Thursday, April 28, 2016







அவர்கள் இந்த மண்ணின் 

விளைச்சல்கள் .......!!!






1935 ம் ஆண்டிலிருந்து 45ம் ஆண்டுவரை இந்திய அரசியல் வானம் "தீ"யாய் எரிந்து கொண்டிருந்தது. அண்ணல் காந்தி அடிகளின் அறைகூவலுக்குஇணங்க லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளையும்கல்லுரிகளையும் விட்டு வெளியே வந்தார்கள். அரசு ஊழியர்களும் சிப்பந்திகளும் தங்கள் வேலையை விட்டு சுதந்திர வேள்வியில்  ஆகுதியாக தயாரானார்கள். 

அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் C .சுப்பிரமணியம் என்ற மாணவர் . 

C .S   என்று அழிக்கப்பட்ட இவர் பின்னாளில் ராஜாஜி,காமராஜர்    அமைச்சரவையில் பணியாற்றினார்.  பின்னர் மத்திய அமைச்சரவையிலும் இருந்தார் ,"பசுமை புரட்சி " என்ற விவசாய எழுச்சியை இந்தியாவில் உருவாக்கியவரும்  இவர்தான்.

C .S கல்லூரியில் படிக்கும் போதே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றார். சகமாணவர்களையும். இளைஞர்களையும் திரட்டுவதில் முக்கிய பங்காற்றினார் .காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவான "காங்கிரஸ் சோசலிஸ்ட் " கட்சியினரோடும் தொ \டர்புடனிருந்தார். மோப்பம் பிடித்த பிரிட்டிஷ்  போலீஸ் அவரை கைது செய்ய முனைந்தது.

போலிசிட மிருந்து தப்ப அவர் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அப்போது "மெட்றாஸ் " மாகாணத்தில் ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகியவற்றின் பகுதிகளும் இருந்தது. தலைமறைவு போராளிகளை பாதுகாக்கும் பொறுப்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினருக்கு வந்தது. ஆந்திராவைச் சேர்ந்த P .சுந்தரய்யாவும் , தமிழகத்தைச் சேர்ந்த M .R .வெங்கடராமனும் இதனை கவனித்தார்கள். தலைமறைவாக இருப்பவர்கள் தங்குமிடம்,உணவு,பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்கள்.

சவுகார் பேட்டை ,ஜார்ஜ் டவுண்,சிந்தாதிரிபேட்டை  ஆகிய ஜன நெருக்கமுள்ள பகுதிகளில் சந்து களுக்குள் உள்ள வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர் .

C .S ம் இப்படி ஒரு காற்றோட்டமில்லாத அறையில் தஙக நேர்ந்தது . குளிர் பகுதியான கோவை இலிருந்து வந்த C .S  கு உடல் நலம் கெட்டது நெஞ்சில் சளியும்,அதனால் காய்ச்சலும் வந்து கஷ்டப்பட்டார். ஒருகட்டத்தில் "நிமோனியா "வோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

தனியார் மருத்துவரை அணுகமுடிவு எடுக்கப்பட்டது. எப்படி அழை \த்து செல்வது போலீஸ் நாய்கள்  மோப்பம் பிடித்து விடுமே. 

C .S  ஐ சைக்கிள் காரியரில் ஒக்காரச்செய்து அவரை அணைத்தபடி ஒரு இளைஞர் சைக்கிளை உருட்டி வந்தார். அவர்களுக்கு முன்னால் அடுப்புக்கரி விற்கும் ஒருவன் சைக்கிளில் வழிகாட்டிக்கொண்டு வந்தான்  . சைக்கிளில் வந்தவன் P .சுந்தரய்யா . C .S அணைத்தபடி வந்தவன் M .R . வெங்கடராமன்.

இந்தியா சுதந்திரம் பெற்றது.

C .S காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார்.

P .சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கட்சியின் போதுச் செய்லாளர் ஆனார்.

M . R  வெங்கடராமன் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆனார்.

இந்த முவருமே இந்த 

மண்ணின் விளைச்சல் தான் !!! 



  










0 comments: