Saturday, July 23, 2016





சாமி டா !

மைலாப்பூர் சாமி டா !!!



நான் மதுரைக்கு     62  ம் ஆண்டு மாற்றலாகி வந்தேன்.    அப்போதெல்லாம் மேல ஆவணிமூலவீதி ,வடக்கு ஆவணிமூலவிதி ஆகியவற்றில் ஏராளமான திரைப்பட விநியோக கம்பெனிகள் இருக்கும் .10 x  8  அறையில் இருக்கும் . ஒரே அறையில் ஆண்டாள் பிலிம்ஸ்,ஆழ்வார்  டிஸ்ட்ரிபியூட்டேர்ஸ் , அஃபர் தியேட்டர்ஸ்  என்று இருக்கும். 

ஒரு  மானேஜர்- கிளார்க் ,கிளார்க் -பலசோலி என்று இருவர் அங்கு பணியாற்றுவார்கள்.

நாங்கள் போது வசூலுக்கு அங்கு செல்வோம். "வாங்க அப்பூ !  "என்று அவர்கள் அழைத்தாலும்  மூன்று ரூ கொடுக்க புலம்புவார்கள்.

மதுரையில் என் உறவினர் பையன் மாநில அரசு பணியில் இருந்தான்.அவனோடு ஒருமுறை மேலக்கோபுர தெருவுக்கு சைக்கிள்கடை வரை சென்றிருந்தேன். பிலிம் கம்பெனி      ஒன்றையும் பார்க்க சென்றேன். கூட என் உறவினரும் வந்தார்.எங்களை பார்த்ததும்  அந்த மானேஜர் பதறிவிட்டார்.

"ஐயா ! என்னய்யா !இவ்வளவு தூரம். சொல்லி இருந்தா நானே  ஆபிஸ் வந்து  பாப்பேனே ! "என்று என் உறவினரைப்பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.   

நான் வசூலுக்கு வந்திருக்கிறேன் என்றதும் கொஞ்ச்ம நிம்மதி அடைந்தார். நான் ரசிது   புத்தகத்தை நீட்டினேன். நுறு ரூ கொடுத்து ரசீது போட சொன்னார் .

வெளியே வந்தோம் 1"என்னப்பா ! மூணு ரூ க்கு முக்கால அழ ஆரம்பிப்பான் .இப்ப நுறு ரூ கொடுக்கான் "  

"டேய் !நான் வணிக வரித்துறை.! இவங்க பூரா  வட்டிக்கடை காரங்க. ஆயிரம் ரூ கொடுத்துட்டு 3000 ரூ நோட்டு போடுவான். பூரா  கள்ளப்பணம் ! அத கணக்குல காட்ட சினிமா கம்பெனி. பாத்தயா. போண்டா படமா வசிரிப்பாங்க .டூரிங் கொட்டகைள வசூலானதாக காட்டுவாங்க. நிறைய கருப்பை  கொஞ்சம் வெள்ளையாக்குவாங்க.எங்க ஆபிசுக்கு வந்த்து கேளிக்கை வரி சீலுக்காக நிப்பாங்க .அதுனால என்னை பாத்ததும் கூட கொடுக்கான் " 

இப்பம்  மதுரைல இப்படி இருக்கா தெரியல !

இப்பம் கார்பொரேட் கம்பெனியாயிட்டுது. கோடிக்கணக்கில் வசூலனு போடுதான் !

இதுல கருப்பு எவ்வளவு ! வெளிநாட்டிலிருந்து உள்ள வர கருப்பு  எவ்வளவு ?

டே  !

சாமி டா !!

மைலாப்பூர் சாமிடா !!!







2 comments:

சிவகுமாரன் said...

கருப்பை எப்படி வெள்ளையாக்குறதுங்கிறதையும் படத்துலயே சொல்லித் தருகிறாங்க அய்யா

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.