skip to main |
skip to sidebar
கன்னியப்பன் நெல்லை அவர்கள்
நிலைத்தகவலை முன் நிறுத்தி ....!!!
முக நூலில் காயத்திரி மந்திரம் பற்றியும் அதன்பல பலன்களை பற்றியும் நிறைய எழுது கிறார்கள்..கன்னியப்பன் சம்ஸ்கிருத காயத்ரி மந்திரத்தின் பொருளையும் கொடுத்து விரித்துள்ளார்கள்.
உயிர் களிலேயே மிகவும் பலவீனமானது மனித உயிரினம் தான். சிங்கம் புலி யானை என்று அத்துணை உயிரினங்களையும் ஆளும் வல்லமை படைத்ததும்மனித இனம் தான். காரணம் மற்ற உயிரினங்களுக்கு வாய்க்காத அறிவு வளர்சசி. இந்த வளர்சசிக்கு காரணம் அதன் அனுபவம்.இந்த அநுபவத்திற்கு காரணம் "உழைப்பு " என்ற அற்புதம்.
ஆதி மனிதன் குழுவாக கூட்டமாக வாழ்ந்தான் . மற்ற மிருகங்களுக்கு அஞ்சியே இருந்தான். அவனுக்கு இரவும் இருட்டும் மிகவும் ஆபத்தான அனுபவங்களை கொடுத்தன. மிருகங்களுக்கு பயந்து மரப்பொந்துகளிலும்,கிளை களிலும்,பாறைகளின் உசசியில் உள்ள இண்டு இடுக்குகளிலும் வாழ்ந்தான் .
இரவும் இருட்டும் அவனை அசசத்தில் ஆழ்த்தின .வெளிசசம் அவனுடைய தேவைகளில் முக்கியமானதாயிற்று. அது வருவதும் போவதும் அவனை ஆசசரியப்படுத்தியது.
வெளிசசம் வெப்பத்தை தருகிறது .வெப்பம் சூழலை மாற்றுகிறது. காற்று வீசுகிறது,மழை பொழிகிறது . பசுமை நிறைகிறது. காய் கனிகள் விளைகின்றன . மனம் மகிழ்கிறது இதற்கு காரணம் வெளிசசம் என்று கருதினான்.
வெளிசத்தை ,இயற்கையை வணங்க ஆரம்பித்தான்.
தத் சவிதா: வரேண்யம் என்கிறது காயத்திரி . சவிதா: என்றால் வெளிசம் .மானுடவியல் பேராசிரியர் சொன்ன விளக்கம் இது.
இதில ஒரு நிறடல் உண்டு .
சமஸ்கிருதகி மொழி கிமு 300 -500 ஆண்டுகளில் தான் வரிவடிவம் பெற்றது. தக்கசீலம் (பாகிஸ்தானில் உள்ளது ) அருகில் உள்ள கிராமத்து "பாணினி " ஐரோப்பிய, ஆப்பிரிக்க,அரேபிய மொழி களை ஆராய்ந்து இலக்கணமும் வரிவடிவமும் சமஸ்கிருதத்திற்கு தந்தார் என்பது மொழி இயலாளர் கருத்து.
ஆதிமனிதனுக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் காயத்த்ரி மந்த்ரம் ஆதிமனிதனோடதுஇல்லை என்றாகிறது.
இது பற்றி மேலும் சிந்திக்கவும் விவாதிக்கவும் மட்டுமே இந்த தகவல்களை தருகிறேன்.
0 comments:
Post a Comment