இந்தியாவின்(ல் ) சுகாதாரம் .......!
ஆப்பிரிகாவிலிருந்து காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள காந்திஜி இந்தியா வந்தார் ! அவருடைய நோக்கம் ஆப்பிரிகாவில்மக்கள் பிடிட்டிஷாரால் நடத்தப்படுவதை இந்திய தலைவர்களுக்கு எடுத்துச்சொவது தான் !
மாநாட்டுத்திடலில் உள்ள சுகாதாரக் கேடுகளைப் பார்த்து ஒரு வாளியையும்,விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார் !
தனிமனிதசுத்தம் என்பத சமூகத்தின் சுகாதாரத்தைமேமப்டுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் அண்ணல் காந்தி அடிகள் !
பா.ஜ.க அரசு என்ன காரணத்தினால் காந்தி ஜெயந்தியை சுகாதார தினமாக அறிவித்துள்ளது என்பது தெரியவில்லை !
37 லட்சம் அரசு ஊழியர்கள் உறுதி எடுக்கவிருக்கிறார்கள் என்று அரசு விளம்பரங்கள் ஓலமிடுகின்றன !
மதுரையில் தொழில்குழுமம் நடத்தும் அறக்கட்டளை யின் சார்பாக கல்லூரி ஒன்று நடக்கிறது ! அதில் படிக்க அருப்புக்கோட்டையிலிருந்து 12ம் வகுப்பு தேறிய பதின்ம வயது மாணவி வந்தார் !
கல்லூரி கட்டிடத்தைப் பார்த்து பிரமித்தவ்ர் கழிவறைக்கு அடிகடி சென்றுவந்தார் ! "ஏன்மா ! உடம்பு சரியில்லையா ? "என்று கேட்டபோது தலையக் குனிந்து கொண்டு "சார் ! நான் கிராமத்திலிருந்து வருகிறேன் ! நாங்கள் இருட்டிய பிறகு வெட்ட வெளியை தான் பயன் படுத்துவோம் !இங்கு பளிங்கு கற்களால் ஆனா கழிப்பறையை பார்த்துக் கொண்டே இருக்க தோணுதுசார் !" என்றார் !
சென்னையில் 6வது வகுப்பிலிருந்து 12 வது வகுப்பு வரை பதின்வயது பெண்குழந்தைகள் லட்ச்க்கணக்கில்படிக்கிறார்கள் ! அந்தப் பள்ளிகளில் கழிப்பறைகள் கிடையாது ! அந்தக்குழந்தைகள் காலையிலிருந்து குடிநீர் அருந்துவது இல்லை ! குடித்தா ல் ஏற்படும் உபாதைகளை தவிர்க்கிறார்கள் !
கிராமப்புறங்களில் கழிப்பிடம் இல்லாத வீடு- மன்னிக்கவும் -இருப்பிடங்களே அதிகம் !
அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகமே !
Sanitation and Health care is a bigger task Modi Sir !!!
2 comments:
சுதந்திரம் பெற்று இத்துனை ஆண்டுகள் ஆகியும், அடிப்படை வசதிகளில் கூட நிறைவி பெறவில்லை என்பது வருத்துதற்குரியது ஐயா
டாஸ்மாக் வருமானத்தில் அக்கறை காட்டும் அரசு சுகாதாரத்தில் காட்டுவது இல்லை. அதில் என்ன வருமானமா வருகிறது?
வெட்கப்பட வேண்டிய விஷயம்.
Post a Comment