skip to main |
skip to sidebar
நகைச்சுவைக்காக மட்டுமே
"மறதி "
மறதி என்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த வரம் என்று மனநல மருத்துவர்கள் கூறுவார்கள். (நன் அப்படி சொல்லவே இல்லையே என்று டாக்டர் ராமானுஜம் சண்டைக்கு வரலாம்)
தேவையற்ற பழய நினைவுகளோடு தி ண்டாடுவதை விட மறந்துவிடுவது நல்லது தான்.
ஆனால் அன்றாட வாழ்க்கையில் இந்த மறதி படுத்தும் பாடு சொல்லி மாளாது.எங்கள் அலுவலகத்தில் "மறதிமன்னர்கள் " உண்டு .
அவரை நாங்கள் vn என்று அழைப்போம். காலையில் அலுவலகம் புறப்படும் பொது அவர் மனைவி மாலை வரும்போது பச்சை மிளகாய் 100 கிராம் வாங்கி வரச்சொன்னார். தன்னுடைய மறதி யை ஞாபகப்படுத்திக்கொண்டு பச்சை என்ற வார்த்தையையும், 100 என்ற அளவையும் மனதில் இருத்திக் கொண்டார்.
மாலை ஆட்டோவில் வந்து இறங்கிய கணவர் ஆட்டோகாரர் உதவியுடன் பச்சை அரிசி 100 கிலோ மூட்டையை நடையில் இற க்குவதைப்பர்த்த அந்த அம்மாள் பச்சை மிளகாய் என்னாச்சு என்று கேட்டார். நண்பர் vn "பச்சை ஆமாம் ,மிளாகாய் -ஆமாம் " என்று மிரள மிரள விழித்தார்.
vn அவ்ர்களுக்கு நாங்கள் மிகவும் உதவியாகவே இருப்போம். ஒருநாள் கால வந்ததும் என்னிடம் சொன்னார்.எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சின் CHALENGE . நான்கு மணிக்கு நான் விட்டிற்கு சென்று குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு சினிமா செல்ல போகிறோம். நான் மறக்காமல் இதன செய்ய வேண்டும் , நீங்கள் உதவ வேண்டும் என்றார்
சரியாக 3.50 க்கு அவருக்கு நினைவு படுத்த அவருடைய மேசைக்கு சென்றேன் . அங்கு ஒரே கூட்டம்.எங்கள் செக்ஷனில் 40 பேர் உண்டு. அவரைத்தவிர 39 பேரிடமும் சொல்லி இருக்கிறார்.அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு.
ஐந்து மணிக்கு தயாராகிவிட்டார்.மனைவி வீட்டை பூட்ட அண்ணன் vn ஸ்கூட்டரை எடுக்க நினைத்தவர், "நீ பூட்டி வாசலில் நில்.நான் போய் பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் .
திரூவல்லிக்கெணியில் பெரியதெரு பார்த்திருக்கிறிர்களா ? ஐஸ் ஹவுசிலிருந்து கலைவாணர் அரங்கம் வரை நீண்டிருக்கும் . vn அவர்களுடைதெருவும் கிட்டத்தட்ட மூன்று கிமி நீளம் இருக்கும்தெரு கோடியில்பெற்றொல் பங்க் .
அவசர அவசரமாக பெற்றோல் பங்க் போனார். அங்கிருந்த கணக்கு பிள்ளையிடம் "ரண்டு நூறு "என்று கூறி பணத்தை கொடுத்தார்.அவர் ஒரு துண்டு பேப்ப்பரில் எழுதி கொடுத்தார். பெற்றோல் போடும் பையனிடம் கொடுத்தார். அவன் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "சா வண்டி யை எங்க " என்றான். பாவம் vn வண்டியைமறந்துமூன்று கிமி நடந்து வந்து
"சார் ! மறதி இறைவன் கொடுத்தவரமா சார் ?"
0 comments:
Post a Comment