Wednesday, November 30, 2016

1சிறுகதை (மீள் பதிவு )
"அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)

Monday, November 21, 2016








"பாப்" டிலனுக்கு 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ...!!!







இலக்கியத்திற்கான நோபல்பரிசு"பாப டிலன் "அவர்களுக்கு அளித்தது பற்றி  சர்சசை எழு ந்த்துள்ளது.

இதே மாதிரி சர்சசை வின்சன்ட் சர் சில் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதும் இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் பொது சர் சிலின் பங்கு மகத்தானது.நொறுங்கி விழு ந்து  விட்டது என்று கருதிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஹிட்லரின் பிடியிலிருந்து காப்பாற்றிய பெருமைஅவ்ருக்குஉண்டு. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும்நடந்த தேர்தலில் அதே சர்சில் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண்மை .

இரண்டாம் உலகப்போர் பற்றி அவர் ஒரு நூல் எழுதினார். . ஏழு வால்யூம் கொண்ட அந்த நூலில் பாசிசத்தின் தோற்றத்திலிருந்து அதன் முடிவு வரை சித்தரித்திருப்பார். எனக்கு அவற்றில் இரண்டே வால்யூம் தான் படிக்க கிடைத்தது.   

ஆங்கில எழு த்தாளர்களில் இரண்டு பேருடைய எழு த்து எனக்கு மிகவும்பிடிக்கும். ஒருவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். கடுமையான தத்துவ விஷயங்களையும் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நடை. அவருடையது.. அதே போல் சர்சில் அவர்களுடைய நடையும் சிறப்பாக இருக்கும்.

பாப் டிலனுக்கு விருது  கொடுத்தது விமரிசிக்கப்படுகிறது.

பாப் டிலன் ரஷ்யாவிலிருந்து வந்த யூத வம்சாவளியை   சேர்ந்தவர் . மேடையில் பாடிவந்த அவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை வரவேற்றார். முதலாளித்துவத்தை ஏற்காமல்.அதே சமயம் சோவியத் சோசலிச பாணியில்மாற்றங்களைக்கொண்டு வரும் fankfurt school என்ற குழுவை  ஆதரித்தார்.   மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நிற  வெறிக்கெதிரான   உரிமை , சூழலியம்  அமெரிக்காவின் வியட்நாம் போர்    எதிர்ப்பு  என்று செயல்பட்டார்.

நாட்டுப்புற   பாடல்களில் ,சோகம் விரக்தி,,வாழ்க்கை . இருக்கிறது என்று கூறியவர் டிலன் 

கறுப்பர்களின் பாடுகளை விவரிக்கும் அவ்ரத முதல்பாடல் "காற்றில்பதில்பட்டபத்துக் கொண்டிருக்கின்றன " இன்று கறுப்பர்களின் கொடி பாடலாக இசைக்கப்படுகிறது.

" அவன் எத்தனை சமுத்திரங்களை நீந்த வேண்டும் ?
  எத்தனை முறை குண்டுகள் பறக்க வேண்டும் ?
எவ்வளவு எவ்வளவு மரணங்கள் வேண்டும் ?
அவர்கள் அழுகையை கேட்க எத்தனை காதுகள் வேண்டும் ?
நன்பனே !  காற்றில்    பதில் காற்றில் படபட த்துக் கொண்டிருக்கிறது ....


  இந்தியாவில் தலித்துகளை பற்றி எழுதப்பட்டதோ  !

சாகித்யஅகாதமியும், ஞனபிட   விருது வழங்குபவர்களும்  மற்றவர்களும் எழுந்து நின்று விருது அளிக்கவேண்டிய வரிகளல்லவா !!

பாப் டிலனின் மற்றோரு பாடல் 

"காலம் மாறிக்கொண்டிருக்கிறது " 


இந்தப்படலை பிரதமர் மோடி  நேற்று ஒரு கூட்டத்தில் பயன் படுத்திவிட்டு இளைஞர்களை பார்த்து பேசி இருக்கிறார்.

பாப் டிலன் நமது சொந்தக்காரன்.!!

அவனை இந்த பாவிகளிடம் பலிகொடுத்துவிடாமல் இருப்பபோம்.!!! 



  , 




Wednesday, November 16, 2016



உணர்சிகளின் உண்மையும் ,

உண்மை  உணர்சிகளும் ....!!!






ஜப்பானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி பாவம். என்ன செய்தி கிடைத்ததோ ! என்னவோ ! கோவாவில் பேசும்போது அழுது.தும்மி,இருமி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகளும் ,"பேனா ஓட்டிகளும் "   ஆரம்பித்து  விட்டார்கள். உணர்சசி மிகுந்த மோடியின் வார்த்தைகள் இந்தியாவையே உலுக்கி விட்டது என்று தலையங்கங்கள் எழுது கிறார்கள்.

"True Emotion " ;":Emotional Truth;"   :என்று அவர்களின் ஆங்கில புலமையை காட்டி எழுது கிறார்கள்.அதே சமயம் அவர்கள் "நரேந்திர மோடி "என்று குறிப்பிடுகிறார்கள் தவிர பா.ஜ.க என்று மறந்தும் சொல்வதில்லை .

நடப்பது மோடியின் ஆடசி. என்பதை சகல வழியிலும் நிலை நிறுத்து கிறார்கள்.  மோடி என்ற தனி நபரை  மக்கள் வழிபடவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி   பின்னுக்கு தள்ளப்பட்டு" மோடி " என்ற பிமபம் கட்டமைக்கப்படுகிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி வேண்டும் .அவர் பா.ஜ க வில் இருப்பதால் பா.ஜ.கவும் வேண்டும். அதேசமயம்  பா.ஜ.க என்று சொன்னால் இந்திய மக்கள் முன்பு தோன்றும் பிமபம்பற்றி அவர்களுக்கு தெரிந்தே உள்ளது.

பாஜக என்றால்" இந்துத்வா ". பாஜக என்றால் "ஆர் எஸ்.எஸ்" பாஜக என்றால் "காந்தி அடிகளின் படுகொலை". பாஜக என்றால் இந்து மத சார்பு.-சிறுபான்மை இஸ்லாமிய,கிறிஸ்துவ எதிர்ப்பு . இந்திய மக்களின் பெரும்பானமையினார் இதனை ஏற்காத மரபினை கொண்டவர்கள்.

ஆகவே "மோடி " என்ற தனி நபரை தூக்கி வைக்க வேண்டும். அவரை முன் நிறுத்தி தேர்தலசந்திக்கவேண்டும் .

இந்த பஜனையை  துவங்கி விட்டது.

வட நாட்டு பத்திரிகைகளில் இதனை ஆரம்பித்து விட்டார்கள்.





Monday, November 14, 2016







"அதனை அவன் கண் விடல் "








அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தோலைக்காடசி பே ட்டியில் " 1000 ரூ 500 ரூ  பற்றி அமைச்சரவையில்  கூ றிவிட்டுதான்  பிரதமர் அறிவித்தார் " என்று கூறியதாக முகநூலில் தகவல்வந்துள்ளது.


இதனை படித்த எனக்கு அறுவது ஆண்டுகளுக்குமுன் உலகமே வியந்து போற்றிய இந்திய அரசின் அறிவிப்பு ஒன்று நினைவு தட்டியது.

இன்சூரன்ஸ் துறையில் 245 ஐந்து தனியார் கம்பெனிகள் அப்போது இருந்தன..இந்த பணத்தை முதலாளிகள் கபளீகரம் செய்து வந்தனர்.இதனை தடுக்க பெரோஸ் காந்தி அவர்கள்முழு முசசி ல் செயல்பட்டார்கள். ராமகிருஷ்ண டால்மியா கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.. 

அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் சி.டிதேஷ்முக் என்பவர்.இன்சூரன்ஸ் துறையை அரசுடமையாக்க முடிவு செய்தார்.வெளியில் தெரிந்தால் முதலாளிமார் உஷாராகி விடுவார்கள். கம்பெனி பணத்தை தங்கள்சொந்த வாங்கிக்கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்    அதனால் ரகசியமாக செயல்பட்டார். அமைசசரவையில் இதற்கான யோசனைகளை வைக்காமல் பிரதமர் நேருவிடம் மட்டும் தேதிகுறிப்பிடாமல் தகவல் கொடுத்தார் இது பற்றி வானொலியில் பேச நேரம் கேட்கும் பொது கூட என்ன அறிவிப்பு என்பதை சொல்லவில்லை. 

நாடு புராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களை கைப்பற்ற அதிகாரிகளை அனுப்பினார்> அவர்களுக்கு தான் எதற்காக செல்கிறோமென்பதைக்கூட சொல்லவில்லை.அவர்களிடம் சீல்வைக்கப்பட்ட  கடிதங்கள் கொடுக்கப்பட்டன.  கால 10 மணிக்கு அதனை பிரித்து பார்த்து அதில் சொல்லி இருக்கும் உத்திரவுகளை நிறை வேற்றவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளை விடப்பட்டிருந்தது   

1956ம் ஆண்டு ஜனவரி மாதம் 19மத்தேதி இரவு 8.30 மணிக்கு நிதி அமைசர் தேஷ்முக் வானொலியில் இன்சூரன்ஸ் அரசுடமை ஆக்கப்பட்டது என்று அறிவித்தார்.

முதலாளி மார்கள் தங்கள் கைத்தடிகள்மூலம் தகவல் வரும் என்று தொலைபேசிக்காக காத்திருந்தார்கள்.20ம் தேதி காலை அவர்கள் அலுவலகம் இந்தியா முழுவதும் திறக்கப்படும் பொது ஏற்கனவே அனுப்பப்பட்ட அதிகாரிகள் சில் வைத்த கவர்களோடு அலுவலக வாசலில் காத்திருந்தார்கள். அலுவலக கணக்குப்புத்தகத்தை வாங்கி அதில்குருக்கே கையெழுத்து  போட்டுவிட்டு சென்று விட்டார்கள். அன்றைய வர்த்தகம் கூட  தங்கு தடை இன்றி நடந்தது.

உலகம் பூறாவும் தேஷ்முக் அவர்களை பாராட்டியது.அவருடைய செய்நேர்த்திக்காக ! .

வள்ளுவன்" இதனை   இவன் கண் விடல்" என்றான். !!

 அர்த்தம் பொதிந்த வார்த்தை !!!

 

Friday, November 11, 2016







"மனம் ஒரு குரங்கு "






"மனம் ஒரு குரங்கு " என்று ஒரு நாடகம் நடந்தது. "சோ " ராமசாமி அவர்கள் எழுதியது . பின்னர் அது திரைப்படமாகவும்வந்த நினைவு.

சமீபத்தில் தொலைக்காட்ச்சியில் ஒருவயதான அம்மையார் கண்ணீரோடு நின்றார். கையில் 500/- ரூ நாட்டுகளோடு ."எனக்கு மட்டும் முடியுமானால் அந்த தொலைக்காட்ச்சி பெட்டிக்குள் புகுந்து அந்த அம்மை யாருக்கு உதவிஇருப்பேன்.மனம் அவ்வளவு சங்கடப்பட்டது ". என்று ஒரு பதிவர் நிலைத்தகவல் எழுதி இருந்தார்.

பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை படிக்கும் பொது மனம் பதறத்தான் செய்கிறது .எல்லோருக்குமே இப்படித்தான் இருக்குமா? இந்த கேள்விக்கு  பதில் கிடைக்காது. 

நமது படிப்பு,பட்டறிவு,பண்பாடு, வளர்ந்த விதம் ,சூழல் , என்று பல விஷயங்களை பொறுத்து நம் மனம் செயல்படுகிறது.

நம்முடைய இரக்க உணர்சசி, அன்பு ,பாசம் , கோபம் , எல்லாமாக சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் நிலை அது. 

அப்படியானால்மனம் என்பது நம் உணர்வா ? நம் அறிவா ? நம் அனுபவமா ?   நம் மூளையா ?  அது நம்முள் இருக்கும் ஓரு அங்கமா? 

இந்த கேள்விகளுக்கு பௌராணிகர்கள் சொல்லும் பதில் ஒருபக்கம் . அந்த "தலைப்பா " கட்டு சாமியார் சத்குரு விளக்கமளிப்பது ஒருபுறம்.

அறிவியல் ரீதியாக இதனை அணுகுவது ஒரு வகை.

" மனம் " பற்றி மனநல மருத்துவர் ஒருவர் சொன்னது சரியாகவே இருக்கும்.

"Mind is nothing but some chemical reaction in the brain " 

என்கிறார் டாக்டர் .

சரி தானே   !!!

Thursday, November 10, 2016









"ஜார் "  மன்னனின் 

அரண்மனை வாசலில் ....!!!




அந்த பிரும்மாண்டமான அரண்மனையில் தான் "ஜார் " மன்னன் வசித்தான்.அரண்மனையை சுற்றியுள்ள சாலைகளிலும்  சந்து பொந்துகளிலும்  மக்கள் வசித்தனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. வேலை இல்லை. குழந்தைகள் பெண்கள் பட்டினி . மன்னனோ அரண்மனைக்குள் உல் லாச வா ழ்க்கை    வாழ்ந்தான் .

இதனை அந்த பாதிரியாரால் கண்டு கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை . அந்தமக்களிடையே சென்று அவர்களை ஒன்று திரட்டினார்.அரண்மனை வாசலில் "எங்களுக்கு சோறு போடு " என்று கோஷம் எழுப்பினார் .

"ஜார் " மந்திரியிடம் என்ன "சத்தம்" என்று கேட்டான். மந்திரி விளக்கியதும், அந்த மக்களுக்கு தினம் கோதுமை மாவை கொடுக்கவும் உத்திரவு போட்டான்.

சிலமாதங்கள் சென்றன .     பாதிரியார் தலைமையில் ஆர்ப்ப்பாட்டம் நடந்தது."ஜார்" மந்திரியை அனுப்பினான்."மழை காலம் வருகிறது. எங்களுக்கு வசிக்க கூ றையுடன் கூடிய இருப்பிடம் வேண்டும் "என்று கேட்பதாக  .அமைச்சர் சொன்னார் .

" நம்மிடம் அவர்களுக்கு உதவ தளவாடங்கள் இருக்கிறதா  ?"

"இருக்கிறது அரசே "

"அப்படியானால்  அதனை செய்துகொடுங்கள் "ஜார் மன்னன் உத்திராவிட்டான்.

சில மாதங்கள் சென்றன . மீண்டும் ஆர்ப்பாட்டம் . "மன்னா !  குளிர் வருகிறதுகிழிந்த துணிகளூடன் இருக்கிறோம். எங்களுக்கு கம்பளி ஆடை வேண்டும் "என்று கேட்கிறார்கள் என்கிறார் அமைசர். ஆடைகளை  கொடுக்க மன்னன் உத்திரவிட்டான்.

சில மாதங்கள் சென்றன .மீண்டும் ஆர்ப்பாட்டம் . அமைசசரை அழைத்த "ஜாரி"டம் "மன்னா !'  அந்த மக்கள் தங்கள் குழைந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள்  வேண்டு மென்கிறார்கள். உண்ண உணவு,இருக்க இருப்பிடம்,உடுக்க  உடை என்று ஆண்டுமுழு வதும் கொடுக்கும் கொடைவள்ளல் நீங்கள். பள்ளிக்கட்டிடம் ஒருமுறை கட்டினால்போதும் அதனால் பள்ளிக்கட்ட உத்தரவிட்டு விட்டேன் " என்று விளக்கினார் . 

 கோபம் கொண்ட ஜார் மன்னன் " தளபதியை அழைத்து அமைசரின் தலையை வெட்டுமாறு உத்தரவிட்டான். அந்த   பாதிரியாரை பாதாள சிறையில் அடையுங்கள் . ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களை  சுட்டு தள்ளுங்கள் "என்று உத்திராவிட்டான்,

"முட்டாளே ! உணவு கொடுத்தால் என்னை வாழ்த்துவார்கள் . இருக்க இடம்கொடுத்தால் அவர்கள் சந்ததிகள்முதற்கொண்டு என்னை விசுவாசிப்பார்கள். உடுக்க உடை கொடுத்தால்தலைமுறைக்கும் நன்றியோடு இருப்பார்கள்."

"கல்வி கொடுத்தால் ?"அமைசார் குறுக்கிட்டார் .


."அறிவு வளரும்.அறிவு வளர்ந்தால் சிந்திப்பார்கள். நான் ரோட்டிலும் ஜார் மன்னன் அரண்மனையிலும் ஏன்  இருக்கிறான் என்று சிந்திப்பார்கள். அதன் பிறகு பிரளயம்தான் ! எதை வேண்டுமானாலும் கோடு ஆனால்மக்களுக்கு கல்வியை மட்டும்    கொடுக்காதே " என்றான் "ஜார்" மன்னன் .


(மதுரை கோட்ட இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கல்வியாளர்களிடையே பேசும் பொது குறிப்பிட்டது.)



Saturday, November 05, 2016







எட்டு பேர் ,

சுட்டு கொலை .....!!!



"போபால் நகரத்தின் அருகில் தீவிரவாதிகள் எட்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர் . இது ம.பிபோலிஸார் தெரிவித்தது. இவர்கள் சிறையிலிருந்து தப்பி உள்ளனர் .அவர்களை தடுத்த சிறை காவலரை குரல்வளையை அறுத்து கொன்றுள்ளனர். பொலிஸாரின் துரித நடவடிக்கை காரணமாக இவர்கள் தப்ப முடியாமல் போய்விட்டது. காவல் துறைக்கு நம் பாராட்டுக்கள் ."  என்று பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகள் எழு து கின்றன. 

இந்த தீவிர  வாதிகளுக்கு ஆதரவாகஎதிர்க்கட்ச்சிகள்,குறைசொல்வது தவறு என்றும் அவை சொல்கின்றன.

இந்த எட்டு பெரும் கொலை கொள்ளைகுண்டுவைப்பு  என்று பல்வேறு சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டு விசாராணைக்கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.வழக்கு விசாரிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வரவிருப்பதாக செய்திகள் கூ றுகின்றன.இவர்களானேகமாகவிடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் சிறையிலிருந்து தப்பியது  ஒரு திரைப்படம் போல் இருக்கிறது.பலதேய்க்கும் பிரஷ் ,மற்றும் பலகை களைக்கொண்டு மாற்று சாவி தயாரித்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் அறைகளை திறந்திருக்கிறார்கள் . இந்த தீவிர வாதிகள் எட்டு பெரும் தனித்தனி அறைகளில் இருந்தால் எட்டு சாவி போட்டு எட்டு பூட்டை திறந்து .... 

கிட்டத்தட்ட 30 அடி உயரம் உள்ள மதில் சுவரை ஏறி தாண்டி இருக்கிறார்கள். தங்களுக்கு கொடுத்த போர்வை ஜமுக்காளம் ஆகியவற்றை கிழித்து ஏணியாகி தப்பித்து  இ ருக்கிறார்கள். சுவரில் ஆதாரமாக தொங்கவிட ? ஒருவேளை மதிலுக்கு வெளியே யாரவது நூலேணியை பிடித்து ....? யார் அவர்...?

இப்படி தப்பிக்கும் பொது தடுக்க முயன்ற சிறைக்காவலர் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.எந்த ஆயுதத்தால் அறுத்தார்கள்...?ஏது ஆயுதம்...?

இந்தியாவின் மிகவும்பாதுகாப்பன் சிறைகளில் ஒன்று போபால் சிசிறை சாலை. சுற்றிலும் காமிராக்கள் உண்டு. அருகில் உள்ள புதர்களிலும் காமிராக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதிசயமாக இரவு 2மணியிலிருந்து சம்பவ தினத்தில் காமிரா வேலை செய்ய வில்லை.

சிறைச்சாலையை சுற்றிலும் விளக்குகள்மிகவும்பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் .சம்பவத்தன்று அவை எரியவில்லை.

ம.பி அரசு அதிகாரி தீவிர வாதிகளிடம் ஆயுதங்கள் இல்லை என்று அறிவித்திருக்கிறார் . நிராயுத பாணியிலான இவர்களால் என்ன ஆபத்து வரும் என்று போலீசார் கருத்தினார்களோ தெரியவில்லை .சுட்டு கொன்று விட்டார்கள். 

ஆனாலும் தீவிர வாதி களை நாம் ஆதரிக்கக் கூடாது தான் . 

பின் ஏன் எதிர்க்கட்கசி ளும், மனித உரிமைக்காரர்களும் அரசை நமப மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை . 

புரிந்தவர்கள் விளக்குங்களேன் !!!

  

 

Thursday, November 03, 2016





கலப்படத்தை அனுமதிக்கும் ,

"கலப்பட தடை சட்டம் ".....!!!



விருதுநகர் பக்கம் இருக்கும் கிராமம் ஒன்றுக்கு போயிருந்தேன்.நண்பர் வீட்டில் உதவியாக ஒரு அம்மையார் வேலை செய்து வந்தாங்க.அவருடைய 8 வயது  மகள் புத்தக பை  யோடகூட  வந்தது.திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தது.பின்னர் தன பையிலிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்தது.அதிலஈர     களிமண் இருந்தது. சுற்று முற்றும் பார்த்து விட்டு பாவாடையை வில க்கி தன் துடையில் அந்த களிமண்ணை நூலாக உருட்ட ஆரம்பித்தது .நூலாகவும் இல்லாமல், க யிராகவும் இல்லாமல் ,கழு த்தில் போடும் தாலிக்கயிறு தண்டிக்கு உருட்ட ஆரம்பித்தது.ஒரு முழம் ஆனதும் அதை எடுத்து நிழலில் உணர்த்தியது.

ஆசச ரியத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் விசாரித்ததில் இப்படிப்பட்ட களிமண் உருண்டைகள் கிட்டங்கிகளில் ஐந்துபைசா பத்து பைசா என்று வாங்கப்படும் என்று அறிந்தேன். உளுந்து,அரிசி முட்டைகளில் இவை கலக்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.

மிளகோடு அந்தி மந்தாரை விதைகளும், டீ  துளோடு மஞ்சனாத்தி இலையும் கலக்கப்படுகின்றன.

இதனை தடுக்க கலப்பட தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. வட நாட்டில் இருக்கும் நான் நல்ல "நல்லண்ணை " தான் பயன் படுத்துவேன். குறிப்பாக அந்த பிராண்டு நல்லெண்ணெய்தான் என்வீட்டில் பழக்கம் . அதுதான் நான் செய்த "Himalayan blunder ". 

பத்திரிகையில் விலாவரியாக வந்திருந்தது.

எள்ளு கிலோ 110 ரூபாயாம் .நான்கு கிலோ ஆட்டினால் ஒருகிலோ எண் ணை கிடைக்குமாம். அதாவது 440 ரூ அடக்கவில்லை.அப்படியானால் அந்த பிராண்டு எப்படி 400 ரூ கிலோ என்று கொடுக்கமுடியும்.?

இங்குதான் கலப்பட தடை சட்டம் இந்தவியாபாரிகளுக்கு உதவுகிறது. உண்ணும் பொருள்களில் 20சதம் க்ல ப்படம் செய்யலாம்.ஒரே நிபந்தனை கலக்கப்படும் பொருளும் உண்ணும்பொருளாக இருக்க வேண்டும். இதுதான் சட்டம்.

பருத்தி விதை யை ஆட்டி எண்ணை எடுக்கிறார்கள் . இந்த எண்ணையை நல்லெண்ணெயோடு கலக்கிறார்கள் இது சட்டப்படி குற்றமில்லை.

இங்குதான் சர்வதேச வியாபாரி வருகிறான். இந்தியாவில் g m பருத்தி விதை அனுமதித்து விட்டார்கள். பருத்தி துணிகளுக்கானது> அது உண்ணும்பொருள் அல்ல .அதனால் g m விதைகளை அனுமதிக்க வேண்டும் என்று பன்னாட்டு கம்பெனிகள் கேட்க "ந ம்ம " அரசு அனுமதித்து விட்டது. இந்த புதிய பருத்தி விதை முளைக்காது. அதனை மலடாக்கி விட்டார்கள். அவர்களுக்கு அப்போது தானே விதை  விற்பனை நடக்கும். இந்த மலடாக்கப்பட்ட விதையை தான் இப்போது ஆட்டி நல்லெண்ணெயோடு கலந்து விற்கிறார்கள்.

இது மனித உணவல்ல.!!

 ஆனால் சட்டம் அனுமதித்த உணவு !!!