Tuesday, July 12, 2016






"நாங்கள் 

இருவரும்......." 




குறைந்தது 35 வருடங்களாவது இருக்கும் நாங்கள் இருவரும் சந்தித்து பேச  ஆரம்பித்தது . மிகவும் நெருக்கம்.அவர் தஞ்சை மண்டல பட்டுக்கோட்டைகிளையில்எல் .ஐ.சி யி ல்பணியாற்றினார். நான் மதுரை மண்டல எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாயாற்றி  வந்தேன்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் இருவருமே செயல்விரர்களாக இருந்தோம்.  மாநில அளவில் நடக்கும் மாநாடுகள்    அத்துணையிலும் சந்திப்போம் .

அவர் த.மு. எ  சங்கத்திலும்  செயல் படுபவர்  .கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர்.

ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டவர்.திடீர் திடீரென்று குடுமபத்தோடு பல ஊர்களுக்கு சென்று வருவார். 

சென்னையில் ஒருமுறை பார்த்த போது "ஏன்யா ! உலகம் பூறா சுத்தரேறே ! குடும்பத்தோடு மதுரை வந்து  எங்க வீட்ல நாலுநாள்தங்குமே ?"என்றேன்.

"அதுக்கென்ன ! செஞ்சுட்டா போசசு "

அவர் குடும்பத்தோடு வர ஏற்பாடு செய்தார்.

அவருடைய துணைவியாருக்கு ஒரு பயம்." நாங்கள் என்ன ஆளுகளோ என்னமோ " அங்கு போய் குண்டக்க மண்டக்க நடந்து கொள்ளக்கூடாது.இரண்டு மகள் ,சின்ன பையன் ! தவறாக பேசிவிட கூடாதல்லவா " இது பற்றி கணவரிடம் பேசி இருக்கிறார். " அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா ! கேட்டுக்கிறதும் இல்ல ! ஒரு திருநெல்வேலி காராரு. ! சைவ பிள்ளைவாள் னு அனுமானிக்கிறேன் ! என்று கூறி இருக்கிறார்.ஒரு முறை திருசசியில் நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம்.

என்வீட்டில் முத்துமீனாட்சி அவங்க veg ஆ non veg ஆ என்று கேட்ட போது " அவர்கள் ரெட்டியார் என்று நான் அனுமானிக்கிறேன். நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டேன்.

"எனக்கு non veg  முடியாது. மிஞ்சி போனா ஆம்லெட் போடறேன் "இல்லை! நீங்க  ஹோட்டலுக்கு ஒருநாள்     கூட்டிக்கிட்டு போங்க " என்றார் . "பார்த்துக் கொள்ளலாம் " என்று பேசசை  முடித்தேன்.

தஞ்சை யிலிருந்து மகள்கள் வைஷ்னவி, லாஷ்க்மி ,அருண் சகிதம் அவர்கள் வந்து இறங்கினர். 

அவர் மனைவி தயங்கிய படியே உள்ளே நுழைந்தார். மகள்  வைஷ்ணவி தாயாரிடம் சுவரில்மாட்டியிருந்த படத்தைக்காட்டி ஏதோகிசுகிசுத்தாள்.

"என்னம்மா அம்மாகிட்ட என்ன சொல்றே "

"ஒண்ணுமில்ல ! நீங்க சாப்பிடுவேளோ !இல்லையோ ! கைசுத்து முறுக்கும்,மாலாடுவும்வீட்ல செஞ்சு  கொண்டு வந்தேன் ! படத்தைக்காட்டி இவா சாப்பிடுவா அம்மா ! " னு சொல்றாள் .

சுவரில் படத்தில் என்மகள் ஹன்ஸா ஒன்பது கெஜம்  புடவையில்   கல்யாணக்கோலத்தில் மறு மகன் Dr .ss ராமன் அருகில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தாள் .

Com Ragupathi   Red salute to you !!!




















1 comments:

'பரிவை' சே.குமார் said...

சாதி பார்த்து வருவதல்லவே நட்பு...
நல்ல நட்புத்தான்...