Wednesday, April 27, 2016"P .R  is a gentleman "
"P.R.is a gentle man "
1936 ம் ஆண்டு நான் பிறந்தேன். என் மூத்த சகோதரிக்கு 1936ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1942ம் ஆண்டு பெண் குழந்த பிறந்தது.1962ம் ஆண்டு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்.
என்மாமனார் ஒரு அப்புராணி .துஷ்டனைக்ண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்டசனாதனகுடும்பம்.தூரமாகவிலகமாட்டார்.ஒருமைலாவது தள்ளி நின்று கொண்டு எட்டிபார்க்கும் ரகம்.
நான் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவன். " எல்.ஐ.சி வேல லேசுலகிடைக்காது. தேவை இல்லாமல் சண்டய போட்டு வேலையை கெடுத்துக்காம இருக்க சொல்லு " நு மாணவி முலம் "அட்வைஸ் " வரும். என்னை பார்க்க வரும் நண்பர்கள் தலவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பது அவருக்கு தெரியும்.
"தினமணி " -"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகைகள் மூலம்கம்யூனிசம் பற்றி "அறிந்து " கோண்ட கோடானு கோடி அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர் .கம்யுனிஸ்டுகளுக்கு இரண்டு கைகள் அல்ல -நான்குகைகள் -ஒருகையில் அரிவாள், மற்றோன்றில் கம்பு ,ஒருகையில் துப்பாக்கி, அடுத்ததில் குண்டு என்று ஒரு படிமத்தை கொண்டவர்களிலொருவர்.
அவர் ஓய்வுபெற்ற பின் மகளொடு பத்து நாட்கள் தங்க மதுரை வந்திருந்தார்.78-79 ஆண்டாக இருக்கலாம். அப்பொது தான் பைபாஸ் சாலைக்கு தீக்கதிர் ஆபிஸ் வந்த நேரம் . பக்கத்தில் இன்று மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தீக்கதிர் ஆபீசை ஒட்டி ஒரு குடிசைபோட்டு ஜோசப்ஃ என்ற கேரளத்துக்காரர் டீக்கடை போட்டிருந்தார். ஆபிசில் "கம்யூன் " இருந்தது.
மதுரை வந்திருநத P . R அவர்கள் இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.
நிர்வாகியான ராமராஜ் அவ்ர்கள் "டேய் ! சாமா ! பி ஆர் "நான் மிர்ச்சி " கோஷ்டி. ராத்திரி டவ்னுக்குகூட்டி போய் சாப்பாடு எற்பாடு பண்ணனும் . நீ ..." என்று இழுத்தார்.
"எதுக்கு தோழர் ! நான் கொண்டுவரேன் ! இல்ல அவர் வந்தா நல்ல சூடா.." ..."
"அதுக்கு தாண்டா ஒங்கிட்ட சொன்னேன் .ராத்திரி ரண்டு இட்லி சாப்பிடுவாரு. பால் கண்டிப்ப வேணும் .ரண்டு டம்ளராவதுகுடிப்பாரு "
"எத்தன மணிக்கு வருவாரு ?"
"ஏழரை மணின்னு வச்சுக்கோயேன் "
வீட்டில் என் மனைவியிடம் சொன்னேன். என்மாமனார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகம் கோணியது. கம்யூனிஸ்ட் தலைவர் - அவரோடு ஒரே வீட்டில் - போலிஸ் மோப்பம் பிடித்தால் - பாவம் குட்டிபோட்ட பூனைமாதிரி அலைந்தார். காலையில் ஒரே பரபரப்பு . நாலுமணி இருக்கும். "நான் வேணா ஒரு ஏழுமணிக்கு பிள்ளையார் கோவில்ல பூஜை பாக்க போகட்டுமா ? உங்க தலைவர் வந்து போனதும் சொல்லி விடு .நான் கொவில்லேர்ந்து வரேன் " என்றார்.
"உங்கப்பாவுக்கு போலிஸ் காரன் இவர பிடிச்சுட்டு போயிடுவானோ நு பயம் "என்மனைவியிடம் சொன்னேன்.
"No! No! it is not like that " என்றார் என் மாமனார் .
இருந்தாலும் இருப்புக்கொள்ளாமல் தான் இருந்தார்'
வீட்டு குள்ளேயே வரவில்லை. வராண்டாவிலேயே இருநதார்
ஏழுமணிக்கு பி .ஆர் வந்தார். ஹாலுக்குள் வந்த மாமனார் ஜன்னலோரத்தில் இருப்புக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார்.
"தோழர் ! இது என் மாமனார் "
பீ ஆர் அவர்களுக்கு என் குடும்பம் மனைவி ஆகியோரை தெரியும் .
உன் அத்திம்பேரா ?
"ஆமா தோழர் "
"நாக்பூரா ? "
என்மாமனார் தலையை ஆட்டினார் !
"அப்படியா ! உங்களுக்கு ஹிதவாதா பத்திரிகை எடிட்டோர் எ.டி. மணியைதெரியுமா ?"
என்மாமனார் முகத்தில் ஒரு தேளிவு கிடைத்தது.
"கோபால கிருஷ்ண கோகிலே யோட சிஷ்யன் servents of india society மெம்பர் "
"வார்தால இருந்திருக்கேன் சுவாமி ! உம்மா பெயர் என்ன ?"
"நடராஜன் "
"படிச்சதெல்லாம் எங்க ?"
"மெட்ராஸ்ல ? "
"எந்த ஸ்கூல் ?"
"இந்து ஹைஸ்கூல் ,திருவல்லிகேணி !"
"நானும் அங்கதான்யா படிச்சேன் "
"அப்படியா !"
"உமக்கு ரங்கநாதன தெரியுமா ?"
"பெரிய தெரு ரங்கநாதானா ?'"
"ஆம்மாம் ஐயா ! கிரிகெட் பிளேயர் !"
"நல்ல தெரியும் ! நான் பால் பாட்மிண்டன் 1 அவன் கிரிகெட் !"
இருவரும் அவர்கள் வாத்தியார்கள் ,பள்ளி வாழ்க்கை என்று பேசிக்கொண்டார்கள் .
"தோழர் ! உங்க மாமனார் என் ஸ்கூல் மேட் "
பி ஆர் உணவு அருந்தி விட்டு கிளம்பினார் ஜீப்பில் ஏறும்போது "வரட்டுமா நடராஜன்" என்று மாமனாரிடம் விடை பெற்றார்.
அவரை அனுப்பி விட்டு படியேறினேன் !என் மாமனார் தன மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"எவ்வளவு சிம்பிள் ! காந்தி ,நேரு , இந்திரா , எப்பேர்பட்ட தலைவர்களோடு இருந்தவர்."
"P.R is a gentle man "
3 comments:

சரவணன் said...

P.R. Full name?

சிவகுமாரன் said...

p.ராமமூர்த்தி. என் சித்தப்பா சுந்தரபாரதி அவருடனான அனுபங்களை சிலாகித்துப் பேசியிருக்கிறார். சில காலங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில், பி.ஆர். மணலி கந்தசாமி போன்றோர் எங்கள் அப்பத்தா கையால் சாப்பிட்டதை பெருமையாய் சொல்லியிருக்கிறார்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.