தோழர் தண்டபாணி அவர்களூம்
"வாரா" கடன்களூம்............!
மதுரை பகுதி இண்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலவராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பணீயாற்றியவர் தோழர் எஸ்.தண்டாபாணி அவர்கள் ! சென்னை பலகலைகழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பு படித்து முதல் வகுப்பில் முதலாவதாக தேறியவர் !மிகச்சிறந்த மார்க்சீய ஊழியர் !
மிகவும் கூர்மையான விவாதங்களூக்கு சொந்தக்காரர் ! ஒருமுறை கூட்டத்தில் பேசும்பொது குறிப்பிட்டார் ! " வங்கிகளில் தொழில் முனைவோருக்கு கடன் கொடுக்கிறார்கள் ! அவர்கள் தொழில் ஆரம்பிக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட கண்காணீப்பதில்லை ! அப்படி ஆரம்பித்தாலும் கம்பெனியைமூடிவிடுகிறார்கள் ! கடன் கொடுத்தபணத்தை திருப்பி செலுத்துவதில்லை ! நானகெட்பதெல்லாம் இது தான் ! "எவன் எவ்வளவு கடன் வாங்கினான் ! எவ்வளவு ஏப்பம் விட்டான் என்பதை சொல்லக்கூடாதா ! கடன்வாங்கினவன் சொகுசா கார்ல சுத்தரான் ! எங்களுக்கு தெரிஞ்சா ரோடல அவன பாக்கும்போது "இந்தா போறான் பாரு ஒருகொடி ஏமாத்தினவண் ! இந்தா இவன் 50 லட்சம் நாமம் போட்டவன் "நு சொல்லியாவது ஆறுதல் அடைவோம் ! "என்றார் !
நாகபுரியினை சுற்றி அதிகமான சுரங்கதொழில் உண்டு ! சுரங்க முதலாளிகல் வங்கிகளீல் கோடிகணக்கில் கடன் வாங்குவார்கள் ! முக்கா துட்டு திருப்பி கொடுக்க மாட்டார்கள் ! லட்டசக்கணக்கான கொடிகளை வங்கிகள் "வாரா" கடனாக அறிவித்துள்ளது ! இதில் பாஜக,காங்கிரஸ் ,தேசிய காங்கிரஸ் என்று வேறுபாடில்லை !
இங்கு கொடீஸ்வரர்கள் தெரு என்று உள்ளது ! "குரோர்பதி கல்லி " ! இதில் யஷ்வந்த் ஸங்க்லா,
மஞ்சு ஸ்ங்கலா என்று இரண்டு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள் ! இவர்கள் லிக்சன் கோல் அண்ட் மினரல் பிரைவேட் என்ற கம்பெனியைனடத்தி வருகிறார்கள் ! யூனியன் வங்கியிலிருந்து 55 கோடி கடன் வாங்கியுள்ளார்கள் ! திருப்பிகொடுக்கவில்லை !
செவ்வய் கிழமை கால யூனியன்வங்கி ஊழியர்கள் அவர்கள் வசிக்கும்பங்களா முன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் ! "ஸ்ங்க்லாவே மக்கள் பணத்தை திருப்பிக்கொடு " என்று பதாகைகளை ஏந்தி ஆற்ப்பாட்டம் செய்துள்ளார்கள் !
தமிழ் நாட்டிலும் இப்படி ஆரம்பிக்கலாம் ! பல இன்னாள் முன்னாள் அமைச்சர்கள் வீட்டு வாசலில் ஆர்ப்பட்டம் நடத்தலாம் !
1 comments:
அவசியம் செய்ய வேண்டும் தோழர்
Post a Comment