Monday, July 25, 2016
Saturday, July 23, 2016
சாமி டா !
மைலாப்பூர் சாமி டா !!!
நான் மதுரைக்கு 62 ம் ஆண்டு மாற்றலாகி வந்தேன். அப்போதெல்லாம் மேல ஆவணிமூலவீதி ,வடக்கு ஆவணிமூலவிதி ஆகியவற்றில் ஏராளமான திரைப்பட விநியோக கம்பெனிகள் இருக்கும் .10 x 8 அறையில் இருக்கும் . ஒரே அறையில் ஆண்டாள் பிலிம்ஸ்,ஆழ்வார் டிஸ்ட்ரிபியூட்டேர்ஸ் , அஃபர் தியேட்டர்ஸ் என்று இருக்கும்.
ஒரு மானேஜர்- கிளார்க் ,கிளார்க் -பலசோலி என்று இருவர் அங்கு பணியாற்றுவார்கள்.
நாங்கள் போது வசூலுக்கு அங்கு செல்வோம். "வாங்க அப்பூ ! "என்று அவர்கள் அழைத்தாலும் மூன்று ரூ கொடுக்க புலம்புவார்கள்.
மதுரையில் என் உறவினர் பையன் மாநில அரசு பணியில் இருந்தான்.அவனோடு ஒருமுறை மேலக்கோபுர தெருவுக்கு சைக்கிள்கடை வரை சென்றிருந்தேன். பிலிம் கம்பெனி ஒன்றையும் பார்க்க சென்றேன். கூட என் உறவினரும் வந்தார்.எங்களை பார்த்ததும் அந்த மானேஜர் பதறிவிட்டார்.
"ஐயா ! என்னய்யா !இவ்வளவு தூரம். சொல்லி இருந்தா நானே ஆபிஸ் வந்து பாப்பேனே ! "என்று என் உறவினரைப்பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.
நான் வசூலுக்கு வந்திருக்கிறேன் என்றதும் கொஞ்ச்ம நிம்மதி அடைந்தார். நான் ரசிது புத்தகத்தை நீட்டினேன். நுறு ரூ கொடுத்து ரசீது போட சொன்னார் .
வெளியே வந்தோம் 1"என்னப்பா ! மூணு ரூ க்கு முக்கால அழ ஆரம்பிப்பான் .இப்ப நுறு ரூ கொடுக்கான் "
"டேய் !நான் வணிக வரித்துறை.! இவங்க பூரா வட்டிக்கடை காரங்க. ஆயிரம் ரூ கொடுத்துட்டு 3000 ரூ நோட்டு போடுவான். பூரா கள்ளப்பணம் ! அத கணக்குல காட்ட சினிமா கம்பெனி. பாத்தயா. போண்டா படமா வசிரிப்பாங்க .டூரிங் கொட்டகைள வசூலானதாக காட்டுவாங்க. நிறைய கருப்பை கொஞ்சம் வெள்ளையாக்குவாங்க.எங்க ஆபிசுக்கு வந்த்து கேளிக்கை வரி சீலுக்காக நிப்பாங்க .அதுனால என்னை பாத்ததும் கூட கொடுக்கான் "
இப்பம் மதுரைல இப்படி இருக்கா தெரியல !
இப்பம் கார்பொரேட் கம்பெனியாயிட்டுது. கோடிக்கணக்கில் வசூலனு போடுதான் !
இதுல கருப்பு எவ்வளவு ! வெளிநாட்டிலிருந்து உள்ள வர கருப்பு எவ்வளவு ?
டே !
சாமி டா !!
மைலாப்பூர் சாமிடா !!!
ஸ்ரீதரின் நாகபுரி
விஜயம் ........!!!
தமிழ் நாடு முற்போக்கு எழ்த்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர் நாகபுரி வந்திருந்தார். அவருடைய மகள் செல்வி சூர்யா திருசசி NIT யில் இறுதி ஆண்டு M . Tech படிக்கிறார். நாக்புரியில் உள்ள தேசிய சுற்றுப்புற சூழல் பொறியியல் ஆராய்சசி மையத்தில் ஆறுமாதம் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவரை கொண்டுவிட ஸ்ரீதர் வந்திருந்தார்.
20-7-16 அன்று இரவு 7 மணிக்கு என் வீட்டிற்கு வந்தார் .இரவு பத்துமணி வரை பேசிக்கொண்டிருந்தோம் . மறுநாள் மகளை தாங்கும் விடுதியில் சேர்த்து விட்டார். 22-ம் தேதிக்கால 10மணிக்கு வந்தவரோடு மாலை 3 மாணவரை பேசினோம்.
ஸ்ரீதரை பார்த்தவுடன், SAP யிலிருந்து வேலாயுதம் வரை ,lic சாந்தாராமிலிருந்து Gic ரமேஷ் வரை , நன்பர்களை பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது.
பார்ப்பனீயம் ,பார்ப்பனர் எதிர்ப்பு, பார்ப்பனர் அல்லாத இடைநிலை வகுப்பார் தலித்துகள் மீது நடத்தும் தாக்குதல் , அதற்கு கேடயமாக "மனுநீதியை " சொல்லும் சிலர் என்று பேசினோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்குள் அரசு பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு- ஏகபோகத்தின் தலைமையில் முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ ஆடசி என்பதிலிருந்து , தேசிய முதலாளிகளும்,தொழிலாளர்களும் நடத்தும் ஆடசி என்பது வரை விவாதித்தோம் .
இயந்திரமாக்கல், டீசல் மயமாக்கல்,மின்மயமாக்கல், கட்டெய்னரை எதிர்த்தது பற்றியும், கணிப்பொறி எதிர்த்ததையும் பேசினோம்.
கல்கத்தா துறைமுகம் தளர்ந்ததையும் சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்ததையும் புரிய முயற்சசித்தோம் .
முதுமையும் இயலாமையும் என் செயல் திறனை முடக்கி விட்ட நிலையில் ,த.மு எ.க .ச வின் வளர்ச்சி எதிர்கால செயல்பாடு என்று தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..
"தீட்சா பூமியை "கண்டிப்பாக பார்த்துவாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தேன்.
எனக்கு இரண்டு பேரன்கள் . பெயர்த்தி இல்லை. ரயிலில் வரும்போது செல்வி சூர்யா என்னை "தாத்தா " அழைத்த பொது என்கண்கள் கசிந்தது.
"சூர்யா ! உன் பயிற்சி சிறப்பாக முடியும் . மேலும்மேலும் நீ உயர்வடைவாய் கண்ணம்மா !!!"
"வாழ்த்துக்கள் !!! "
Tuesday, July 12, 2016
"தவறு என்று தெரியாமலேயே
தவறு செய்து கொண்டிருக்கிறோம் ...."
1920ம் ஆண்டு வாக்கில் தான் சமூக நீதி பற்றிய விழிப்பு உருவாக ஆரம்பித்தது. அது ஒரு இயக்கமாக நிதிகடசியாக பரிணமித்தது. பிரிட்டிஷாரின் ஆட்சியில் கல்வி பொதுவாக்கப்பட்டது.பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்க வாய்ப்பு வந்தது. கற்ற பிராமணரல்லாதோருக்கும் வேலை வாய்ப்பு வேண்டி கோரிக்கைகள் வந்தன.
பிராமணர் -பிராமணர் அல்லாதோர் என்று பிரிவும் அதனால் ஏற்பட்டது.இதன் காரணமாக ஒன்று பட்ட பிராமணர் அல்லாதோர் இயக்கமும் உருவானது. என் சிறு வயதில் bramin -nonbramin ( b - nb ) என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிராமணர் அல்லாதோரின் முன்னேற்றத்திற்கான பல முடிவுகள் வந்தன.இதனை சாதித்ததில் திராவிட இயக்கத்திற்கு பங்கு உண்டு
அன்று b -nB என்று இருந்த நிலை திராவிட இயக்கம் 1967ம் ஆண்டு அரசு கட்டிலில் ஏறியதும் மாறியது.
அப்போது நான் எல்.ஐ சி யில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் . நணபர் ஒருவர் மிகவும் சோகமாக அலுவலகம்வந்தார் .விசாரித்தேன்."இன்று மாலை ஒரு அஞ்சலி கூட்டம். அதற்கான "போஸ்டர் " களை அடிக்க வேண்டும். பிழை திருத்தவேண்டும் " என்றார் . அதனை வாங்கி பார்த்தேன் .
கண்ணீர் அஞ்சலி
கர்நாடக நடிகர் ராஜ்குமார் மறைவு !!!
இப்படிக்கு
நாடார் சங்கம் ,மதுரை
எனக்கு அதுவரை ராஜ்குமார் நாடார் என்பது தெரியாது .
பஞ்சாபில் குருத்வாரா அங்கீகரித்தால் தான் மத சடங்குகளை ஒருவர் செய்துவைக்க முடியும்.எந்த வித்தியாசமும் இன்றி அதற்கான பயிற்சியை குருத்வாரா செய்து கொடுக்கும். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு "ஞ்னி " என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு மதச்சடங்குகளை செய்விக்கும் உரிமையை கொடுப்பார்கள். அப்படி பட்டம்வாங்கியவரி ஒருவர் தான் "ஞ்னி " ஜெயில் சிங்
அவர் குடிஅரசு தலைவரானார். மதுரை நகர சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டான
நன்றி. நன்றி நன்றி
அன்னை இந்திரா விற்கு . நன்றி .ஜெயில் சிங் அவர்களை குடியரசுதலை வராக ஆக்கிய அன்னைக்கு நன்றி .
இப்படிக்கு
தங்க நகை ஆசாரிகள் சங்கம் மதுரை .