Wednesday, December 13, 2017





சாதி காதலுக்கு தடையா ?

அல்லது 

காதல் சாதிக்கு தடையா ?



காதல் ஊற்றெடுக்கும்   பொது அது சாதியை உடைத்தெறிகிறது . சாதியை காதல் நிச்சயமாக  மறுதளிக்கிறது . ஆகவே காதல் சாதியை தடை செய்கிறது என்பது தான் உண்மை .

இந்த உண்மையை புரிந்து கொண்டு சாதியை தக்கவைக்க முயல்பவர்கள் கொடூரமான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் எனக்கு தனிப்பட்ட முறையில் "காதல் " என்பதைப்பற்றி பெரியாரின் சீடனாகவே இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்ச்சி ,துக்கம், வலி போன்ற உணர்வு தான் காதலும். தேவை இல்லாமல்  புனிதமான முக்கியத்துவம் கொடுத்து  அதனை வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்றாக கருத்தும்படி  செய்து விட்டோம்.இதற்க்கு காரணம் கலை இலக்கியக்காரார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .

அதேசமயம் சில நன்மைகளும் அதனால் ஏற்படுகிறது என்றால் அது ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டும் .

உடுமலை சங்கர் ஆணவக்கொலை   வழக்கின் தீர்ப்பு வந்த  பின் விளைவாக விவாதங்கள் நடை பெறுகின்றன . 

கவுசல்யா என்ற அந்த சின்னஞ்சிறு பெண் கண்ணெதிரே சங்கர் வெட்டி கொலைசெய்ப்பட்டதை பார்த்தவர். அந்த அதிர்சசியில் இருந்து அவரை மீட்டெடுத்து அவரை ஒரு தீரமிக்க பெண்ணாக ஆக்கியவர்கள்  வணக்கத்திற்கு உரியவர்கள். இத்தகைய கொடூரமான நிகழ்வுகள் நடை பெறாமல் தடுக்க இந்த வழக்கில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஊட்டியவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். 

எந்த அளவுக்கு அந்த பெண் தெளிவூட்டப்பட்டிருந்தால் விடுதலை செய்யப்பட்ட தன தாயையும்,மாமனையும் மேல்  முறையிட்டு  தண்டனை வாங்கித்தருவேன் என்று அறிவிக்க முடியும் .

கவுசல்யாவுக்கு அறிவார்ந்த சிந்தனையை ஊட்டிய மாதர் சங்க தோழர்களின் பாடுகள் இதில் மிகவும் முக்கியமானதாகவே எனக்கு படுகிறது.

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !!! 


0 comments: