இட ஒதுக்கீட்டை ஏற்கும்
"மன வளம் " வேண்டும் ...!!!
இடது சாரி பார்வை கொண்ட திரைப்பட இயக்குனர் மிருணாள் சென் அவர்கள் புனே திரைப்பட கல்லூரியின் பட்டமளீப்பு விழாவில் பேசினார் !
" சுதந்திரத்திற்கு முன் இந்திய குடிமகனிடம் உன் எதிரி யார் என்று கேட்டால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இந்தியன் "பிரிட்டிஷ் எகாதிபத்தியம்"என்று ஒரே முனைப்பாக கூறுவான் ! இன்றூ வாலிபன் ஒருவனிடம் கேட்டால் "இட ஒதுக்கீடூ" என்கீறான்! பலசரக்கடை முதலாளியிடம் கேட்டால் தொழிலாளர்கள் என்கிறான் ! நமது பார்வையை சிதறடித்து நம்மை குழப்பி வைத்துள்ளார்கள் " என்றார் !
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட,மற்றும் ஒரம்கட்டப்பட்ட மக்களூக்கு "இட ஓதுக்கீடு ' சகல ரோக நிவாரணி இல்லைதான் ! நிலமும்,அதிகாரமும்,அதன் பயன் பாடும் வந்தால் தான் அவர்கள் நிமிர முடியும் ! இட ஒடுக்கீடு ஒரு நிவாரணீதான் ! Instead of solving the problem we are tackling the situatioan ! அவ்வளவுதான் !
இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துள்ளது ! குறிப்பக இடது சாரிகள் விவாதத்தை கிளப்பி யுள்ளனர் !
மாநில அரசு ஊழியர்களூக்கு இந்த சலுகை முழுமையாக உள்ளதா ? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியதிருக்கிறது ! தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களூக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது ! ஏன் ? இந்த கேள்விக்கு விடை இல்லை !
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரசார் சொன்னார்கள் !
இது பற்றி தமிழக உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கூறும் பொது " உச்சநீதி மன்றம் இடஒதுக்கீடூ பிரச்சினயில் தலையிட்டுள்ளது ! அதனை சட்டதிருத்தத்தின் முலம் தீர்த்தால் தான் முடியும் "என்றார் !
இன்சூரன்சு துறையில் , வேலை வாய்ப்பிலும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு உண்டு ! அந்த உரிமையை அங்குள்ள இடது சாரி தொழிற்சங்கம் போராடி பெற்றுத்தந்தது ! பா.ஜ.க போன்ற வலது சாரிகள் அதன எதிர்த்தபோது தன்னந்தனியாக அந்தசங்கம் நின்று அந்த உறிமையை பாதுகாத்தது 1
மாநில அரசு ஊழியர் சங்கங்கள் இந்த விஷயத்தில் ஏன் கள்ள மௌனம் சாதிக்கின்றன !
திமுக கொள்கை அளவில் நாங்கள் இதனை ஏற்கிறொம் என்று அறிவித்ததோடுசரி !
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உயிரக் கொடுக்க தயாராக இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி ,திருமாவளவன் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் !
தொலைக்காட்சி பெட்டிக்குள்ளேயே கட்சி நடத்தும் வேல்முருகன் இது பற்றி பேச மறூக்கிறாரே !
ஏன் ?
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வந்தால் அரசுப்பணியில் தரம் குறைந்து விடும் என்கீறார்களா?
தன்னைவிட குறந்த பணிக்காலம் கொண்டவர்கள் மேல் பதவிக்கு வந்துவிடுவார்கள் என்று மூத்த ஊழியர்கள் பயப்படுகிறார்களா ?
இன்சூரன்சு துறையில் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நடை முறையில் இருக்கிறதே !
உலகம் பூராவும் போற்றிப் புகழும் வகையில் ஏல்.ஐ..சி பிரும்மாண்டமாக எழுந்து நிற்கிறதே !!
சம்மந்தப்பட்டவர்களூக்கு இடஒது கீட்டினை ஏற்றுக்கொள்ளும்
"மன வளம் " வேண்டும் !
வரும் ! வரவைப்போம் !!
அக்
1 comments:
வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
Post a Comment