Friday, March 06, 2015

(2010 ம் ஆண்டு எழுதிய சிறுகதை ! கொஞ்சம் சீர் செய்து செம்மலருக்கு அனுப்பலாம் என்று இருந்தேன் ! அப்படியே இருந்து விட்டது ! சென்றமாதம் அனுப்பினேன் ! மார்ச் இதழில் பிரசுராமாகியிருப்பதாக தகவல் வந்தது ! என் கைக்கு புத்தகம் வர 20 நாளாகும் ! நன் 17ம் தேதி கிளம்பி திருப்பூர் பயணப்படுகிறேன் ! அதனால் இதனை பதிவிடுகிறேன் )சிறு கதை
----------------

"நெருப்புக்கு தெரியுமா ?"


அரச இலையின் காம்பிலிருந்து நுனி வரை இரண்டாக பிளந்து பாயும் நரம்பு போல நாகபுரி நகரை பாதியாக பிரித்து செல்கிறது "வார்தா" செல்லும் சாலை !
நாகபுரியின் வடக்குப்பகுதியிலிருக்கிறது "வனதேவி" நகர் ! சுமார் ஐம்பது அறுவது குடும்பங்கள் வாழ்கின்றன !  முதல் வீட்டில் ரிஜ்வான் கான் வசிக்கிறான் 1 அவன் வங்கத்திலிருந்து வந்தவன் ! காலையில் நல்ல நீர் மீனி இல்லாமல் அவன் வீட்டில்பொழுது விடியாது! அவன் தாயார் வீட்டு வாசலில் உள்ள பட்டிய கல்லில் மீன உரசி செதில் நீக்கி துண்டு போட்டு வீட்டிற்குள் எடுத்து செல்வாள் !
அவன் அடுத்த வீட்டு தேவ்சந்த் மனவி சாக்கடை சண்டையை ஆரம்பிப்பாள் ! அடுத்தவீட்டு பரசுராம் சிங்கும் ,அப்துல் பஷீருக்கும் நிலச்சண்டை எப்போதும் !
பிளக்ஸ் போர்டு,பிளாஸ்டிக் ஷீட்டுகள்  தன் இருவர் வீட்டுக்கும் கூரை ,மற்றும் சுவர்கள் ! பஷீர் வீட்டில் படுத்து கால் நீட்டிக் கொண்டால் பரசுராம் வீட்டில் தெரியும் !
இங்கு வசிக்கும் ராம்சந்த் மத்திய பிரதேசத்துக்காரன் ! காலையில் எழுந்து ஐந்து மணிக்குள் குளித்து :ருத்ரம் " சொல்லி வேலைக்குப்பொவான் ! காலையில் ஐந்து வீடு ,மதியம்  இரண்டு,இரவு ஐந்து வீடு -வேலை ! ரொட்டி,சப்ஜி (வெஞ்சனம்) செய்வான ! சுத்தமான ம.பி பிராமணன் ! சமையல் வேலை !
அந்த வனதேவி நகரில் தான் தீவிபத்து !
2010ம் ஆண்டு நடந்தது ! மறு நாள் மத்திய இந்தியாவின் ஆங்கில இதழான "ஹிதவாதா" வில் தலைப்பு செய்தியாக வந்தது !
றிஜ்வான் வீடு சாம்பலாகி விட்டது ! அவனுக்கு இரண்டு கைகளிலும் தீக்காயம் ! தெவ் சந்த் வீட்டில் கூரை வேய்வதற்காக இரண்டு துருபிடித்த தகர ஷீட்டுகளை வைத்திருந்தான் ! தீபரவாமலிருக்க றிஜ்வான் அதை இழுத்தான் ! தகர மாதலால் சூடு தாங்காமல் அவன் இரண்டு கைகளும் கொப்பளித்து விட்டது !
தெவ்சந்த் மனைவி தகரப்பொட்டி ஒன்றை எடுத்தாள் ! அதற்குள் தான் சிறுவாடு வைத்திருப்பாள் திறந்து பார்த்தபொது ஏழு எட்டு பத்து ரூ நோட்டுகள்  கருகிக் கிடந்தன ! அவள் கையிலும் சூடு !
பஷீர் ரிங்ரோடில் ஒரு கடயில் சமையல்வேலை செய்கிறான் ! தன்னர்வ குழுக்கள் வசூல் செய்தனர் !
தேவ் சந்த் தனக்குத்தெரிந்த பலசரக்குகடைகாரரை 12 மணிக்குமெல்எழுப்பி அரிசி, உப்பு, எண்ணை வாங்கிவந்தான் ! பஷீர் 'புலவு" செய்தான் ! ரமாகாந்த் பந்திபோட்டன் ! முதலில் குழந்தகள் ! பின்னர் பெண்கள்  ! எல்லரும் சாப்பிட்டபின்  ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டனர் !
"தொஸ்த் ! ஒருவாரம் வேலைக்கு பொகாதே !" என்றான் ரிஜ்வானை நோக்கி தேவ் !
அவனைப்பார்த்து பரிதாபமாக இளித்தான் றிஜ்வான் !
"உன் குடும்ப  சாப்பாடு என்பொறுப்பு ! மீன் மட்டும் கேக்காத" என்றான் ராம்சந்த்1 எல்லரும் சிரித்தனர் !
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஹிதவாதா" பெப்பரில் இதனை படித்த எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது !
என் வீட்டு வாசலில் பெரிய புளியமரம் உண்டு ! அதன் பரந்த நிழலில் மதிய வேளையில் ஆடோகாரரகள் இளைபாருவார்கள் ! நானும் அங்கு சென்று அவர்களோடு வம்பு பெசுவேன் !
கமர் உத்தீன் என்ற ஆட்டோ காரார் என்னிடம் நிறைய பெசுவார் !
சாப் ! கபர் க்யா (செய்தி) ஹை ?" என்று கேட்பார் ! அவ்வப்போது நானும் அவரிடம் அன்றய செய்திய கூறுவேன் !
அன்று வனதேவி நகர் செய்தி நெகிழ்ச்சியாக இருந்ததால் அவரிடம் சொன்னென் !
முடிப்பதற்குள் சவாரி வந்து விட்டது ! கமர் உத்தீன் வண்டியைக் கிளப்பைக்கொண்டே சொன்னர்

"கியா சாப் ! ஆக் ஜானே கியா ? நெருப்புக்கு தெரியுமா ! இவன் முஸல்மான்.இவன் இந்து ,இவன் தலித் நு!"
ஆட்டோ பின்னால் புகை வெளியேறியதைப் பார்த்துக்கொண்டே நின்றென் !!!

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இவ்வுலகில் வாழும் எந்த உயிரும் அறியாததை அல்லவா, மதம் என்ற பெயரில் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான்
ஒற்றுமை ஓங்கட்டும்
மனிதம் தழைக்கட்டும் ஐயா