எப்பேற் பட்ட தோழமை ...!!
"சிங்"அண்ணனை திருச்சியில் சந்தித்தேனே !
1960 -62 ம் ஆண்டு வாக்கில் நாராயண சிங் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். மதுரை மண்டல ஆயுள் காப்பீட்டுக்கழக விருது நகர் கிளையில்பணியாற்றியதக நினவு. மாற்றல் வாங்கி மதுரை வந்தார்அப்போது மண்டல அலுவலகம் கீழ வெளிவீதி AVH கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இது தவிர கிளை எண் ஒன்று ,கிளை எண் இரண்டு மற்றும் integrated branch office (ibo ) என்று மதுரை நகரத்தில் இருந்தது.
மதுற்றை நகர் ஊழியர்கள் சார்பாளர்களை தேர்ந்தெடுப்பர்கள்.சார்பாளர்கள் மண்டலபொறூப்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
நாராயண சிங் கொஞ்சம் rough and tough personality .பெரும்பாலும் விருது நகரிலிருந்துமாற்றல் வந்தவர்கள் தான் நண்பர்கள். பலர் தி.மு.க விசுவாசிகள்.
சங்க தேர்தல் க டுமையாக நடக்கும். காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்,தமிழரசுக்கழகம் ஆகியவை ஒரு அணியாக நிற்கும். மற்றொரு அணியாக தி.க. திமுக ஆகிய கட்சிகள் நிற்கும்>
தி.முக அணி தோற்கடிக்கப்பட்டது. நாராயனசிங் தி.மு.க கரானண்பர்களோடு இருந்ததால் அவரும் தோற்றார்.
அண்ணன் வீடு தைக்கால் தெரு ! அன்றைய நிலையில் தைக்கால் தெரு கம்யுனிஸ்டுகளின் கோட்டை தைக்கால் தெரு,எல்.பி என் அக்ரகாரம்,அய்யொ அப்பா தெரு என்று அண்ணன் சிங் சலம்பிட்டாரூ.
நான் ஒரு கம்யூனிஸ்ட்.என்ன எப்படி தோற்கடிக்கலாம்,கரது அண்ணன் கேள்வி.
பிரச்சினை மேலிடம் வரை போச்சு தோழர்கள் நாராயணன் (திண்டுக்கல் ) வி.தி பாஸ்கரன் மூலம் சமாதானமாகியது..
மதுரை மண்டல சங்கத்தை பலம் பொருந்திய இடது சாரி இயக்க ஆளூமைக்கு கொண்டுவர சிங் அவர்கள் ஆற்றிய பணிமகத்தானது.அவருடைய குடும்பமே இதற்காக படுபாட்டது அனிவரும் அறிந்த ஒன்று
வயது முதிர்ந்த நிலையில் மகன் மகள் பேரன் பேயர்க்தி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்
தமிழகம் வருவதாக நான் முகநூலில் குறிப்பிட்டிருந்தேன்.மலேசியாவில் இருக்கும் அவர் மகன் சுகதேவ்,திருச்சியில் என்மகள் வீட்டில் இருப்பதாய் அறிந்து தகவல் சொல்ல அண்ணன் சிங் தன மனைவியுடன் வந்து சந்தித்தார்
எப்பேர்பட்ட சந்திப்பு.எப்பேற்பட்ட தோழமை ! உணவருந்தி விடைபெற்று செல்லும் போது "என் கண்கள் கசிந்ததைப்பார்த்து "அழாதடா சாமா " என்று என் தோளை உலுக்கி ஆட்டோவில் ஏறினார்> அந்த கிழட்டுச்சிங்கத்தின் இதயம் அழுவதை என்னால் கேட்கமுடிந்தது
0 comments:
Post a Comment