skip to main |
skip to sidebar
கலப்படத்தை அனுமதிக்கும் ,
"கலப்பட தடை சட்டம் ".....!!!
விருதுநகர் பக்கம் இருக்கும் கிராமம் ஒன்றுக்கு போயிருந்தேன்.நண்பர் வீட்டில் உதவியாக ஒரு அம்மையார் வேலை செய்து வந்தாங்க.அவருடைய 8 வயது மகள் புத்தக பை யோடகூட வந்தது.திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தது.பின்னர் தன பையிலிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்தது.அதிலஈர களிமண் இருந்தது. சுற்று முற்றும் பார்த்து விட்டு பாவாடையை வில க்கி தன் துடையில் அந்த களிமண்ணை நூலாக உருட்ட ஆரம்பித்தது .நூலாகவும் இல்லாமல், க யிராகவும் இல்லாமல் ,கழு த்தில் போடும் தாலிக்கயிறு தண்டிக்கு உருட்ட ஆரம்பித்தது.ஒரு முழம் ஆனதும் அதை எடுத்து நிழலில் உணர்த்தியது.
ஆசச ரியத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் விசாரித்ததில் இப்படிப்பட்ட களிமண் உருண்டைகள் கிட்டங்கிகளில் ஐந்துபைசா பத்து பைசா என்று வாங்கப்படும் என்று அறிந்தேன். உளுந்து,அரிசி முட்டைகளில் இவை கலக்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.
மிளகோடு அந்தி மந்தாரை விதைகளும், டீ துளோடு மஞ்சனாத்தி இலையும் கலக்கப்படுகின்றன.
இதனை தடுக்க கலப்பட தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. வட நாட்டில் இருக்கும் நான் நல்ல "நல்லண்ணை " தான் பயன் படுத்துவேன். குறிப்பாக அந்த பிராண்டு நல்லெண்ணெய்தான் என்வீட்டில் பழக்கம் . அதுதான் நான் செய்த "Himalayan blunder ".
பத்திரிகையில் விலாவரியாக வந்திருந்தது.
எள்ளு கிலோ 110 ரூபாயாம் .நான்கு கிலோ ஆட்டினால் ஒருகிலோ எண் ணை கிடைக்குமாம். அதாவது 440 ரூ அடக்கவில்லை.அப்படியானால் அந்த பிராண்டு எப்படி 400 ரூ கிலோ என்று கொடுக்கமுடியும்.?
இங்குதான் கலப்பட தடை சட்டம் இந்தவியாபாரிகளுக்கு உதவுகிறது. உண்ணும் பொருள்களில் 20சதம் க்ல ப்படம் செய்யலாம்.ஒரே நிபந்தனை கலக்கப்படும் பொருளும் உண்ணும்பொருளாக இருக்க வேண்டும். இதுதான் சட்டம்.
பருத்தி விதை யை ஆட்டி எண்ணை எடுக்கிறார்கள் . இந்த எண்ணையை நல்லெண்ணெயோடு கலக்கிறார்கள் இது சட்டப்படி குற்றமில்லை.
இங்குதான் சர்வதேச வியாபாரி வருகிறான். இந்தியாவில் g m பருத்தி விதை அனுமதித்து விட்டார்கள். பருத்தி துணிகளுக்கானது> அது உண்ணும்பொருள் அல்ல .அதனால் g m விதைகளை அனுமதிக்க வேண்டும் என்று பன்னாட்டு கம்பெனிகள் கேட்க "ந ம்ம " அரசு அனுமதித்து விட்டது. இந்த புதிய பருத்தி விதை முளைக்காது. அதனை மலடாக்கி விட்டார்கள். அவர்களுக்கு அப்போது தானே விதை விற்பனை நடக்கும். இந்த மலடாக்கப்பட்ட விதையை தான் இப்போது ஆட்டி நல்லெண்ணெயோடு கலந்து விற்கிறார்கள்.
இது மனித உணவல்ல.!!
ஆனால் சட்டம் அனுமதித்த உணவு !!!
0 comments:
Post a Comment