Friday, May 15, 2015

நவீன ஜமீந்தார்கள் ......!!! 

இன்றைய இளைஞர்களுக்கு ஜமிந்தாரி முறை என்றால் என்வென்று கூட தெரியாத நிலை உள்ளது!நடைமுறையில்சிறந்த உதாரணமாக சைக்கிள் ஸ்டாண்டு முறையை எடுத்துக்கொள்ளலாம் ! 

சைகிளை பஸ்ஸ்டாண்டில்பாதுகாக்க டோக்கன்வாங்கு கிறொம் ! இதன நாகராட்சிகள்  ஏலத்துக்கு விடுகின்றன !ஏ லம் எடுத்த காண்ட்றாக்டர் ஒரு குறிiப்பிட்ட தொகையை கட்டிவிட்டு வசூலித்துக் கொள்கிறார்! 

நாற்கரச்சாலைகலில் " டொல்கேட்"  வசூலிக்கிறார்கள் ! இதனை தனியாருக்கு ஏலம் விடுகிறார்கள் ! அவர்களோ கோடிக்கணக்கில் வசூலிக்கிறார்கள் !

பிரிடிஷார் காலத்தில் நிலத்திற் கான வரியை வசூலிக்க ஜமிந்தாரி முறை இருந்தது ! சமஸ்தானங்களிl  இதனை ஜாகீற்தார் முறை என்றார்கள் ! 

கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து  வசுலிப்பதற்கு பதிலாக இந்த ஜமீந்தார்கள் பிரிட்டிஷ் அரசுக்கு மொத்தமாக பணம் கட்டி விடுவார்கள் ! பதிலுக்கு விவசாயிகளிடமிருந்து ஜமீந்தார்கள் வரி வசூலித்து விடுவார்கள் ! அந்தந்த ஜமீன் பகுதியில் உள்ள நிலம்,காடுகள், ஏரிகள்,குளங்கள்,மேய்ச்சல் நிலங்கள் அத்துணையும் ஜமீந்தார்களூக்கு சொந்தம் ! 

அவர்கள் எவ்வளவு வேண்டுமானலும்,எப்படி வேண்டுமானலும் வசூலித்துக் கொள்ளலாம் !

வங்கம்,பீஹார்,ஆந்திரா ஆகிய இடங்களில் இதனை எதிர்த்து கம்யூணீஸ்டுகள் கடுமையாகபோராடினார்கள் ! சுதந்திரம் வந்த பிறகு இந்திய அரசு இந்த முறையை ஒழித்தது ! நிலங்களை  விவசாயிகளுக்கு அளித்தது ! ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலம் விவசாயிக்குகிடைத்தது!

பா.ஜ.க அரசு நிலம் கையகப்படுத்த தற்பொது சட்டம் கொண்டுவந்துள்ளது !

இதன் படி ஜமிண்தார் களீடமிருந்து விவசாயிகளுக்கு கிடைத்தனிலத்தை பறித்து இந்த கார்பரேட் முதலாளீகளுக்கு கொடுக்க விருக்கிறார்கள் 1

அந்த காலத்தில்ஜமீந்தார்கள் தங்க பல்லக்கில் பவனி வந்தார்கள் !

இந்த நவீன கார்ப்ரெட் ஜமீந்தார்கள் BMW கார்களில் வரவிருக்கிறார்கள் ! 

2 comments:

www.eraaedwin.com said...

மிகச் சரியான பதிவு தோழர்.

சரவணன் said...

நில சட்டம் முதன்மையாகப் பயன்படப் போவது விமான நிலையம் போல பொது பயன்பாடுகளுக்குத்தான். மேலும் 2014 வரை ஆங்கிலேய கால சட்டமான எந்த நிலத்தையும் அரசு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டமே அமலில் இருந்தது. அதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் குரல் கொடுத்ததே இல்லையே.