Saturday, April 30, 2016
Thursday, April 28, 2016
அவர்கள் இந்த மண்ணின்
விளைச்சல்கள் .......!!!
1935 ம் ஆண்டிலிருந்து 45ம் ஆண்டுவரை இந்திய அரசியல் வானம் "தீ"யாய் எரிந்து கொண்டிருந்தது. அண்ணல் காந்தி அடிகளின் அறைகூவலுக்குஇணங்க லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளையும்கல்லுரிகளையும் விட்டு வெளியே வந்தார்கள். அரசு ஊழியர்களும் சிப்பந்திகளும் தங்கள் வேலையை விட்டு சுதந்திர வேள்வியில் ஆகுதியாக தயாரானார்கள்.
அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் C .சுப்பிரமணியம் என்ற மாணவர் .
C .S என்று அழிக்கப்பட்ட இவர் பின்னாளில் ராஜாஜி,காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றினார். பின்னர் மத்திய அமைச்சரவையிலும் இருந்தார் ,"பசுமை புரட்சி " என்ற விவசாய எழுச்சியை இந்தியாவில் உருவாக்கியவரும் இவர்தான்.
C .S கல்லூரியில் படிக்கும் போதே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். சகமாணவர்களையும். இளைஞர்களையும் திரட்டுவதில் முக்கிய பங்காற்றினார் .காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவான "காங்கிரஸ் சோசலிஸ்ட் " கட்சியினரோடும் தொ \டர்புடனிருந்தார். மோப்பம் பிடித்த பிரிட்டிஷ் போலீஸ் அவரை கைது செய்ய முனைந்தது.
போலிசிட மிருந்து தப்ப அவர் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அப்போது "மெட்றாஸ் " மாகாணத்தில் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகியவற்றின் பகுதிகளும் இருந்தது. தலைமறைவு போராளிகளை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினருக்கு வந்தது. ஆந்திராவைச் சேர்ந்த P .சுந்தரய்யாவும் , தமிழகத்தைச் சேர்ந்த M .R .வெங்கடராமனும் இதனை கவனித்தார்கள். தலைமறைவாக இருப்பவர்கள் தங்குமிடம்,உணவு,பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்கள்.
சவுகார் பேட்டை ,ஜார்ஜ் டவுண்,சிந்தாதிரிபேட்டை ஆகிய ஜன நெருக்கமுள்ள பகுதிகளில் சந்து களுக்குள் உள்ள வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர் .
C .S ம் இப்படி ஒரு காற்றோட்டமில்லாத அறையில் தஙக நேர்ந்தது . குளிர் பகுதியான கோவை இலிருந்து வந்த C .S கு உடல் நலம் கெட்டது நெஞ்சில் சளியும்,அதனால் காய்ச்சலும் வந்து கஷ்டப்பட்டார். ஒருகட்டத்தில் "நிமோனியா "வோ என்று சந்தேகம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவரை அணுகமுடிவு எடுக்கப்பட்டது. எப்படி அழை \த்து செல்வது போலீஸ் நாய்கள் மோப்பம் பிடித்து விடுமே.
C .S ஐ சைக்கிள் காரியரில் ஒக்காரச்செய்து அவரை அணைத்தபடி ஒரு இளைஞர் சைக்கிளை உருட்டி வந்தார். அவர்களுக்கு முன்னால் அடுப்புக்கரி விற்கும் ஒருவன் சைக்கிளில் வழிகாட்டிக்கொண்டு வந்தான் . சைக்கிளில் வந்தவன் P .சுந்தரய்யா . C .S அணைத்தபடி வந்தவன் M .R . வெங்கடராமன்.
இந்தியா சுதந்திரம் பெற்றது.
C .S காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.
P .சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கட்சியின் போதுச் செய்லாளர் ஆனார்.
M . R வெங்கடராமன் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆனார்.
இந்த முவருமே இந்த
மண்ணின் விளைச்சல் தான் !!!
Wednesday, April 27, 2016
"P .R is a gentleman "
"P.R.is a gentle man "
1936 ம் ஆண்டு நான் பிறந்தேன். என் மூத்த சகோதரிக்கு 1936ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1942ம் ஆண்டு பெண் குழந்த பிறந்தது.1962ம் ஆண்டு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்.
என்மாமனார் ஒரு அப்புராணி .துஷ்டனைக்ண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்டசனாதனகுடும்பம்.தூரமாகவிலகமாட்டார்.ஒருமைலாவது தள்ளி நின்று கொண்டு எட்டிபார்க்கும் ரகம்.
நான் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவன். " எல்.ஐ.சி வேல லேசுலகிடைக்காது. தேவை இல்லாமல் சண்டய போட்டு வேலையை கெடுத்துக்காம இருக்க சொல்லு " நு மாணவி முலம் "அட்வைஸ் " வரும். என்னை பார்க்க வரும் நண்பர்கள் தலவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பது அவருக்கு தெரியும்.
"தினமணி " -"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகைகள் மூலம்கம்யூனிசம் பற்றி "அறிந்து " கோண்ட கோடானு கோடி அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர் .கம்யுனிஸ்டுகளுக்கு இரண்டு கைகள் அல்ல -நான்குகைகள் -ஒருகையில் அரிவாள், மற்றோன்றில் கம்பு ,ஒருகையில் துப்பாக்கி, அடுத்ததில் குண்டு என்று ஒரு படிமத்தை கொண்டவர்களிலொருவர்.
அவர் ஓய்வுபெற்ற பின் மகளொடு பத்து நாட்கள் தங்க மதுரை வந்திருந்தார்.78-79 ஆண்டாக இருக்கலாம். அப்பொது தான் பைபாஸ் சாலைக்கு தீக்கதிர் ஆபிஸ் வந்த நேரம் . பக்கத்தில் இன்று மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தீக்கதிர் ஆபீசை ஒட்டி ஒரு குடிசைபோட்டு ஜோசப்ஃ என்ற கேரளத்துக்காரர் டீக்கடை போட்டிருந்தார். ஆபிசில் "கம்யூன் " இருந்தது.
மதுரை வந்திருநத P . R அவர்கள் இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.
நிர்வாகியான ராமராஜ் அவ்ர்கள் "டேய் ! சாமா ! பி ஆர் "நான் மிர்ச்சி " கோஷ்டி. ராத்திரி டவ்னுக்குகூட்டி போய் சாப்பாடு எற்பாடு பண்ணனும் . நீ ..." என்று இழுத்தார்.
"எதுக்கு தோழர் ! நான் கொண்டுவரேன் ! இல்ல அவர் வந்தா நல்ல சூடா.." ..."
"அதுக்கு தாண்டா ஒங்கிட்ட சொன்னேன் .ராத்திரி ரண்டு இட்லி சாப்பிடுவாரு. பால் கண்டிப்ப வேணும் .ரண்டு டம்ளராவதுகுடிப்பாரு "
"எத்தன மணிக்கு வருவாரு ?"
"ஏழரை மணின்னு வச்சுக்கோயேன் "
வீட்டில் என் மனைவியிடம் சொன்னேன். என்மாமனார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகம் கோணியது. கம்யூனிஸ்ட் தலைவர் - அவரோடு ஒரே வீட்டில் - போலிஸ் மோப்பம் பிடித்தால் - பாவம் குட்டிபோட்ட பூனைமாதிரி அலைந்தார். காலையில் ஒரே பரபரப்பு . நாலுமணி இருக்கும். "நான் வேணா ஒரு ஏழுமணிக்கு பிள்ளையார் கோவில்ல பூஜை பாக்க போகட்டுமா ? உங்க தலைவர் வந்து போனதும் சொல்லி விடு .நான் கொவில்லேர்ந்து வரேன் " என்றார்.
"உங்கப்பாவுக்கு போலிஸ் காரன் இவர பிடிச்சுட்டு போயிடுவானோ நு பயம் "என்மனைவியிடம் சொன்னேன்.
"No! No! it is not like that " என்றார் என் மாமனார் .
இருந்தாலும் இருப்புக்கொள்ளாமல் தான் இருந்தார்'
வீட்டு குள்ளேயே வரவில்லை. வராண்டாவிலேயே இருநதார்
ஏழுமணிக்கு பி .ஆர் வந்தார். ஹாலுக்குள் வந்த மாமனார் ஜன்னலோரத்தில் இருப்புக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார்.
"தோழர் ! இது என் மாமனார் "
பீ ஆர் அவர்களுக்கு என் குடும்பம் மனைவி ஆகியோரை தெரியும் .
உன் அத்திம்பேரா ?
"ஆமா தோழர் "
"நாக்பூரா ? "
என்மாமனார் தலையை ஆட்டினார் !
"அப்படியா ! உங்களுக்கு ஹிதவாதா பத்திரிகை எடிட்டோர் எ.டி. மணியைதெரியுமா ?"
என்மாமனார் முகத்தில் ஒரு தேளிவு கிடைத்தது.
"கோபால கிருஷ்ண கோகிலே யோட சிஷ்யன் servents of india society மெம்பர் "
"வார்தால இருந்திருக்கேன் சுவாமி ! உம்மா பெயர் என்ன ?"
"நடராஜன் "
"படிச்சதெல்லாம் எங்க ?"
"மெட்ராஸ்ல ? "
"எந்த ஸ்கூல் ?"
"இந்து ஹைஸ்கூல் ,திருவல்லிகேணி !"
"நானும் அங்கதான்யா படிச்சேன் "
"அப்படியா !"
"உமக்கு ரங்கநாதன தெரியுமா ?"
"பெரிய தெரு ரங்கநாதானா ?'"
"ஆம்மாம் ஐயா ! கிரிகெட் பிளேயர் !"
"நல்ல தெரியும் ! நான் பால் பாட்மிண்டன் 1 அவன் கிரிகெட் !"
இருவரும் அவர்கள் வாத்தியார்கள் ,பள்ளி வாழ்க்கை என்று பேசிக்கொண்டார்கள் .
"தோழர் ! உங்க மாமனார் என் ஸ்கூல் மேட் "
பி ஆர் உணவு அருந்தி விட்டு கிளம்பினார் ஜீப்பில் ஏறும்போது "வரட்டுமா நடராஜன்" என்று மாமனாரிடம் விடை பெற்றார்.
அவரை அனுப்பி விட்டு படியேறினேன் !என் மாமனார் தன மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு சிம்பிள் ! காந்தி ,நேரு , இந்திரா , எப்பேர்பட்ட தலைவர்களோடு இருந்தவர்."
"P.R is a gentle man "
Tuesday, April 19, 2016
சமயநல்லூர் செல்வராஜ் ...!!!
1972 ம் ஆண்டு கணக்கு கேட்டதற்காக தி.மு.க கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழகம் முழுவதிலும் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொதித்து எழுந்தனர். தனியாக எம் .ஜி.ஆர் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
ஆர்வமிக்க சில ரசிகர்கள் மதுரையில் ஆரம்பித்தே விட்டனர். மதுரை டி .பி .கே ரோட்டில் உள்ள நகராட்சி விருந்தினர் மாளிகையின் முன்பு அன்று மாலையே கொடியேற்றி விட்டனர்.திமுக வின் இருவண்ணக்கொடியை கொண்டுவந்து அதில் அண்ணா வின படத்தைஒட்டி கொடியேற்றினார்.இதற்கு தலைமை வகித்தவர் மதுரைகல்லூரி உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியராக இருந்த ஆசிரியர் சௌந்தர் ராஜனும். சமயநல்லூரைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியரான செல்வராஜ் அவர்களும் தான்.
1977ம் ஆண்டு அ .தி.மு.க சட்டமன்ரதேர்தலில் போட்டி இட்டது. அதோடு மார்க்சிஸ்ட் கட்சியும், பார்வர்டு பிளாக்கும் இணைந்து போட்டி இட்டது.
நான் வசித்த சாந்திநகர் என்ற எல்.ஐ.சி காலனி சமயநல்லூர்(தனி) தொகுதியில் இருந்தது.அந்த தொகுதியில் அ .தி .மு.க வேட்பாளராக செல்வராஜ் நிறுத்தப்பட்டார்.
அவருக்காக நாங்கள் தேர்தல்பணியில் இறங்கினோம். காலனி யில்வேட்பாளரை வீடு வீடாக அழைத்துச் சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்தோம். ஒரு ஞாயிறு பகல்நேரத்தில் அவர் வர ஏற்பாடாகியது.
அவர் வரும் பொது மதியம் 12மணி ஆகிவிட்டது . சுட்டெரிக்கும் வெய்யிலில் அவரை அழித்துச் சென்றோம். சிறிது துரம் சென்ற பின்தான் கவனித்தேன் செல்வராஜ் காலில் மிதியடி இல்லாமல் நட ந்து வருகிறார் என்பதை. அவரை நிறுத்தி காலனி எங்கே என்று கேட்டென். லேசாக சிரித்துக் கொண்டே "இருக்கட்டும் ! நான் நடந்து வந்துருவேன் "என்றார் .
"காலணி எங்க ? '
"கார்ல விட்டுட்டு வந்திருக்கேன் "
நான் சிங்கப்பூர் சப்பல் போட்டிருந்தேன் .அதை கழட்டி" இத போட்டுக்கிட்டு வாருங்கள் " என்றேன் .
"இருக்கட்டும் "என்று தயங்கினார் .
"செல்வராஜூ ! இப்பம் இத போடலைனா நாங்க உங்க பின்னால வரமாட்டோம் " என்றதும் காலனியை பொட சம்மதிச்சார்.
தேர்தல் நடந்தது .
செல்வராஜ் வெற்றி பெற்றார்.
எனக்கும் பாடம் கிடைத்தது !
"உச்சி வெயிலில் காலுக்கு செருப்பில்லாமல் நடப்பது கடினமானது " என்று .
Wednesday, April 13, 2016
மதுவிலக்கும் ,
கரும்பு விவசாயமும் ...!!!
மகராஷ்டிரா ,மத்தியபிரதெஅசம் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் அதிகம். இந்த ஆலை முதலாளிகள் கூடவே மது ஆலைகளை வைத்திருப்பார்கள் .
சர்க்கரை ஆலைகளின் கழிவுகளிலிருந்துகிடைக்கும் "மொலசஸ் " தான் மது ஆலைகளின் கச்சாபொருள் .இதனைக்கொண்டு தான் இவர்கள் indian made foreign liqor தயாரிக்கிறார்கள். விவசாயிகளின் கரும்புக்கே பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் இந்த முதலாளிகள் கரும்புச்சாறி \ன் கழிவிற்கா பணமகொடுக்கப்போகிறார்கள்.? பூராம் முதலில்லாத வியாபாரம்தான்.
மத்திய அமைச்சர் கத்காரி மிகப்பெரிய தொழிலதிபர்."பூர்த்தி " குழுமம் அவருடையது. கரும்பு ஆலைகள் உண்டு. அதன் காரணமாக மது ஆலகளுமுண்டு .
தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு 3600 ரூ கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது அதேசமயம் தஞ்சையில் விவசாயிகள் "கரும்பு தொகையை " கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் " ஆலை முதலாளிகள் எங்களிடம் வாங்கிய கரும்புக்கான பாக்கியை கொடு" என்று . கோஷமிட்டுகொண்டு சென்றார்கள். அந்தப்பகுதி விவசாயிகளுக்குமட்டு 36 கோடி ரூ கொடுக்காமல் ஆலை நிர்வாகம் வைத்திருக்கிறது.
கரும்புக்கே பணம் கொடுக்காமல் இருக்கும் இந்தமுதலாளிகள் கழிவுக்கு பணம் கொடுப்பார்களா ? தமிழ் நாட்டில் சென்ற ஆண்டுமட்டும் இந்த கரும்பு கழிவுகளைபயன்படுத்தி விற்பனையான மதுவின் மதிப்பு 25000 கோடி ரூபாயாகும்.இது அத்துணையும் கரும்பு விவசாயிக்கு போகேண்டியவை. அத்துணையையும் ஆலைமுதலாளி"அபேஸ்" செய்கிறான் இது தமிழ் நாட்டில்மட்டும்.
அகில இந்திய அளவில் .......??
தி.மு.க.வும் அதிமுகவும் மதுவை ,படிப்படியாகவோ ,செங்கல் செங்கலாகவோ குறைக்க போவதாக கூறுவார்கள் .செய்ய மாட்டார்கள்.ஏனென்றால் இவர்கள் மது ஆலைமுதலாளிகளுக்கு வேண்டியவர்கள்.
கரும்பு விவசாயிளுக்கு நியாயமாக சேரவேண்டியதை வாங்கிக் கொடுத்தாலே போதும்.
இவர்களால் முடியாது !!
Saturday, April 09, 2016
ஆணவ கொலைகாரர்களுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம் ?
உடுமலையில் சங்கரையும், கௌசல்யாவையும் பட்டப்பகலில் ,நட்ட நடுரோட்டில் வெட்டிய காட்சியை குறைந்தது ஐந்துலட்சம்பெராவது தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். குலை நடுங்க அதிர்ந்திருப்பார்கள் . அதன் பிறகு .....
பார்த்தவர்கள் பார்த்தவர்களாகவே தான் இருப்பார்களென்று அந்த கொலைகாரப்பவிகளுக்கு தெரியும். எதையும் அவர்களால்செய்ய முடியாது என்பதும் தெரியும். இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றம்,வழக்கு என்று இழுத்து ஒன்றுமில்லாமல் செய்ய முடியும் .
1944ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கலாம். நெல்லை மாவட்டத்தின் உட்பகுதியில் உள்ள குக்கிராமம்.
இந்தியா சுதந்திரம் பெறவில்லை . அருகில் உள்ள குடியிருப்பில் சிலர் வசித்து வந்தனர் நாங்கள் சிறுவர்கள் அந்த பக்கம் போகக்கூடாது என்று எங்களுக்கு சொல்லி இருந்தனர் அங்குள்ள ஒன்றிரண்டு பேர் கிராமத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த தண்டணை கால் நரம்பினை வெட்டிவிடுவது.,அதாவது குதிகாலுக்கும் பாதத்திற்கும் இனைபாக இருக்கும் நரம்பை வெட்டி அந்த புண் ஆறும் வரை சிக்கிச்சை கொடுப்பார்கள் . பின்னர் விடுவிப்பார்கள். அவர்களுடைய கால் பாதம் தொங்கியபடி இருக்கும். கால்எலும்பு இருப்பதால் . நிற்க முடியும். பாதத்தை நினைத்தபடி அசைக்க முடியாது. ஆயுளுக்கும் அது தான் நிலைமை .
மற்றொரு தண்டனையும் உண்டு . பத்து அல்லது பதினைந்து கிலோ எடை உள்ள பட்டிய கல்லை செதுக்குவார்கள் அதில்துளை இட்டு இரும்பு சங்கிலியைகட்டுவார்கள் சங்கிலியின்மறுமுனைதண்டனைக்கு உரியவனின் காலில் பிணத்திருக்கும் . அவன் அந்த கல்லையும் இழுந்துக்கொண்டுதான் நடக்கவேண்டும். ஐந்து ஆறடி நீளம் உள்ள சங்கிலி ஆதலால் கல்லை மார்பளவு துக்கிகொண்டு சென்று குளியல் மற்றும் காலைகடன் களை செய்து கொள்ளவேண்டும்.இது பிரிட்டிஷ் சட்டத்தில் உள்ளதா? இந்திய சட்டத்தில் உள்ளதா ? இல்ல கட்ட பஞ்சாயத்தா ? தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட தண்டனையை அனுபவத்தவர்களை நான் என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் . ,கொலை , கொள்ளை ,வழிப்பறி ,என்று மீண்டும் மீண்டும் ஈடுபடுபவர்களை இப்படி தண்ண்டிப்பார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆணவக் கொலைகாரர்களை இப்படி தண்டிக்கவேண்டும் .
மனித உரிமைக்காரர்கள் கொஞ்சம் கண்டுக்காமல் இருந்தால் நடக்கலாம் .
Wednesday, April 06, 2016
பயந்துபோன கருணா நிதி
"இந்தி"யில் பேசினார் ...!!!
2012ம் ஆண்டு விழுப்புரத்தில்னடந்தநிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த கருணாநிதிக்கு ,பார்வதி,பரமேஸ்வரன், முருகன் என்று இந்து கடவுளர்கள் வேடமிட்டவர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனை இந்து மகாசபை எதிர்த்து வழக்குப் போட்டனர்.
சேதுசமுத்திரம் திட்டம் பற்றி பேசும் போது கருணாநிதி அவர்கள் " ஒருலட்சத்து எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இருந்தாரா ? செதுபாலத்தை கட்டினாரா ? அவர் எந்த பொறியியர்கல்லூரியில் படித்தார் ?"என்று பேசினார். பா.ஜ.க பிரமுகர் ரவி சங்கர் பிரசாத் இதனை கண்டித்தார்.
"இன்று வால்மீகியும் இல்லை .ராமனும் இல்லை . வால்மீகி எழுதி உள்ளதை தான் நான் சொன்னேன் . ராமன் குடிகாரன் என்று வால்மீகி எழதி உள்ளார் அதனைக் கூட நான் குறிப்பிடவில்ல " என்றும் கருணாநிதி விளக்கினார்.
இருந்தாலும் கூட்டணியில் அவரோடு இருந்த கட்சிகளா ன காங்கிரஸ் போன்றவைகளே முகம் சுளித்தன.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வற்புறுத்தி தமிழகம் முழுவதும் "பந்த் " நடத்த அறிவித்தார்.
இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. "பந்த்" நடத்தாமல் உண்ணாவிரதம் என்று அறிவித்தார். அன்று நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசினார்.
"எனக்கு ராமன் விரோதி அல்ல . ராவணன் தான் விரோதி " என்று அவர் பேசிய போது பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அது மட்டுமல்ல.
"இந்துஸ்தான் ஹை தேஷ் ஹமாரா !
ஜான்சே அப்னே ஹம்கோ ப்யாரா!
இந்து முஸ்லீம்சீக் இசாயி !
சபி ஹமாரா பாயிபாயி !
பாயிஹோகா பாயி ஹமாரா!
ஐஸா ஹோகா தேஷ் ஹமாரா!! "
என்று இந்தியிலும் பேசினார் .
ஏன் இந்தியில்பேசினார் என்பதற்கு எந்த விளக்கமும் இதுவரை இல்லை
" இந்தியன் எக்ஸ்பிரஸ் ". -2007 ஆண்டு ஆவணக்காப்பகத்தில் கருணாநிதி அவர்களின் குரலில் பதிவு செய்யப்பட்டதை கேட்கலாம்.
(to come out of s c ban karuna nithi made a fast change and he spoke in Hindi 2-10- 2007 Indian express )
Sunday, April 03, 2016
தமிழை செம்மொழியாக்க ,
மோகன்,நாச்சியப்பன்,வை.கோ உதவினார்கள்.!!!
(திமுக,அதிமுக ,பாமக மறுத்துவிட்டார்கள் )