skip to main |
skip to sidebar
பாண்டே -தீபா பேட்டி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்முக பேட்டி ஒளிபரப்பாகியது. ஆம் ! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா அவர்களின் ஒளிபரப்பு அது.சுமார் ஒருமணிநேரத்திற்கு சில மணித்துளிகள் கூடுதலாக இருந்திருக்கலாம். மிகவும் அமைதியாகவும் ,மிகவும் நிதானமாகவும் நடந்தது .
பாண்டே நிலையை விட்டுகொடுக்காமல் கேள்விகளை கேட்டார். ஆத்திரப்படாமல்,பாரபரப்படையாமல்அமைதியாகவும் ,நிதானமாகவும் தீபா பதில் சொன்னார்.
இரண்டு கைதேர்ந்த வக்கீல்கள் வாதம்போலிருந்து. உறுதியாக இருவரும் தங்கள் நிலையை பற்றி நின்றனர்.
மறை ந்த முதலமைசர் படித்தவர். ஒரு intelectual . தனியாகமுடிவுகளைஎடுக்கக் கூடியவர் . >யாருக்காகவும்தனமுடிவுகளைமாற்றிக்கொள்ளாத இயல்புகொண்டவர் . தன உறவினர்களை பார்க்கக்கூடாது என்று அவரிடம் எவரும் சொல்லமுடியாது.என்று பாண்டே பட்டியலிட்டார்.
நான் பத்து வயது வரை அவருடன் தான் வாழந்தேன் . வேதா நிலையத்தில் தான் பிறந்தேன். எனக்கு தீபா என்று பெயர்வைத் ததும் அத்தை தான்.
கார்ட்டனிலிருந்து வெளியே போனபிறகும் எங்களோடு தொடர்பில் தான் இருந்தார். என் பாட்டிக்கு பிறகு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொ ண்டார். நான்தான் மூத்தவள். நான் சொன்னபடிதான் கேட்கவேண்டும் என்கிறார்> நாங்களும் அப்படியே இருந்தோம். எந்தந்தை இறந்தபிறகும் அவர்தான் கவனித்தார்.என் திருமணம் எப்படி எங்கே நடக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்தார் ." என்கிறார் தீபா
"அவரை சுற்றி இருந்தவர்கள் பிரித்து விட்டனர். "
"உங்கள்தம்பிய அனுமதித்தவர்கள் என் உங்களை அனுமதிக்க வில்லை.?"
"நான் கேள்விகள் கேட்பேன்."
"சுற்றி இருந்தவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருந்ததா?"
"அத்தை இறந்தபிறகு முடிவுகளை யார் எடுத்தார்கள். அது செல்வாக்கில்லையா ?நான் இருக்கக்கூடாது என்று யார் சொன்னார்கள். ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இருக்கும் பொதுநானொருத்தி என்ன செய்துவிடமுடியும். செக்கியூரிஈட்டிகளை வைத்து என்னை அனுப்பியது யார். ?"
"அரசியலு க்கு வருவீர்களா ?" என்று கேட்ட பொது மழுப்பிவிட்டார்.
தீபா என்ற இந்த பெண் அவர் அத்தை மாதிரியே புத்திக்கூர்மையும்,தைரியமுமுள்ள பெண் என்றுதான் பேட்டியின் மூலம் உணர்த்தினார்.!
0 comments:
Post a Comment