Sunday, December 17, 2017






"கீழ் வெண்மணி "

50 ஆண்டுகளுக்கு முன் ...!!!




" எங்க ஆண்டை நல்லவர் . தினம் அடிக்கமாட்டார் "

பண்ணையில்  வேலை செய்யும் ஒருவர் 60 து  70 ஆண்டுகளுக்கு முன் சொன்னது .

நித்தம் நித்தம் சவுக்கடியும் சாணிப்பாலும் குடித்த பண்ணையம் செய்ப்பவனுக்கு நிலைமை அப்படித்தானே புரியும். இந்தநிலைமையை மாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கி இருந்த அவனுக்கு செங்கொடியை ஏந்திக்கொண்டு கன்னடத்து பாப்பான்  பி.சீனிவாசராவ் என்ற உருவில் வந்து சேர்ந்தார்.

"உன்னை அடித்தால் திருப்பி அடி "

"வாடா என்றால் போடா என்று சொல் "

என்ற மந்திர வார்த்தையை அந்த அடிமைகளுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களிடையே மின்சாரத்தை பாய்ச்சினார். செங்கொடி சங்கத்தின் பால் அந்த ஏழை எளிய அப்பாவி தொழிலாளிகள் சங்கமித்தனர்  . சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு சிலம்பம் போனற வீர பயிற்சிகளை மணலி கந்த சாமி போன்றவர்கள் சொல்லிக்கொடுத்தனர்.

தஞ்சசையில் குறிப்பாக  கீழைத்தஞ்சையில் செங்கொடி சங்கம் பலம் பொருந்தியதாக மாறியது.

இது பற்றி பத்திரிக்கை குறிப்பில் மைதிலி சிவராமன் " எங்கள் வீட்டின் புழக்கடையில் நின்று "சாமி ! சாமி !" கூப்பிடும் அடிமை இப்போதெல்லாம் காலில்சேருப்பும் மேலே சட்டையும் போட்டுக்கொண்டு எங்கல்வெட்டு வாசலில் நின்ற் ஐயா இன்று எங்கள் தலைவர் பேசுகிறார். நான் ஐந்து மணிக்கு போகணும் "என்கிறான் என்று ஆதங்கப்பட்டதை "விவரிக்கிறார் .

"அரைப்படி நெல் கொடுப்பது பெரிசில்லை ! இவர்கள் உத்திரவு போட்டு நாங்கள் கொடுப்பதா? " என்ற எஜமானத்திமிர் எதிர் வினா ஆற்றியது .

5000 லிருந்து 6000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குன்னியூர் சாம்பசிவ அய்யர்,வலிவலம் தேசிகர்,பூண்டி வாண்டையார்கபிஸ்தலம் மூப்பனார் ஆகியோர் காங்கிரஸ்காரர்கள். வடபாதி மங்களம்,நெடும்பலம் ஆகிய பகுதி பண்ணையார்கள் திராவிடஇயக்கத்தினர் , அரசியல் வேறுதான்ஆனால் எல்லோரும் நிலவடைமையாளர்கள் தானே.  செங்கொடி இயக்கத்தின் வளர்சசி தங்கள் அஸ்திவாரத்தையே குலை த்துவிடும் என்று புரிந்து கொண்டனர். கூடிப்பேசி மாற்று யோசனையை கொண்டுவந்தனர் .

"நாங்கள் உங்கள் விரோதிகள் அல்ல.காலம் காலமாய் ஒரேதண்ணிய  குடித்து வாழ்பவர்கள். நமக்குள் தகராறு எதற்கு. சமாதான மாக்வாழ்வோம் நாங்களும் நெல் தான் பயிரிடுகிறோம்.நீங்களும் நெல் தான் பயிரிடுகிறீர்கள். " நெல் பயிரிடுவோர் சங்கம் ஆரம்பிப்போம். நீங்களும் நாங்களுமாக  சேர்ந்து எதுவானாலும் சங்கத்திற்குள் பேசி முடித்துகொள்வோம் ' என்று பசப்பினார்கள்.

அவர்கள் செங்கொடி சங்கத்தை பலவீனமாக்க இதனை சொன்னார்கள். பல கிராமங்களில் நெல் பயிரிடுவர் சங்கம் வளர்ந்தது .இதன் தலைவராக கோபாலகிருஷ்ண நாயுடு வந்தார் சாம தான பேத ,தண்டம் பயன்படுத்தப்பட்டது .வெண்மணியை சுற்றி உள்ள கிராமங்களில் நெல் பயிரிடும் சங்கம் வளர்ந்தது ஆனால் கீழ்வெண்மணியில் முடியவில்லை..

" சாட்டை அடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவுகட்டியது செங்கொடி.! பண்ணையடிமை ஒழிந்தது செங்கொடியால் !செருப்பு போடும் உரிமையை தந்தது செங்கொடி.எங்கள் பெண்கள் முழங்கால் சேலையை கணுக்கால்வரை இறக்கியது செங்கொடி !உயிரே போனாலும் செங்கொடியை விட்டு உங்கள் மஞ்சள் கொடிய தொடமாட்டோம்!" என்றார்கள் வெண்மணிமக்கள். 

இது தான் வெண்மணியின் மையபுள்ளி யாக மாறியது. கோ பாலகிருஷ்ணா நாயுடுவின் சேல்வாக்கில்போலீஸார்  செங்கொடி சங்கத்தை  சேர்ந்த சின்னையன் மற்றுமொருவரை பிடித்து பண்ணையாரிடம் ஒப்படைத்தனர்.இதனை அறிந்த   மக்களொன்று திரண்டு பண்ணையார் வீட்டை முற்றுகை இட்டு அவர்களை விடுவித்தனர்.

அன்று இரவு நாயுடு நுறு அடியாட்கள் ஆயுதங்கள் துப்பாக்கிகைகளோடு அந்த சின்னஞ்சிறுகிராமத்தைமுற்றுகை இட்டான் .

அங்குள்ள குடிசைகள் பண்ணைகளுக்கு சொந்தம். ஆகையால் பெண்களும் குழந்தைகளும் மற்றவர்களும் ராமையாவின் சொந்த குடிசையில் புகுந்து தப்பிக்க முற்பட்டனர் . 

ராமையாவின் குடிசைக்கு தீ   வைத்தான்நாயுடு .

மருத்துவ மனையில் இருந்த இ .வெ .ரா வுக்கு சொல்லப்பட்டது .

"இந்தியர்கள் ஆடசியில் மனுநீதிதான் நடக்கும்" என்று பெரியார் கட்டுரை எழுதினார்.  

0 comments: