"தனக்கு என்று கேட்க தெரியாதவர் "
தி.வரதராஜன் ....!!!
1969 ம் ஆண்டு. மதுரை மேற்கு வெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியும்,மூத்த எழுத்தாளர் ப.ரத்தினமும் என்னை பார்க்க வந்தார்கள்.
"கடசி இலக்கிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்திருகிறது. "செம்மலர் " என்ற அந்த பத்திரிகைக்கு என்னை ஆசிரியராக நியமித்துள்ளது..எனக்கு உதவியாக ஐயா தா.ச.ராசாமணி, ப.ரத்தினம் .காஸ்யபன் ஆகிய மூவரையும்போட்டுள்ளது .இன்று மாலை ஆசிரியர்கள்கூட்டம்தீக்கதிர்அலுவலகத்தில்.கண்டிப்பாக வரவேண்டும்.."என்று கு.சி.ப. அவர்கள் கூறினார்கள்.
மாலை கே.முத்தையா அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது . கூடுதலாக திவரதராஜன் என்ற ஓவியரும் கலந்து கொண்டார்.
அல்லி நகரத்தை சேர்ந்தவர் வரதராஜன்.விவசாய குடும்பம். கட்ச்சியோடு தொடர்பு உண்டு.காட்ச்சிக்கான சுவர் விளம்பரங்கள், தட்டிகள் ஆகியவற்றை அவரும் மற்றோரு தோழரான "சின்னையா" வும் எழுதுவர்கள். புகழ் பெற்ற இயக்குனரான "பாரதி ராஜா " அவர்களின் பூர்வாசிரமபெயர்தான் "சின்னையா " என்பதாகும்.
கு.சி.பா சேலம் மாவட்டத்தில் கடசியில் .கொல்லிமலை வன குடி மக்களை ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தியவர்> கரும்பு விவசாயிகள் சங்கம், ஆலைகளுக்குக்கரும்பின ஏற்றிச்செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் என்று பணி செய்து வந்தார்அதனால் மாதம் பதினைந்து நாள் மதுரையிலும் மீதிநாட்களநாமக்கல்லிலும் இருப்பார்>
தீக்கதிர் அலுவலகத்திலொரு ஜாதிக்காய் பெட்டி கொடுத்தார்கள்.அது தான் செம்மலர் அலுவலகம்> கடிதங்கள்,கதை,கவிதை,கட்டுரை எல்லாம் அதில்தான் போடுவார்கள். நாங்கள் அவற்றை படித்து தேர்வு செய்வோம்.
மாதம் ஒருமுறை வரும்குசிபா அதனை பார்த்து பிரசுரிக்க தி.வரதராஜனிடம் கொடுப்பர்.தேவையான படங்கள்வரைவது, திருத்துவது<பக்கமாக்குவது ஆகியவற்றை தி,வ கவனிப்பார்
அதற்காக அவருக்கு மாதம் அலவன்ஸ் 30 ரூ கொடுப்பார்கள். இதுதவிர தினம் படிக்காசு என்று நான்கு அணா கொடுப்பார்கள் .
தி.வ .வின் குடும்பம் அவருடைய மூன்று மகன்கள்,மனைவி அல்லிநகரத்தில்வசித்தார்கள்.
ஒரு புரட்ச்சிகர இயக்கத்தின் புட்டசிக்கற ஏட்டில்பணி செய்கிறோம் என்ற திருப்தி உண்டு.
எதையுமே ஆசிரியரிடம்கேட்டு சொல்கிறேன் என்பதை தவிர தி>வ விடமிருந்து வேறு பதில் வராது> அவரை பொறுத்தவரை கு.சி.ப தான் கடசியின் மத்தியகுழு . கே.எம். பொலிட் பீரோ. !
30 ரூபாய் அவர் எப்படி வாழ்க்கையை,குடும்பத்தை ஓட்டினார் என்பது அந்த மார்க்ஸ் மட்டுமே அறிவார். 1977 ம் ஆண்டு தீக்கதிர் பைபாஸ் சாலை வரும் வரை அவர் குடும்பம் அல்லி நகரத்தில் தான் இருந்தது.
"ஏங்க ! கடசி க்கு தெரியாத நம்மை பத்தி ! வச்சிக்கிட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க " என்று சொல்லி நம் வாய அடக்கி விடுவார்.
48 ஆண்டுகள் ! கிட்டத்தட்ட அரை நூற்ராண்டு.! "செம்மலரை " தன கண்ணின் மணி போல் காத்து வந்தவர் தி.வ.!
அவர் 31-12-17 ஒய்வு பெறுகிறார் !
Glory to you Comrade varatharaajan !!!
எல்லாப்புகழும் மார்க்சியத்திற்கே !!!