skip to main |
skip to sidebar
உணர்சிகளின் உண்மையும் ,
உண்மை உணர்சிகளும் ....!!!
ஜப்பானிலிருந்து திரும்பிய பிரதமர் மோடி பாவம். என்ன செய்தி கிடைத்ததோ ! என்னவோ ! கோவாவில் பேசும்போது அழுது.தும்மி,இருமி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
பா.ஜ.க ஆதரவு பத்திரிகைகளும் ,"பேனா ஓட்டிகளும் " ஆரம்பித்து விட்டார்கள். உணர்சசி மிகுந்த மோடியின் வார்த்தைகள் இந்தியாவையே உலுக்கி விட்டது என்று தலையங்கங்கள் எழுது கிறார்கள்.
"True Emotion " ;":Emotional Truth;" :என்று அவர்களின் ஆங்கில புலமையை காட்டி எழுது கிறார்கள்.அதே சமயம் அவர்கள் "நரேந்திர மோடி "என்று குறிப்பிடுகிறார்கள் தவிர பா.ஜ.க என்று மறந்தும் சொல்வதில்லை .
நடப்பது மோடியின் ஆடசி. என்பதை சகல வழியிலும் நிலை நிறுத்து கிறார்கள். மோடி என்ற தனி நபரை மக்கள் வழிபடவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டு" மோடி " என்ற பிமபம் கட்டமைக்கப்படுகிறது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி வேண்டும் .அவர் பா.ஜ க வில் இருப்பதால் பா.ஜ.கவும் வேண்டும். அதேசமயம் பா.ஜ.க என்று சொன்னால் இந்திய மக்கள் முன்பு தோன்றும் பிமபம்பற்றி அவர்களுக்கு தெரிந்தே உள்ளது.
பாஜக என்றால்" இந்துத்வா ". பாஜக என்றால் "ஆர் எஸ்.எஸ்" பாஜக என்றால் "காந்தி அடிகளின் படுகொலை". பாஜக என்றால் இந்து மத சார்பு.-சிறுபான்மை இஸ்லாமிய,கிறிஸ்துவ எதிர்ப்பு . இந்திய மக்களின் பெரும்பானமையினார் இதனை ஏற்காத மரபினை கொண்டவர்கள்.
ஆகவே "மோடி " என்ற தனி நபரை தூக்கி வைக்க வேண்டும். அவரை முன் நிறுத்தி தேர்தலசந்திக்கவேண்டும் .
இந்த பஜனையை துவங்கி விட்டது.
வட நாட்டு பத்திரிகைகளில் இதனை ஆரம்பித்து விட்டார்கள்.
0 comments:
Post a Comment