skip to main |
skip to sidebar
"விமரிசனம் அல்ல "
"கண்டதை
சொல்லுகிறேன"
படத்தை முன் நிறுத்தி
2014ம் ஆண்டு டிசம்பர்மாதம் தணிக்கை ஆகி திரையிட தயாராக இருந்த படம் "கண்டதை சொல்லுகிறேன் " என்பதாகும் .இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த கருணா, ராமு ஆகியோர் நடித்துள்ளனர் .
"இந்த படத்திற்குதுவக்கத்தில் "பறை " என்றுதான் பெயர் வைத்திருந்தோம். அதனை "கண்டதை சொல்கிறேன் " என்று மாற்றினோம் .பறை என்பது சுத்தமான தமிழ் வார்த்தை. இந்த வார்த்தையை மலையாள த்தில் பயன் படுத்துகிறார்கள் ."எந்தா பறைஞ்சு சேட்டன் ?"என்பார்கள்." என்கிறார் இந்தக படத்தின் இயக்குனர் லெனின் .
"பறை " பாரம்பரியமான இசைக்கருவி. அதனை துக்க காரமான சாவுக்கு பயன்படுத்துகிறார்கள். பறை கலைஞன் ஒருவன் மனம் வெதும்பி குடிக்க ஆரம்பிக்கிறான்.அவனுக்கு அடுத்த தலைமுறை வருகிறார்கள். இது தான் கதை. இந்த கலைஞ்ர்களை சித்தரிக்க விரும்பினோம்.ஏழு லட்சம் ரூ யில் ஆரம்பித்தோம்.பணம் தீர்ந்துவிட்டது. பிராஜெக்டை கைவிடும் நிலை.பஸ் ஏறி வந்து விட்டேன் விஷயம் தெரிந்த தமிழ் ஸ்டுடியோக்காரர் சன்ஜசயனை பார்த்திருக்கிறார். அவரும் பற்றோரு நண்பரும் பைனான்ஸ் செய்ய படம் முடித்து. விட்டோம்."
"ஏழு நாள் ஓடினால் போதும் .நிசசயம் இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் . கல்லூரி வாசல்களில் நின்று கொண்டு நானே டிக்கட் விற்க தயாராகி வருகிறேன். இது த.மு.எ .க.சங்கத்தினர் இந்த படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். " என்று முடித்தார் லெனின்.
படம் வந்ததை பற்றியோ, வெளியானதை பற்றியோ செய்தி இல்லை .
ஆனாலும் த மு எ .க சங்கம் பின் வாங்காது !!!
1 comments:
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Post a Comment