Friday, December 29, 2017
"தனக்கு என்று கேட்க தெரியாதவர் "

தி.வரதராஜன் ....!!!
1969 ம் ஆண்டு. மதுரை மேற்கு  வெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியும்,மூத்த எழுத்தாளர் ப.ரத்தினமும்  என்னை பார்க்க வந்தார்கள்.

"கடசி இலக்கிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்திருகிறது. "செம்மலர் " என்ற அந்த பத்திரிகைக்கு என்னை ஆசிரியராக நியமித்துள்ளது..எனக்கு உதவியாக ஐயா தா.ச.ராசாமணி, ப.ரத்தினம் .காஸ்யபன் ஆகிய மூவரையும்போட்டுள்ளது .இன்று மாலை   ஆசிரியர்கள்கூட்டம்தீக்கதிர்அலுவலகத்தில்.கண்டிப்பாக வரவேண்டும்.."என்று கு.சி.ப. அவர்கள் கூறினார்கள்.

மாலை கே.முத்தையா அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது . கூடுதலாக திவரதராஜன் என்ற ஓவியரும் கலந்து கொண்டார்.

அல்லி நகரத்தை சேர்ந்தவர் வரதராஜன்.விவசாய குடும்பம். கட்ச்சியோடு தொடர்பு உண்டு.காட்ச்சிக்கான சுவர் விளம்பரங்கள், தட்டிகள் ஆகியவற்றை அவரும் மற்றோரு தோழரான "சின்னையா" வும் எழுதுவர்கள். புகழ் பெற்ற இயக்குனரான "பாரதி ராஜா " அவர்களின் பூர்வாசிரமபெயர்தான் "சின்னையா " என்பதாகும்.

கு.சி.பா சேலம் மாவட்டத்தில்  கடசியில்  .கொல்லிமலை வன குடி மக்களை  ஒன்றிணைத்து போராட்டங்களை நடத்தியவர்> கரும்பு விவசாயிகள் சங்கம், ஆலைகளுக்குக்கரும்பின ஏற்றிச்செல்லும் மாட்டுவண்டி  தொழிலாளர்கள் சங்கம் என்று பணி செய்து வந்தார்அதனால் மாதம் பதினைந்து நாள் மதுரையிலும் மீதிநாட்களநாமக்கல்லிலும் இருப்பார்>

தீக்கதிர் அலுவலகத்திலொரு ஜாதிக்காய் பெட்டி கொடுத்தார்கள்.அது தான் செம்மலர் அலுவலகம்> கடிதங்கள்,கதை,கவிதை,கட்டுரை எல்லாம் அதில்தான் போடுவார்கள். நாங்கள் அவற்றை படித்து தேர்வு  செய்வோம். 

மாதம் ஒருமுறை வரும்குசிபா அதனை பார்த்து பிரசுரிக்க தி.வரதராஜனிடம் கொடுப்பர்.தேவையான படங்கள்வரைவது, திருத்துவது<பக்கமாக்குவது ஆகியவற்றை தி,வ  கவனிப்பார்

அதற்காக அவருக்கு மாதம் அலவன்ஸ் 30 ரூ கொடுப்பார்கள். இதுதவிர தினம் படிக்காசு என்று நான்கு அணா கொடுப்பார்கள் .

தி.வ .வின் குடும்பம் அவருடைய   மூன்று மகன்கள்,மனைவி அல்லிநகரத்தில்வசித்தார்கள். 

 ஒரு புரட்ச்சிகர இயக்கத்தின் புட்டசிக்கற ஏட்டில்பணி செய்கிறோம் என்ற திருப்தி உண்டு.

எதையுமே ஆசிரியரிடம்கேட்டு சொல்கிறேன் என்பதை தவிர தி>வ விடமிருந்து வேறு பதில் வராது> அவரை பொறுத்தவரை கு.சி.ப தான் கடசியின் மத்தியகுழு . கே.எம். பொலிட் பீரோ. !

30 ரூபாய் அவர் எப்படி வாழ்க்கையை,குடும்பத்தை ஓட்டினார் என்பது அந்த மார்க்ஸ் மட்டுமே அறிவார். 1977 ம் ஆண்டு தீக்கதிர்  பைபாஸ் சாலை வரும் வரை அவர் குடும்பம் அல்லி நகரத்தில் தான் இருந்தது.

"ஏங்க !  கடசி க்கு தெரியாத நம்மை பத்தி ! வச்சிக்கிட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க " என்று சொல்லி நம் வாய அடக்கி விடுவார்.

48 ஆண்டுகள் ! கிட்டத்தட்ட அரை நூற்ராண்டு.!  "செம்மலரை " தன கண்ணின் மணி போல் காத்து வந்தவர் தி.வ.!

அவர் 31-12-17  ஒய்வு பெறுகிறார் !

Glory to you  Comrade varatharaajan !!!


எல்லாப்புகழும் மார்க்சியத்திற்கே !!!

2 comments:

vijay said...

ஐயா வணக்கம்
தங்களுடைய பதிவுகளை பல காலமாக படித்து வருகின்றேன் .உங்களின் பல அனுபவங்களையும் ,கட்சியின்வளர்ச்சி தொழிற்பாடுகள் பற்றியும்,உங்களின் கட்டுரைகள் மூலம் அறியமுடிகின்றது. நல்லது .ஆனால் இவ்வளவு அனுபவம் உள்ள நீங்கள் ,இவ்வளவு மோசமான எழுத்துப்பிழை, சொற்பிழைகளோடு எழுதுவது பெரும் கொடுமையாக உள்ளது .தயவுசெய்து திருத்தமாய் எழுதுங்கள் .நன்றி வணக்கம் .

kashyapan said...

விஜய் அவர்களுக்கு,கடந்த 14 வருடங்களாக நாகபுரியில் வசித்து வருகிறென். பலவிஷயங்களை நினைவில் எழது கிறேன். சந்தேகங்களை நிவர்த்தி செய்யகூட எவரும் இல்லை. ஆகவே சில சமயம் factualmistake கூட வந்து விடுகிறது. வயதாகிவிட்டது கண் பார்வை பத்தாமல் சமாளிக்கிறென். முக்கியமாக் இயலாமை அதிகமாக இருக்கிறதுசரிசெய்ய முனைகிறேன். பொறுத்தருளூங்கள்.---காஸ்யபன்.