"இந்தியாவில் சாதிகள்."
சமீபத்தில் அம்பெத்காரின் " இந்தியாவில் சாதிகள் "என்ற நூல் பற்றி திருப்பாராம் குன்றத்தில் கருத்தரங்கம் நடந்தது.
அதில் த . மு.ஏ. க.சங்கத்தின் பொது செயலாளர் க.வேலாயுதம் அவர் கள் பேசும் பொது 'சங் பரிவாரங்கள் இஸ்லாமியர்களின் வருகைக்கு பின் தான் இந்தியாவில் சாதிகள் தோன்றின ' என்று ஜோஷி என்பவன் ஒரு முன்னுரையில்அபத்தமாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினார் .
1945ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டை அமேரிக்கா வீசியது என்று கூட இஸ்லாமியதீவிர வாதத்தை முடக்கத்தான் என்று இந்த பாவிகள் சொல்வார்கள்.
எதுவானாலும் பழியை இஸ்லாமியர்களின் மீது போடுவது அவர்களின் வழக்கம் .
உண்மையில் இறுக்கமான சாதிய கட்டுமானம் ஆதிசங்கரர் காலத்தில் தான் தோற்று வைக்கப்பட்டது.
இது பற்றி சங்கரர் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நிகழசசியாய் குறிப்பிடுவார்கள் புலை யன் ஒருவன் . எதிரில் வருகிறான் . சங்கரர் நீராடிவிட்டு வருகிறார்.தீட்டு படாமலிருக்க அவனை தள்ளி நிற்க சொல்கிறார். "யாரை யாரை சொல்கிறாய் சங்கரா?" என்கிறான் புலையன் .
"நானும் நீயும் ஒன்று என்றால் யாரால் யாருக்கு திட்டு ? உன்னால் எனக்கா அல்லது என்னால் உனக்கா ? என்கிறான்.
சங்கரர் "அத்வைதி".
உண்மையில் சாதீய கட்டுமானம் பிராம்மண மதம் ஸ்தாபனப்படுத்தப்பட்ட பிறகே இறுக்கமானது.
அதனைசெய்தவர் சங்கரர் கி.பி எட்டாம்நூற்றாண்டு என்று வரலா ற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்றிற்கும் புராணத்திற்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் "சங்கிகள் ".
இஸ்லாமிய காற்று மிகவும்மெலிதாக இந்தியாவிற்குள் வீச ஆரம்பித்த்து கி.பி 1000 ஆண்டு வாக்கில் தான் என்கிறார் நோபல்பரிசு பெற்ற பொருளா தார நிபுணர் டாகடர் அமர்த்திய சென்.அவர் வரலாற்றாளரும் கூட .
0 comments:
Post a Comment