"பாப்" டிலனுக்கு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு ...!!!
இலக்கியத்திற்கான நோபல்பரிசு"பாப டிலன் "அவர்களுக்கு அளித்தது பற்றி சர்சசை எழு ந்த்துள்ளது.
இதே மாதிரி சர்சசை வின்சன்ட் சர் சில் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதும் இருந்தது.
இரண்டாம் உலகப்போரின் பொது சர் சிலின் பங்கு மகத்தானது.நொறுங்கி விழு ந்து விட்டது என்று கருதிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஹிட்லரின் பிடியிலிருந்து காப்பாற்றிய பெருமைஅவ்ருக்குஉண்டு. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும்நடந்த தேர்தலில் அதே சர்சில் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண்மை .
இரண்டாம் உலகப்போர் பற்றி அவர் ஒரு நூல் எழுதினார். . ஏழு வால்யூம் கொண்ட அந்த நூலில் பாசிசத்தின் தோற்றத்திலிருந்து அதன் முடிவு வரை சித்தரித்திருப்பார். எனக்கு அவற்றில் இரண்டே வால்யூம் தான் படிக்க கிடைத்தது.
ஆங்கில எழு த்தாளர்களில் இரண்டு பேருடைய எழு த்து எனக்கு மிகவும்பிடிக்கும். ஒருவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். கடுமையான தத்துவ விஷயங்களையும் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நடை. அவருடையது.. அதே போல் சர்சில் அவர்களுடைய நடையும் சிறப்பாக இருக்கும்.
பாப் டிலனுக்கு விருது கொடுத்தது விமரிசிக்கப்படுகிறது.
பாப் டிலன் ரஷ்யாவிலிருந்து வந்த யூத வம்சாவளியை சேர்ந்தவர் . மேடையில் பாடிவந்த அவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை வரவேற்றார். முதலாளித்துவத்தை ஏற்காமல்.அதே சமயம் சோவியத் சோசலிச பாணியில்மாற்றங்களைக்கொண்டு வரும் fankfurt school என்ற குழுவை ஆதரித்தார். மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நிற வெறிக்கெதிரான உரிமை , சூழலியம் அமெரிக்காவின் வியட்நாம் போர் எதிர்ப்பு என்று செயல்பட்டார்.
நாட்டுப்புற பாடல்களில் ,சோகம் விரக்தி,,வாழ்க்கை . இருக்கிறது என்று கூறியவர் டிலன்
கறுப்பர்களின் பாடுகளை விவரிக்கும் அவ்ரத முதல்பாடல் "காற்றில்பதில்பட்டபத்துக் கொண்டிருக்கின்றன " இன்று கறுப்பர்களின் கொடி பாடலாக இசைக்கப்படுகிறது.
" அவன் எத்தனை சமுத்திரங்களை நீந்த வேண்டும் ?
எத்தனை முறை குண்டுகள் பறக்க வேண்டும் ?
எவ்வளவு எவ்வளவு மரணங்கள் வேண்டும் ?
அவர்கள் அழுகையை கேட்க எத்தனை காதுகள் வேண்டும் ?
நன்பனே ! காற்றில் பதில் காற்றில் படபட த்துக் கொண்டிருக்கிறது ....
இந்தியாவில் தலித்துகளை பற்றி எழுதப்பட்டதோ !
சாகித்யஅகாதமியும், ஞனபிட விருது வழங்குபவர்களும் மற்றவர்களும் எழுந்து நின்று விருது அளிக்கவேண்டிய வரிகளல்லவா !!
பாப் டிலனின் மற்றோரு பாடல்
"காலம் மாறிக்கொண்டிருக்கிறது "
இந்தப்படலை பிரதமர் மோடி நேற்று ஒரு கூட்டத்தில் பயன் படுத்திவிட்டு இளைஞர்களை பார்த்து பேசி இருக்கிறார்.
பாப் டிலன் நமது சொந்தக்காரன்.!!
அவனை இந்த பாவிகளிடம் பலிகொடுத்துவிடாமல் இருப்பபோம்.!!!
,
0 comments:
Post a Comment