shyly He said
" We are less inefficient than you Sir "
1974ம் ஆண்டு ஜனவரி மாதம். .இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கண்டிருந்தனர்.இந்த முறை aiiea சங்கத்தை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எல் .ஐ.சி நிர்வகம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல் பட்டது>
சில சிறு பான்மை இனர் சங்கத்தை பிளவுபடுத்தி தனிப்பந்தி போட்டிருந்தனர்.உச்சகட்ட போராட்டத்தில் இவர்கள் ஊழியர்களி டையெ குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நிர்வாகம் நினத்தது. .
தொழிற் தகராறு சட்டங்கள் , என்று எதையும் மதிக்காமல் நிர்வாகம் செயல் பட்டது. அகில இந்திய அளவில்முதன் முறையாக ஒரு அகில இந்திய ஸ்தாபனம் lock out என்று அறிவித்தது. அதுவும் partial lockout .
சென்னை, பங்களுரு,தார்வார்<டெல்லி ,மீரட் ஆகிய ஐந்த டிவிஷன்களில் lockout என்று அறிவித்தது>
சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பிரும்மாண்டமான எல் ஐ சி கட்டிடத்தில்
ஜோனல் அலுவலகம்,சென்னை டிவிஷனல் அலுவலகம், மற்றும் கிளை அலுவலகம் என்று செயல்பட்டு வந்த காலம் அது.
ஜோனல் அலுவலக ஊழியர்களுக்கு lockout கிடையாது> கிளை அலுவலகத்திற்கு lockout கிடையாது>
டிவிஷனல் அலுவலகத்தில் பணியாற்றும் உழியர்கள் உள்ளெ செல்ல முடியாது.ஊழியர்களை பிரித்து, போராட்ட களத்தில் அவர்களை தனிமைப்படுத்தி விடுவது தான் அவர்கள்நோக்கம்.
அது மட்டுமல்ல .சென்னை,பங்களூரு,தார்வார்,டெல்லி.மீரட் ஆகிய டிவிஷ்ணகள் தவிர ம்ற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட டிவிஷ்னகளுக்கு
பாதிப்பு கிடையாது
சங்கம்நிலை குலைந்து,செய்வதறியாது ,திகைத்து தவறான முடிவுகளை எடுக்க வைக்கும் தந்திரம் அது
இந்த ஆத்திர மூட்டலுக்கு எதிராக சங்கம் அகில இந்திய அள வில் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும். அதன சிறுபான்மை சங்கத்தின் உதவியோடு முறியடிக்க நிர்வாகம் நினைத்தது
சங்கத்திக் தலைமை தோழர்கள் சரோஜ் சவுத்திரி,சுனில் மைத்ரா,சந்திரசேகர் போஸ்,என்.எம்.சுந்தரம் மற்றும் பலர் கூடி ஆலோசித்தார்கள்.
எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல் நாடுதழுவிய வேலை நிறுத்தம் சாத்தியமற்றது. lockout டிவிஷன்களில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.மற்ற டிவிஷன்களில் "விதிப்படி வேலை " செய்வார்கள் என்று அறிவித்தது.
நாடுமுழுவதும் நிர்வாகம் ஸ்தம்பித்தது. . சிம்லாவில் இருந்த பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலமைய சமாளிக்க நிதி அமைசகத்தை கேட்டுக் கொண்டார்>
எல்.ஐ.சி. சேர்மன்,நிவாக இயக்குனர்கள் சங்கத்தலவர்களோடு பேசினார்கள்.உடன்பாடு ஏற்பட்டது.
மறு நாள் டில்லி டிவிஷன் வாயிலில் காலை பத்து மணிக்கு பஞ்சாப் மாநில தோழர்கள் பங்க்ரா நடனம் ஆட தோழர் சரோஜ் அவ்ர்களை தோளில் சமந்து வர அவர் lockout ஆனா கதவுகளை சாவி போட்டு திறக்க ஊழியர்கள் உள்ளெ நுழைநதனர்
அன்று மாலை அசோகா ஓட்டலில் ஊதிய உயர்வு சம்மந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகியது>
அந்த விழாவில் எல்.ஐ.சி சேர்மன் பொதுச் செயலாளர் சரோஜ் அவர்களிடம் கேட்டார்.
"சரோஜ் ! எந்த போராட்டமானாலும் வெற்றியையே அடைகிறீர்களே .அதன் ரகசியம் தான் என்ன? "
பட்டறிவும், படிப்பறிவும்,தத்துவ அறிவும் கொண்ட சரோஜ்
shyly said
" We are less inefficient than you Sir "
0 comments:
Post a Comment