ஒன்றை முழுமையாக எந்த தடங்கலு மின்றி you tube மூலம் பார்த்தேன் ! குறைந்தது ஒளி பரப்பாகி ஏழு வருடமாவது இருக்கும் !
மறைந்த பாலகைலாசம் தயாரிப்பு ! M . E . சொர்ணவேல் இயக்கம் ! S .ராமகிருஷ்ணன் கதை ,திரைக்கதை,வசனம் !
பாரதி மணி ,வனிதா ,விஷ்ணுனாத் , வேறு சிலர் நடிப்பு !
ஆற்றோட்டம் போன்ற திரைக்கதை அமைப்பு ! நறுக்குத்தெரித்தாற் போன்ற வசனம் !
காட்சிகளின் takings ,அதில் உள்ள clarity , அமுக்கிவிடாத பின்னணி இசை கோர்வை - ஒரு தொலைக்காட்சி தொடர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சாட்சியாக அமைந்திருந்தது !
பாரதி மணி சாருக்கு (எங்க பாட்டையா ) running role ! வைரவன் செட்டியாராக ! அவர் நடித்தார் என்று சொல்ல மாட்டேன் ! நடிப்பு சொல்லிக் கொடுத்தார் !
லண்டன்ல போய் voice culture படிச்சவரு !
என்ன tonal domination ! என்ன restrained emotional buildup ! சாமி ! கொன்னு புட்டேர் ஓய் !
குறிப்பாக சாகும் முன் "தண்ணி கொடம்மா " என்று கேட்கும்போது அது கதறலாகவும் இல்லாமல் , வேண்டுகோளாகவும் இல்லாமல் ,இங்கு பாரதி மணி, s .ராமகிருஷ்ணன் ,சொர்ணவேல் மூவரும் புதிய உயரத்தை தொட்டுநிற்கிறார்கள் !
சொர்ணவேல் புனே திரைப்பட கல்லூரியில் பயின்றவர் ! தங்கப்பதக்கம் வென்றவர் !
நல்லகாலம் ! அமெரிக்க போய் அங்குள்பல்கலையில்திரைப்படம்கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக பணியாற்றுகிறார் ! இங்க இருந்தாரு -சீரளிசிருப்பானுக !
வைரவன் செட்டியார் வீட்டில் மருமக வள்ளி காலைலசாம்பிராணி போடும்போது சமஸ்கிருத ஸ்லோகம் சொல்வது தவித்திருக்கலாமோ !
தவறு திரைக்கதையிலா ? இயக்கத்திலா ?
தென்றல், வாணி ராணி ,நு பார்த்து சலித்த கண்களுக்கு தகுதியான திறமையான நண்பர்களின் படைப்பு காலாகாலத்திற்கும் மனதில் நிற்கும் ஒன்றாகும் !
3 comments:
அந்த யூ டியூப் சுட்டியை இணைத்திருக்கலாம் தோழர்.
சீக்கிரம் ஒய்வு பெற வேண்டும் போலிருக்கிறது. இதெல்லாம் பார்த்து ரசிக்க.
பகிர்வுக்கு நன்றி அய்யா.
நன்றி ஐயா
Post a Comment